# அடிப்படை கற்றல் #UPSCTAMIL
- தேசிய வனக்கொள்கை 1988, தேசிய சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி பாதுகாப்பு கொள்கை 1992, மாசுக்கட்டுப்பாடு கொள்கை வரைவு 1992, தேசிய வேளாண் கொள்கை 2000, தேசிய மக்கள் தொகை கொள்கை 2000, தேசிய தண்ணீர் கொள்கை 2002 ஆகியவற்றினைக் கணக்கில் கொண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கொள்கை, சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேற்கொள்வோருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். அதாவது, திட்டங்களை செயல்படுத்துவதில், சூழல் பாதுகாப்புக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படும் அல்லது கொண்டு வரப்படும் சட்டதிட்டங்களுக்கு இந்தக் கொள்கை வழிகாட்டியாக அமையும்.
- சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாக்கும்போது, மனித வளங்களையும், வாழ்வையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது மக்கள் வளங்களை அழித்து பெறும் லாபத்தை விட அவற்றை பாதுகாப்பதன் மூலம் பெறும் லாபம் அதிகமாக காணக்கூடிய வகையில், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இத்தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் முக்கிய கருத்து.
- இந்தக் கொள்கை பலரும் இணைந்து செயல்படுவதை ஊக்குவித்து வருகிறது. அதாவது பொது நல நிறுவனங்கள், உள்ளுர் மக்கள், கல்வி ஆர்வலர்கள், விஞ்ஞான நிறுவனங்கள், மூலதனம் உடையோர், உலகளவிலான வளர்ச்சி நிறுவனங்கள் - தங்களிடமுள்ள வளங்களையும், பலங்களையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை நிர்வகிக்க உதவுகின்றன.
No comments:
Post a Comment