நமாமி கங்கை மற்றும் தூய்மை கங்கை திட்டம்


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL

Discuss the Namami Ganga and National Mission for Clean Ganga (NMCG) programmes and causes of mixed results from the previous schemes. What quantum leaps can help preserve the river Ganga better than incremental inputs ?

நமாமி கங்கை மற்றும் தூய்மை கங்கை திட்டம்  பற்றி விவாதிக்க.முந்தைய திட்டங்கள் இருந்து கலவையான  திட்ட  முடிவுகள்  மற்றும் அதற்கான காரணங்களை கூறுக.எந்த மாதிரியான விரைவு நடவடிக்கை  கூடுதல் உள்ளீடுகளை விட  கங்கை நதியை பாதுகாக்க உதவும்.



கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 



Image result for namami gange logo

கங்கை நதி அதன் புனிதத்தினாலும்கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லைஇந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது . 2014ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிநாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவீத இந்திய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சி தான்.


பிரதமரின் இந்த கூற்றை நனவாக்கும் வகையில் இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்துள்ளது. 2019-20ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 100 சதவீதம் மத்திய அரசின் திட்டம் ஆகும்.
கங்கையை புனரமைப்பதில் பல்துறை சார்ந்த சவால்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் அதிகரிக்கப்பட்ட கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆரம்பகட்ட பணிகள்இடைநிலை பணிகள்நீண்டகால பணிகள் என்று பிரிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது உடனடியாக பார்த்ததும் மாற்றத்தை ஏற்படுத்துதல்பின்னர் ஆண்டு காலத்தில் முடிக்கும் பணிகளை நிறைவு செய்தல்தொடர்ந்து 10 ஆண்டுக்கு நீண்டகால பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்

இதில் தொடக்க நிலை பணிகளில்,முதல்கட்டமாக நதியின் மேற்பகுதி சுத்தப்படுத்தப்படும்,அதாவது நீரின் மேற்பரப்பில் காணப்படும் மிதக்கும் கழிவுகள்ஊரகபகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுகள்மாசுகளை அகற்றும் பணிகள்மேற்கொள்ளப்படும்.இதற்காக ஊரகப்பகுதிகளில் ஆற்றோர கிராம மக்களுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்படும்தொடர்ந்து கழிவுநீர் சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டு அவை சுத்திகரிக்கப்படும். அடுத்ததாக கங்கையில் எரிக்கப்படாதஅல்லது பாதி எரிக்கப்பட்ட பிணங்கள் வீசுவதை தடுக்க அதன் கரையோரங்களில் நவீன முறையிலான சுடுகாடுகள் அமைக்கப்படும். நதியுடனான இணைப்பு கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு அதன் மூலம் கழிவுகள் கலப்பது தடுக்கப்படும்.
மத்திய கால திட்டத்தின் கீழ்நகராட்சி மற்றும் ஆலைக்கழிவுகள் கங்கையில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி கழிவுகள் நதியில் கலப்பதை தடுக்க ஆற்றுக்கரையோரங்களில் தினமும் ஆயிரத்து 500 லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த ஆண்டுகளில் அமைக்கப்படும். இந்த திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் சிறப்பாக செயல்பட ஏதுவாக நிதி ஆதாரத்திற்கு வகை செய்யும் நிதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தனியார்அரசு துறை பங்களிப்பு முறையில் இதற்கான நவீன திட்டங்கள் செயல் வடிவமாக்குவது பற்றி மத்திய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால்சலுகைகளுடன் நகர்புறங்களில் நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சொத்துக்கள் நீண்டகால நீடித்தபயன்பாட்டிற்கு வழிவகை காணப்படும்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை பொறுத்தவரை அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டங்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கங்கை நதிக்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படவேண்டும் என்றும்மாசு ஏற்படுத்தும் கழிவுகள் துளி அளவு கூட ஆற்றில் கலக்காமல் நிறுவனங்கள் கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் இப்போதே எடுக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கான காலவரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து தொழிற்சாலைகளும் கழிவுகள் கண்காணிப்பு வசதியை ஆன்லைன் மூலம் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.
இதுதவிரபல்லுயிர் பாதுகாப்புகாடு வளர்ப்புநீர்தர கண்காணிப்பு போன்ற திட்டங்களும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும். அடையாளச் சின்ன உயிரினங்களான தங்க பெளிமீன்டால்பின்நன்னீர் முதலைஆமைகள்நீர் நாய்கள் உள்ளிட்டவற்றை காக்கவும் இதில் சிறப்புத்திட்டம் உண்டு. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன.
தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும் அடங்கும். இதன் மூலம் நீர்தேங்கும் அளவு அதிகரிப்பதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படும்நதி நீர் சுற்றுச்சூழலும் மேம்படும். காடுவளர்ப்புத் திட்டம் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர நதிநீர் தரம் குறித்து ஆய்வு செய்ய 113 நீர் தர ஆய்வு மையங்களும் அமைக்கப்படும்.
இந்த நீண்டகால திட்டத்தின் கீழ் ஆற்றில் தொடர்ச்சியாக சீரான நீர் வரத்துக்கும் வழிவகை செய்யப்படும். பாசனத்திற்கும் பயன்படும்.
கங்கை நதி சமூகபொருளாதாரகலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை தூய்மை படுத்தும் பணி சற்று சிக்கலான விவகாரமாகும். மேலும் பல்வேறு பயன்பாடுகளில் நதி சுரண்டலுக்கு ஆளாகிறது. எனவே இப்படி ஒரு சிக்கலான பணி உலகின் எந்த பகுதியிலும் மேற்கொள்ள முடியாததாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும்ஒவ்வொரு சமுதாயத்தினரும் இதற்கு ஆதரவு தந்தால்தான் திட்டம் செயல்வடிவம் பெறும்.
  1. ஆகவே கங்கையை தூய்மைப் படுத்தும் இந்த மகா திட்டத்தில் ஒவ்வொருவரும் ஒருவகையில் பங்களிப்பை செய்ய வேண்டும்.
    1) நிதிப் பங்களிப்பு – அதிக நீளமும் கரையோர மக்கள் வளமும் கொண்ட கங்கையின் நீரை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதி தேவை என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பெரும் நிதி தேவைப்படும். இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு மடங்கு உயர்த்தி விட்டது. ஆனாலும்தேவைக்குறிய நிதி கிடைக்காது. அதற்கான தூய்மை கங்கை திட்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் நிதி பங்களிப்பு செய்யலாம்.
    2) குறைத்தல்மறுபயன்பாடு மற்றும் மீட்டல்- பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் வீடுகளில் வெளியேற்றப்படும் பயன்படுத்திய தண்ணீரை ஆற்றில் கலக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நம்மில் பலரும் தெரிந்திருக்கவில்லை. இதற்காக கழிவுநீர் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதற்கு ஏதுவாக குடிமக்கள் நீர் பயன்பாட்டை குறைத்துகழிவுகளை குறைக்க வேண்டும். இதற்கு மறு பயன்பாடு மற்றும் மீட்டல் தொழில்நுட்பம் உதவும். கரிமக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகள் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கலாம்.


நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மறுவடிவமாகவும்நமது நாகரீகத்தின் அடையாளமுமாக விளங்கும் தேசிய நதியான கங்கையை பாதுகாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்.




ரூ.20,000 கோடி ஒதுக்கியும் கங்கை நதியை சுத்தம் செய்வதில் சிக்கல்


ஓராண்டுக்கு முன்னால் தங்களது வெற்றியைக் கொண்டாட கங்கை நதிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி ‘கங்கா ஆர்த்தி’ செய்த பிறகும் கூட கங்கை நதியை சுத்தம் செய்வதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதில் பிரதமர் தொகுதியான வாரணாசி மக்களிடையே இருவேறு கருத்துக்கள் உள்ளன. 

1986ம் ஆண்டு கங்கை நடவடிக்கைத் திட்டத்தை காங்கிரஸ் அரசு பிரகடனம் செய்த காலத்திலிருந்தே கங்கையை சுத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பிறகு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் இட்டும் கங்கை நதி சுத்தம் செய்யும் விவகாரத்தில் வெற்றி அடைய முடியாத நிலையே உள்ளது. 

இந்த ஆண்டு, மத்திய அரசு, கங்கை நதியை சுத்தம் செய்யும் ‘நமாமி கங்கா’திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கியது. 

கங்கையை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கான தேசிய குழுவின் இயக்குநர் புஷ்கல் உபாத்யாய், தி இந்து-விடம் (ஆங்கிலம்) கூறும் போது, “தற்போது நதிக்குள் வரும் கழிவு நீரின் அளவைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும், மாசுக் கண்காணிப்பு மற்றும் பொதுவிழிப்புணர்வு பங்கேற்றல் ஆகியவற்றுக்கு மேலும் முதலீடு செய்யப்படவுள்ளது. கங்கைக்குள் வரும் கழிவுநீரை சுத்தம் செய்யும் நிலுவையில் சுத்திகரிப்பு நிலையங்களை பூர்த்தி செய்யவும், புதிய சுத்திரகரிப்பு நிலையம் அமைக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதற்கு அந்த ரூ.20,000 கோடி பயன்படுத்தப்படவுள்ளது. மத்திய சர்வரிலிருந்து நதியின் மாசுக்கட்டுப்பாட்டை கண்காணிக்கும் திட்டமும் உள்ளது. 

முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட கங்கா நடவடிக்கைப் படை ஒன்றை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது” என்றார். 

கங்கை நதியை காப்பாற்றுங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரமா ரவுதா கூறும் போது, "கங்கை நதியைச் சுத்தம் செய்வதில் பிரதமர் மோடியின் திட்டம் வெற்றியடைந்து விட்டால் அவர் வாக்காளர்களால் வழிபடத்தகுதி பெற்று விடுவார்" என்றார். 

வாரணாசியில் உள்ள இந்து சமய நம்பிக்கையாளர்களும் பாஜக-வின் தீவிர ஆதரவாளர்களும் கங்கை நதித் தூய்மை திட்டம் குறித்து உற்சாகம் அடைய, 30 ஆண்டுகளாக படகு ஓட்டி வரும் தினேஷ் என்பவரோ, “கங்கையின் நிலையில் ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை” என்று எதிர்மறை கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN