#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள் #THREEMARKS
பணவீக்கத்திற்கான காரணிகள் யாவை ?(2011 G 1)
பணவீக்கத்திற்கான காரணிகள் யாவை ?(2011 G 1)
பணவீக்கம்
பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.
விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம்.விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும்.அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது
- தனியார் மற்றும் அரசு செலவுகள் மற்றும் பிறவற்றின் அதிகரிப்பால் ஏற்படும் மொத்தத் தேவையின் அதிகரிப்பின் விளைவாக தேவை-மிகுதி பணவீக்கம் ஏற்படுகிறது. அதிக தேவை மற்றும் சாதகமான சந்தை நிலையில் முதலீடு மற்றும் விரிவாக்கத்தினை தூண்டுகிறது என்பதால் தேவை-மிகுதி பணவீக்கம் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நன்மை விளைவிப்பதாகும்.
- விலை-மிகுதி பணவீக்கம் , "தேவை அதிர்வு பணவீக்கம்" என்றும் அழைக்கப்படுகிறது, இது மொத்த தேவையின் (உள்ளார்ந்த உற்பத்தி) வீழ்ச்சியால் உருவாகிறது. இது இயற்கை சீரழிவுகளாலோ, அல்லது உள்ளீடுகளின் விலை அதிகரிப்பதாலோ உருவாகலாம். எடுத்துக்காட்டுக்கு, திடீரென எண்ணெய் வழங்குதல் குறைந்தால், எண்ணெய் விலை உயரும், இது விலை-மிகுதி பணவீக்கத்திற்குக் காரணியாகலாம். எண்ணெயையும் ஒரு மூலப்பொருளாக கொண்டு பிற பொருளைத் தயாரிப்பவர்களும் விலை உயர்வதால் நுகர்வோருக்கும் விலை உயர்த்தும் நிலை ஏற்படலாம்.
- உள்ளமைவுப் பணவீக்கம் தகவமைப்பு எதிர்பார்ப்புகளால் தூண்டப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் "விலை/கூலி சுருளுடன்" தொடர்புடையதாகிறது. இது பணியாளர்கள் தங்கள் கூலியை (பணவீக்க வீதத்திற்கு அதிகமாக இருக்கும் வகையில்) அதிகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வது, மற்றும் நிறுவனங்கள் இந்த அதிக பணியாளர் கூலியின் அதிகரிப்பு செலவினைக் காரணம் காட்டி தங்கள் வாடிக்கையாளரிடம் விலையை உயர்த்துவது, ஆகியவற்றால் உருவாகும் 'ஒன்றுக்கொன்று தொடர்புடைய சுழற்சி' ஆகியவற்றை உள்ளடக்கியது. உள்ளமைவுப் பணவீக்கம் கடந்தகால நிகழ்வுகளின் பாதிப்பையே உணர்த்துகிறது என்பதால், அதை நீட்டிப்புப் பணவீக்கமாகக் கருதலாம்.
No comments:
Post a Comment