இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன?



#அடிப்படை கற்றல் #UPSCTAMIL



Image result for national food security act




இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (ஆங்கிலம்: National Food Security Bill - India) என்பது உணவை ஒர் அடிப்படை மனித உரிமையாக உறுதிசெய்து முன்மொழிந்துள்ள சட்டம் ஆகும். இது ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இச் சட்டத்தால் சுமார் 67% அல்லது 80 கோடி ஏழை மக்கள் பலன் அடைவார் என்று இச் சட்டத்துக்கு ஆதரவானோர் கூறுகின்றார்கள்.




நோக்கம்



இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி இன்றைய நிலையில் மந்தமாக உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு தானியத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு, "தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தை" ஆகஸ்ட் 2007இல் அமல்படுத்தியுள்ளது. கோதுமை, நெல் மற்றும் பயறு வகைகளில், உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் அதிகரித்து, உணவு தானிய தன்னிறைவை அடைவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். புதிய தொழில் நுட்பங்களையும், பண்ணை மேலாண்மை முறைகளையும் விவசாயிகளுக்கு அளித்து, மகசூல் குறைபாட்டை ஈடுசெய்வதும் இதன் முக்கிய குறிக்கோள்.




தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்



தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் - நெல்

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் - கோதுமை

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் - பயறு வகைகள்


11வது திட்டத்தில் (2007- 2012) தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் திட்டத்தின் பொருளாதார ஒதுக்கீடு ரூ.4882.48 கோடியாகும். பயன்பெறும் விவசாயிகள் 50% சாகுபடி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவரவர் பண்ணைகளில் சாகுபடி செய்ய வேண்டும்.
பயனாளி விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் அவர்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை, அரசு, அவர்கள் கடன் பெற்றுள்ள வங்கிகளுக்கு அளித்து விடுகிறது.
இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், 2011-12 இல் நெற்பயிரில் 10 மில்லியன் டன், கோதுமையில் 8 மில்லியன் டன் மற்றும் பயறு வகைகளில் 2 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறது.



திட்டத்தின் கீழ்வரும் மாநிலங்கள்




15 மாநிலங்களில் (ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார், சட்டிஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்) உள்ள 142 மாவட்டங்கள் இத்திட்டத்தின் நெல் பிரிவின் கீழ் வருகிறது.

9 மாநிலங்களில் (பஞ்சாப், ஹரியானா, உ.பி, பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்ட்ரா மற்றும் மேற்கு வங்காளம்) உள்ள 142 மாவட்டங்கள் இத்திட்டத்தின் கோதுமை கீழ் வருகிறது.

16 மாநிலங்களில் (ஆந்திரா, பீஹார், சட்டிஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வாங்காளம்) உள்ள 468 மாவட்டங்கள், இத்திட்டத்தின் பயிர்கள் பிரிவின் கீழ் வருகிறது.

20 மில்லியன் எக்டரில் நெற்பயிரும், 13 மில்லியன் எக்டரில் கோதுமையும், 4.5 மில்லியன் எக்டரில் பயிர்களும் மேற்கண்ட மாவட்டங்களில், இத்திட்டத்தின் கீழ் வருகிறது. இது நெல் மற்றும் கோதுமை சாகுபடி செய்யப்படும் பரப்பில் 50% ஆகும். பயறு வகைகளில், 20% கூடுதலான பரப்பை உருவாக்ககப்பட உள்ளது.

ஆதாரம்: வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை, வேளாண்மை அமைச்சகம், இந்திய அரசு.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN