#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2
இந்தியாவின் நிதி ஆணையம் எவ்வாறு அமைக்கப்பட்டது? அண்மையில் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் Terms of Reference (TOR)பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? விவாதியுங்கள். (UPSC 2018)
How is the Finance Commission of India constituted? What do you know about the terms of reference of the recently constituted Finance Commission? Discuss. (UPSC 2018)
இந்தியாவின் நிதி ஆணையம் எவ்வாறு அமைக்கப்பட்டது? அண்மையில் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் Terms of Reference (TOR)பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? விவாதியுங்கள். (UPSC 2018)
மத்திய அரசிடம் உள்ள அதிக நிதி வருவாயிலிருந்து மாநில அரசுக்குத் தேவையான நிதிகளை வழங்க பரிந்துரை செய்வதுதான் நிதிக்குழு. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நிதி ஏற்றத்தாழ்வு எல்லா கூட்டாட்சிகளிலும்
இருக்கக்கூடிய ஒன்றாகும். மத்திய அரசுகளிடம் அதிகமான நிதி வருவாய்களும் மாநில அரசுகளிடம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கான செலவுப் பொறுப்புகளும் இருக்கின்றன; எனவே மாநிலங்களுக்கு நிதி அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் எவ்வளவு தொகை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நடுநிலையாக தீர்மானிக்க வேண்டி நிதி குழு அமைக்கப்படும்.
இருக்கக்கூடிய ஒன்றாகும். மத்திய அரசுகளிடம் அதிகமான நிதி வருவாய்களும் மாநில அரசுகளிடம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கான செலவுப் பொறுப்புகளும் இருக்கின்றன; எனவே மாநிலங்களுக்கு நிதி அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் எவ்வளவு தொகை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நடுநிலையாக தீர்மானிக்க வேண்டி நிதி குழு அமைக்கப்படும்.
மாநிலங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியினை 28 மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பதும் சிக்கலான காரியம்தான். எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் அதிகாரங்களும், பொது செலவு செய்யும் கடமைகளும் பெற்றிருந்தாலும், மாநிலங்களுக்கிடையே உள்ள பொருளாதார வேறுபாடுகள் அவர்களின் நிதிச் சுமையை வேறுபடுத்துகின்றன.
உதாரணமாக ஒரு மாநிலம் அதிக தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் பெற்றிருந்தால் அதிக வரி வருவாய் பெற முடியும். ஒரு மாநிலம் அதிக நிலப் பரப்பளவும், மக்கள் தொகையும் பெற்றிருந்தால் அதிக பொது செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். மாநிலங்களுக்கிடையே உள்ள நிதி நிலை வேறுபாடுகளை கணக்கில் கொண்டு நிதி குழு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கும். ஆக, மத்திய அரசு வரி வருவாயில் எவ்வளுவு மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டும், அவ்வாறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 28 மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பன பற்றி பரிந்துரைகள் வழங்குவது நிதிக் குழுவின் முக்கிய கடமைகளாகும்.
அரசியலமைப்புச்சட்டதின் 280 பிரிவின் கீழ், நிதிக்குழு ஐந்து ஆண்டுக்கொருமுறை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும். இக்குழு மத்திய, மாநில நிதி ஆதாரங்களை ஆராய்ந்து, தனது பரிந்துரைகளை வழங்கும். இதுவரை பதின்மூன்று நிதி ஆணையங்கள் தங்கள் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளன.
14 வது நிதி ஆணையம்(14TH FINANCE COMMISSION)
இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும்.
தலைவர் - யாக வேணுகோபால் ரெட்டி (Y.V.ரெட்டி), முன்னாள் ஆளுநர், இந்திய மைய வங்கி
உறுப்பினர்கள் - சுஷ்மா நாத், முன்னாள் நிதி செயலாளர்; ம.கோவிந்த ராவ் , இயக்குனர் , தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனம்; சுதிப்டோ முன்டல்,முன்னாள் செயல் இயக்குனர், புள்ளியியல் நிறுவனம்.
அலசல்: 15-வது நிதி ஆணையத்தின்(FINANCE COMMISSION) முன் உள்ள சவால்கள்
நில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் நிதி சார்ந்த உறவுகளை நிர்வகிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் நிதிக்குழு ஆணையம். வரி வருவாயை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தில் நிதி நிலைத்தன்மையை கொண்டுவருவதற்கும் இந்த ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவார். அந்த வகையில் 14-வது நிதிக்குழு ஆணையத்தின் பதவிக்காலம் 2019-20-ம் ஆண்டில் முடிவடைய இருக்கிறது. ஏற்கெனவே இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. குறிப்பாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாயை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தும் பரிந்துரையை இந்தக் குழு செய்திருந்தது.
இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 15-வது நிதிக் குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் குழு 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பட உள்ளது. தலைவராக என்.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த வரி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதால் இந்தக் குழுவுக்கு பல்வேறு சவால்கள் காத்துக் கிடக்கின்றன.
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதை சரிசெய்வதற்கு 2022-ம் ஆண்டுவரை மாநிலங்களுக்கு இழப்பீடு நிதியை மத்திய அரசு வழங்க இருக்கிறது. ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் அதிக வரி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கும். இதை சரியான விகிதத்தில் மாநிலங்களுக்கு பிரித்து அளிக்க வேண்டிய பொறுப்பு நிதிக்குழு ஆணையத்துக்கு உள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் அதிக வருவாய் இழப்பு மாநிலம் மற்றும் குறைந்த வருவாய் இழப்பு மாநிலம் எனத் தனித் தனியாக பிரிக்க வேண்டும். இரண்டு பிரிவு மாநிலங்களுக்கும் இடைவெளியை குறைப்பதற்கான செயல்பாடுகளை நிதிக்குழு ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை பெரிய இடைவெளி ஏற்பட்டால் அது மாநிலங்களின் சமூக மற்றும் மூலதன செலவுகளை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறையின் அளவு உயர்ந்து வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. அதனால் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டிய நிதியில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாது மாநிலங்களின் கடன் வாங்கும் திறனின் அளவு, பொது நிதியின் மதிப்பு, மாநிலங்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கான நிதி என அனைத்தையும் கருத்தில் கொண்டே நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கணக்கில் எடுத்துக் கொண்டே நிதிக்குழு ஆணையம் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
14-வது நிதிக்குழு ஆணையம் பரிந்துரைகள் நிதி கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும் வகையிலே பரிந்துரைகளை அளித்துள்ளது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் 15-வது நிதிக்குழு ஆணையம் செயல்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment