IAS தேர்வை அணுகுவது எப்படி?





ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்?


நன்றி - திரு சைலேந்திரபாபு   ஐ.பி.எஸ்.,




Add caption
                                                                     




யு.பி.எஸ்.சி., நடத்தும் சி.எஸ்.இ (CIVIL SERVICE EXAMINATION) தேர்வை எழுத வேண்டுமெனில் சில தகுதிகள் பெற்றிருப்பது அவசியம்.

1. குடியுரிமை - விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. வயது - அந்த ஆண்டின் ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மேற்படாதவாராகவும் இருக்கவேண்டும்.


வயது வரம்பு தளர்ச்சி:


அ) எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
ஆ) ஓ.பி.சி., பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டு சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இ) முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் 5 வருட சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ஈ ) மாற்று திறனாளிகளுக்கு  10 ஆண்டுகள் வரை வயது சலுகை அளிக்கப்படுகிறது.

குறிப்பு: வயது வரம்பு சான்றிதழுக்கு மெட்ரிக் அல்லது மேல்நிலைப்பள்ளி சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


3. குறைந்தபட்ச கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். இளநிலைத்தேர்வின் இறுதி கட்ட தேர்வு எழுதி இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இரண்டாம் கட்ட தேர்வு எழுதும் போது கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., போன்ற தொழில் முறை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

4. எத்தனை முறை தேர்வு எழுதலாம்:


இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளின் முதல் முயற்சியில்வெற்றிபெறுவதே சிறந்தது. இளம்வயதிலேயே பணியில் சேர்ந்து சாதிக்க முடியும். பொதுவாக ஆறு முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஓ.பி.சி., பிரிவினருக்கு 9 முறை அனுமதி வழங்கப்படுகிறது.

எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் 37 வயது வரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பிரிலிமினரி தேர்வில் கலந்து கொண்டால் கூட ஒரு வாய்ப்பை பயன்படுத்தியதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிரிலிமினரி தேர்வில் ஒரு பேப்பர் மட்டும் எழுதினாலும், தேர்வில் கலந்து கொண்டதாகவே கருதப்படும். எனவே தேர்வுக்கு சரியாக தயார் செய்துகொள்ளவில்லை என கருதினால் தேர்வு எழுதுவதை தவிர்த்துவிடுவதே சிறந்தது.

5. உடல் தகுதி: 


இந்திய ஆட்சிப்பணியில், போலீஸ் சர்வீசுக்கு குறைந்தபட்ச உயரம் ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 150 செ.மீ., எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு குறைந்தபட்ச உயரம் ஆண்களுக்கு 160 செ.மீ., பெண்களுக்கு 145 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் ஆண்களுக்கு 84 செ.மீ.,. பெண்களுக்கு 70 செ.மீ., விரிவடையும் போது 5 செ.மீ., அதிகமாகவும் வேண்டும். உடல் ஊனமுற்றவர்கள் ஐ.பி.எஸ்., ஆக முடியாது. ஆனால் ஐ.ஏ.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற பணிகளில் சேரலாம்.

6. கட்டணம்: 


இதற்கு அதிகமாக கட்டணம் ஒன்றும் செலுத்த தேவையில்லை. ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் பெண்கள் , மாற்று திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இனி இந்த சி.எஸ்.இ (CIVIL SERVICE EXAMINATION) தேர்வுவைப்பற்றி பார்ப்போம் இந்த தேர்வுகள் இரு பிரிவுகளை உள்ளடக்கியது.

அவை

அ) சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு- இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்ட தேர்வு எழுதலாம். இந்த அப்ஜெக்டிவ் முறை தேர்வில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

ஆ) சிவில் சர்வீசஸ் முக்கிய தேர்வு- இது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வடிவில் அமைந்திருக்கும். இதில் வெற்றி பெறுபவர்கள் பல பிரிவுகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்..


7. சி.எஸ்.இ (CIVIL SERVICE EXAMINATION) எழுதுவதன் மூலமாக எந்த எந்த பணிகளில் சேரலாம் ?


24 வகையான பணிகள்


1. Indian Administrative Service.
2. Indian Foreign Service.
3. Indian Police Service.
4. Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
5. Indian Audit and Accounts Service, Group ‘A’.
6. Indian Revenue Service (Customs and Central Excise), 
    Group ‘A’.
7. Indian Defence Accounts Service, Group ‘A’.
8. Indian Revenue Service (I.T.), Group ‘A’.
9. Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration).
10. Indian Postal Service, Group ‘A’.
11. Indian Civil Accounts Service, Group ‘A’.
12. Indian Railway Traffic Service, Group ‘A’.
13. Indian Railway Accounts Service, Group 'A'.
14. Indian Railway Personnel Service, Group ‘A’.
15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
16. Indian Defence Estates Service, Group ‘A’.
17. Indian Information Service (Junior Grade), Group ‘A’.
18. Indian Trade Service, Group 'A'.
19. Indian Corporate Law Service, Group "A".
20. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.
22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'.
23. Pondicherry Civil Service, Group 'B'.
24. Pondicherry Police Service, Group ‘B’.



என்ன பாடத்திட்டதை நாம் படிக்க வேண்டும்?


பாடதிட்டத்திற்கு இங்கு கிளிக் செய்யவும் 









சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் கேள்விகளும், ஐ.ஏ.எஸ் இளம் பகவத்தின் A - Z பதில்களும்! #VikatanExclusive #FAQ



போட்டித்தேர்வுகளில் முதன்மையானது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வு. இந்தத் தேர்வுகுறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இளம்பகவத் ஐ.ஏ.எஸ் எதிர்கொண்ட கேள்விகள் அனைத்தையும் தொகுத்து, அதற்கு பதிலையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற `பொன் மாலை பொழுது' நிகழ்ச்சியில் வழங்கினார். போட்டித்தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்காக அவற்றைத் தொகுத்திருக்கிறோம்.








“ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்?”


“ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது. அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யூ.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு (Priliminary Exam). இது இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும்வகையில் இருக்கும். முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது. 

இரண்டாம் தாள், திறனறிவைக் கூர்தீட்டக்கூடியது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் (Main Exam) செல்ல முடியும். முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.

முதன்மைத் தேர்வில் நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த இரண்டு தாள்களும் இருக்கின்றன. ஒரு கட்டுரை வடிவில் (Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன. ஆகமொத்தம்ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண். இதில் ஆங்கிலமொழி தாளுக்கான மதிப்பெண்ணும், இந்தியமொழி தேர்வுக்கான மதிப்பெண்ணும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.

இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும் மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள். இதில் 275 மதிப்பெண். இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும். இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும்போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு பயிற்சி வழங்கப்படும். தகுதிநிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதை எல்லாம் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.

இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்கள் எந்தப் படிப்பை எடுத்தால், ஐ.ஏ.எஸ் ஆவது எளிது எனக் கேட்கிறார்கள். அக்ரிக்கல்சர் படிக்கலாமா என்றும் கேட்கிறார்கள்?

உங்களுக்குப் பிடித்த பாடத்தில் சேர்ந்து படிக்கலாம். இதற்காக, குறிப்பிட்ட பாடத்தை எடுத்துப் படிப்பது எல்லாம் சரியாக இருக்காது. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத தேவை, ஒரு பட்டப்படிப்பு. கலைப் பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ படிக்கலாம். உங்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் இருக்கிறதோ, அந்தப் பாடத்தைப் படியுங்கள்.


படிக்கும்போது சிவில் சர்வீஸாஸ் தேர்வுக்கு எப்படித் தயாராவது?


படிக்கும்போது சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குப் படிக்கலாம். தவறில்லை. முதலில் சுற்றுப்புறத்தில் என்னென்ன நடக்கின்றன என்பதை கவனியுங்கள். செய்தித்தாள்களைப் படியுங்கள். நல்ல விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளுங்கள். பொது அறிவு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எந்த விருப்பப் பாடத்தைத் (Optional Subject) தேர்ந்தெடுப்பது?


கலை பாடங்களான வரலாறு, புவியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற பாடங்களையும், அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றையும் இன்ஜினீயரிங் பாடங்களான சிவில் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் என இன்ஜினீயரிங் பாடங்களையும், தமிழ் இலக்கியம் என ஏகப்பட்ட பாடங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்துதான். எந்த விருப்பப் பாடத்தை ஆர்வத்துடன் எடுத்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் எனப் பாருங்கள்.

விருப்பப் பாடங்கள் மேற்கொள்ளும்போது நான்கு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, குறிப்பிட்ட பாடத்தில் விருப்பம் இருக்க வேண்டும். இரண்டாவது, விருப்பப் பாடம் குறித்த வழிகாட்டுவதற்கு வாய்ப்புகள். குறிப்பாக, தமிழ் இலக்கியம் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது  தமிழ் இலக்கியம் சார்ந்த வழிகாட்டிகள் இருக்க வேண்டும். மூன்றாவது, விருப்பப் பாடத்துக்கான புத்தகங்களும், இதர நூல்களும்  நீங்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.  நான்காவது, சில விருப்பப் பாடங்கள் பல வெற்றியாளர்களை உருவாக்கியிருக்கும். அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 சிவில் சர்வீஸ் என்னென்ன புத்தகங்களை எல்லாம் படிக்கலாம்?


நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. பொதுவாக, என்.சி.ஆர்.டி (NCERT) போன்ற பள்ளிப் பாடப்புத்தகங்களைப் படிக்கலாம். பள்ளிப் பாடப்புத்தகங்களைச் சிறப்பாகப் படித்தால் சிவில் சர்வீஸஸ் தேர்வு எளிது. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து யூ.பி.எஸ்.சி `A well Educated person can attend this examination without any special preparation' என்றுதான் சொல்கிறது. அதாவது, `நல்ல கல்வி பெற்ற ஒருவரால், எந்தவிதமான சிறப்புப் பயிற்சியும் தயாரிப்பும் இல்லாமல் வெற்றியடைய முடியும்' எனச் சொல்கிறார்கள். யார் ஒருவர் பள்ளிக் கல்வியை உள்வாங்கி படித்தும், சமூக மாற்றங்களை முழுமையாக அறிந்தும் இருக்கிறாரோ அவர் எளிதில் தேர்ச்சிபெறலாம். ஆகவே, பள்ளிப் பாடங்களைத் திரும்பப் படிக்கவேண்டியது அவசியம். ஐ.ஏ.எஸ் தேர்வை மத்திய அரசு தேர்வாணையம் நடத்துவதால், மத்திய அரசின் பாடத்திட்டங்களைக்கொண்ட பாடப்புத்தகங்களைப் படிப்பது சிறப்பு.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?


ஓராண்டு இதற்காகவே தயாராக வேண்டும். ஒருசிலர் முதல் முயற்சியிலேயெ வெற்றி பெறுவர். நான்கைந்து முறை முயற்சிசெய்து வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆக, தேர்வு எழுதுபவர்களின் திறன் சார்ந்துதான் வெற்றி இருக்கிறது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது?


என்னுடைய அனுபவத்தில் ஒன்றிரண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழக அரசு நடத்தும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பயிற்சி மையத்தில்தான் சேர்ந்து படிக்கலாம். ஆனால், இதைவிட மற்ற பயிற்சி மையம் சிறப்பாக இருக்கிறதே எனச் சொன்னால், அது குறித்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

பயிற்சி மையம் செல்வது என்பது, உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளலாம். பொதுவாக, பயிற்சி மையங்கள் உங்களின் வெற்றிக்கு 10 முதல் 15 சதவிகிதம் உதவுகின்றன. மீதி 80  முதல் 85 சதவிகிதம் வரை  உங்களுடைய சொந்த முயற்சியால் மட்டுமே வெற்றிபெற முடியும். பயிற்சி மையங்கள் உங்களுக்கு வழிகாட்டும். ஆனால், வெற்றிபெறுவது உங்களின் கையில்தான் உள்ளது.

சிவில் சர்வீஸ் டெல்லியில் படிக்கலாமா... சென்னையில் படிக்கலாமா?


இதுவும் அவரவர் முடிவுதான். எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். டெல்லியில் கிடைக்கும் விஷயங்கள் தற்போது ஸ்மார்ட்போனிலேயே கிடைக்கின்றன என்பதால், எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.

சிவில் சர்வீஸ் முதலில் முதன்மைத் தேர்வுக்குப் படிப்பதா அல்லது முதல்நிலை தேர்வுக்குப் படிப்பதா?


முதன்மைத் தேர்வுக்கும், முதல்நிலை தேர்வுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. முதல்நிலை தேர்வு Objective தேர்வு. முதன்மைத் தேர்வு Descriptive தேர்வு. அவ்வளவுதான் வித்தியாசம். எல்லாவற்றையும் கலந்து படிப்பது நல்லதுதான். இதற்கான திட்டங்களை வகுக்கும்போது முதல்நிலைத் தேர்வு நெருங்கும்போது விவரங்களைத் திரும்பப் படிக்கும்போது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். முதன்மைத் தேர்வில் எல்லாவற்றையும் கவனத்தில்கொண்டு படிக்க வேண்டும். 

சிவில் சர்வீஸ்க்கு என்னென்ன நாளிதழ்களைப் படிக்க வேண்டும்?


நாட்டுநடப்புகள் முதன்மையாக இருப்பதால், நாளிதழ்களைப் படிப்பது அவசியம். இதில், அரசியல், பொருளாதார நிகழ்வுகளுக்கும், வெளிநாட்டு விவகாரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும். அரசியல் என்பது, கட்சி அரசியல் கிடையாது. நாட்டின் வளர்ச்சிகுறித்தும் விவாதங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஆங்கிலச் செய்தித்தாள்களையும், தமிழ் செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும்.


சிவில் சர்வீஸ்க்கு எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும்?


நிறையப்பேர் காலையிலிருந்து இரவு படுக்கச் சொல்லும் முன்பு வரை படிப்பார்கள். பொதுவாக, எவ்வளவு கிரகிக்கக்கூடிய சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்கிப் படித்தால் மட்டும் போதுமானது. ஆரம்பநிலையில் இரண்டு, மூன்று மணி நேரம் படித்தால் சோர்வு வந்துவிடும். அந்தச் சோர்வைப் போக்கும் வகையில் சிறிய இடைவெளி கொடுத்துவிட்டுப் படிக்க வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை படிக்கலாம். அதன் பிறகு உங்களுடைய சக்திக்குத் தகுந்தாற்போல் நேரத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படிப் படிப்பது?


ஒருசிலருக்கு, குறிப்பெடுத்துப் படிப்பது நன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு, அடிக்கோடிட்டு படிப்பது பிடிக்கும். ஆக, யாருக்கு எப்படிப் படிக்கப் பிடிக்குமோ அப்படியே படிக்கலாம். குறிப்பெடுத்து படிப்பவர்கள் திரும்ப நினைவூட்டலுக்குக் குறிப்புகளைப் பயன்படுத்துவார்கள். மைண்ட்மேப்ஸ் வழியையும் பின்பற்றலாம்.

எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறதே என்ன செய்வது?


எந்த ஒரு விஷயத்தையும் இஷ்டப்பட்டுப் படித்தால் கஷ்டமாகத் தெரியாது. பானிபட் போர் எப்போது நடந்தது என்றால், நினைவில் வர மாட்டேன் என்கிறதே எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வருடங்கள் குறித்து கேள்விகள் பொதுவாகக் கேட்பதில்லை. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மட்டுமே கேட்கிறார்கள். `வளர்ச்சியின் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்துங்கள்' எனக் கேட்டால், அதற்காகப் படித்திருந்தால் எளிதில் வரிசைப்படுத்திவிடலாம்.

படித்தது மறந்துவிடுவதற்குக் காரணம், மீண்டும் படிக்காமல் (revision)  இருப்பதுதான். உளவியல் வல்லுநர்கள், இயல்பான மனப்பாங்கில் படிக்கும்போது 24 மணி நேரத்தில் 70 சதவிகிதப்  பகுதி மறந்துவிடும் என்றும், ஒரு வாரத்தில் மீதம் உள்ள 50 சதவிகிதமும் மறந்துவிடும் என்றும்,  ஒரு மாதத்தில் 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே நினைவில் இருக்கும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, ஒரு நாளில் படித்ததை அன்றே திரும்பிப் படிக்கவும் பார்க்கவும்  (revision)  வேண்டும்.

பத்து மணி நேரம் படிப்பதை, இரண்டு மணி நேரத்தில் திரும்பிப் (revision) பார்க்கலாம். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை திரும்பிப் (revision) பார்க்க வேண்டும்.  திரும்பிப் பார்த்தலை (revision) இரண்டு வகையில் மேற்கொள்ளலாம். ஒன்று, படித்ததைத் திருப்பப் படிப்பது. குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் திரும்பிப் படிப்பது. இரண்டாவது, கேள்விகளுக்குப் பதிலளித்துப் பார்ப்பது. இந்த இரண்டு முறைகளையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஞாபகத்தைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

சிவில் சர்வீஸ்க்கு ஆங்கில அறிவு அவசியமா?


ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது அவ்வளவு கடினம் அல்ல. பெரும்பாலும் தமிழ்மொழியிலேயே தேர்வு எழுதி வெற்றி பெறுவதைத்தான் பெரிய விஷயமாகவும் ஆச்சர்யத்துடனும் பார்க்கிறார்கள். தமிழிலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், ஆங்கில அறிவும் அவசியம்.  ஆங்கிலப் புலமைப் பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை. வினாக்கள் ஆங்கிலத்தில்தான் வரும். ஆகையால், ஆங்கில வினாக்களைப் புரிந்துக்கொண்டால் மட்டுமே சரியாக விடையளிக்க முடியும். இப்போது கல்வித் துறை போட்டித்தேர்வுக்குத் தேவையான நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும், திரும்பப் பதிப்பிடும் பணியைச் செய்துவருகிறது. இதையும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வை தமிழில் எழுதலாமா?


ஆர்வம் இருந்தால், தமிழில் தேர்வு எழுதலாம். தமிழ் மொழியில் தேர்வு எழுதும்போது நமது உணர்வுகளையும் கருத்துகளையும் அழகான முறையில் பிரதிபலிக்க உதவியாக இருக்கும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வினாக்கள் தமிழில் இருக்குமா?


இதுவரை வினாக்கள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள வினாக்களைப் படித்துப் பார்த்து புரிந்துக்கொண்டுதான் பதிலளிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ்க்குத் தமிழில் நூல்கள் இருக்கின்றனவா?


தமிழ்நாடுப் பாடநூல் கழகம் நிறைய நூல்களை வெளியிட்டிருந்தது. அவை காலப்போக்கில் பதிப்பு செய்யவில்லை என்பதால், தேடி கண்டுப்பிடிக்கவேண்டிய அளவில் இருந்தன. தற்போது, ஏற்கெனவே வெளியீட்டில் உள்ள புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணியில் இறங்கியிருக்கிறது. தனியார் நிறுவனங்களிலும் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அதையும் வாங்கிப் படிக்கலாம்.

தமிழில் கலைச்சொற்கள் இருக்கின்றவா?


தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது. இதற்கு இணையான கலைச்சொற்கள் இல்லாமலிருந்தாலும், தமிழ்நாடு இணைய பல்கலைக்கழகம் 1.75 லட்சம் கலைச்சொற்களை வெளியிட்டிருக்கிறது. இது இணையதளத்திலேயே இருக்கிறது. பொதுவாக, புழக்கத்தில் உள்ள சொற்களை அப்படியே எழுதலாம். ராக்கெட் என்பதை அப்படி எழுதலாம். எது மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அதை அப்படியே பயன்படுத்தலாம்.

http://www.tamillexicon.com/glossary/

கட்டுரை வடிவிலான (Essay) தேர்வுக்கு எப்படித் தயாராவது?


இதற்கு என, சிறப்பான தயாரிப்புகள் எதுவும் கிடையாது. நீங்கள் சிறந்த கட்டுரைகளைப் படிக்க வேண்டும். அதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். கட்டுரையாளர் எப்படித் தனது கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிறார், எவ்வாறு நடையைக் கையாள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல இதழ்களில் நல்ல கட்டுரைகளைத் தேடிப் படியுங்கள். பழைய வினாத்தாள்களில் உள்ள கட்டுரைகளையும் எழுதிப் பாருங்கள்.


Ethics (அறவியல்) என்ற தாளுக்கு, எவ்வாறு தயாராவது?


`Ethics என்ற தாளுக்கு எதுவும் படிக்கக் கூடாது' என யூ.பி.எஸ்.சி சொல்கிறது. நீங்கள் அறநெறியையும், ஒழுக்கநெறியையும், நன்னெறியையும் பின்பற்ற வேண்டும். இதன் அடிப்படையில் வாழ்வியலை அமைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் இதன் நோக்கம். ஆகையால், இந்தத் தேர்வுக்குப் படித்து மனப்பாடம் செய்வதற்கு ஒன்றுமில்லை. துன்புறுபவனைப் பார்த்து எப்படி உங்களுடைய கருணையும் அன்பும் வெளிப்படுகின்றனவோ, அதை `empathy' என்கிறோம். ஏழையாக இருப்பவரை நோக்கி உங்களுடைய கருணைப் பார்வை பட வேண்டும். ஆகவே, இதற்கென தனியே படிக்கவேண்டிய அவசியமில்லை.

மற்றவர்களின் குறிப்பேடுகளை (Notes) வாங்கிப் படிக்கலாமா?


என்னிடமே `சார், நீங்கள் எடுத்துப் படித்த நோட்ஸ்களை எல்லாம் கொடுங்கள்' என்று கேட்கிறார்கள்.  என்னுடைய குறிப்பேடுகள் எனக்கு மட்டுமே புரியும் வகையில் குறிப்புகளை எடுத்திருப்பேன். இதை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்வர் எனத் தெரியவில்லை. மற்றவர்களின் குறிப்பேடுகள் பெரிய அளவில் உதவாது. உங்களுடைய குறிப்புகளை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.

தனியாகப் படிக்க வேண்டுமா அல்லது குழுவில் இணைந்து படிக்கலாமா?


தனியாகப் படிப்பது ஒருசில நேரங்கள் பயன் தரும். கூட்டாகச் சேர்ந்து படிப்பதும் சில நேரங்களில் பயன்படும். புரியாத பாடங்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது குழுவில் இருக்கும் இன்னொரு நண்பருக்கு அவர் நமக்கு உதவுவார். சில நேரம் ஆர்வம் குறைந்திருக்கும்போது குழுவில் உள்ளவர்கள் நமக்கு ஆர்வம் கொடுத்துப் படிக்கலாம் என அழைத்து ஆர்வம் கொடுப்பார்கள். ஆக, கூட்டுமுயற்சி என்பது, பெருமளவில் பலன் தரும். சில வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்வார்கள். இதுபோல் செய்யும்போது பளு குறையும்.

பணியாற்றிக்கொண்டே படித்திருக்கிறீர்கள். உங்களுடைய நேர மேலாண்மை குறித்துச் சொல்லுங்கள்?


பணியாற்றிக்கொண்டே படிக்கும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். காலையிலும் மாலையிலும் இதற்காக நேரத்தை ஒதுக்கிப் படித்தால் பலன் தரும். வேலைபளு கூடுதலாக இருக்கும்போது கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிக்கவேண்டியிருக்கும். தேர்வு நெருங்கும்போது விடுமுறை எடுத்துப் படிக்கலாம்.

சிவில் சர்வீஸ் இன்டர்வியூ தமிழில் செய்யலாமா?


தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள். ஆகையால், இன்டர்வியூவை தமிழில் எதிர்கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டு ஆங்கிலத்திலும் பதிலளிக்கலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வில் பெர்சனாலிட்டி இன்டர்வியூவை எதிர்கொள்ள, சில டிப்ஸ் சொல்லுங்கள்.


பெர்சனாலிட்டி இன்டர்வியூவில் 5C +2H  என்ற விஷயத்தைக் கவனிக்கிறார்கள். 5 C என்பது,   competition, coolness, common sense, communication, charm and cheer என்பார்கள். அதாவது, போட்டிக்கு உரியவரா, விஷயத்தைப் பதற்றமில்லாமல் எதிர்கொள்பவரா, பொது உணர்வைப் பிரதிபலிக்கிறாரா, தொடர்புதிறன் நன்றாக இருக்கிறதா, பதில் தெரியவில்லை என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறாரா என்ற பண்புகளைக் கவனிக்கிறார்கள்.  Honest - ஆக பதில் சொல்ல வேண்டும். தெரியா பதிலுக்குத் தெரிந்த மாதிரி நடித்து பதிலளிக்கக் கூடாது. தெரிந்தால் பதிலையும், தெரியவில்லை என்றால் `தெரியவில்லை' என்றும் சொல்ல வேண்டும்.  Humunity ஆக இருக்க வேண்டும்.

போட்டித்தேர்வுக்கான நூல்கள் எங்கு கிடைக்கும்?

எல்லா கிளை நூலகங்களிலும் `போட்டித்தேர்வு' என்ற பிரிவில் இதற்கான நூல்கள் உள்ளன. ஆகையால், கொஞ்சம் தேடிப் பாருங்கள். உங்களுக்குத் தேவையான நூல்கள் என நூலகருக்குத் தெரிவித்தால், அவர்கள் அந்த நூல்களை வாங்கிவைக்க நடவடிக்கை எடுப்பார்கள். மாவட்ட மைய நூலகங்களிலும் போட்டித்தேர்வு எனத் தனிப்பிரிவே வைத்திருக்கிறார்கள். ஆகையால், அங்கு படிக்கலாம். நூல்கள் ஆன்லைனில் நிறையவே கிடைக்கின்றன. இதில் எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். இதற்கு சிறிய காலமாகும். இதற்கு பயிற்சி வகுப்பு படிப்பவர்கள் பல நூல்களைப் பரிந்துரை செய்கிறார்கள்.  வெற்றி பெற்றவர்கள், பல புத்தகங்களைப் பரிந்துரை செய்வார்கள். அதில் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ஆரம்பத்தில் பாடப்புத்தகத்தையும், அதன்பிறகு நோட்ஸ்களையும், Reference புத்தகத்தையும் படிக்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கும், யூ.பி.எஸ்.சி தேர்வுக்கும் என்ன வேறுபாடு?


தமிழ்நாடு தேர்வாணையம், குரூப் 1 பணிக்குத் தேர்வை நடத்துகிறது. யூ.பி.எஸ்.சி தேர்வை, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. ஆனால், தேர்வுமுறையில் மாற்றம் இருக்கிறது. யூ.பி.எஸ்.சி-யில் ஆழமான பதிலை எதிர்பார்க்கிறார்கள். என்.சி.ஆர்.டி வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்களை மையமாக வைத்து கேட்பார்கள். மேலும், கொஞ்சம் பகுப்பாய்வு செய்து எழுதவேண்டியிருக்கும்.
டி.என்.பி.எஸ்.சி-யில் ஆழமான பதில்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றாலும், கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. உங்களுடைய அறிவு சோதிக்கவேண்டியதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு, தமிழ்நாடுப் பாடநூல்களைப் படிக்க வேண்டும்.


இன்டர்வியூவில் opinion அடிப்படையில் நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். இதை எவ்வாறு எதிர்க்கொள்வது?  ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்குமே?


ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும். மற்றவர்களின் கருத்துகளிலிருந்து வேறுபடும் என்பது உண்மைதான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருத்துகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறுபட்டுத்தான் இருக்கும். ஆனால், உங்களுடைய கருத்துகளை நல்ல புரிதலில் முடிவெடுத்துச் சொல்வீர்கள் என்றால் ஏற்றுக்கொள்வார்கள். என்னுடைய கருத்தை என்னுடைய மனதில் தோன்றுகிறது. அதைச் சொல்கிறேன் என்ற அடிப்படையில் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உதாரணத்துக்கு, ‘சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கலாமா... வேண்டாமா?' எனக் கேட்டால், நான் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருப்பதால், இந்த விஷயத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, இந்தத் திட்டத்தின் மீது கவனமாக நடவடிகை எடுக்க வேண்டும் எனச் சொல்லலாம் அல்லது இந்தத் திட்டத்தை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது மேற்கொள்ளலாம் என்றும் சொல்லலாம்.

உங்களுடைய கருத்துக்கு வலு சேர்க்கும்விதமாக ஒன்றிரண்டு உதாரணங்களையும் சொல்ல வேண்டும். `ஒன்றிரண்டு இடங்களில் இந்தத் திட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால், இந்தத் திட்டத்தைத் தவிர்க்கலாம்' எனச் சொல்லாம். இதனால் உங்களுடைய சமநிலை சார்ந்த பண்பும், ஒரு சார்பு நிலையும் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ள முடியும். இதற்கு அடிப்படையாக இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை வைத்துக்கொள்ளலாம். இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் இருக்க அடிப்படை விஷயங்களை அலசிப்பார்த்து சொல்லலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வை தமிழில் தேர்வு எழுதும்போது குறைத்து மதிப்பீடுவார்களா?


அப்படிக் குறைத்து மதிப்பிடு செய்ய வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு தேர்வுகளோடு ஒப்பீடும்போது தமிழில் எழுதுபவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. தமிழில் தேர்வு எழுதும்போது கட்டுரைத் தாள் தேர்வில் சிறப்பாக எழுதிவிட முடியும். நல்ல முறையில் கருத்துகளை வெளியிட முடியும். தேர்வுத்தாள்களைத் திருத்தும்போது Answer Key என வைத்திருப்பார்கள். அதைப் பார்த்துதான் திருத்துவார்கள்.

தமிழில் தேர்வு எழுதும்போது, வழக்கில் உள்ள சொற்களுக்கு கலைச்சொற்கள் எழுதவேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு, metabolism என்ற சொல்லுக்கு, `வளர்சிதை மாற்றம்' என்று சொல்வார்கள். வளர்சிதைமாற்றம் என்று எழுதும்போது ஒவ்வொரு முறையும் அடைப்புக்குறியில் metabolism என்று எழுதத் தேவையில்லை. restriction nuclease digestion என்ற நொதியின் மூலமாக DNA-க்கள் பிரிகின்றன. அதன் பிறகு DNA-க்கள் இணைக்கப்படுகின்றன என்பதை, தமிழில் எழுதிவிடலாம். ஏதேனும் ஓர் இடத்தில் கலைச்சொற்களைப் பயன்படுத்தலாம். எல்லா இடங்களிலும் கலைச்சொற்களைப் (ஆங்கிலத்தில்) பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. சிலர் வாக்கியத்தை, தமிழ்-இங்கிலீஷ் கலந்து எழுதுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மொழி ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக்கொள்ளும்போது மிகச் சுருக்கமாக எழுதிடலாம்.

Ethics (அறவியல்) பாடத்தைத் தமிழில் எழுதும்போது கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. தமிழில் திறக்குறள், புறநானூறு போன்றவற்றை மேற்கோள்காட்டும்போது தமிழ்ப் பாடத்தை அப்படி எழுதுகிறார்களே என மதிப்பெண் குறைக்க வாய்ப்பு இருக்கிறதா?


அறம் சார்ந்த தமிழ் இலக்கியங்களை நீங்கள் மேற்கோள்காட்டி எழுதலாம். அப்படி எழுதியவர்களுக்கு இதுவரை மதிப்பெண் குறைந்ததாக யாரும் கருத்துச் சொல்லவில்லை. எனவே, தாராளமாக எழுதலாம். அந்தத் தேர்வு அறவியல் தேர்வா அல்லது தமிழ் இலக்கியத் தேர்வா என்று குழப்பமடையும் வகையில் எழுதிவிடக் கூடாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN