#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL
Discuss the Namami Ganga and National Mission for Clean Ganga (NMCG) programmes and causes of mixed results from the previous schemes. What quantum leaps can help preserve the river Ganga better than incremental inputs ?
நமாமி கங்கை மற்றும் தூய்மை கங்கை திட்டம் பற்றி விவாதிக்க.முந்தைய திட்டங்கள் இருந்து கலவையான திட்ட முடிவுகள் மற்றும் அதற்கான காரணங்களை கூறுக.எந்த மாதிரியான விரைவு நடவடிக்கை கூடுதல் உள்ளீடுகளை விட கங்கை நதியை பாதுகாக்க உதவும்.
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
கங்கை நதி அதன் புனிதத்தினாலும், கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது . 2014ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவீத இந்திய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சி தான்.