நடப்புக் கணக்கு பற்றாகுறை என்றால் என்ன?


 # அடிப்படை கற்றல்

பொருளாதாரத்தில் செலுத்தல் இருப்புநிலையில் இரண்டு அடிப்படை கூறுகளில் நடப்புக் கணக்கும் (Current account) ஒன்றாகும். மற்றொன்று மூலத்தனக் கணக்காகும். இது வணிக இருப்புநிலைக் குறிப்பு (பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியிலிருந்து இறக்குமதியில் கழித்தல்), நிகர காரணி வருவாய் (வட்டி மற்றும் ஈவுத்தொகைப் போன்றவை) மற்றும் நிகர பணமாற்று கட்டணங்கள் (அயல்நாட்டு உதவி போன்றவை) ஆகியவைகளின் கூட்டாகும்.நடப்பு கணக்கு = வணிக இருப்புநிலைக்குறிப்பு + அயல்நாட்டிலிருந்து நிகர காரணி வருவாய் + அயல்நாட்டிலிருந்து நிகர ஒருதரப்பு பணமாற்றுகள்



நடப்புக் கணக்கு இருப்பானது ஒரு நாட்டின் அயல்நாட்டு வணிகத்தின் தன்மையைக் கணக்கிடும் இரண்டு பெரிய முறைகளில் ஒன்றாகும் (மற்றொன்று நிகர மூலத்தன வெளியீடாகும்). ஒரு நடப்புக் கணக்கு உபரியானது அதே அளவுக்கு ஒரு நாட்டின் நிகர அந்நிய சொத்துகளை அதிகரிக்கின்றது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை இதற்கு நேரெதிர் விளைவை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் மற்றும் தனியார் கட்டணங்கள் ஆகிய இரண்டுமே கணக்கில் சேர்க்கப்படுகின்றன. பொருட்களும் சேவைகளும் பொதுவாக நடப்புக் காலத்தில் பயன்படுத்தப்படுவதால், இது நடப்புக் கணக்கு என்று அழைக்கப்படுகிறது.




Image result for current account deficit



ஒரு வணிக இருப்புநிலைக் குறிப்பென்பது, அனைத்து பணமாற்றங்கள், முதலீடுகள் மற்றும் மற்ற கூறுகள் கருத்தில் கொள்ளப்படாத நிலையில் ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிக்கும் அதன் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசமாகும். ஒரு நாடு இறக்குமதி செய்வதை விட குறைவாக ஏற்றுமதி செய்யும் போது அதற்கு வணிக பற்றாக்குறையுள்ளது.

நேர்மறை நிகர அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு நடப்புக் கணக்கு உபரி யை உண்டாக்குகிறது; எதிர்மறை அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு நடப்புக் கணக்கு பற்றாக்குறை யை உண்டாக்குகிறது. ஏற்றுமதிகள் நேர்மறை நிகர விற்பனைகளை உண்டாக்குவதாலும் வணிக இருப்பானது பொதுவாக நடப்புக் கணக்கின் மிகப்பெரிய கூறாக இருப்பதாலும், ஒரு நடப்புக் கணக்கு உபரியானது பொதுவாக நேர்மறை நிகர ஏற்றுமதிகளோடு தொடர்புப்படுத்தப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிப்படை பொருளாதாரத்தில் இது எப்போதும் நடைபெறுவது கிடையாது. இதில் சீ.ஏ.டி.யை விட வருவாய்ப் பற்றாக்குறை அதிகமாக காண்பிக்கப்படுகிறது.

நடப்புக் கணக்கின் துணைக் கணக்கான, நிகர காரணி வருவாய் அல்லது வருவாய்க் கணக்கு, பொதுவாக வருவாய்க் கட்டணங்கள்என்ற தலைப்பின் கீழ் வெளியீடுகளாகவும் வருவாய்ப் பெறுதல் களில் உள்ளீடுகளாகவும் காண்பிக்கப்படுகிறது. வருவாய் என்பது வெளிநாடுகளிலிருக்கும் முதலீடுகளிலிருந்து (குறிப்பு: முதலீடுகள் மூலத்தனக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் முதலீடுகளிலிருந்து வரும் வருவாயானது நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகிறது) பெறும் பணத்தை மட்டுமல்லாமல், அயல்நாடுகளில் பணிபுரிந்து வீட்டிற்கு அனுப்பும் ரெமிட்டன்ஸ் என்றழைக்கப்படும் பணத்தையும் குறிக்கின்றது. வருவாய்க் கணக்கு எதிர்மறையாக இருந்தால், நாடானது வட்டி, ஈவுத்தொகைகள், போன்றவைகளில் பெறுவதை விட அதிகமாக செலுத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு, ஐக்கிய அமெரிக்காவின் நிகர வருவாயானது அடுக்கேற்ற விகிதத்தில் குறைந்துக் கொண்டு வருகிறது. இதேனென்றால், அந்த நாடு மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது டாலருடைய விலையை, வருவாய்க் கட்டணங்களும் பெறுதல்களும் கிட்டத்திட்ட சமமாக இருக்கும் அளவுக்கு சந்தை நிர்ணயிக்க அனுமதித்திருக்கிறது. கனடாவின் வருவாய்க் கட்டணங்களுக்கும் பெறுதல்களுக்கும் இடையேயான வித்தியாசம் கூட அடுக்கேற்றவிகிதத்தில் குறைந்துக் கொண்டே செல்கிறது. இதேனென்றால் அதன் மத்திய வங்கியானது 1998ஆம் ஆண்டு, கனடா நாட்டு டாலரின் அந்நிய செலாவணியில் இடர்படக்கூடாதென்ற ஒரு கடுமையான திட்டத்தை அமுல்படுத்தியது. வருவாய்க் கணக்கிலுள்ள பல்வேறு துணைப்பிரிவுகள் மூலத்தனக் கணக்கிலுள்ள அதேக் குறிப்பிட்ட துணைப்பிரிவுகளுடன் தொடர்புடையனவாய் இருக்கின்றன. இதேனென்றால், வருவாயானது அவ்வபோது மூலத்தனத்தில் (சொத்துகள்) உரிமைக் கொண்டாடுவது அல்லது அயல்நாட்டிலிருக்கும் எதிர்மறை மூலத்தனத்தைக் (கடன்கள்) கொண்டிருக்கிறது. மூலத்தனக் கணக்கிலிருந்து, பொருளாதார நிபுணர்களும் மத்திய வங்கிகளும் பல்வேறு வகை மூலத்தனங்களின் உட்கிடையான விளைவு விகிதங்களை நிர்னயிக்கின்றன. உதாரணத்திற்கு, ஐக்கிய அமெரிக்காவானது, வெளிநாட்டவர் ஐக்கிய அமெரிக்க மூலத்தனத்திலிருந்துப் பெறுவதைவிட மிக அதிகமான விளைவு விகிதத்தை வெளிநாட்டு மூலத்தனத்திலிருந்து பெறுகிறது.

பாரம்பரிய கட்டண இருப்புநிலைக் குறிப்பு, நடப்புக் கணக்கானது நிகர அந்நிய சொத்துகளின் வித்தியாசத்துடன் சமமாகக் காணப்படுகிறது. ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது நிகர அந்நிய சொத்துகளின் ஒரு ஒப்புமை குறைவை சுட்டிக்காட்டுகிறது.


நடப்பு கணக்கு = நிகர அந்நிய சொத்துகளின் வித்தியாசம்





நடப்புக் கணக்குப் பற்றாகுறைகளைக் குறைத்தல்



ஒரு பெருமளவிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கும் செயல்பாட்டில் பொதுவாக ஏற்றுமதிகளை (சரக்குகள் ஒரு நாட்டிற்கு வெளியே சென்று அயல்நாடுகளை சென்றடைவது) அதிகரித்தல் அல்லது இறக்குமதிகளைக் (சரக்குகள் ஒரு அயல்நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குள் நுழைவது) குறைத்தல் ஆகியவை உட்படும். இது பொதுவாக இறக்குமதி கட்டுபாடுகள், ஒதுக்கீடுகள் அல்லது தீர்வைகள் (இது மறைமுகமாக ஏற்றுமதிகளையும் குறைக்கக் கூடும்) அல்லது ஏற்றுமதிகளுக்கு மானியம் வழங்குதல் ஆகியவற்றை செய்வதன் மூலமாக அடையப்படுகிறது. அயல்நாட்டு நுகர்வோருக்கு ஏற்றுமதிகளை மலிவாக்குவதற்காக அந்நிய செலாவணியில் தாக்கம் ஏற்படுத்துவது மறைமுகமாக கட்டண இருப்புநிலைக் குறிப்பை உயர்த்தும். இது உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதால் அடையப்படுகிறது. உள்நாட்டு வழங்குநர்களுக்கு சாதகமாக அரசாங்க செலவிடுதலை சரிசெய்தலும் திறமிக்கதாக இருக்கிறது.

அதிகம் வெளிப்படாத ஆனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான அதிக திறமிக்க முறைகளில், தேசிய அரசாங்கத்தின் கடன் வாங்குதலைக் குறைப்பது உட்பட உள்நாட்டு சேமிப்புகளை அதிகரிக்கும் (அல்லது உள்நாட்டு கடன் வாங்குதலை குறைத்தல்) வழிகள் அடங்கும்.


நன்றி : தமிழ் ஹிந்து 

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை: இறக்குமதித் தீர்வை மட்டும் போதாது! 


அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்புச் சரிவு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அவசியமற்ற 19 பண்டங்களின் இறக்குமதி மீதான சுங்கத் தீர்வையை அதிகரித்துள்ளது மத்திய அரசு. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க இந்நடவடிக்கை போதாது என்றும் குறுகியகால நிவாரணத்துக்கு மட்டும் நடவடிக்கையைச் சிந்திக்காமல் நீண்டகால நோக்கில் அரசு சிந்திக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.
2017-18-ல் இறக்குமதியான மொத்த வணிகச் சரக்குகள் மதிப்பில் இப்போது வரி உயர்த்தப்பட்டுள்ள சரக்குகளின் மொத்த மதிப்பே 3%-க்கும் குறைவு. அது மட்டுமின்றி நடப்பு நிதியாண்டில் ஆறு மாதங்கள் கழிந்துவிட்டன. எஞ்சிய காலத்துக்கு இந்த வரி விதிப்பால் கணிசமான தொகை அரசுக்குக் கிடைத்துவிடப்போவதில்லை. சிலவகை நுகர்வுப் பண்டங்களின் மீதான வரியை 20% அளவுக்கு உயர்த்துவதால் இவற்றின் நுகர்வேகூடக் குறைந்துவிடலாம். ரூபாயின் மதிப்புச் சரிவால் ஏற்கெனவே இவற்றின் விலை உயர்ந்துவிட்டது. எனவே, அரசின் நோக்கப்படி இதில் வரிவருவாயும் அதிகமாகிவிடாது, இறக்குமதியாகும் பண்டங்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படுவதன் நுகர்வும் கணிசமாக உயர்ந்துவிடாது. இது உளவியல்ரீதியாக இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற திருப்தியை மட்டுமே ஆட்சியாளர்களுக்குத் தரக்கூடும்.
விமான எரிபொருள் மீதான சுங்கக்கட்டணம் 5% ஆக விதிக்கப்படுவதால் உள்நாட்டில் விமானக் கட்டணம் அதற்கேற்ப உயரும். ஏற்கெனவே கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்வு, ரூபாயின் மாற்று மதிப்புச் சரிவு காரணமாக விமான நிறுவனங்கள் கணிசமாக வருவாயை இழந்துவருகின்றன. இந்தச் சூழலில், ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை அரசு ஆராய்ந்து நீக்கியிருக்கலாம். ஊக்குவிப்புகளை அளித்திருக்கலாம். வரிவிதிப்புகளைக் குறைத்திருக்கலாம். இந்தியாவின் உற்பத்தித் துறைக்குத் தேவைப்படும் இறக்குமதிகளின் மதிப்பைவிட, ஏற்றுமதி அதிகமாகும் அளவுக்குக் கொள்கை முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏற்றுமதியாளர்கள் செலுத்திய ஜிஎஸ்டியிலிருந்து அவர்கள் திரும்பப் பெற வேண்டிய உள்ளீட்டு வரித் தொகையை உடனடியாகத் திருப்பித் தருவது ஊக்குவிப்பாக இருக்கும்.
சீனத்திலிருந்து வியட்நாம், வங்கதேசத்துக்குச் செல்லும் உற்பத்திப் பிரிவுகளை இந்தியாவை நோக்கி ஈர்த்திருக்க முடியும். கையிருப்பில் அபரிமிதமாக நிலக்கரி இருக்கும்போது அவசரத் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை நல்லதல்ல. இத்துறையை நன்கு நிர்வகித்திருந்தால் தேவையற்ற இறக்குமதியைக் குறைத்திருக்க முடியும்.
உலகச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஈரான் மீதான தடை மேலும் இறுகும் சமயத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியே கணிசமாகக் குறையக்கூடிய நிலை உருவாகிவருகிறது. எனவே, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைத் தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமாகவே குறைக்கவும் மொத்த ஜிடிபி மதிப்பில் 3% என்ற அளவுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். வலுவான, நிலையான நடவடிக்கைகளே இதற்கெல்லாம் வழிவகுக்கும்!

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN