பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?





# அடிப்படை கற்றல் #UPSCTAMIL




பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.


2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது. அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.


மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?


மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.


கடந்த காலங்களில் இந்நோய்வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..


இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.


நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?


இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.

நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.

1 comment:

  1. வைரஸ் காய்ச்சல் என்றாலும் சரி, வேறு எந்த விதமான காய்ச்சல் என்றாலும் சரி, இங்கு மோசமாக, கடுமையான குளிர் சளி காய்ச்சல் குணமாக மருந்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN