திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக்கின் உருவாக்கம்

#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2


Topic
Statutory, regulatory and various quasi-judicial bodies




1.How are the principles followed by the NITI Aayog different from those followed by the erstwhile planning commission in India? (UPSC CSE 2018)


இந்தியாவில் முந்தைய திட்டக் கமிஷனில் பின்பற்றப்பட்ட கொள்கைகளிலிருந்து , நிதி ஆயோக்கில் பின்பற்றப்படும் கொள்கைகள் எவ்வாறு வேறுபடுகிறது?(UPSC CSE 2018)



2. Examine the view that the idea of replacing Planning Commission by National Institution for Transforming India (or ‘NITI Aayog’) has given a completely new dimension to the process of development planning in the country (2017 IFos Mains GS)

திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக்கின் உருவாக்கம்  நாட்டில் வளர்ச்சித் திட்டமிடல் செயல்முறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்ற கருத்தை ஆராயுங்கள்? (2017 IFos Mains GS)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

contact mail ID  tnpscprime@gmail.com


Examine
ஆய்வு செய்



இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்




திட்டக் குழு


இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 2014 இல், தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.





சுதந்திரத்திற்கு பிறகு



நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தியும், உற்பத்தியைப் பெருக்கியும், வேலைவாய்ப்பை அதிகரித்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் வளர வழிசெய்வதற்காக ஒரு திட்டக் குழு உருவாக்கப்பட்டது. 1950 மார்ச் 15ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதைப் பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். ஜவகர்லால் நேரு இதன் முதல் தலைவராவார்.


1951ல் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாக்கிஸ்தான் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.

1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.



அமைப்பு


திட்டக் குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தவர்களாவார்கள். பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுனர்களே நிரந்திர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

நிதி ஆயோக்



திட்டக் குழுவை நீக்கி நிதி ஆயோக்-ஐ உருவாக்கும் அறிவிப்பை இந்திய பிரதமர் அறிவித்தார். வளர்ச்சியின் கட்டங்களில் முக்கிய வழிகாட்டுதலையும் வியூக உள்ளீடுகளையும் நிதி ஆயோக் வழங்கும்.

Image result for niti aayog
நோக்கங்கள்
  1. கூட்டாண்மை அரசில் மாநிலங்களை விரைவாக செயல்படவைத்தல்.
  2. கிராம அளவில் திட்டங்களை தீட்டி அதிகபட்ச வளர்ச்சியை எட்டுதல்.
  3. பொருளாதார வளர்ச்சியில் உள்ள இடர்பாடுகளை களைவதில் அதிக கவனம் செலுத்துதல்.
  4. பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் நாட்டின் பாதுகாப்பு திட்டங்களையும் இணைத்துக் கொள்ளுதல்.
  5. கூடுதல் அறிவு, புதிய கண்டுபிடிப்பகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவியளித்தல்.
  6. பொருளாதாரத்துறைகள் துணைத் துறைகளுக்கு இடையே எழக்கூடிய பிரச்சனைகளை கலைவதற்கு அமைப்பை ஏற்படுத்துதல்.
  7. நல்லரசு கொண்டு நாட்டில் உள்ள கலை வளங்களை ஆராய்ச்சி செய்தல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துதல்.

பணிகள்

  1. வளர்சிக்கு தேவையான அடிப்படையான நிலையான கருத்து மற்றும் வழிகளை வழங்குதல்.
  2. மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முழுமையான ஒத்துழைப்பை உருவாக்குதல்.
  3. மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முக்கியமான கொள்கைகளில் தொழில்நுட்ப அறிவை வழங்குதல்.
  4. நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் கூட்டாண்மையை மாநிலங்களிடையே மேம்படுத்தி நாட்டை வலிமையானதாக்குதல்.
  5. அமைச்சர்கள் மத்திய மாநில அரசுகளில் ஒத்துழைப்புடன் அரசின் திட்டங்களை அமுல்படுத்துதல்.
  6. கிராம வளர்ச்சிக்கு திட்டமிட்டு அரசின் மூலம் வளர்ச்சியடைய செய்தல்.
  7. சமூக வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய இடர்களை குறைத்தல்.
  8. சர்வதேச தேசிய அனுபவசாலிகள், பயிற்சியாளர்கள், பங்குதாரர்களை கொண்டு அறிவு, புதிய கண்டுபிடிப்பு, தொழில் அதிபர்களுக்கு உதவி போன்றவைகளை ஏற்படுத்துதல்.

நோக்கங்களும் வாய்ப்புகளும்

  1. நோக்கங்களையும் வாய்ப்புகளையும் நிதி ஆயோக் கொண்டுள்ளது. முதல் மற்றும் இறுதி புகலிடம் தருபவராக இன்றி உறுதுணை புரிபவராக அரசு இயங்கும் என்கிற மேலாண்மை கோட்பாடு கடை பிடிக்கப்படும்
  2. உணவு பாதுகாப்பிலிருந்து கலவை வேளாண்மை உற்பத்திக்கு வளர்ந்து செல்லுதல் மேலும் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உண்மையான வருமானத்தை அடையச் செய்தல்
  3. இந்தியா உலக விவகாரங்களின் விவாதங்களில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
  4. நடுத்தர வர்கத்தினை வேகமான பொருளாதாரத்தில் இணைத்தல் மற்றும் ஆற்றல் வளங்களை முழுமையாக பயன்படுத்துதல்
  5. இந்தியாவின் தனித்துவமிக்க மனித மூலதனத்தின் அறிவுசார், விஞ்ஞானம் சார்ந்து மற்றும் தொழில் முனைவோர் திறன்களை தூண்டுதல் திட்டமிடுதல் மற்றும் நிதி ஆயோக் யு. ஏஐஐ.19
  6. வெளிநாடுவாழ் இந்தியர்களின் புவி அரசியல் மற்றும் புவிப்பொருளாதார வலிமைகளை இணைத்துக் கொள்ளுதல்
  7. ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழிடங்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கி நகரமயமாதலை அடைதல்
  8. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆட்சிமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்.

சிக்கலான சவால்களை போக்கி இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே நிதி ஆயோக்கின் குறிக்கோளாகும். அவை,


  1. இந்தியாவினுடைய மக்கள்தொகை, இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் ஆற்றலை கல்வியின்
  2. மூலம் உணர்தல், திறன் வளர்ப்பு, பாலின பாகுபாடுகளை கலைதல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
  3. வறுமையை ஒழித்து ஒவ்வொரு இந்தியனும் கண்ணியத்துடனும் மற்றும் சுயமரியாதையாகவும் வாழ வாய்ப்பளித்தல்
  4. பாலினபாகுபாடு, சாதி மற்றும் பொருளாதார வேறுபாடுகளில் சமமின்மையை தீர்த்து வைத்தல்
  5. கிராமங்களை ஒருங்கிணைத்து அவற்றை வளர்ச்சி பாதைக்குள் கொண்டுவருதல்
  6. 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுதொழில்களுக்கு உதவி புரிந்து வேலைவாய்ப்பினை உருவாக்குதல்
  7. நமது சுற்றுச்சுழல் மற்றும் சூழியியலை பாதுகாத்தல் சமீபத்தில் திரு. அர்விந்த பானாகாரியா (பொருளாதார நிபுணர்) நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார். நிதி ஆயோக்கின் குறிக்கோள்கள்
  8. கூட்டுறவு கூட்டாட்சியை வார்த்தல், மாநிலங்களையும் பங்குபெற வைத்தல்.
  9. கிராம அளவில் திட்டங்களைத் தீட்டுதல், உயர் நிலையில் அவற்றை ஒருங்கிணைத்தல்.
  10. பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தின் பயனை பெறாதவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல்.
  11. பொருளாதார கொள்கை தேசிய பாதுகாப்பின் நலனில் அக்கறை கொண்டதாக இருக்கும்.
  12. புதிய செல்முறைக்கான பின்னூட்டம் தொடர்ந்து பெறப்படும்.
  13. தேசிய மற்றும் உலக அளவிலான சிந்தனையாளர்களுடன் பங்கு கொள்ளுதல்.
  14. அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் உதவி அமைப்பை உருவாக்குதல்.
  15. துறைகளுக்குள்ளும் வெளியேயும் உள்ள சிக்கல்கலுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை உருவாக்குதல்.
  16. நல்ல நிர்வாகத்திற்கான சிறந்த வளங்களைக் கொண்ட மையம் அமைத்தல்.
  17. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் கொள்ளல் மற்றும் தகுதியை வளர்த்தல்.

கட்டுரை எண் 2:

பழைய மொந்தையில் புதிய தேன் தான் “நிதி ஆயோக்”


சந்திர பாரதி

கட்டுரையாளர்


60 ஆண்டுகளாக இயங்கி வந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு “நிதி ஆயோக்”  (“இந்திய மாற்றத்திற்கான தேசிய ஆணையம்”) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. 12 ஐந்தாண்டு திட்டங்கள் மூலமாக இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் இதற்கு முந்தைய அரசுகள் நிறைவேற்றி வந்துள்ளன. பொருளாதார வளார்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் நாடு முழுவதும் மாநிலங்கள் வேறுபாடின்றி ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. திட்டக் கமிஷன் மாநிலங்களின் திட்ட வரைவுகளையும் நிதித் தேவைகளையும் பரிசீலித்து தேவையான நிதியை ஒதுக்கவும் திட்ட செயல்பட்டை மேலாண்மை செய்யவும் ஏற்படுத்தப்பட்டது.

கடைசி ஐந்தாண்டு திட்டகாலம் மார்ச் 31, 2017ம் ஆண்டு முடிந்த நிலையில் நிதி ஆயோக்கின் மூலம் மூன்றாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு மாநில அரசுகள் குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்ற ஊக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதி நிர்வாக சீர்திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டு வரவும் கையாளாவும் வலியுறுத்தப்பட்டுள்ளன. திட்டக் குழுவைப் போலவே, ஆலோசனை கூறும் ஆணையம் தான் நிதி ஆயோக். ஆனால் நிதி ஆதாரங்களை அளிக்க வல்லும் அதிகாரம் நிதி ஆயோக்கிற்கு கிடையாது. மத்திய நிதியமைச்சகமே நிதி ஆதாரங்கள் வழங்குதல் குறித்த முடிவுகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டக் குழுவில் மாநிலங்களின் நேரடியான பங்களிப்புக் குறைவாக இருப்பதாகவும் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் அதனை மாற்றியமைக்கவே நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக அரசு 2014ம் ஆண்டு தெரிவித்தது. நிதி ஆயோக் அமைப்பிடம் 15 ஆண்டு காலத்திற்கான தொலைநோக்குப் பார்வை திட்ட வரைவை தயாரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கின் தலைவராக நாட்டின் பிரதமர் மோடி இருக்கிறார், ஆளுமைக் குழுவில் மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இதுகாறும் மாநிலங்களின் பங்கு திட்டக் குழுவிலும், தேசிய வளர்ச்சிக் குழுமத்திலும் மிகக் குறைவானதாகவே இருந்தது. திட்டங்கள் நிறைவேற்றப்பட மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டும் இருந்தது. இவ்வாறு வரையறுக்கப்பட்ட திட்டங்கள் மாநிலங்களின் தேவை யதார்த்தத்திலிருந்து விலகி இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலை மாற்றப்பட்டு நிதி ஆயோக்கின் மூலம் மாநிலத் தேவைகளுக்கேற்ப கிராமப்புரங்களும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் வகுக்கவும், திட்டங்களை அமல்படுத்த மாநிலங்களின் பங்கு அதிகரிக்கப்படவும் உள்ளது. இதற்காக பிராந்திய குழுக்கள் அமைக்கும் திட்டமும் உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டு திட்டங்களின் கீழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பேணிப் பாதுகாக்கப்பட்டது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஒரு முக்கிய குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் நாடு முழுவதும் வகுக்கப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்டத்தில், நீர்ப்பாசனம், எரி சக்தி, விவசாயம், சமூக வளர்ச்சி, போக்குவரத்து, தொலை தொடர்பு துறைகளின் வளர்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்ததிலிருந்து, தொழில் துறையில் புரட்சியை மையமாகக் கொண்டு இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. சீனா- இந்தியா யுத்தத்தை தொடர்ந்து வந்த மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் இராணுவத் தளவாட தொழிற்சாலைகளில் வலர்ச்சியை மையமாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. 

இந்த கால கட்டத்தில் தான் நாடு முழுவதும் சிமெண்ட், உர  உற்பத்தித் துறைகள் பெரும் வளர்ச்சியைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள் கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டதும் இக் காலக் கட்டத்தில் தான். ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் விலைகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருளாதார தாரளமயமாக்குதல் முதன் முறையாக அறிமுகமானது. மக்கள் தொகைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் அமலுக்கு வந்ததும் இக்காலகட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற வளர்ச்சிக்கான வங்கியும் அமைக்கப்பட்டது இந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் தான். தொடர்ந்து வந்த ஆட்சிகளில் மேன் மேலும் வளர்ச்சிகளை இந்தியப் பொருளாதாரம் கண்டது. விளை பொருட்கள் உற்பத்தியில் புரட்சி, தொழிற்சாலைகளைல் உற்பத்திப் பெருக்கம், சமூக நீதியின் அடிப்படையில் ஒருங்கிணந்த வளர்ச்சி போன்றவை ஐந்தாண்டு திட்டங்களால் சாத்தியமாயிற்று.

நாட்ட்டின் பொருளாதாரம் 1990-92 களில் சுணக்கத்தில் இருந்ததால் இந்த கால கட்டத்தில் ஐந்தாண்டு திட்டங்களுக்குப் பதிலாக ஆண்டுத் திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

நரசிம்ம ராவ் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி பொருளாதாரத்தை சீர்திருத்தி மேல் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டது. ஏற்றுமதியின் மூலம் வருவாயை அதிகரிக்க கவணம் செலுத்தப்பட்டது. அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உருப்பு நாடாகியதும் இந்த காலகட்டத்தில் தான். தொடர்ந்து வந்த பாஜக அரசும் ஐந்தாண்டு திட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே தொடர்ந்தன.

பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் GDPயின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, வறுமை ஒழிப்பிற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இலக்கை அடைய 20 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டது. 11வது ஐந்தாண்டு திட்டம் விரைந்த வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்தது. மேலும் பாலினங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை களைந்து சமநிலையை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. விவசாயம் மற்றும் தொழில் துறையில் வளர்ச்சி இலக்குகளை அடைய திட்டங்கள் போடப்பட்டன.

இறுதியான பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், வருடாந்திர பொருளாதார வளர்ச்சி இலக்கு 8.2% சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  ஆதார் அட்டையின் மூலம் பயனாளிக்கு நேரடியாக மானியங்களை பணமாக அளிக்கும் திட்டம் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்பாட்டில் இருந்த ஐந்தாண்டு திட்டங்கள் கைவிடப்பட்டு, அதன் இடத்தில் இந்திய மாற்றத்திற்கான தேசிய ஆணையம் (Niti Ayog) அமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கின் 7 தூண்களாகச் சொல்லப்படுபவை:

1.     சமுதாய மற்றும் தனி நபர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது.

2.     குடிமக்களின் தேவைகளை கணித்து அவற்றை நிறைவேற்றுவது.

3.     திட்டங்களில் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது.

4.     பெண்களுக்கு முக்கியத்துவம், அதிக அதிகாரம்.

5.     பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினரை உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி.

6.     இளைஞர்களுக்கு வாய்ப்பு முன்னுரிமை

7.     பரிவுள்ள, சாத்யமான, பொறுப்பான அரசாண்மை


நிதி ஆயோக் ஆணையம் அரசின் கொள்கை உருவாக்கும் அறிவுக் கருவூலமாக இருக்கும். பிற நாடுகளில் உள்ள தகுதியான நல்ல திட்டங்களை ஆய்ந்து பிற நாடுகளுடன் கூட்டுறவில் திட்டங்கள் அமைப்பது, விவசாய கிராமங்கள் அளவிலிருந்து மாநில அரசு வரை அனைவரையும் திட்டப் பங்களிப்பில் ஈடுபடுத்துவது,ஒருங்கிணைந்த கூட்டாட்சியை நடைமுறைப்படுத்துவது, தனியார் அரசு கூட்டுத் திட்டங்களுக்கு ஊக்கமளிப்பது, வறுமையை ஒழிக்க திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்துவது, வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் வண்ணம் சிரு, குறு தொழில்களை ஊக்குவிப்பது, பிரதேசம் சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கு குழுக்கள் அமைத்து நிறைவேற்றுவது, வெளி நாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டை ஈர்த்து இந்தியாவின் வளர்ச்சியில் ஈடுபடுத்துவது போன்ற முக்கியப் பணிகளை நிதி ஆயோக் மேற்கொள்ளும்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக்கின் மீது சில விமர்சனங்கள் உள்ளன, முக்கியமாக,

1.     திட்டக் குழுவைப் போலவே நிதி ஆயோக்கும் அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற ஆணையம் இல்லை, பாராளுமன்றத்தின் கண்காணிப்பிற்கு உட்பட்டதல்ல.

2.     இது ஒரு பெயர் மாற்றமேயன்றி திட்டக் குழுவிற்கும் நிதி ஆயோக்கிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. நேரு மற்றும் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டம் என்பதாலேயே திட்டக் குழு கலைக்கப்படுகிறது. மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காககவே மாற்றப்படுகிறதே தவிர சீர்திருத்தத் திட்டங்கள் எதுவும் மோடி அரசிடம் இல்லை.

3.     திட்டக் குழுவை மாநில அரசுகளின் கருத்துக்களைப் பெறாமலே கலைத்து விட்டு நிதி ஆயோக்கை கொண்டு வந்தது சரியல்ல.

4.     மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதி ஆதாரங்கள் பாதிக்கப்படும். இதனால் வளர்ச்சியின் பெயரால், மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படும், கைவிடப்படும் அபாயம் உள்ளது.

5.     கிட்டத்தட்ட 60 மக்கள் நலத் திட்டங்கள் 10 நலத் திட்டங்களாகச் சுருக்கப்படுவதால் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

6.     திட்டக் குழு மாதிரியன்றி, நிதி ஆயோக் உற்பத்தி வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு மாநிலங்களில் மனித வள வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோடு, மாநிலங்களில் மனித வளர்ச்சிக் குறியீடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

7.    ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கிய நேருவின் சித்தாந்தம் போலன்றி நிதி ஆயோக் உலக மயமாக்கல், சந்தை வர்த்தகத்திற்கேற்ப மையப்படுத்தப்பட்ட திட்ட உருவாக்கங்களை முன்னெடுக்கிறது. பிற்படுத்தப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சியை இது பாதிக்கும். ஐந்தாண்டு திட்டங்களின் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சித் தேவைக் கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. திட்டங்கள் மையப்படுத்தப்படுவதால் மாநிலங்களின் தேவைகள் முன்னுரிமை பெறாமல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. 

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகை செய்யவே “நிதி ஆயோக்” என மோடியின் தலைமையிலான பாஜக அரசு கூறினாலும், நிதி ஆயோக் “புதிய மொந்தையில் பழைய தேன்’ என்கின்றனர் மாற்றுக் கருத்துள்ளவர்கள். பொது மக்களைப் பொருத்தவரையில் தெளிவான திட்டமிடலும், பொறுப்பான மேலாண்மையில் இலஞ்சம் ஊழலின்றி குடிமகன்களின் வரிப்பணம் வீணாக்கப்படாமல் குறித்த நேரத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேணும் என்பதே விருப்பம்.   

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN