பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY, #GENERAL STUDIES III, #UPSC பழைய வினாக்கள், #அடிப்படை கற்றல், #அரசின் திட்டங்கள் (SCHEMES)




The success of realizing the demographic dividend hinges upon the success of Skill India Programme, which in turn depends upon the resources allocated to human capital formation – evaluate Critically.(2018 IES)


பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம்(Skill India Programme)


திட்டத்தைப் பற்றிய விளக்கம்



மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். 

இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளையஞர்கள் பயன் பெறுவார்கள்.

தேசிய திறன்தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.


இத்திட்டத்தின் கீழ் திறன்பயிற்சி பெறுவோரின் திறன்களை மூன்றாம் தரப்பினரைக் கொண்டு மதிப்பிட்டு வெகுமதியும் அளிக்கப்படும்.

ஒவ்வொரு திறன்பயிற்சியாளருக்கும் ரூ. 8000 அளவிற்கு வெகுமதிகள் கிடைக்கும்.



தகுதியானவர்கள்



இத்திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, இந்தியக் குடிமகனான கீழ்க்காணும் நிபந்தனைகள் நிறைவு செய்கிறவர் திறன் பயிற்சி வெகுமதியைப் பெறலாம்.

தகுதியுள்ள ஒரு துறையில் தகுதியுள்ள ஒரு பயிற்றுநரிடம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறுகிறவர்கள்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றவர்களின் மேம்பாட்டுத்திறனை. சான்றளிக்கப்பட்ட மதிப்பிடும் நிறுவனங்கள் ஓராண்டு காலத்திற்குள் மதிப்பிட்டுச் சான்று பெறுகிறவர்கள்.

இத்திட்டம் செயல்படும் காலத்தில் ஒருவருக்கு ஒருமுறை மட்டும் வெகுமதி கிடைக்கும்.

சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளருக்குப் பணப்பரிமாற்றம் செயல்முறை திறன்பயிற்சி பெறுகிறவர் தனக்கு விருப்பமான திறனுக்காக ஒரு பயிற்சி மையத்தில், ஒரு பயிற்று நபரிடம் பதிவு செய்ய கொள்ள வேண்டும்.

திறன்பயிற்சி பெறுகிறவர் தனக்குப் பயிற்றுவிக்கும் நபரிடம் தக்கப்பயிற்சிகளிக்க ஏதுவாக தன்னைப்பற்றிய முழு விபரங்களையும் அளிக்க வேண்டும்.

பயிற்சி முடிவில் பயிற்சி மையத்தில் தன்னை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

வெற்றிகரமாக மதிப்பீட்டை முடித்தபின் பயிற்றுநர் தரும் சான்றிதழைப் பெற வேண்டும்.

பயிற்சி முடி;தது மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்றவர்களின் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு தேசியத்திறன் மேம்பாட்டுக்கழகம் வெகுமதி பணத்தை தரும்.



நிதி ஒதுக்கீடு


பதினான்கு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ. 1120 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏதேனும் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பான கவனம் செலுத்தப்படும். 

அதற்கென ரூ. 220 கோடி செலவிடப்படும்.
திறன்பயிற்சி அளிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தவும், கவனத்தை ஒரு முகப்படுத்தவும் ரூ. 67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசுகள், முனிசிபல் கழகங்கள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், சமுதாய சங்கங்கள் ஆகியவற்றின் பங்களிப்போடு உள்ளுர் அளவில் திறன் மேளாக்கள் நடத்தி, இளைஞர்கள் திறன் பயிற்சிக்கு ஈர்க்கப்படுவார்கள்.

திறன்பயிற்சி அளிக்கும் பயிற்றறுநர்களுக்கும் ஆதரவு அளிப்பதும் இத்திட்டத்தில் முக்கிய கவனம் பெறும். பயிற்சி பெற்றவர்களுக்கு தக்க வேலை கிடைக்கப்பதற்கும் உதவி செய்யப்படும். இவற்றுக்காக ரூ. 67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


திறன் தேவையை மதிப்பிடுதல்


2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் தேசிய. திறன் மேம்பாட்டுக் கழகம் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ள திறன் இடைவெளிகளை நிரப்புகின்ற வகையில் திறன்பயிற்சிகள் அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். எத்தகைய திறன் பெற்ற தொழிலாளர்கள் தேவை என்று அறிந்துகொள்ள மத்திய – மாநில அரசுகளின் அமைச்சங்களும் தொழில் துறையினருடனும் வணிகத் துறையினருடனும் கலந்தாலோசிக்கப்படும். எத்தகைய திறன் தேவைப்படுகிறது என்று அனைத்துத் தரப்பினரும் தமது தேவைகளைத் தெரிவிக்க ஏதுவாக. விரைவிலேயே ஒரு பொதவான தளம் ஏற்படுத்தப்படும்.

அண்மையில் இந்திய அரசு தொடங்கியுள்ள இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, தேசிய சூரிய சக்தி இயக்கம், தூய்மை பாரத இயக்கம் போன்ற திட்டங்களுக்குத் தேவைப்படும் திறன்களை உருவாக்குவதாகவும் பயிற்சிகள் அமையும். தொழிலாளர் சந்தையில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் இளைஞர்களை – குறிப்பாக, பத்தாம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்புப் படிப்புகளைப் பாதியில் நிறுத்திவிடும் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதாக இத்திட்டம் இருக்கும்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்துதல்
தேசிய மேம்பாட்டு திறன் மேம்பாடுக்கழகத்தின் பயிற்சி பங்காளர்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இக்கழகத்தில் தற்போது 187 பயிற்சிப் பங்காளர்கள் உள்ளனர். 2300க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உள்ளன.
இதைத்தவிர மத்திய / மாநில அரசுகளின் இணைவு பெற்ற பயிற்சி மையங்களும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
பயிற்சி அளிக்கும் மையங்கள் யாவும், இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.
திறன்பயிற்சிக்காக மேம்பட்ட பாடத்திட்டங்கள், 
சீரிய பயிற்சி முறைகள், சிறப்பான பயிற்றுனர்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துசம் அளிக்கப்படும்.
மென்திறன், தனிமனித ஆளுமை வளர்ச்சி, தூய்மையைப் பேணுகின்ற நன்னடத்தை, சிறந்த பணிப் பண்பாடு போன்றவையும் பயிற்சிகளில் இடம்பெறும்.
அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மாநில அரசுகளும், மண்டலத் திறன் கவுன்சில்களும் உன்னிப்பாக கண்காணிக்கும்.


நன்றி : தமிழ் ஹிந்து 

‘திறன் இந்தியா’ திட்டத்தின் தோல்வி

லக இளைஞர் திறன் (மேம்பாட்டு) நாள்’ இம்மாதம் 15-ல் நடைபெற்றது. மத்திய அரசு தொடங்கிய ‘இந்தியத் திறன் வளர்ச்சி இயக்க’த்தின் இரண்டாவது ஆண்டு விழாவும் உடன் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கிய திட்டத்தைப் பெயர் மாற்றி தன்னுடைய திட்டமாக்கினார் பிரதமர் மோடி. மன்மோகன் சிங் அரசு ‘தேசிய திறன் மேம்பாட்டுப் பேரவை’ என்ற பெயரில், டி.சி.எஸ். நிறுவனத்தின் எஸ். ராமதுரை தலைமையில் இத்திட்டத்தைத் தொடங்கியது. அந்தப் பேரவையின் கீழ் ‘தேசியத் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு ‘அரசு - தனியார் கூட்டுத் திட்டத்தின்’ (பி.பி.பி.) கீழ் தொடங்கப்பட்டது. 2022-க்குள் 50 கோடிப் பேருக்குப் பயிற்சி அளிப்பது திட்டம்.
பற்றாக்குறையான தரவுகளை வைத்துக்கொண்டு, மிகவும் தவறான அனுமானங்களின் பேரில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் இலக்குகளும் தயாரிக்கப்பட்டன. ஐ.மு.கூ. அரசின் காலத்திலேயே இந்த இலக்கு, ‘2020-க்குள் ஒரு கோடிப் பேருக்குப் பயிற்சி’ என்று இலக்கு குறைக்கப்பட்டது. ‘ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம்’ என்று வாக்குறுதி தந்த மோடி, இந்தத் திட்டத்துக்கு மேலும் அலங்காரம் செய்தார். இந்தத் துறை தனி அமைச்சகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. தனி அமைச்சர், செயலாளர் நியமிக்கப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு, ‘பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ என்ற முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டம் தட்டுத்தடுமாறித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் எத்தனை பேர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் அமைச்சகம் புள்ளிவிவரம் தரக்கூட மறுக்கிறது. தேசியத் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன் தொடக்க காலத்தில் வழங்கிய கடன்கள் பெரும்பாலும் ‘வாராக் கடன்’களாகிவிட்டன. இந்தத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகிக்கொண்டே வருகின்றன. எனவே, இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பயனாளிகளில் உண்மையானவர்களையும் போலியானவர்களையும் பிரிக்க அமைச்சகம் படாதபாடு படுகிறது. ரூ.1,600 கோடி தொகுப்பு நிதி விரைவாகவே ரூ.6,000 கோடியாக உயர்த்தப்பட்டது.
இந்தத் திட்டப்படி பயிற்சி தருவதுகூட வேறு நிறுவனங்களுக்கு, அயல்பணி ஒப்படைப்புபோல வழங்கப்பட்டுவிட்டது. “பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனம் அரசிடமிருந்து திட்டத்தில் 40% வரை கட்டணமாகவே வசூலிக்கும் போக்கு தெரியவந்திருப்பதால், இத்திட்டத்தை மறு ஆய்வுக்காக நிறுத்திவைத்திருக்கிறோம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் மேற்கொண்ட அகத் தணிக்கையில், பயிற்சியை மட்டும் போலிப் பயனாளிகளுக்கு அளிக்காமல், மையங்களையே போலியாக உருவாக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.



வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி


இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் புதிதாக அதிகம் உருவாக்கவில்லை. எனவே, குறைந்த அளவு தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள்கூட வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பிரதம மந்திரி தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பலன் பெற்று, வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை சில திட்டங்களில் வெறும் 5% ஆகவும் வேறு திட்டங்களில் 50% ஆகவும் உள்ளன. இப்போது இந்தப் பயிற்சி திட்டமே, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதுடன் இணைக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவுமே போதாது, காலம் கடந்தது. திறன் வளர்ப்பு திட்டத்தில் இந்தியா தோற்றுவிட்டது.
கோடிக்கணக்கான இளைஞர்கள் படிப்பு முடித்துவிட்டு கை நிறையச் சம்பளம், நல்ல வேலை, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் என்ற கனவுகளோடு வருவார்கள். அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். வெறுமனே அமைச்சகத்தை ஏற்படுத்துவதும், தொலைநோக்கு ஆவணம், செயல்திட்ட ஆவணம் கொண்டுவருவதும் போதாது. பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மையமாகத் திறன் மேம்பாடு இருக்க வேண்டும். இல்லாவிடில் பிரச்சினைதான்.

நம் நாட்டை திறன்மிகு தலைநகரமாக்க முற்படும் ’திறன் இந்தியா திட்டம்’- ராஜீவ் பிரதாப் ரூடி  


ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் வேலைச் சந்தையில் நுழைகின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்புகளற்ற நிலைக்கு திறன் இந்தியா திட்டம் பதிலாகுமா?


திறன் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
உலகமயமாதல், அறிவு, போட்டி ஆகியவை அதிகரித்து வரும் நிலையில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அதிக திறன் கொண்ட தொழிலாளர்களின் தேவை நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, திறன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்தியாதான் திறனின் தலைநகராகத் திகழவேண்டும் என்பதும் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு சிறப்பான வாழ்வாதாரத்தை வழங்கவேண்டும் என்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 2015-ம் ஆண்டு தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. பல்வேறு துறைகளில் காணப்படும் திறன் குறைபாடுகளால் நாடு சந்திக்கும் சவால்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த ஏழாண்டுகளில் (2022-ல்) 104.62 மில்லியன் தொழிலாளர்கள் புதிதாக இணையப்போவதாகவும் அவர்களுக்கு திறன் பயிற்சியளிக்கவேண்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பண்ணை மற்றும் பண்ணை அல்லாத துறைகளிலிருக்கும் 298.25 மில்லியன் தொழிலாளர்களுக்கும் மறுபடியும் திறன் பயிற்சியளிக்கவேண்டியது அவசியமாகிறது.
திறன் இந்தியா திட்டம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள உதவும். இதைச் சாத்தியப்படுத்த ஒரே நோக்கத்திற்காக செயல்படும் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படுகிறது.
தொழில் புரிவதற்குத் தேவையான திறன்களை அளிப்பதும் தொழில்முனைவிற்கான வாய்ப்புகளை அளிப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சமீபத்திய தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து தரமான பயிற்சியளிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
நம் நாடு மிகப்பெரியது. மக்கள்தொகை, நிலவியல், பல்வேறு தொழில்கள் என பல விதங்களில் வேறுபட்டுள்ளது. இதை நாங்கள் நினைவில் கொண்டுள்ளோம். எந்தவிதமான நாடு தழுவிய திட்டமானாலும் அந்தந்த மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதியின் சூழலையும் கருத்தில் கொண்டு அத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும்.
KPMG-யால் திறன் இடைவெளி ஆய்வுகள் நடத்தப்பட்டது. துறைகள் ரீதியாகவும் மாநிலங்கள் அளவிலும் திறனாளிகளுக்கான தேவையை கண்டறிவது அவசியமாகிறது. இந்தியா முழுவதும் அனைத்து துறைகளுக்குமான பயிற்சி மையங்கள் அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் பரவலாக அனைத்து இடங்களிலும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும். பல்வேறு இடங்களிலும் துறைகளிலும் பயிற்சியை முறையாக விநியோகிக்கவேண்டும். அவ்வாறு முறையாக மேற்கொள்ளப்பட்டால் பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு வேலையின்மை பிரச்சனை இருக்காது. இதற்காக தேவை சார்ந்த மாடலை உருவாக்கும் திட்டமும் உள்ளது.
தொடர் கண்காணிப்பு முறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இகோசிஸ்டத்தில் தரம் பராமரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் ஆன்லைன் ஆய்வு முறையை மேற்கொள்வதற்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. ஐடிஐ-க்களின் செயல்திறனை தரப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் குறுகிய கால திறனளிக்கும் எங்களது பயிற்சி மையங்கள் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) தலைமையில் இயங்குகிறது. துறைகளின் தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு பாடதிட்டம் மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலிமையை கட்டமைத்து திறன் இந்தியா திட்டத்தின் வாயிலாக முழுப்பலனையும் பெறவேண்டும் என்பதே நோக்கமாகும்.
புதிதாக வேலை தேடுவோருக்காக எங்களது ஒருங்கிணைக்கும் திறனை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தியுள்ளோம். துறைசார்ந்த இணைப்பையும் ஏற்படுத்துகிறோம்.
100 மையங்களில் யோகா வகுப்புகளும் 100 மையங்களில் ஜிஎஸ்டி பயிற்சி வகுப்புகளும் நடைபெறும். இந்தப் பயிற்சிகள் நாட்டின் சமீபத்திய சீர்திருத்தங்களை மனதில் கொண்டு திறன் இந்தியா திட்டங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ப்ராஜெக்ட் இன்ஸ்டிட்யூட், பள்ளிகள், ஐடிஐ மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையங்கள் போன்றவை திறன் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களையும் (DTI) இந்திய தேசிய மையங்களையும் (IISCs) திறக்க MSDE திட்டமிட்டுள்ளது. நாட்டிலுள்ள ஓட்டுநர்களின் தேவையை எதிர்கொள்ளும் விதத்தில் DTI செயல்படும். அதேசமயம் இத்துறையில் தேசிய அளவில் வாய்ப்புகளை பெறும் விதத்தில் IISC செயல்படும்.
ஆகவே மக்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிபெறவும் வேலைக்காகவும் தங்களது சொந்த இடத்தை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது? நடைமுறைப்படுத்தப்பட்ட விகிதம் குறித்து பகிர்ந்துகொள்ளவும்.
சுதந்திரம் கிடைத்து எழுபதாண்டுகளுக்குப் பிறகு தற்போது திறன் இந்தியா திட்டத்தின் கீழ் திறன்கள் முறையாக அங்கீகரிக்கப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசாங்கம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவிற்காக (PMKVY) ஒதுக்கியுள்ளது. பயிற்சிக்கு கட்டணம் செலுத்த இயலாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளிக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட துறை தொடர்பான திறனைப் பெற உதவும்.
PMKVY திட்டத்தின் கீழ் 28 லட்சத்திற்கும் மேலானோருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 38 லட்சம் பேருக்கு ஐடிஐ இகோசிஸ்டத்தின் வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயிற்சி பெற்றோருக்கு அங்கீகாரம் வழங்குதல் (RPL) திட்டத்தின் கீழ் 4.62 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆண்டுகளாக துறையில் நடைமுறையில் பெற்ற திறன்களுக்கோ அல்லது குடும்ப மரபு சார்ந்து பெறப்பட்ட திறன்களுக்கோ அங்கீகாரம் அளிக்கப்படும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தொழிற்பயிற்சி வளர்ச்சி திட்டத்தின் (NAPS) கீழ் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் துறையில் இணைந்துள்ளனர்.
திறன் அளிக்கவேண்டும் என்கிற எங்களது நோக்கத்தைத் தாண்டி வேலையில் இணைவதை உறுதிசெய்வதற்கு வேலைவாய்ப்பிற்கான கண்காட்சி அல்லது தொழிற்சாலைகளில் பயிற்சி போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம். குறைந்தபட்சம் 70 சதவீதம் பணியிலமர்த்தப்படவேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலம் குறுகிய கால பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் உங்களது குழு எப்படிப்பட்ட தடங்கல்களை சந்தித்தது?
திறன் இந்தியா திட்டம் துவங்கப்பட்டதால் திறன்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதுமுள்ள திறன் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும் ஒன்றிணைக்கப்படுகிறது. விளைவு சார்ந்த திறன் படிப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். இப்படிப்பட்ட படிப்புகளை உள்ளடக்கிய ஒரு வலுவான இகோசிஸ்டத்தை உறுதிசெய்வதற்காக முதல் முறையாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறுவயதிலிருந்தே கடற்கரையில் மண்கோட்டை கட்டுவதானாலும் பில்டிங் ப்ளாக்குகள் கொண்டு வீடு உருவாக்குவதானாலும் கைகளால் இவற்றை செய்யவே நாம் கற்பிக்கப்பட்டோம். ஆனால் சற்று பெரியவர்களானதும் நமது சுற்றுச்சூழலாலும் நாம் பெறும் கல்வியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறோம். பயன்பாட்டு அறிவுதான் முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒருவரது திறனுக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும். திறன் வளர்ச்சி தங்களது குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தை பெற்றோர்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
பொதுவான நெறிகளை நடைமுறைப்படுத்த திறன்களை பொதுவான கட்டமைப்பிற்குக் கீழ் கொண்டுவருவது அவசியமாகும். பல்வேறு அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களை பின்பற்றி வந்தன. பிறகு 2015-ல் MSDE அமைக்கப்பட்டது. திறனளிப்பதை ஒரு குடையின்கீழ் கொண்டுவரவும் பல்வேறு ஏஜென்சிக்களின் தலையீட்டை குறைக்கவும் முயன்றோம். உதாரணத்திற்கு தொழிலாளர் அமைச்சகம் DGT-ஐ எங்களிடம் மாற்றியது.
ரோபோட் மற்றும் இயந்திரங்கள் பணிகளைச் செய்யும் நிலையில் வருங்காலத்தில் ஆட்டோமேஷன் மிகப்பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. இதை அமைச்சகம் எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது?
இன்றைய நிச்சயமற்ற பணிச்சூழலில் ஒருவர் தொடர்ந்து திறன் பெறுவதும், தன்னுடைய திறனை மேம்படுத்திக்கொள்வதும் வளர்த்துக்கொள்வதும் அவசியமாகிறது. அவ்வாறு செய்தால்தான் செய்துகொண்டிருக்கும் பணியை தக்கவைத்துக்கொள்ள முடியும். தற்போது துறையின் தேவை மற்றும் இளைஞர்களிடையே காணப்படும் திறன் ஆகியவற்றிற்கிடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. துறையின் சவால்களை சமாளிக்கவும் ஆட்டோமேஷனை எதிர்கொள்ளவும் உலகளவில் போட்டியிடும் அளவிற்குத் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவேண்டும். அதற்கு ஒரு நிலையான திறனளிக்கும் இகோசிஸ்டம் அவசியமாகிறது.
இந்தத் தொடர் மாற்றத்தை சமாளிப்பதற்காக எங்களிடம் பயிற்சிபெறுபவர்கள் பணிச் சந்தையில் நிலைத்திருப்பதற்குத் தேவையான பல்வேறு திறன்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பன்முகத் திறன் கொண்டவர்களாக இருப்பதற்கான தேவை உள்ளது. இன்று நிறுவனத்தின் செக்யூரிட்டி, ரிசப்ஷனிஸ்ட் பணியையும் செய்யவேண்டிய சூழல் உள்ளது. அத்துடன் ஒருவர் தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள அடிப்படிடையான தொழில்முனைவுத் திறனும் அவசியமாகிறது. இதனால் எங்களது ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தொழில்முனைவு சார்ந்த விஷயங்கள் அடங்கியிருப்பதை உறுதிசெய்கிறோம்.



Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)



Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) is the flagship scheme of the Ministry of Skill Development & Entrepreneurship (MSDE). The objective of this Skill Certification Scheme is to enable a large number of Indian youth to take up industry-relevant skill training that will help them in securing a better livelihood. Individuals with prior learning experience or skills will also be assessed and certified under Recognition of Prior Learning (RPL). Under this Scheme, Training and Assessment fees are completely paid by the Government.

Key Components of the Scheme:

1. Short Term Training

The Short Term Training imparted at PMKVY Training Centres (TCs) is expected to benefit candidates of Indian nationality who are either school/college dropouts or unemployed. Apart from providing training according to the National Skills Qualification Framework (NSQF), TCs shall also impart training in Soft Skills, Entrepreneurship, Financial and Digital Literacy. Duration of the training varies per job role, ranging between 150 and 300 hours. Upon successful completion of their assessment, candidates shall be provided placement assistance by Training Partners (TPs). Under PMKVY, the entire training and assessment fees are paid by the Government. Payouts shall be provided to the TPs in alignment with the Common Norms. Trainings imparted under the Short Term Training component of the Scheme shall be NSQF Level 5 and below.

2. Recognition of Prior Learning

Individuals with prior learning experience or skills shall be assessed and certified under the Recognition of Prior Learning (RPL) component of the Scheme. RPL aims to align the competencies of the unregulated workforce of the country to the NSQF. Project Implementing Agencies (PIAs), such as Sector Skill Councils (SSCs) or any other agencies designated by MSDE/NSDC, shall be incentivized to implement RPL projects in any of the three Project Types (RPL Camps, RPL at Employers Premises and RPL centres). To address knowledge gaps, PIAs may offer Bridge Courses to RPL candidates.

3. Special Projects 


The Special Projects component of PMKVY envisages the creation of a platform that will facilitate trainings in special areas and/or premises of Government bodies, Corporates or Industry bodies, and trainings in special job roles not defined under the available Qualification Packs (QPs)/National Occupational Standards (NOSs). Special Projects are projects that require some deviation from the terms and conditions of Short Term Training under PMKVY for any stakeholder. A proposing stakeholder can be either Government Institutions of Central and State Government(s)/Autonomous Body/Statutory Body or any other equivalent body or corporates who desire to provide training to candidates.

4. Kaushal and Rozgar Mela


Social and community mobilisation is extremely critical for the success of PMKVY. Active participation of the community ensures transparency and accountability, and helps in leveraging the cumulative knowledge of the community for better functioning. In line with this, PMKVY assigns special importance to the involvement of the target beneficiaries through a defined mobilisation process. TPs shall conduct Kaushal and Rozgar Melas every six months with press/media coverage; they are also required to participate actively in National Career Service Melas and on-ground activities.

5. Placement Guidelines


PMKVY envisages to link the aptitude, aspiration, and knowledge of the skilled workforce it creates with employment opportunities and demands in the market. Every effort thereby needs to be made by the PMKVY TCs to provide placement opportunities to candidates, trained and certified under the Scheme. TPs shall also provide support to entrepreneurship development.

6. Monitoring Guidelines 


To ensure that high standards of quality are maintained by PMKVY TCs, NSDC and empaneled Inspection Agencies shall use various methodologies, such as self-audit reporting, call validations, surprise visits, and monitoring through the Skills Development ManagementSystem (SDMS). These methodologies shall be enhanced with the engagement of latest technologies.

The scheme will be implemented through the National Skill Development Corporation (NSDC).

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN