Showing posts with label அடிப்படை கற்றல். Show all posts
Showing posts with label அடிப்படை கற்றல். Show all posts

ஆதார் என்றால் என்ன?



Image result for aadhar
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் ( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”) -ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்டமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமாகும்.

பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY, #GENERAL STUDIES III, #UPSC பழைய வினாக்கள், #அடிப்படை கற்றல், #அரசின் திட்டங்கள் (SCHEMES)




The success of realizing the demographic dividend hinges upon the success of Skill India Programme, which in turn depends upon the resources allocated to human capital formation – evaluate Critically.(2018 IES)


பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம்(Skill India Programme)


திட்டத்தைப் பற்றிய விளக்கம்



மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். 

இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளையஞர்கள் பயன் பெறுவார்கள்.

தேசிய திறன்தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

E - ராக்கம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


#TNPSC MAINS # அடிப்படை கற்றல்# அரசின் திட்டங்கள் (SCHEMES



சந்திரயான்-2 என்பது என்ன? -- திட்ட விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



# அடிப்படை கற்றல் #UPSCTAMIL



சந்திரயான்-2 நிலாவை ஆராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கப்படும் `சந்திரயான்-2' செயற்கை கோளின் வடிவமைப்பு பணி நிறைவடைந்து விட்டதாக `இஸ்ரோ' தலைவர் கலசவடிவு சிவன்தெரிவித்தார். 

நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

கிசான் விகாஸ் பத்ரா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



# அடிப்படை கற்றல்  #TNPSC MAINS, ECONOMY # அரசின் திட்டங்கள் (SCHEMES)




டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)




#SCIENCE AND TECH    #TNPSC MAINS   # அடிப்படை கற்றல்


‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.

ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 



திட்டத்தின் பின்னணி


இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்
வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
வேளாண் துறையில் கவனம் குறைதல்.


ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்.

ஜிஎஸ்டி என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY  # அடிப்படை கற்றல் #TNPSC MAINS #UPSCTAMIL


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது.



 இதன் முக்கிய அம்சங்கள்:



* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)






#TNPSC MAINS #GENERAL STUDIES III # அடிப்படை கற்றல்  # அரசின் திட்டங்கள் (SCHEMES) 





சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Developement and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.

பெரிய தொழில் நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை. மாறாக இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் 12.5 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் 120 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கின்றன.

உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?

#ECONOMY #TNPSC MAINS #அடிப்படை கற்றல் 



Image result for ujjwala yojana advantages



பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு ரூபாய் 1600 வழங்கும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளோடு கலந்தாலோசித்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகள் கண்டறியப்படும். 2016-17. 2017-18, 2018-19 நிதி ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆம் ஆத்மி பீமா யோஜனா என்றால் என்ன..? அதன் நற்பயன்கள் யாவை..?


# அடிப்படை கற்றல் #TNPSC MAINS

Image result for aam admi bima yojana

ஆம் ஆத்மி பீமா யோஜனா என்பது கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாகும். ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) என்கிற இரண்டு திட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு "ஆம் ஆத்மி பீமா யோஜனா" என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. இது 1-1-2013 முதல் அமலில் இருக்கும் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் தலைவர் அல்லது ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரு உறுப்பினர் போன்றவர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?





# அடிப்படை கற்றல் #UPSCTAMIL




பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.

பணவீக்கத்திற்கான காரணிகள்


#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள் #THREEMARKS


பணவீக்கத்திற்கான காரணிகள் யாவை ?(2011 G 1)



பணவீக்கம்



பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.
விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம்.விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும்.அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN