ப்ளாக்செயின் என்றால் என்ன?

# அடிப்படை கற்றல் #UPSCTAMIL





ப்ளாக்செயின்



ப்ளாக்செயின் என்பது அடிப்படையில் ஒரு பதிவேடாகும். பிட்காயின் உலகின் முதுகெலும்பு போன்றது. பிட்காயின் உருவாக்கம், பரிமாற்றம் ஆகிய அனைத்து பிட்காயின் நடவடிக்கைகளும் இந்தப் பதிவேட்டில்
ஏற்றப்படுகின்றன. பிட்காயின் மைனர்கள், நோடுகள், பயனாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிஸ்டமாகும். ஒவ்வொரு பரிமாற்றத்தையும் மைனர்கள் (miners) சரிபார்த்து, நேரவரிசைப்படி இப்பதிவேட்டில் பதிவு செய்வார்கள்.
இது வேலை செய்யும் விதம்: மைனர்கள் தங்களிடமுள்ள சிறப்புக் கணினி மற்றும் இதர பயனர்களின் கணினி மூலம் ஒரு புதிருக்கான தீர்வைக் கண்டுபிடிப்பார்கள். அவ்வாறு ஒரு புதிர் தீர்க்கப்பட்டதும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பிட்காயின் கிடைக்கும். அத்துடன் ப்ளாக்செயின் எனப்படும் பரிமாற்றச் சங்கிலியில் ஒரு வளையம் சேர்க்கப்படும். ஒரு வளையம் சேர்க்கப்பட்ட தும் சங்கிலி மீண்டும் சுழலத் தொடங்கும், புதிய புதிர்கள் உருவாகும், மைனர்கள் (miners) மீண்டும் அவற்றுக்கான தீர்வுகளை கண்டறியத் தொடங்குவார்கள்.


”பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பிளாக் செயின் தொழில்நுட்பம்!” - டிஜிட்டல் இந்தியா கவனத்துக்கு


இந்தத் திட்டத்தில் நாட்டின் குடிமக்களின் தகவல்கள் எல்லாம் பொதுப்படையாக சேமிக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாக் (block) எனவும், அவர்களது தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்களது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அல்லது அவர்கள் குறிப்பிடும் நம்பகத்தன்மை நிறைந்த மூவர் பொறுப்பாளர்களாக (guardian) நியமிக்கப்படுவார்கள்.


ரசினர் குடியிருப்பு பகுதி அது. அங்கு வசிப்பவர்கள் அனைவருமே அரசாங்கத்திற்காகப்  பணியாற்றி பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்களின் பேரன் பேத்திகள் பள்ளி கல்லூரி மாணவர்கள். அவர்களின் படிப்பை பற்றிய பேச்சு அடிப்பட, இந்தக் கட்டுரையின் அஸ்திவாரம் எழுந்தது நிற்கத் தொடங்குகிறது.
ஓர் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி-யின் மனைவி கூறுகிறார், "இப்போ என் பேத்திகள டியூஷன் எல்லாம் அனுப்பல. காலம் கெட்டு கடக்கு. யார நம்புறது? எத நம்புறது? தெனமும் பிள்ளைய அனுப்பிட்டு பயந்து பயந்து, எப்போ வருவாளோ, எப்படி வருவாளோனு இருக்குறதுக்கு காசு போனாலும் போகட்டுமுனு மூணு பேருக்கும் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லித்தர ஒரு பொண்ண ஏற்பாடு செஞ்சிட்டேன். இப்போதான் எங்க எல்லாருக்கும் நிம்மதியா இருக்கு". 
இந்த நிலைப்பாட்டைப்  பல கோணங்களில் பார்க்கலாம். முதலாவதாக, நல்ல வசதியான குடும்பம், பணம் இருக்கு, வீட்டிற்கு வந்து பாடம் சொல்லித்தர வசதி வாய்ப்புகள் இருக்கு. சிரமப்படாமல் பெரிய புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் ஏராளம். இவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடிகிறது. இரண்டு, பணம், சமூக அந்தஸ்து இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? அப்படிப்பட்ட நிலையிலா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? மூன்றாவதாக, இவர்கள் யாரும் காட்டிற்குள் விறகு வெட்டப் போகவில்லை. ஆபத்தான இடத்துக்குப் போகவில்லை. பிறகு ஏன் இவள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலை? நீங்கள் பாதுகாப்பான இடத்தில் வாழவில்லை என்று பிள்ளைகளுக்கும் அதை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கலாமா?
பிளாக் செயின்
ஒரே நாட்டில் வாழும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கிடையில் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமை பெறுவதில் இருக்கும் சிக்கல்களும் சந்தர்ப்பங்களும் வேறுபடுகின்றன. எனினும் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரும் பாதுகாப்பாக உணர வேண்டும். அப்படிப்பட்ட சமூகத்தை இனி நம்மால் உருவாக்க முடியுமா? பெண்களின் பாதுகாப்பு பற்றி இன்று அனைவரும் மனதளவில் சிந்திக்கும் நேரத்தில், தொழில்நுட்பங்கள் கொண்டு என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம்.
கான்செண்ஸிஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் நமக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. உலகின் கொடிய பயங்கரவாதம் ஒருவரை அடிமைப்படுத்துதல். அப்படிப்பட்ட பயங்கரவாதம் இன்று எந்தப்  பெண்களுக்கும் நடப்பதில்லை என்று கூறினாலும் உண்மை அது அல்ல. வளர்ந்த நாடோ அல்லது வளரும் நாடோ, பொருளாதார ரீதியில் நிலைபெற்ற நாடோ அல்லது பின்தங்கிய நாடோ, உலக வரைபடத்தில் பெரியதோ சிறியதோ, போர் நடைபெறும் நாடோ நடந்து மீண்ட நாடோ, எல்லா நாட்டிலும் எங்கோ ஒரு பெண்ணிற்கு அநீதி நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் 30 மில்லியன் அடிமை பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
"மனிதன்தான் பொய் சொல்லுவான். மெஷின் பொய் சொல்லாது". இது எவ்வளவு பெரிய உண்மை என்பது அனுபவப்பட்டால்தான் புரியும். அப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்தால், பொய் சொல்லி பெண்களைக்  குழந்தைகளை கடத்துபவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதற்கான திறவுகோல்தான் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் பிளாக் செயின் தொழில்நுட்பம். இதனை மையமாகக் கொண்டுதான் பிட்காய்ன்ஸ் செயல்படுகிறது.

பிளாக் செயின் எப்படி பெண்கள் பாதுகாப்பிற்கு உதவும்? 

ஆசியாவும் ஐரோப்பாவும் இணைக்கும் ஓர் ஏழ்மையான நாடு. இங்கு இருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் காணாமல் போவதும், அப்படி காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டோ அல்லது வேலை வாங்கித்தருவதாகக்  கூறியோ வேறு நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு பாலியல் தொழிலில் அடிமைகளாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை எல்லாம் பொய்யான அடையாள அட்டைகளைக் கொண்டு அரங்கேறி வருகிறது. இந்த அவலங்களைத்  தடுக்க தொழில்நுட்ப ரீதியாக ஒரு தீர்வை தேடியபோது பிளாக் செயின் (Block Chain Technology) முறை உதவும் எனக் கண்டறியப்பட்டது. 
இந்தத் திட்டத்தில் நாட்டின் குடிமக்களின் தகவல்கள் எல்லாம் பொதுப்படையாக சேமிக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாக் (block) எனவும், அவர்களது தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்களது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அல்லது அவர்கள் குறிப்பிடும் நம்பகத்தன்மை நிறைந்த மூவர் பொறுப்பாளர்களாக (guardian) நியமிக்கப்படுவார்கள். உதாரணமாக, ஒரு குழந்தை அந்த நாட்டின் எல்லையைத் தாண்டி செல்ல வேண்டும் என்றால், அந்தக் குழந்தையின் கருவிழி ஸ்கேன் (Retina scan) செய்யப்படும். அதன் மூலம், அந்தக் குழந்தையின் பொறுப்பாளர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும். மூவரில் இரண்டு பேர் அங்கீகரித்தால் மட்டுமே அந்தக் குழந்தை நாட்டின் எல்லையைத்  கடக்க முடியும். இத்துடன், ஒரு குழந்தை இதற்கு முன்னால் கடத்தப்பட்டு உள்ளதா அல்லது அதிகமாகக் கடத்தல் நிகழும் பகுதில் வாழ்கிறதா? (“at-risk” adolescents) போன்ற பல்வேறு தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
இது மிகவும் சிறப்பான திட்டம்தான். ஆனால் மால்டோவா போன்ற ஒரு ஏழை நாட்டில் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு அரசு அடையாள அட்டையே கிடைக்கப்பெறாத நிலையில் இது எப்படி சாத்தியமாகும்? ஐக்கிய நாடுகளைப் பொறுத்தவரையில் உலகம் முழுக்க இன்னும் 230 மில்லியன் குழந்தைகளுக்கு அரசு அடையாள அட்டை கிடைக்கவில்லை. இதுவே இந்த முறைக்கு முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது என்று சமூக ஆர்வலர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கருதுகிறார்கள். கூகுள் நிறுவனம் இதற்கு ஒரு மாற்று வழியைப் பரிந்துரைத்தது. அரசாங்க ஐ.டி இல்லை என்றால் என்ன? ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு அடையாளங்களைப்  பதிவேற்றம் செய்து கண்காணிக்க முயலலாம் என்றது. ஆனால் அதற்கும் அங்கு சிக்கல். அங்குள்ள மக்கள் இன்னும் சாதாரண தொலைபேசிக்கே இன்னும் பழக்கப்படாத நிலையில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டை எப்படி புரிந்துகொண்டு உபயோகிப்பார்கள்?
மால்டோவா சரி. டிஜிட்டல் இந்தியா பெண்களின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்யலாம். இங்கேயும் குழந்தைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் சம்பவங்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. அரசு இதை பரிசிலிக்கலாமே?

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN