தேசிய நீர் கொள்கை என்றால் என்ன?


#அடிப்படை கற்றல் #UPSCTAMIL

Image result for national water policy


தேசிய நீர்வள ஆதாரங்கள் கழகமானது, நீர்வள ஆதாரங்களின் மேலாண்மை குறித்த விவகாரங்களை கையாளும் தேசிய நீர்கொள்கையை ஏப்ரல் 2002ல் ஏற்றுக்கொண்டது. இந்த கொள்கையானது, நீர் ஆதாரங்களை நிலையான மற்றும் திறனான முறையில் மேலாண்மை செய்வதற்க்கான அவசியத்தை முக்கியபடுத்துகிறது.
தேசிய நீர் கொள்கையின் சிறப்பு அம்சங்கள்
  • இயற்கையின் முதன்மையான ஆதாரமான நீரானது, மனிதனின் அடிப்படை தேவை மற்றும் நாட்டின் பிரசித்தி பெற்ற சொத்தாகும். இதனால், நீர் ஆதாரத்தின் திட்டம், மேம்பாடு மற்றும் மேலாண்மையை, தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படுத்த வேண்டும்.
  • மாநில/தேசிய அளவில் ஆன நீர்வள ஆதாரத்தின் குறிப்புகள் பற்றிய தகவலை, திறம்பட்ட சேகரிக்க வேண்டும். மேலும் மத்திய மற்றும் மாநில தகவல் வங்கிகள் மற்றும் தகவல் அடிப்படை ஆதாரங்கள் ஆகியவற்றை வலுபடுத்தி, ஒருங்கிணைத்து மாநில மற்றும் தேசிய அளவில் நீர் சம்பந்தப்பட்ட தகவல்கள் அணைத்தையும் தெரிந்து கொள்வதற்கான ஒரு வங்கியை உருவாக்க வேண்டும்.
  • நாட்டில் உள்ள நீர் ஆதாரங்களை, கூடிய மட்டும் அதிகம் பயன்படுத்தும் ஆதாரமாக கொண்டு வர வேண்டும்.
  • மரபு வழி அல்லாத ஆற்றுப்படுக்கைக்களுக்கிடையே ஆன மாற்றம், செயற்கை நிலத்தடி நீர் அதிகரித்தல் மற்றும் கடல் மற்றும் உவர்நீர் உப்பகற்றுதல் ஆகியவற்றாலும், மரபுவழி நீர் சேமித்தல் (மழைநீர் சேகரிப்பு, வீட்டுகூரை மூலம் மழைநீர் சேமிப்பு) ஆகியவற்றாலும் பயன்படக்கூடிய நீர் ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும். இவ்வகையான தொழில்நுட்பங்களுக்கு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மேற்கொள்வது அவசியம்.
  • நீர்வள் ஆதாரங்களுக்கேற்ப குறிப்பிட்ட மேம்பாடு மற்றும் மேலாண்மை திட்டங்கள் அவசியம். இதற்கு தேவையான நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்
  • அந்த அந்த ஆற்றுப்படுகைக்கு தேவையான நீரை ஊர்ஜிதம் செய்த பின்னர் நீர் குறைவாக கிடைக்கும் பகுதிகளுக்கு ஒரு ஆற்று படுகையிலிருந்து இன்னொரு ஆற்றுப்படுக்கைக்கு, நீரை மாற்றி விட வேண்டும்
  • நீர்வள ஆதார மேம்பாட்டு திட்டங்கள் முடிந்தவரை பல துறைகளை ஒருங்கிணைத்த முறையில் பல்நோக்கு கொண்டதாக அமைய வேண்டும். இவை மனிதன் மற்றும் அவனது சூழ்நிலை விதிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
  • நீர் பகிர்வதில், முக்கியதுவம் முதலில் குடிநீருக்கும், பின்பு பாசனம், நீர் ஆற்றல், சுற்றுச்சூழல், வேளாண் சார்ந்த ஆலைகள் பின்னர் பிற தொழிற்சாலைகள் என்னும் முறையை பின்பற்ற வேண்டும்.
  • நிலத்தடி நீர் ஆதாரத்தை உபயோகிக்கும் போது எவ்வாறெல்லாம் இதனை மீன்டும் நீர்வூட்ட முடியும் என்பதனையும் சமுதாய ஒற்றுமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகமாக நிலத்தடி நீர் எடுப்பதனால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்து இதனை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
  • கட்டுமான பணி மற்றும் குடிபெயர்ப்பு திட்டங்கள் சரியாக வகுக்கப்பட வேண்டும். இவற்றிர்க்கான தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்ப வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் இம்முயற்சிகளால் நன்மை அடைவதை உறுதி செய்தல் அவசியம்.
  • இப்பொழுது இருக்கும் நீர் ஆதாரங்களின் இயற்பியல் மற்றும் பொருளியல் நிலைக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். நீர்க்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் போது, அந்த கட்டணத்தினால் முதலீட்டு செலவில் பகுதியையும் மற்றும் பராமரிப்பு செலவையும் அளிக்கும் வண்ணம் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • பலவிதமான உபயோகத்திற்கு நீரை பயன்படுத்தும் போது அதன் மேலண்மையை பலதரப்பட்ட உபயோகிப்பவரின் பங்களிப்புடன் மற்றும் அரசு நிறுவனத்துடனும் செயல்படுத்த வேண்டும்.
  • எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் தனியார் நிறுவனங்களை, நீர்வள திட்டமிடுதல், மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் பங்கு பெற ஊக்குவிக்க வேண்டும்
  • பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய இரண்டின் தரத்தையும் அடிக்கடி தரப்பரிசோதனை செய்ய வேண்டும். கழிவுகளை வேதியல் நேர்த்தி செய்து பின்னர் இயற்கை நீர் ஓட்டத்துடன் கலக்கச் செய்ய வேண்டும்.
  • கல்வி, ஒழுங்கு முறை, ஊக்க தொகை மற்றும் அபராதம் ஆகியவற்றினால் பலவகை பயன்பாட்டிலும் நீரை திறம்பட உபயோகிப்பதை மேம்படுத்த வேண்டும்.
  • வெள்ள கட்டுபாட்டுக்கான முதன்மைதிட்டம் இருக்க வேண்டும். வெள்ளம் எளிதில் பாதிக்கக்கூடிய ஆற்றுபடுகைகான மேலாண்மை திட்டமும் இருக்க வேண்டும்.
  • கடல் மற்றும் ஆற்றினால் ஏற்படும் நில அரிப்பை தகுந்த திட்டம் கொண்டு தடுக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் நடைபெறும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
  • வறட்சி ஏறபடக்கூடிய பகுதிகளின் நீர்வள மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவைகளை வறட்சியின் பாதிப்பை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு, தேசிய கண்ணோட்டத்தோடும் நீர் தேவைகளை கணக்கில் கொண்டும் வகுக்கப்பட வேண்டும்.
  • நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கூறாக பயிற்சி மற்றும் ஆராய்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
தேசிய நீர் கொள்கையின் வெற்றி அடைய, தேசிய அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, தகுந்த மாநில நீர் கொள்கைகள் வகுத்தல் அவசியம் என்பதை இக்கொள்கை வெளிப்படுத்துகிறது. இது வரை 13 மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் மாநில நீர் கொள்கையை வகுத்துள்ளது. தேசிய அரசானது தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மாநிலங்களுக்கு அளித்து வருகிறது. இதன் நோக்கம் மாநிலங்களை ஊக்குவித்து, தேசிய நீர் கொள்கையின் நோக்கங்களை அடைவதாகும்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN