UPSC ASPIRANTS களுக்கு வணக்கம்
UPSC முதன்மை தேர்வுக்கு பதில் எழுதுவது என்பது ஒரு சவாலான காரியம்.அப்படி நீங்கள் கருதவில்லை என்றால் போட்டியில் நீங்கள் பங்கேற்கவில்லை என்று பொருள்.ஏனென்றால் UPSC ல் ஒரு கேள்வி பதிலுக்கு 50 % மதிப்பெண் பெற்றாலே அது சிறப்பாக கருதப்படுகிறது.எனவே ஒரு தலைப்பை நீங்கள் ஒருமுறை பயிற்சி செய்திருந்தால் அதிலுள்ள அடிப்படை விஷயங்களை மட்டுமே அறிந்திருப்பீர்கள். ஆனால் UPSC ன் கேள்விகள் நீங்கள் பயிற்சி செய்த வினாக்களை ஒட்டிய கேள்விகளாகவும் இருக்கலாம் அல்லது அதிலிருந்து வேறுபட்டும் இருக்கலாம். எனவே,ஒரு தலைப்பை வெவ்வேறு கோணங்களில் நீங்கள் கேள்வி பதிலாக எழுதி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மனித ஞாபக சக்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவே ஆகும்.அது UPSC க்கும் பொருந்தும்.ஒரு நாளில் இரண்டு வினாக்கள் எழுதும் நீங்கள் ஒரு மாதம் கழிந்து அதை பற்றிய அடிப்படை ஞாபகங்கள் இருந்தும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால்,நீங்கள் ஒரு மாதத்திற்கு முன் எழுதியத்திலிருந்து சில விஷயங்கள் மட்டுமே ஞாபகம் இருக்கும்.UPSC தேர்வின் போது நீங்கள் ஒரு நாளைக்கு 40 கேள்விக்கு பதில் அளிக்க போகிறீர்கள்.அது 40 தலைப்பை பற்றிய தெளிவான புரிதல்களை உங்களிடம் சோதிக்கிறார்கள். அந்த சமயத்தில் உங்கள் புரிதல் மட்டுமே (பயிற்சி) உங்களுக்கு உதவும்.
உங்கள் பயிற்சி சரியான பலனை கொடுத்தால் மட்டுமே இங்கு நீங்கள் அதிக மதிப்பெண் பெற்று நீங்கள் விரும்பிய பணியினை (IAS ,IPS .... ) பெறமுடியும்.
அந்த சரியான பலனை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?
இந்த பயிற்சியானது அறிவியல் பூர்வமான அடிப்படையை கொண்டு செயல்படுகிறது.இந்த முறைப்படி நீங்கள் தினமும் 2 அல்லது 3 முதன்மை தேர்வு கேள்விகளை பயிற்சி செய்ய வேண்டும்.இந்த பயிற்சிக்கு நான்கு 100 பக்கம் கொண்ட நோட்டை வைத்துக்கொள்ள வேண்டும்.(GS 1,GS 2,GS 3,GS 4).வலது புறம் உங்கள் கேள்வியும் பதிலும் இருக்க வேண்டும்.இடது புறம் உங்கள் கேள்வி பதிலுக்காக சிறு குறிப்பை எழுத பயன் படுத்த வேண்டும்.இந்த முறை உங்கள் ஞாபக சக்தியை உபயோகித்து பதிலை எழுதும் முறை ஆகும். எனவே கேள்விக்கு கொடுக்க பட்டுள்ள கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு இடது புறத்தில் குறிப்பை எடுத்துகொண்டு இரண்டு நாள் கழித்த பின் அந்த கேள்விக்கான பதிலை எழுத முயலவேண்டும்.(அடுத்த நாளே எழுதும் பொது உங்களுக்கு எல்லாம் தெரிவது போன்ற மாயை தோன்றும்) தொடர்ச்சியாக இப்பயிற்சியை செய்யவேண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நீங்கள் இந்த முறைக்கு பழகும் பொது எளிமையாக தோன்றும்.இப்படி பயிற்சி செய்தால் நீங்கள் எல்லா கேள்விகளுக்கும் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பீர்கள்.இதுவே UPSC ன் எதிர்பார்ப்பும் கூட.மேலும் இது உங்கள் நேர்முக தேர்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த தளத்தில் நாளொன்றிற்கு 2 கேள்விகளும் அதற்கான கட்டுரைகளும் பகிரப்படும் என்பதையும் தெரிவிக்கிறோம்.
மேலும்....
No comments:
Post a Comment