#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY
USES AND ABUSES OF SOCIAL NETWORKING (UPSC CSE 2018 (ENGLISH))
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதலும் மற்றும் துஷ்பிரயோகம் செய்தலும் (UPSC CSE 2018 (ENGLISH))
இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், கணினியை கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் வரை ஒரு சேர தற்பெருமை அடித்துக்கொள்ளும் களம் தான் இந்த சமூக வலைத்தளங்கள் . இதில் நட்புறவுகள் மேம்படுத்தல், தகவல் பரிமாற்றங்கள் போன்ற சில பயன்கள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது அவரவர்களின் தற்பெருமைகளே . அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியின் மூலம் மேற்படி கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் வரலாறு என்ன?
மின்அஞ்சல் உருவான காலத்திற்கு பிறகு , அமேரிக்காவின் மினஞ்சல் நிறுவனமான AOL (America OnLine) , தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் , அலைபேசியில் உள்ள குறுஞ்செய்தி போன்று , மின் அஞ்சல் முகவரிகளுக்கிடையே பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒரு குறுஞ்செய்தி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. நாளடைவில் மின்அஞ்சல் முகவரியுடன் சில தகவல் குறிப்புகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொளும் படியும் பிறகு அவரவர்களுக்கு உரிய சில தொகுப்புகளையும் சேமித்து வைத்து பிறருடன் பகிர்ந்துக்கொள்ளவும் என வளர்ந்து தற்போது, அனைத்து இளைஞர் சமுதாயத்தையும் ஆக்கிரமித்து நிற்கின்றது.
பயன்கள் என்ன?
முதலாவதாக இணையவழி விளம்பரப்படுத்தும் நிறுவனங்களுக்கே இது பெரிதும் பயன்படுகின்றது. அதாவது ஒவ்வொரு உறுப்பினர்களின் சுய தகவல்கள் மற்றும் அவர்களுடைய இருப்பிடம், விருப்பமானவைகள் , அவர்கள் இணையத்தில் தேடும் தகவல்கள் அல்லது உலவும் பக்கங்களை வைத்து , அதற்கு தொடர்புடைய நிறுவனங்களின் விளம்பரங்களை அவர்களிடத்தில் சேர்க்கின்றது.
• தொழில் புரிவோர் மற்றும் அலுவல்களில் உள்ளோர்க்கு, தங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களை தொடர்பு கொண்டு, தகவல் பரிமாற்றங்கள் மற்றும் காணொளி சந்திப்புகள் மூலம் தங்களின் குறைவான நேரத்தில் அதிக உற்பத்தி திறனை ஏற்படுத்திக்கொள்ள பயன்படுகின்றது. மாறாக இளைஞர்களுக்கு இதன் மூலம் எந்த உற்பத்தி திறனும் கூட வழியில்லை.
• நட்புறவுகள் அதிகமாக்கிக்கொள்ள பயன்படுகின்றது. இருப்பினும் புதிய நன்பர்களின் குணநலன்கள் பற்றி உறுதியாக சொல்ல முடியாது. அதை அறிந்துக்கொள்ள பல காலம் செல்லும். காரணம் யாவரும் தன்னுடைய நல்லபக்ககளையே பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் தவறான முகங்கள், பொதுவில் வைக்கபடாமல், தனிப்பட்ட மினஞ்சல்கள் மற்றும் அழைப்புகளின் மூலமே தெரியவரும்.
• சமூக ஆர்வளர்கள் தங்கள் கருத்துக்களை , செய்திகளை மக்களிடம் சென்று சேர்க்க பயனுள்ளதாக இருக்கின்றது.
• பயனுள்ள தகவல்களை தேடும் ஒருவர், தங்களுக்கு கிடைத்த சில தகவல்களை பிறருடன் பகிர்ந்துக்கொள்ள உதவுகின்றது.
தீமைகள் என்ன?
• முதலாவதாக இளைஞர் சமுதாயத்தில் பலரை தற்பெருமை மிக்கவர்களாக உருவாக்குகின்றது. தங்களின் இயல்பான வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை , புகைப்படம் , குறும்படம் மூலம் பகிர்ந்துக்கொள்ளுதல் என்பது ஏற்றுகொள்ளகூடியதாக இருந்தாலும் , அதைவிட அதிகமாக தன் நிலைமைக்கு மீறிய இயல்புவாழ்கைக்கு புறம்பான ஒரு பெருமை உலகை காண்பிக்கும் வகையிலேயே தகவல்கள் பதியப்படுகின்றது. பிறருடைய புகைப்படம் மற்றும் தகவல்கள் மூலம், தன்னிலைக்கு மீறிய வாழ்க்கை தரத்தை வாழ முற்படுத்துகின்றது. இதனால் பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுக்கும் இடையே மன உளைச்சலையே விதைக்கின்றது.
• வங்கிகளில் நம் அடையாளத்தை உறுதிசெய்துக்கொள்ள பயன்படுத்தும் பிறந்த நாள் , மற்றும் பலவித இரகசியம் பேணப்பட வேண்டிய தகவல்களையும் பொதுவில் வைத்து விடுகின்றோம். இதனால், தகவல் திருட்டு மூலம் பலவிதமான இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.
• நாம் பொதுவில் வைக்கும் தகவல்களை பயன்படுத்தி நாமே அறிந்திராத சில தீயவர்கள், நம் நண்பர்களிடமோ , உறவினர்களிடமோ மோசடிகள் செய்வதற்கு வழிவகுக்குகின்றது.
• மாணவர்கள் , தகவல் பகிர்தல் , இணையவழி விளையாட்டுக்கள் என சமூக வலைத்தளங்களில் அதிகமான நேரங்கள் சிலவிடுகின்றனர். இதனால் அவர்கள் தங்களின் கல்விக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் உரிய நேரங்கள் அளிப்பதில்லை. அதன் மூலம் கல்விநிலையில் பின்னடைகின்றனர். மேலும் உடற்பயிர்சிக்குறிய விளையாட்டுகளில் ஈடுபடாததாலும் , அதிகமான நேரம் கணினி அல்லது அலைபேசியினை உற்று நோக்குவதாலும், கண் பாதிப்புகளும் ஏற்படுகின்றது . மனதளவிலும் அவர்களின் எண்ணங்கள் எப்பொழுதும் அதையே சிந்திக்கின்றதாக உளவியல் நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்.
• இந்த சமூக வலைத்தளங்கள் புகைப்பிடித்தல் போன்று மாணவர்களை தன்வயப்படுத்தி, அவர்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் பிரித்து வைக்கின்றது. அவர்களின் அதிகமான நேரங்களை ஆக்கரமித்து, அவசியமான காரியங்களையும் கூட பிற்படுத்தவும், மறக்கவும் செய்கின்றது.
• சிலர் அன்றாட நிகழ்வுகளை பகிர்தல் மூலம் , தீயவர்கள் பலவித மோசடிகள் செய்கின்றனர். ஒருவீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை ஆராய்ந்த காவல் துறையினர், கொள்ளை அடித்தவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்கையில், அந்த வீட்டு பெண் , சமூக வலைத்தளத்தில் தாங்கள் விடுமுறை சுற்றுபயணம் செல்வதாகவும், குறிப்பிட்ட சில தினங்களுக்கு வெளியூரில் இருப்பதாக பகிந்திருந்தையும் வைத்து, அந்த வீட்டில் யாரும் இருக்க வழியில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு, கொள்ளை அடித்தோம் என்பதாக கூறியுள்ளனர்.
• வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்களுடன் கலந்துரையாடாமல், உறவாடாமல், எப்பொழுதும் இணையத்திலேயே ஒன்றியிருக்க செய்து, உறவினர்களை இழக்க செய்கின்றது.
சில புள்ளி விவரங்கள்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 69% இளைஞர்கள் , இணையவழி நன்பர்களை இனியர்வர்களாக நினைக்கின்றனர். மாறாக 88% அவர்கள் சாரசரியாகவோ அல்லது தவரான எண்ணம் உள்ளவர்களாவோ இருக்கின்றனர்.
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 65% இளைஞர்கள் , அவர்களை பற்றி அவர்களே பெருமை பட்டுக்கொள்கின்றனர்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 41% இளைஞர்கள் , புதிய நண்பர்கள் மூலம் ஏதாவது ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 25% இளைஞர்கள் , நேருக்கு நேர் ஆரோக்கியமில்லா வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 22% இளைஞர்கள் , தங்களின் பழைய நட்புகள் சில முறிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 22% இளைஞர்கள் , தங்களுக்கு பிடித்தமான சமூகவளைத்தை, ஒரு நாளைக்கு 10 முறையாவது திறக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் நண்பர்கள் அதிகமா?
உலகில் எந்த வயதினர் அதிகத் தனிமையை விரும்புகிறார்கள்? பலரும் முதுமைப் பருவத்தைக் குறிப்பிடலாம். ஆனால், உண்மை அதுவல்ல. மற்ற எல்லா வயதினரையும்விட இளைஞர்கள்தாம் தனிமையை அதிகமாக உணர்கிறார்களாம். பிபிசி சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவு இதைத் தெரிவித்திருக்கிறது.
‘பிபிசி தனிமைச் சோதனை’ (BBC Loneliness Experiment) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 55,000 பேர் பங்கேற்றனர். இதில் 16 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட 40 சதவீதம் பேர் தனிமையை அதிகமாக உணர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக, வயதானவர்கள்தாம் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து நிலவும் நிலையில், இந்த ஆய்வு இளைய தலைமுறையினர் தனிமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது. அனுசரணையான பெற்றோர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள் எனப் பல தரப்பினர் சூழ்ந்திருந்தாலும் தனிமையை உணர்வதாக இளைஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்களுடன் பழக முடியாத காரணத்தாலேயே இளைஞர்கள் தனித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்ல, சமூக ஊடகங்களும் இளைஞர்களின் தனிமை உணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றன. வைஃபை காலத்து இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தைச் சமூக ஊடகங்களில்தான் கழிக்கிறார்கள். இந்தப் பழக்கம் அவர்கள் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இணையத்தில் இப்படி அதிக நேரத்தைச் செலவிடுவதால் தனிமை, சமூகம் சார்ந்த பயம், மன அழுத்தம் போன்றவற்றால் இளைஞர்கள் பாதிப்படைவதாகவும் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதிகமான நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள்தாம் தனிமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தனிமை உணர்வால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், நபர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதைத் தவிர்ப்பதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் நேர்மறை அம்சங்கள் இருந்தாலும், ஏற்கெனவே தனிமை உணர்வில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களால் அவற்றை நேர்மறையாகப் பயன்படுத்த முடியவில்லை. மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசும் வழக்கத்தை இந்தத் தலைமுறை வளர்த்துகொள்ள வேண்டும் என்று கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் ஆய்வு நிபுணர்கள்.
சமூக ஊடகப் பயன்பாட்டைச் சரியாக வரைமுறைப்படுத்துவதன் மூலமே இளைஞர்களால் தனிமை உணர்விலிருந்து வெளியேற முடியும் என்று ஆய்வு முடிவு தெரிவித்திருக்கிறது.
தீர்வு என்ன ?
• பள்ளிகூட மாணவர்களை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு மேல், இதுப்போன்ற சமூக வலைத்தளங்களை பார்வை இடுவதை தடுக்க வேண்டும்.
• சமூக வலைத்தளங்களின் விளையாட்டுகளிலிருந்து திசைதிருப்பி , உடற்பயிற்சி ஏற்படுத்துகின்ற ஆரோக்கீயமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தவேண்டும்.
• நம்மை பற்றிய அனைத்து உண்மை தகவல்களையும் பகிர்தலை தவிர்க்க வேண்டும்.
• நம் தகவல்கள் நம்முடைய நட்புவட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கும் படி சமூக வலைத்தளங்களின் நிரல்களை வகுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன.
தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது நமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும்.
எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட கணனி விளையாட்டுக்கள் (video games), இசைப்பெட்டிகள் (iPods), இலத்திரனியல் சுவடிகள் (Tablets), பலகைகள் (IPads), மற்றும் பல்வேறு இணையதள உபகரணங்கள் Web Appliance என பல்வேறு சாதனங்களைச் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் வளரும் பிள்ளைகளிடம், சமூகவலைகள், குறிப்பாக FaceBook (முகநூல்) பெரும் செல்வாக்கை வகிக்கின்றது. இது இலத்திரனியல் தகவல் நூற்றாண்டில் பிறக்காத பெற்றார்களுக்கு சில சமயம் தர்ம சங்கடமான விடயம்.
FaceBook – முகநூல், சமூகவலைச் சாதனங்கள், தற்போது கணினி, கைப்பேசி பயன்படுத்தத் தெரிந்த பருவத்திற்கு வராத பிள்ளைகளில் இருந்து வயோதிபர் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரு தகவல் பரிமாற்று தளமாக இருந்து வருகிறது.
நம் வீடுகளில் இடைநிலை பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும்,
பெற்றோரும் கைப்பேசி வைத்திருப்பதும், பாவிப்பதும் சுய பயன்பாட்டு
உரிமையென பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
பெற்றோரும் கைப்பேசி வைத்திருப்பதும், பாவிப்பதும் சுய பயன்பாட்டு
உரிமையென பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
இத்தருணத்தில் சமூகவலைகளின் நன்மை, தீமைகளை அதைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருப்பது அவசியம்.
நன்மைகள்
• சமூக ஈடுபாடு – Facebook போன்ற சமூகவலைகள் நிச்சயமாக பிள்ளைகளுக்குத் தமது நண்பர்களுடன் தொடர்பை வைத்திருக்கவும்,
மேலும் புதிய நட்புகளை உண்டு பண்ணவும் இன்னொரு மார்க்கமாக
உதவுகிறது. சரியான முறையில் இது பாவிக்கப்பட்டால் இயல்பான,
நேரடி அறிமுகங்கள் போன்று இதுவும் பிள்ளைகளுக்குத் ஒரு நல்ல சுற்றத்தை அமைத்து தரும்.
மேலும் புதிய நட்புகளை உண்டு பண்ணவும் இன்னொரு மார்க்கமாக
உதவுகிறது. சரியான முறையில் இது பாவிக்கப்பட்டால் இயல்பான,
நேரடி அறிமுகங்கள் போன்று இதுவும் பிள்ளைகளுக்குத் ஒரு நல்ல சுற்றத்தை அமைத்து தரும்.
• சுய அபிப்பிராயங்கள் – சமூகவலை அனைவருக்கும் தமது சுய அபிப்பிராயங்களைத் தெரிவிக்க உறுதுணை வகிக்கும். உதாரணமாகத் தமக்கென இணையப் பக்கம் அமைக்கவும், அதில் தமது மன கருத்துக்களை தமது நண்பர்களுடனும், உலகத்தாருடனும் மனத்திடமாகப் பகிர உதவும்.
• மின்னியல் தகவல் உபயோகத்திறன் – பிள்ளைகள் என்றாலும் சரி, பெரியவர்கள் என்றாலும் சரி எவ்வாறு உடன்கருத்துப் பரிமாறல் செய்யலாம், தகவல் ஆராயலாம், திரட்டிப் பாவிக்கலாம் என்ற இக்கால அத்தியாவசியத் திறன்களைப் பெற வாய்ப்பளிக்கிறது. இதன் காரணமாகப் பிள்ளைகள் சுயமாக எழுத, படம் எடுத்துப் பரிமாற, கானொளி எடுத்துக்கதை சொல்ல, மின்வலையில் தகவல் தேடும் திறன்களைப் பயில வழிவகுக்கிறது.
• கல்வி மேம்பாடு – மின் இணைவு தளம், சமூகவியல் வலைகள் சிறந்த
அறிவுக் களஞ்சியங்கள் ஆகும். புதிய அறிவைப்பெற, கல்வி சம்பந்தமான அறிவைப் பெற, கேள்வி பதில்களை உடனுக்குடன் பரிமாற, சமூகவியல் வலை சிறப்பான சாதனமாகும்.
அறிவுக் களஞ்சியங்கள் ஆகும். புதிய அறிவைப்பெற, கல்வி சம்பந்தமான அறிவைப் பெற, கேள்வி பதில்களை உடனுக்குடன் பரிமாற, சமூகவியல் வலை சிறப்பான சாதனமாகும்.
தீமைகள்
• நம்பகத்தன்மை – இதுப் போன்ற பொது வலைத்தலங்களில் யார் வேண்டுமானலும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். ஆகையால் இத்தகவல்கள் உண்மையான தகவலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. திசை திருப்பும் தகவல்களை ரசிக்கும் வகையில் கொடுத்து வாசிப்பவர்களை மூளைச் சலவை செய்யும் நபர்களும் உண்டு.
• கொடியவர்களின் கைவேலை – FaceBook போன்ற சமூகவலையில்
வரையறையின்றி யாரும் யாரிடமும் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பாகப் பிள்ளைகள் பெற்றார், சுற்றார் மூலமே இயல்பாக
சமூகவரையறைகளைப் பெறுவர். ஆயினும் FaceBook போன்ற
சாதனங்களில் சிலர் தமது கொடிமைத்தனத்தை நேரடியாகவும்,
அனாமதேயமாகவும் காட்ட வழிவகுக்கும். ஒருத்தருக்கு ஒருவர்
அல்லது ஒரு குழுவாகப் பிள்ளைகளை உளவியல் ரீதியில் தாக்கவும்
வழியுண்டு. குறிப்பாக மற்றப் பிள்ளைகள் தொடர்பு சாதனங்கள் ஊடாக
நயவஞ்சகம் செய்தால் இதைப் பெற்றோரினால் தடுக்க முடியாது.
வரையறையின்றி யாரும் யாரிடமும் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பாகப் பிள்ளைகள் பெற்றார், சுற்றார் மூலமே இயல்பாக
சமூகவரையறைகளைப் பெறுவர். ஆயினும் FaceBook போன்ற
சாதனங்களில் சிலர் தமது கொடிமைத்தனத்தை நேரடியாகவும்,
அனாமதேயமாகவும் காட்ட வழிவகுக்கும். ஒருத்தருக்கு ஒருவர்
அல்லது ஒரு குழுவாகப் பிள்ளைகளை உளவியல் ரீதியில் தாக்கவும்
வழியுண்டு. குறிப்பாக மற்றப் பிள்ளைகள் தொடர்பு சாதனங்கள் ஊடாக
நயவஞ்சகம் செய்தால் இதைப் பெற்றோரினால் தடுக்க முடியாது.
• கட்டுப்பாடின்மை – FaceBook தனித்துவமான ஒரு கட்டமைப்பு அல்ல, இது சிறிது சிறிதாகச் சிறார்களை ஆழ்ந்த கடல்போன்ற கட்டற்ற மின்வலைக்கு
எடுத்துச் செல்ல மிகுதியான வாய்ப்புக்கள் உண்டு. பிள்ளைகள் மின் வலயத்திற்குத் தாமாகவே செல்ல வயது குறைந்தவர்கள் எனப் பெற்றோர் நினைத்தால், சமூகவலை உபயோகத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பாகத் தகாத தொடர்புகளை பிள்ளைகள் பெறாமால் காக்க வேண்டும்.
எடுத்துச் செல்ல மிகுதியான வாய்ப்புக்கள் உண்டு. பிள்ளைகள் மின் வலயத்திற்குத் தாமாகவே செல்ல வயது குறைந்தவர்கள் எனப் பெற்றோர் நினைத்தால், சமூகவலை உபயோகத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பாகத் தகாத தொடர்புகளை பிள்ளைகள் பெறாமால் காக்க வேண்டும்.
• அவதானம்தேவை – பிள்ளைகள் உடன் தொடர்பு கொள்வது அவர்கட்கும் குடும்பத்திற்குத் தெரிந்தவர்காளாக இருப்பினும், சமூகவலைகள் நண்பர்களிள் நண்பர்களை நம்பக்கூடிய நபர்களாகத் தாமாகவே இணைத்துவிடும். இது FaceBook போன்ற சமுகவலயங்கள் தமது வர்த்தக ஆதாயங்களிற்காகச் செய்யும் ஒரு கைவேலை. ஆயினும் இவ்வாறு தெரியாதவர்களைத் தொடுப்பது பிள்ளைகள் அறியாமல் வயதிற்கு ஏற்காத விடயங்களை எதிர்கொள்ளவும் வழிவகுக்கலாம்.
எனவே FaceBook போன்ற சமூகவலய தளங்களை பெற்றோர்கள், பிள்ளைகள்
ஒன்றாகக்கூடிச் சிந்தித்து உள, உடல் ஆரோக்கியத்தையும் பேணும்
வகையில் கையாளுதல் நன்மையே.
ஒன்றாகக்கூடிச் சிந்தித்து உள, உடல் ஆரோக்கியத்தையும் பேணும்
வகையில் கையாளுதல் நன்மையே.
சமூக வலைதளம் என்கிற சந்தை
சம காலத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு பிரம்மாண்ட உலகம் இணையம். காலையில் தூங்கி எழுவது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை நிகழ் உலகம் இந்த இணைய உலகிற்குள்ளும் உலவிக்கொண்டிருக்கிறது. இந்த செயற்கை உலகம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது என்பதையெல்லாம் தாண்டி, இதன் சாதகங்கள்தான் நிகழ்கால உலகத்தின் தேவைகளை எளிதாக மாற்றியிருக்கிறது.
அதிலும் கடந்த சில ஆண்டுகளில் உருவான சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களையும் உருவாக்கும் சக்தி கொண்டதாகத் திகழ்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை மழை வெள்ள பாதிப்புகளின் மீட்பு பணிகளில் சமூக வலைதளங்களின் சரியான பங்களிப்பை நாம் நேரடியாகவே அறிந்துள்ளோம்.
உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்கின்றன ஆய்வுகள். சுமார் 317 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் 200 கோடி பேர் சமூக வலைதளங்களின் தொடர்பில் இருக்கின்றனர். அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதிலும் குறிப்பாக சுமார் 190 கோடி பேர் தங்களது மொபைல் மூலம் சமூக வலை தளங்களோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார்கள். இதனால்தான் சமூக வலைதளங்கள் மிகப் பெரிய விர்ச்சுவல் சந்தையாக இருக்கிறது.
உலக அளவில் தினசரி 20 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகிறது.
சமூக வலைதளங்களில் 1 நொடிக்கு 12 புதியவர்கள் நுழைகின்றனர். ஃபேஸ்புக் வலைதளத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 5 லட்சம் புதிய பயனாளிகள் பதிவு செய்கிறார்கள் என்கிறது ஆய்வு. ஒரு நொடிக்கு 6 புதிய பயனாளிகள் பதிவு செய்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. வாட்ஸ்அப் செயலியின் வளர்ச்சியோ ஆண்டுக்கு 60 சதவீதமாக இருக்கிறது என்பதும் முக்கியமானது.
இப்படி பல தரப்பினரையும் தொடர்பு கொள்ளும் வெளியாக சமூக வலைதளங்கள் மாறியிருப்பதால், இதை சாதகமாக பயன்படுத்தி பல வெற்றிகளை காண முடியும். தனிநபர்கள், சிறு நிறுவ னங்கள் மட்டுமல்ல, இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் தங்களுக்கான வர்த்தகத்தை சமூக தளங்களுக்கு மாற்றி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் சராசரியாக ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது இதற்கு ஒதுக்குகின்றனர் என்ப தால் இதில் வர்த் தகம் செய்யும் வாய்ப் புகளை பார்க்கலாம்.
பேஸ்புக்
சமூக வலைதள பயன்பாட்டில் ஃபேஸ்புக்தான் முன்னிலை வகிகிறது. இதன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட இதை தங்களது சொந்த இணையதளம் போல பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 140 கோடி மக்கள் ஃபேஸ்புக் பயன் படுத்து கின்றனர். இணையதளம் பயன் படுத்துபவர்களில் 47 சதவீத மக்களுக்கு ஃபேஸ்புக் கணக்கு உள்ளது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 450 கோடி விருப்பங்கள் (லைக்குகள்) பதியப் படுகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கே 75 சதவீத வருமானம் விளம்பரம் மூலம் தான் கிடைக்கிறது.
தினசரி நமது பக்கத்தில் புதிய வரவுகளை புகைப்படம், வீடியோ என அப்டேட் செய்வது, வாடிக்கையாளர் குழுவை உருவாக்குவது, புதியவர்களை குழுவில் சேர்ப்பது என செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நமது தனி இணைய பக்கத்துக்கான லிங்கை இணைக்க வேண்டும். குழு செய்தியாகவோ, தனித்தனி செய்தியா கவோ பரிமாற வேண்டிய தகவல்களை அனுப்பலாம்.
ட்விட்டர்
உலக அளவில் சுமார் 30 கோடி மக்கள் ட்விட்டர் பயனாளிகளாக உள்ளனர். இது தீவிர வர்த்தக தளமாக இயங்கவில்லை என்றாலும் சில குறிப்பிட்ட வகைகளில் வர்த்தகம் செய்ய முடியும்.
ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்து பவர்களில் சுமார் 88 சதவீதம் பேர் தங்களது செல்போன் மூலம் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி 50 கோடி ட்விட்டுகள் செய்யப்படுகின்றன. ஒரு பிரபலம் ஒரு பொருளை குறித்து ட்விட் செய்தால் அது வைரல் ஆகும் என்பது வரலாறு.
கூகுள் பிளஸ்
கூகுள் நிறுவனம் வழங்கும் இன்னொரு சேவையாக இந்த சமூக வலைதளம் இயங்குகிறது. இதுவும் இலவச வர்த்தக சேவைக்கு உதவி செய்கிறது. 36 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் கூகுள் பிளஸ் பட்டன் 500 கோடி முறை கிளிக் செய்யப்படுகிறது. புகைப்படம், செய்திகள் வாயிலாக தகவல்களைப் பரிமாறலாம்.
வாட்ஸ் அப்
வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்போன் கிடையாது. இந்த செயலி சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். உலக அளவில் சுமார் 100 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
செல்போன் பயன்படுத்துபவர்களில் சுமார் 56 சதவீதம் பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தங்களது தொடர்பில் உள்ளவர் களை குழுவாக இணைத்து சிறப்பாக செயல்படலாம். நிறுவன செயல்பாடு களைக்கூட புகைப்படங்களாக ஒவ்வொரு துறையினரும் பரிமாறிக் கொள்வதன் மூலம் ஒருங்கிணைப்பு உருவாகும். வேலைத்திறன் மேம்படும்.
இன்ஸ்ட்ராகிராம்
தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் இந்த செயலியை வாங்கிவிட்டது. சமீபத்தில் வெகுவாக மக்களை கவர்ந்த சமூக வலைதளத்தில் இன்ஸ்ட்ராகிராம் முக்கியமானது. 30 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி 7 கோடி புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதைப் பயன்படுத்துபவர்களில் 53 சதவீதம் பேர் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். இந்த பிரிவினருக்கு வர்த்தகம் செய்வதை யோசிக்க வேண்டும்.
பின்ட்ரஸ்ட்
புகைப்படம் வாயிலாக தொடர்பு கொள்வதில் முக்கிய சமூக வலைதளம். குறிப்பாக பெண் பயனாளிகள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இண்டர்நெட் பயன்படுத்தும் 80 சதவீத பெண்கள் இதை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் 7 கோடி பேர் உறுப் பினர்களாக உள்ளனர். அவர்களில் 88 சதவீதம்பேர் இதன் மூலமாக பொருட் களை வாங்குகின்றனர் என்கிறது ஆய்வு.
லிங்க்டுஇன்
தொழில் துறையினருக்குள் தொடர்பு ஏற்படுத்தும் வலைதளம் இது. இதர சமூக வலைதளங்கள் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே இயங்கி வரும் வலை தளம். சுமார் 37 கோடி பேர் இதில் உறுப் பினர்களாக உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் துறையினர், நிறுவன உயரதிகாரிகளை இணைக்கும் இணையதளம். இவை தவிர வைபர், ஃபேஸ்புக் மெசஞ்சர், ஸ்நாப்ஷாட், வி சாட் போன்ற இதர சமூக செயலிகள் மூலம் வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முடியும் என்கின்றனர் செயல் பாட்டாளர்கள்.
ஆனால் இந்த வலைதளங்களில் தொடர்ச்சியாகவும், உறுப்பினர்களை ஈர்க்கும் வகையிலும் செயல்படுவது முக்கியம். குழு உறுப்பினர்களுக்கு தொந்தரவு தராத வகையில் நமது தகவல் பரிமாற்றம் இருந்தால் சமூக வலைதளத்தையும் சந்தையாக பயன்படுத்தலாம் என்பது நம் கண் எதிரே தெரியும் உண்மை.
பல தரப்பினரையும் தொடர்பு கொள்ளும் வெளியாக சமூக வலைதளங்கள் மாறியிருப்பதால், இதை சாதகமாக பயன்படுத்தி பல வெற்றிகளை காண முடியும். தனிநபர்கள், சிறு நிறுவனங்கள் மட்டுமல்ல, இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் தங்களுக்கான வர்த்தகத்தை சமூக தளங்களுக்கு மாற்றி இருக்கிறார்கள்.
சமூக மாற்றம்
மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதேயே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்ப்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.
பிரபலமான வலைதளங்களில் பெயர்களே கல்லூரி மாணவர்களின் பேச்சினால் இடம் பெறுவதை காணமுடிகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நன்மைகள்.
சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.
உறவுகளுக்குப் பாலம்
தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.
வணிக வளர்ச்சி.
வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.
கருத்துப் பரிமாற்றம்
பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.
தீமைகள்
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலளிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஏமாற்று வேலைகள்
அது மட்டுமின்றி இணையத்தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
குற்றங்கள்
சமூக வலைதளங்களின் உலகலாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலிசாருக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.
அதிகப்பயன்பாட்டின் விளைவு.
அலைபேசியில் 24 மணி நேரமும் சமுக வலைதளங்களையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.
பெருமளவில் மக்கள் சமுக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.”உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். முகநூல், டிவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட பத்து சமூக வலைதளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுபவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முகநூல்(Facebook) மட்டும் 50 கோடிக்கும் மேலான பயணர்கள் உறுப்பினர்களாக இருந்து பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர்கள் சிறுவர்கள், இளைஞர்களும்தாம். சமுக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது”
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடைமகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும்.”பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த இரகசியங்களைக் களவாடிக்கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது” (http/ponseinilam.blogspot.in) என வலைப்பதிவு செய்தி குறிப்பிடுகின்றது. இதுபோல பலவைகயான குற்றங்கள் சமுக வலைதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன.
அண்மையில் சமூக வலைதளஙகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தினமலரில் நவம்பர் 21, 2013 அன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “பல முன்னேற்றங்கள் கண்டுவரும் இந்நாளில் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செயல்கள், நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும் விஷயம் ஆகும். இவைகளைத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.
சமுக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடும். சமீபத்தில் இது சமுக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
சமுக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். ஆஹ்டிலும் குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
No comments:
Post a Comment