மரபணு மாற்றப்பட் உணவு என்றால் என்ன?





General Studies- III:
TopicAwareness in biotechnology
Expected Question for UPSC  exam (Tamil): 

Genetically Modified (GM) crops are often conflicted with health and financial concerns before universally mainstreaming them. Comment.

மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்கள் பெரும்பாலும் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னர் சுகாதார மற்றும் நிதி சம்பந்தமான பிரச்சனைகளுடன் முரண்படுகின்றன.கருத்து தெரிவிக்க 



What are the myths and realities associated with GM food? Do you think India should maintain its still-rich genetic diversity for the future of our agriculture instead of going for GM crops? Critically comment.



GM உணவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள்  மற்றும் உண்மைகள் யாவை?GM பயிர்களுக்குப் பதிலாக, நமது வேளாண்மையின் எதிர்காலத்திற்காக  இந்தியா இன்னும் அதன் மரபியல் பன்முகத்தன்மையை பராமரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?கருத்து தெரிவிக்க 





Comment
கருத்து தெரிவிக்க



இங்கே நாம் நமது அறிவையும், புரிந்துகொள்ளுதலையும் வெளிப்படுத்தி நம் கருத்திற்கு வலு சேர்க்க வேண்டும்



கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  



மரபணு மாற்றுப் பயிர்



மரபணு மாற்றுப் பயிர் (Genetically modified (GM) crops) என்பவை மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பயிர்வகைகள். மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் ( டி ஆக்சி ரைபோ கரு அமிலம்) டி.என்.ஏ வில் மரபணு பொறியியல் மூலம் குறிப்பிட்ட மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் முக்கியமான நோக்கம், குறிப்பிட்ட ஒரு இனப் பயிரில் இயற்கையாக இல்லாத ஒரு புதிய இயல்பை அந்தப் பயிரில் புகுத்துதல் ஆகும். இது வழமையாகக் கடைபிடிக்கப்படும் அவர்களது மூதாதைகளிடமிருந்து தேர்ந்து வளர்க்கப்படுவது (விலங்கு வளர்ப்பு அல்லது பயிர் வளர்ப்பு) போலன்று. இவற்றில் உணவுப் பயிர்களும், உணவல்லாத வேறு உற்பத்திப் பொருட்களுக்கான பயிர்களும் (மருந்துப் பயிர், உயிரி எரிபொருள் பயிர்) அடங்கும். இவ்வகைப் பயிர்கள் 1990களிலிருந்து சந்தைக்கு வர ஆரம்பித்தன. குறிப்பாக சோயா அவரை, தக்காளி, விதை அற்ற முந்திரி , பருத்தி விதை எண்ணெய் என்று மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் உற்பத்திகள் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இந்த மரபணு மாற்றத்திற்குக் காரணங்களாக பூச்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து அதிகரிப்பு, விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கிய நிலையிலும் பயிர் வளர்தல் போன்றவை கூறப்படுகின்றன. தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க, அதில் உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்.
பின்னர் விலங்குகளிலும் இம்முறை கையாளப்பட்டது. எடுத்துக்காட்டாக, 2006ஆம் ஆண்டு பன்றி ஒன்றிலிருந்து மோதிரப்புழு (அல்லது வட்டப்புழு) மரபணு கொண்டு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் சுரக்கச் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் உணவானது, வழமையான முறையினால் பெறப்படும் உணவிலிருந்து மாறுபட்டு மனிதருக்குத் அதிக உடல்நலத் தீங்கு விளைவுகள் எதனையும் தருவதில்லை என்று அறிவியல் கருத்தொற்றுமை இருக்கின்றபோதிலும், இவ்வகைப் பயிர்களால் விவசாயிகளுக்குச் சில சூழலியல், பொருளியல் நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றபோதிலும், இத் தொழில்நுட்பத்தின் அளவுக்கதிகமான பயன்பாடானது நன்மைகளை மீறித் தீமைகளையே தரும் எனக் கூறப்படுகின்றது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த பல விமரிசனங்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இவற்றினால் எழும் உடல்நிலை குறைகள் தொடர்பில் முழுவதும் அறியப்படாத நிலையில், இப்பயிர்களில் இருந்து பெறப்படும் உணவினால் கிடைக்கும் பாதுகாப்பற்ற தன்மை குறித்து எதிர்க் கருத்தாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

REFERENCE: Shankar IAS Academy



மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், சில விளக்கங்கள்

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN