Why is Indian Regional Navigational Satellite System (IRNSS) needed? How does it help in navigation? (UPSC 2018)
ஐஆர்என்எஸ்எஸ்(IRNSS) ன் தேவை என்ன? அது எவ்வாறு வழிகாட்டளுக்கு உதவுகிறது?(UPSC 2018)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்.
அறிமுகம்:
இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு எனப்படுவதே ஆங்கிலத்தில் IRNSS(Indian Regional Navigation Satellite System) எனஅழைக்கப்படுகிறது.
இதை இந்தியாவால் சொந்தமாக உருவாக்கப்பட்ட (GPS-Global Positioning System) எனவும் கூறலாம். இதனை NAVIC(Navigation with Indian Constellation) எனவும்அழைக்கின்றனர். இதனை Naviks(mariners) அதாவது மாலுமிகள் அல்லது மீனவர்கள் எனப்படும். இதுவரை நமது மாலுமிகள் அல்லது மீனவர்களுக்குவானத்து நட்சத்திரங்கள்,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வழி காட்டியது. இனி அப்பணியை IRNSS செய்யவிருப்பதால் நமதுமாலுமிகளை(மீனவர்களை) கெளரவிக்கும் பொருட்டு Naviks எனவும் அழைகப்படவுள்ளது.
இதுவரை உலகிலேயே நான்கு நாடுகள் மட்டுமே தங்களுக்கென சொந்தமாக GPS சேவையை வைத்திருந்தன.
அவை,
- அமெரிக்கா (GPS-1978),
- இரஷ்யா (GLANASS-1982),
- ஐரோப்பிய யூனியன் (GALILEO-2011),
- சீனா (BEIDOU-2000).
இந்த வரிசையில் நமது இந்தியாவும் தனது IRNSS வுடன் சொந்த GPS வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இணைகின்றது.
GPS சிறு பார்வை:
உலக அமைவிடம் காட்டும் அமைப்பு (GPS-Global Positioning System) என்பதே GPS என அழைக்கப்படுகின்றது. இது உலகில் முதல் முதலாக அமெரிக்காவால்அமெரிக்க இராணுவத்திற்காக உருவாக்கப்பட்டது. பின், அதன் பயன் கருதி பொதுமக்கள் உபயோகத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது.
இதற்காக அமெரிக்கா, வானில் 31 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளது. ஒரு இடத்தின் நிகழ்நேர விவரங்களை பெற மூன்றுசெயற்கைக்கோள்கள் தேவை. தரையில் நாம் பயன்படுத்தும் GPS ஏற்பி(Receiver) அந்த மூன்று செயற்கைக்கோள்களின் சமிக்ஞைகளை(signal) பெற்று அதைநமக்க பயன்படும் தகவலாக மாற்றி தரும் பணியை செய்கிறது.
GPS க்கான 31 செயற்கைக்கோள் அமெரிக்காவால் 1989 முதல் 1993 வரையுள்ள காலகட்டத்தில் செலுத்தியது. இது 5 மீட்டர்(பொதுமக்களுக்கு) வரையிலானதுல்லியமான செய்திகளை அளிக்கவல்லது. இராணுவத்திற்கான துல்லிய தன்மையை அமெரிக்கா வெளியிடவில்லை.
சரி இனி நமது IRNSS–க்கு வருவோம்.
இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS-Indian Regional Navigation Satellite System):
இந்தியாவின் GPS கனவு கார்கில் போர் மூண்ட காலத்திலேயே மலர்ந்துவிட்டது. இந்தியா–பாக்கிஸ்கானுக்கு இடையே கார்கில் போர் நடந்தபோது நமதுஇராணுவம் அமெரிக்காவின் GPS–க்காக பட்டபாடு அனைவரும் அறிந்ததே. IRNSS உருவாக முதன்மை காரணமாக இதுவே கருதப்படுகிறது.
IRNSS–க்கான திட்ட வரைவு 1999-ல் முழுமை பெற்றது. ஆனால் இந்திய அரசு இந்த திட்டத்தை 2006-லேயே அங்கீகரித்து பணிகளை மேற்கொள்ளஅனுமதித்தது. இதற்காக 28 மே, 2013 அன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய செயற்கைக்கோள் வழிநடத்து மையம் பெங்களூரில் “இந்தியதொலைதூர விண்வெளி வலைபின்னல்” வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன்படி நாடெங்கும் 21 தரைநிலையங்கள் அமைக்கப்பட்டு தகவல்களைகண்காணிக்க வழிசெய்யப்பட்டது.
பின் IRNSS–க்கான செயற்கைக்கோள்களை 2011 முதல் 2015 வரை விண்ணில் ஏவ முடிவெடுக்கப்பட்டது. ஆனால், திட்டம் சற்று தாமதமாகியதால் முதல்விண்கலம் 2013-ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் ஏவப்பட்டது. இவ்வாறாக ஏழு செயற்கைக்கோள்களும் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்துஏவப்பட்டது. கடைசி விண்கலத்தை கடந்த 28 ஏப்ரல், 2016 அன்று நமது ISRO வெற்றிகரமாக ஏவியது. நான்கிலிருந்து ஐந்து மாதங்கள்செயற்கைக்கோள்களுக்கான இணைப்பு மற்றும் சோதனை சரிபார்க்கப்பட்டு செப்டம்பர் 2016 ல் பயன்பாட்டுக்கு வரும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
நமது IRNSS அமைப்பானது ஏழு பிர்தான செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது. மேலும் இரு முக்கிய தரை நிலையங்கள் பகுதி செயற்கைக்கோளாகசெயல்பட்டு விண்ணிலுள்ள செயற்கைக்கோள்களுக்கு தேவையான நிலையான தகவல்களை தருகிறது.
IRNSS ன் மூலம் நமது நாட்டின் எல்லையிலிருந்து 1500 கி.மீ தூரம் வரை துல்லியமான தகவலைப்பெறலாம்.
NAVIC (NAVIC என்றாலும் IRNSS என்றாலும் ஒன்றே)-ன் மூலம் பொதுமக்கள் மற்றும் இராணுவம் பயனடைய உள்ளது. இதன் துல்லியத்தன்மையானது,
பொதுமக்களுக்கு 10 மீட்டராகவும்,
இராணுவத்திற்கு 10 சென்டி மீட்டராகவும் உள்ளது.
இதன் மொத்த திட்ட செலவு தோரயமாக 1,420 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும்.
அதற்கான தனித்தனி செலவு பட்டியல்(தோராயமாக) கீழே:
தரை கட்டுப்பாட்டு மையங்களுக்கு
|
300 கோடி
|
ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும்
|
150 கோடி
|
ஒவ்வொரு PSLV-XL ஏவு வாகனத்திற்கும்
|
130 கோடி
|
ஒவ்வொரு விண்கலனும் தோராயமாக 1,330 கிலோ கிராம் எடையுடையது. மேலும், ஒவ்வொன்றும் சுமார் 1,400 வாட்(1400 watts) மின்திறனை உற்பத்திசெய்யும் சூரிய மின்கலங்களையும் கொண்டது.
செயற்கை கோள்களின் விபரங்கள்:
வரிசை
எண்
|
விண்கலம்
ஏவப்பட்ட
நாள்
|
விண்கலத்தின்
பெயர்
|
விண்கலத்தின்
சுற்றுவட்டப்பாதை
|
01-07-2013
|
IRNSS-1A
|
GSO(Geosynchronous Orbit)
| |
04-04-2014
|
IRNSS-1B
|
GSO
| |
16-10-2014
|
IRNSS-1C
|
Geostationary
| |
28-03-2015
|
IRNSS-1D
|
GSO
| |
20-01-2016
|
IRNSS-1E
|
GSO
| |
10-03-2016
|
IRNSS-1F
|
Sub-GTO(Sub-Geosynchronous Transfer Orbit)
| |
28-04-2016
|
IRNSS-1G
|
Sub-GTO
|
IRNSS-1A:
NAVIC ஏழு செயற்கை கோள்களுள் முதலாவது இதுவே ஆகும். இது புவிக்கு மேல் புவியிணக்க சுற்று பாதையில் (GSO–Geosynchronous Orbit)நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் பொருட்செலவு 125 கோடி ரூபாயாகும். இது சுமார் 1,380 கி.கி எடையுடையது. இது PSLV-C22 –ஆல் விண்ணில்வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.இதன் வாழ்நாள் 10 ஆண்டுகள்.
IRNSS–1B:
இதுவும் புவியிணக்க சுற்றுவட்டப்பாதையில்(GSO) 4 ஏப்ரல், 2014-ல் PSLV–C24 ஏவுவாகனத்தால் ஏவப்பட்டது. இந்த விண்கலனின் முக்கிய பணிவழிநடத்துதல்(Navigation), கண்காணித்தல்(Tracking), வரைபட சேவை(Mapping) ஆகியவையாகும்.
இது 1,432 கி.கி எடையும் 1,660 வாட் சூரிய மின்கலனையும் உடையது. இது 10 ஆண்டுகள் வாழ்நாளுடையது.
IRNSS–1C:
இச்செயற்கைகோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் (Geostationary) 16 செப்டம்பர், 2014-ல் PSLV–C26 –ன் மூலம் ஏவப்பட்டது. இதுவும் 1,660 வாட் சூரியமின்கலனை உடையது. இதுவும் 10 ஆண்டுகள் வாழ்நாளுடையது.
IRNSS–1D:
இது புவியிணக்க சுற்றுபாதையில் (GSO) மார்ச் 4, 2015-ல் PSLV–C27 –ன் மூலம் ஏவப்பட்டது. இது 1,660 வாட் திறனுடைய சூரிய மின்கலனை உடையது. இது1,425 கி.கி எடையுடையது. மற்றும் இது 140 கோடி செலவில் உருவக்கப்பட்டது. இந்த செயற்கை கோள் 12 ஆண்டுகள் வாழ்நாளுடையது.
IRNSS–1E:
இது புவியிணக்க சுற்றுவட்டப்பாதையில் (GSO) ஜனவரி 20, 2016 அன்று PSLV–C31 –ன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது 1,425 கி.கி எடையுடையதுமற்றும் 1,300 வாட் திறனுடைய சூரிய மின்கலங்களை பெற்றுள்ளது. 12 ஆண்டுகள் வாழ்நாளுடையது.
IRNSS–1F:
இது துணை புவியிணக்க சுற்றுவட்டப்பாதையில் (Sub–GTO) மார்ச் 10, 2016-ல் PSLV–C32 –ன் மூலம் ஏவப்பட்டது. 1,425 கி.கி எடையுடைய இது, 1,300 வாட்திறனுள்ள சூரிய தகடுகளை உடையது. இது 12 ஆண்டுகள் வாழ்நாளுடையது.
IRNSS–1G:
இதுவும் 1F ஐ போல் துணை புவியிணக்க சுற்றுவட்ட பாதையில் (Sub–GTO) ஏப்ரல் 28, 2016-ல் PSLV–C33 –ன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதுவும் 1,425கி.கி எடையுடையது. 1,300 வாட் திறனுள்ள சூரிய தகட்டால் சக்தியூட்டப்பட்டுள்ளது. இதற்கான செலவு 125 கோடி ரூபாய். 12 ஆண்டுகள் செயல்படகூடியது.
பயன்பாடு:
இந்தியாவின் IRNSS சேவையானது இந்தியா மற்றும் அதன் எல்லையிலிருந்து 1,500 கிலோ மீட்டர் வரை துல்லியமான (பொதுமக்களுக்கு 10 மீட்டர்மற்றும் இராணுவத்திற்கு மறைகுறியீட்டாக்கம் (Encrypt) செய்யப்பட்ட 10 சென்டி மீட்டர் துல்லியம்) நிகழ்நேர(Real–time) தகவல்களை வழங்கவல்லது.
பொதுமக்களுக்கான பயன்பாடு:
தற்போது நமது கைப்பேசிகள், வாகனத்திற்கான வழிகாட்டி அமைப்பு மற்றும் பல GPS சார்ந்த பயன்பாடுகள் அனைத்தும் அமெரிக்க GPS சேவையையேபயன்படுத்துகிறது.இது இனி IRNSS–ல் இயங்கும்.
கப்பல்கள், விமான்ங்கள், நெருக்கடி நிலைகள் (வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், கலவரம்…) போன்ற சூழல்களில் நமக்கு தேவையான வழிகாட்டுதலுக்கு உதவும்.
கணக்கெடுப்பு மற்றும் கட்டமைப்பு:
புவியியல் நிலைகளின் தகவல்களின் மூலம் உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.
நிலையான கால குறிப்பு (Standard time reference):
ஒவ்வொரு IRNSS செயற்கைக்கோளும் பிரத்தியேகமான அதிநவீன அணு கடிகரத்தை (Rubidium powered atomic clock) பெற்றுள்ளது. எனவே, நாடு முழுவதும்துல்லியமான நேரத்தை பெற்று பயன்படுத்த முடியும்.
பாதுகாப்பு:
வாகன கண்காணிப்பு (vehicle tracking), வன விலங்குகள் நடமாட்ட்த்தை கம்காணித்தல், தீவிரவாத ஊடுருவல் மற்றும் பல பாதுகாப்பு தேவைகளுக்குபயன்படுகின்றது.
விவசாயம்:
மண் வகை, காலநிலை போன்றவற்றின் துல்லிய தகவல்களின் மூலம் விளைச்சலை பெருக்க ஆலோசணைகளை வழங்க முடியும்.
இன்னும் அனைத்து பயன்களையும் கூறவேண்டுமானால் பட்டியல் நம் பக்கங்களை தாண்டும் என்பதில் ஐயமில்லை.
இராணுவ பயன்பாடு:
இந்த IRNSS செயற்கைக்கோள் வழிநடத்தும் அமைப்பின் மூலம் நமது ஏவுகனைகள், வெடிகுண்டுகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றைதுல்லியமாக வழிநடத்தி செல்ல பேருதவிபுரியும்.
இராணுவ குழுக்கள் (Troops) IRNSS-ன் துல்லியமான தரவுகளைக் கொண்டு போர் காலங்கள் அல்லது அமைதியை நிலைநாட்டும் சூழல்களில் பாதுகாப்பாகசெயல்பட உதவும்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் ISRO தனது சாதனை பட்டியலில் ஒன்றாக IRNSS–ஐயும் இணைத்துள்ளது. சொந்த GPS வைத்துள்ள ஐந்துநாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதில் இந்தியராகிய நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும்.
ஆனால் தற்போது ஏழு செயற்கை கோள்களுடன் இந்திய பிராந்தியத்துக்கான இடஞ்சுட்டி அமைப்பு (IRNSS) இந்திய பகுதிக்கு மட்டுமேசெயல்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ISRO மேலும் பல செயற்கைகோள்களை விண்ணில் ஏவி இதன் எல்லையை உலகம் முழுவதும்விரிவுபடுத்தும் என அனைவரும் எதிபார்க்கலாம்.IRNSS-ன் எல்லைக்குள் உள்ள நாடுகள் (குறிப்பாக சார்க் நாடுகள் SAARC–South Asian Association for RegionalCooperation) அமெரிக்க GPS–க்கு பதிலாக இந்தியாவின் IRNSS சேவையை பயன்படுத்தினால் அது நமக்கு வணிக ரீதியாகவும் உதவும்.
இந்த சாதனையின் மூலம் உலக அரங்கில் இந்தியா மற்றுமொருமுறை தனது ஆளுமையை பறைசாற்றியுள்ளது என்றால் அது மிகையல்ல.
கட்டுரை எண் 1
நன்றி : தமிழ் ஹிந்து
12 ஆண்டுகள் செயல்படும்
12 ஆண்டு ஆயுள் கொண்ட ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக்கோள் தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத் துக்கு பெரிதும் உதவும். நீண்டதூர கடல் பயணம் செய்வோர், மலை ஏறுவோருக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். வாகன கண் காணிப்பு, விமானப் போக்குவரத்து மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, செல்போன் சேவை ஒருங்கிணைப்பு, வரைபடம் மற்றும் புவிஅமைப்பு தகவல் பெறுதல் ஆகியவற்றுக்கும் உதவும். மீனவர்கள் மற்றும் கடல்வழி பயணம் செய்பவர்களுக்கு காட்சி மற்றும் குரல்வழி சேவை வழங்கு வதற்கும் இந்த செயற்கைக் கோள் பெரிதும் உதவும்.
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என் எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்திருந்தது. இதன்படி ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து ஐஆர்என்எஸ்எஸ்-1பி, 1சி, 1டி,1இ, 1எஃப் ஆகிய 5 செயற் கைக்கோள்கள் குறிப்பிட்ட கால இடை வெளியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தின் இறுதி (7-வது) செயற்கைக்கோளான ஐஆர்என் எஸ்எஸ்-1ஜி, நேற்று விண்ணில் செலுத்தப் பட்டது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று மதியம் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற் கைக்கோள், பிஎஸ்எல்வி - சி33 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
முன்னதாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 51 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் கடந்த 26-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9.20 மணிக்கு தொடங்கியது.
இந்த செயற்கைக்கோள் கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும். முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.
இந்த செயற்கைக்கோளை வெற்றிகர மாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்தியா ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கடல்சார் ஆராய்ச்சிக்கான 7 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய இந்த திட்டத்துக்கு ‘நாவிக்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தையடுத்து இஸ்ரோ தலைவர் கிரண் குமார் இந்த திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பேசியதாவது:
இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்கு மகத்தான சிறந்த பரிசை அளித்துள்ளனர். ஜிபிஎஸ் தொழில்நுட் பத்துக்காக பல நாடுகளை நாம் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் நாம் தற்சார்பு அடைந்துள்ளோம்.
இத்திட்டத்துக்கு ‘நாவிக்’ என பெயரிட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தெற்காசிய நாடுகள் பயனடையும்.
இந்த செயற்கைக்கோள் மூலம் மீனவர்கள் கடலில் மீன் வளம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியும். கடலில் செல்லும் மாலுமிகள் திசை அறியவும், தட்பவெப்ப நிலை குறித்து அறிந்து பயணத்திட்டத்தை வகுக் கவும் உதவும். பேரிடர் காலங் களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், மீட்புப் பணி களில் ஈடுபடவும் உதவும். சாதனை புரிந்த விஞ்ஞானிகளை மீண்டும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மோடி கூறினார்.
நாவிக் = படகோட்டி
‘நாவிகேஷன்’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமாக ‘நாவிக்’ என்பது இருந்தாலும், இந்தியில் ‘நாவிக்’ என்ற வார்த்தைக்கு ‘படகோட்டி’ அல்லது ‘கடலோடி’ என்ற பொருள் வரும். இந்த செயற்கைக்கோளை மீனவர்களுக்கும் கடல் பயணத் தையே வாழ்க்கையாகக் கொண்டவர் களுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment