கட்டுரைத் தாளில் (ESSAY) சாதிக்க 5 வழிகள்!

நாம் பார்க்க இருப்பது கட்டுரை தாளைப் பற்றி. 250 மதிப்பெண்களை கொண்ட இந்த தாளில் கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண் என இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியம். ஏனென்றால் மொத்தத் தாளையும் சேர்த்து இரண்டு கேள்விகளுக்குத்தான் நாம் பதில் அளிக்கப்போகிறோம். இரண்டே கேள்விகள் என்பதால் ஒரு கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் தேர்ந்தெடுத்து சற்று பாதை மாறி நம் விடை சென்றுவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்கள் வரை ( 125 மதிப்பெண் வரை) நேரடியாக இழக்க நேரிடும்.
ஆக, கேள்விகளைப் பலமுறை படித்துப் பார்த்து ஒவ்வொரு பகுதியிலும் நான்கில் ஒன்றை தேர்ந்தெடுப்பது அவசியம். ' இது மிகவும் கஷ்டமான, சவாலான கேள்வியாக இருக்கிறது. யாரும் இதை எழுத மாட்டார்கள். எனக்கு இதைப்பற்றி ஓரளவு தெரிந்தாலும் நான் யாரென்று காட்டுறேன்' எனத் தேர்ந்தெடுத்து காட்டுவதை விட, மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமக்கு தெரிந்ததை, புரிந்ததை மட்டும் எழுதினாலே போதும் வெற்றி நமக்குத்தான் !
உதாரண தலைப்புகள்/ கேள்விகள்
 ஒரு நாட்டின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் வடிவமைக்கப்படுகிறது.( UPSC 2017)
 சமூக வலைதளம் இயற்கையாகவே ஓர் சுயநலமான ஊடகம் ( UPSC 2017 ) 
கல்வி, பொருளாதாரம், ஜனநாயகம், தேசப்பற்று, நாட்டின் வளர்ச்சி, பல்வேறு சமூகப் பிரச்சனைகள், நிர்வாகம், ஊடகங்கள், சுற்றுச்சூழல், நெறிமுறைகள், அறிவியல் தொழில்நுட்பம்  போன்ற தலைப்புகளை ஏற்கனவே பொதுப் பாடங்களுக்காக படிக்கிறோம், இந்த தலைப்புகளில் கட்டுரை எழுதும் கண்ணோட்டத்துடன் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்வது கட்டுரைத்தாளில் அதிக மதிப்பெண்களைப் பெற பெரிதும் உதவும்.
கட்டுரைத் தாளில் சாதிக்க 5 சூப்பர் டிப்ஸ் ! 
1. தலைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தை எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நம் கட்டுரை அமைவது மிக அவசியம். பல நேரங்களில் 1000-1200 வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும் ( 125 மதிப்பெண்களுக்கு) இதை அளவீடாக வைத்துக்கொண்டு கொள்ளுங்கள், திடீர் என்று மதிப்பெண்கள் மாற்றப்பட்டாலோ அல்லது வார்த்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலோ, இந்த அளவீட்டை வைத்து உங்கள் கட்டுரையை உருவாக்குங்கள். 
2. 1200 வார்த்தைகளில் உங்கள் கட்டுரை என்றால் அதில் 12 முதல்15 உப தலைப்புகள் இட்டு எழுதுங்கள். உப தலைப்புகளை முதலிலேயே முடிவு செய்து விட்டு எழுதத் தொடங்குங்கள். 
3. மேற்கோள்கள் மற்றும் பொன்மொழிகள்/பிரபல வாக்கியங்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப ஆங்காங்கே பயன்படுத்துங்கள். தற்போதைய / அண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதினால் அது உங்கள் கட்டுரைக்கு இன்னும் பலம் சேர்க்கும்.
4. அனைத்து தலைப்புகளிலும் நாம் சொல்லும் விஷயத்தின் சாதக, பாதகங்களை ஆராய்வது மிக முக்கியம். அனைத்தும் கட்டுரையில் அமைவதும் அவசியம். ஆனால் அதிகப்படியான எதிர்மறை வரிகளை தவிர்க்கவும். 
5. ' பாஸிடிவான’ அதே சமயம் நடுநிலையான கட்டுரைகளுக்கு என்றுமே மதிப்பு அதிகம். நாம் ஒரு புத்தகத்தில் நன்றாகப் படித்த தலைப்பே தேர்வில் வந்தாலும், அதை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதாமல், நமக்கான சுயமான சொற்களை தேர்ந்தெடுத்து எழுதினால், நிச்சயம் நல்ல பலனை தரும். புத்தகங்களில் இருந்து புறப்படும் கட்டுரைகளை விட மனதில் இருந்து புறப்படும் கட்டுரைகளுக்கே மகத்துவம் அதிகம். அவைகள் மதிப்பெண்களையும் அள்ளித் தரும். 

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN