ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 


JnNURM logo.jpg




ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.




 பின்னணி


இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைக்கு பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில்

நகர்ப்புறங்களில் மட்டும் 28 கோடி (அதாவது ஏறக்குறைய 28 சதவிகிதமாக) இருந்தது. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்குள் இது 40 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் அப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நகர்புறங்களின் பங்களிப்பு 69 சதவிகிதம் இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நகர்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் அவசிமெனக் கருதிய இந்திய அரசு நகர்புற மேம்பட்டுக்கான திட்டத்தை வகுத்தது.

திட்டத்தின் நோக்கம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.


பயன்பெறும் நகரங்களில் புதிய சொத்துக்களை உருவாக்கி நிர்வகிப்பதில் ஒரு உள்தொடர்பை ஏற்படுத்துவதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எக்காலத்திலும் வலுவிழந்துவிடாத வகையில் சுயசார்புடையதாக மாற்றுவதற்க்கு உதவிபுரிதல்.


நகரில் நிரந்தரமாக இருந்து வரும் நெரிசல்களை சமாளிப்பதற்க்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல். தேவையானால் நிதியுதவி வழங்குதல்.

பயனடையும் நகரங்களை தேர்ந்தெடுக்கும் முறைகள்


2001ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாற்பது லட்சத்திற்குள் மேலாக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'A' பிரிவு பெருநகரங்களாக, ஒன்றிலிருந்து நான்கு லட்சம் வரையுள்ள நகரங்கள் 'B' பிரிவு நகரங்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவை தவிர மாநில தலைநகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியான நகரங்கள் ஆகும். இவ்வகை நகரங்கள் 'C' பிரிவாக கருதப்படும்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நகரங்கள் மற்றும் பெருநகரங்கள்


இந்த திட்டத்தின்படி மக்கள் தொகை நாற்பது லட்சத்திற்குள் மேலாக உள்ள நகரங்கள் பெருநகரங்களாக அடையளப்படுத்தப்பட்டுகின்றன. அந்த அடிப்படையில் கீழே உள்ள நகரங்கள் அதிக நிதி ஒதுக்கீட்டை பெற தகுதியான பெருநகரங்கள் ஆகும்.

பெருநகரங்கள்


  1. டெல்லி
  2. பாரிய மும்பை
  3. அகமதாபாத்
  4. பெங்களூர்
  5. சென்னை
  6. கொல்கத்தா
  7. ஹைதராபாத்

 நகரங்கள்
  1. பாட்னா
  2. பரிதாபாது
  3. போபால்
  4. லூதியானா
  5. ஜெய்ப்பூர்
  6. லக்னோ
  7. மதுரை
  8. நாசிக்
  9. புனே
  10. கொச்சி
  11. வாரணாசி
  12. ஆக்ரா
  13. அமிர்தசரஸ்
  14. விசாகப்பட்டினம்
  15. வதோதரா
  16. சூரத்
  17. கான்பூர்
  18. நாக்பூர்
  19. கோயம்புத்தூர்
  20. மீரட்
  21. ஜபல்பூர்
  22. ஜாம்ஷெட்பூர்
  23. அசன்ஷோல்
  24. அலகாபாத்
  25. விஜயவாடா
  26. ராஜ்கோட்
  27. தன்பாத்
  28. இந்தூர்

ஆதாரம் : இந்திய அரசு

ஆங்கிலத்தில்...




Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)


Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM) was a massive city-modernisation scheme launched by the Government of India under Ministry of Urban Development. It envisaged a total investment of over $20 billion over seven years. Named after Jawaharlal Nehru, the first Prime Minister of India, the scheme was officially inaugurated by prime minister Manmohan singh on 3 December 2005 as a programme meant to improve the quality of life and infrastructure in the cities. It was launched in 2005 for a seven-year period (up to March 2012) to encourage cities to initiate steps for bringing phased improvements in their civic service levels. The government had extended the tenure of the mission for two years, i.e., from April 2012 to March 31, 2014.

JNNURM was a huge mission which relates primarily to development in the context of urban conglomerates focusing to the Indian cities. JnNURM aims at creating ‘economically productive, efficient, equitable and responsive Cities’ by a strategy of upgrading the social and economic infrastructure in cities, provision of Basic Services to Urban Poor (BSUP) and wide-ranging urban sector reforms to strengthen municipal governance in accordance with the 74th Constitutional Amendment Act, 1992.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN