மூத்த குடிமக்களின் மேல் அக்கறை (2018 UPSC CSE (ENGLISH))



#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY


CARING FOR OLD AGE (2018 UPSC CSE (ENGLISH))

மூத்த குடிமக்களின் மேல் அக்கறை (2018 UPSC CSE (ENGLISH))




ஆயுள் நீடித்தாலும் ஆயிரம் கவலைகள்?




மருத்துவத்துறை பரவலான வளர்ச்சி கண்டிருப்பதோடு இன்றைக்கு பலருக்கும் உடல் நலம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும்  ஏற்பட்டிருக்கிறது. நமது வாழ்வியல் மாற்றம் மூலம் நோயற்ற வாழ்வை சாத்தியப்படுத்தி ஆயுளை அதிகரிக்க முடியும்  என்றாலும், அதிக ஆயுளோடு வாழ்வதற்கு இசைவான சூழல் இங்கு இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும். இது பற்றி  மருத்துவச் செயல்பாட்டாளரான அமீர்கானிடம் பேசினோம்.


‘‘நமது இப்போதைய சமூக சூழலில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. அரசு, சமூகம் மற்றும் தனி நபர் என  அனைத்து தரப்பிலிருந்தும் இதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில்தான் பிரச்னைகளைக் களைய முடியும்.  அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும்போது ஆயுள் நீடிப்பது குறித்த பிரச்னை இருக்காது என்று கருதுகின்றனர்.  அரசு ஊழியர்கள் மட்டுமல்ல... தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை  சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்தியாவில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகை வழங்கும் திட்டமே நிறுத்தப்பட்டு விட்டது. இங்கும்  ஓய்வு பெறும் வயதை அதிகப்படுத்தும் நிலையில் அவர்கள் பொருளாதாரம் மற்றும் மனதளவில் நிறைவுடன் இயங்குவார்கள்.  முதுமைக் காலத்தில் அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் சமூக வாழ்வு  ஆகியவைதான். இவற்றுக்கு பணம் அத்தியாவசியம் ஆகிறது. 

முதியோர் நலத்துக்கென பெரிதாக இங்கு அக்கறை செலுத்தப்படுவதில்லை. முதியோர் ஓய்வூதியத் தொகையாக ஆயிரம் ரூபாய்  வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அது மட்டும் போதுமா? அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கென  சிறப்பு வார்டு கிடையாது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், ‘சேர்ப்பவர் இருந்தால்தான் அட்மிட் செய்ய முடியும்’  என்கிறார்கள். சட்டப்படி சேர்ப்பவர் இருந்தால்தான் அட்மிட் செய்ய வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என்றாலும்  இப்படியான போக்கு இருக்கிறது. 

இன்றைக்கு நகர்மய சூழலில் பெரும்பாலான முதியோர்கள் நகர வாழ்க்கையில்தான் சிக்குண்டிருக்கிறார்கள். மகன் - மருமகள்  இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள் என்றால், துணையை இழந்தவர்கள் தனிமையில்  இருப்பார்கள். பொதுவாக  ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகம் என்பதால் கணவனை இழந்த வயோதிகப் பெண்கள்தான் அதிகம்.சுற்றுப்புறத்தோடு  தொடர்பே இல்லாத நகர சூழலில் வாழும்போது ஏற்படும் தனிமை பல உளவியல் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. 

தனியாக வீட்டில் இருக்கும்போது மருத்துவ ரீதியான அவசரங்களுக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்? இன்றைய குடும்ப  அமைப்பிலும் கூட வயதானவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள முடியாத நிலைதான் இருக்கிறது. தனிமைதான் தற்கொலை  எண்ணத்தை தூண்டுகிறது என்கின்றன பல ஆய்வுகள். தனிமையிலிருந்து விடுபட்டு தன் வயதை ஒத்தவர்களுடன் இணக்கமாக  பழகுவதற்கான சந்தர்ப்பம் முதியோர் இல்லங்களில்தான் கிடைக்கும். 

அரசு நடத்தும் முதியோர் இல்லங்கள் மிகவும் குறைவான அளவில்தான் இருக்கின்றன. தனியார் முதியோர் இல்லங்கள் அதிக  அளவிலான தொகையை வசூலிக்கின்றன. அரசு முதியோர்களுக்கென சிறப்பு கவனம் கொடுத்து முதியோர் இல்லங்களை  அதிகரிக்க வேண்டும். எதுவும் செய்யாமல் இருப்பதுதான் உடல் மற்றும் மன ரீதியான சோர்வை ஏற்படுத்தும் என்பதால்  அவர்களின் வயதுக்கும் திறனுக்கும் ஏற்றபடியான வேலைகளை அவர்களுக்கு வழங்கலாம். 

இதன் மூலம் அவரவர்களுக்கான பொருளாதாரத் தேவையை அவர்களே நிவர்த்தி செய்து கொள்ள முடியும். முக்கியமாக அரசு  இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாலும் சமூக அளவிலும் இதற்கான மாற்றம் அவசியம். மத அமைப்புகள் கல்விக்கு  முக்கியத்துவம் அளிப்பது போல் முதியோர் நலத்துக்காகவும் செயலாற்றலாம். 

வயதானவர்களுக்கு முக்கியத் தேவையாக இருப்பது மருத்துவம். அதனால், மருத்துவத்துறையே முதியோர் நலனுக்கான  பணிகளை ஒருங்கிணைக்கலாம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இயங்கும் தன்னார்வ அமைப்பு ஆஷா. அதில் ஆயிரம் பேருக்கு  ஒருவரை தன்னார்வலராக நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊதியம் கிடையாது. 

ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தியா முழுவதும் எட்டரை லட்சம் ஆஷா தன்னார்வலர்களே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 10  ஆயிரம் பேர் கூட இல்லை. ஆஷாவில் தாய் சேய் நலமே பிரதானப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதியோர் நலத்தையும்  இணைத்து செயல்பட வைக்கலாம். முறையான திட்டமிடலோடு செயல்பட்டால் ஆயுள் நீடிப்பது பற்றி எந்தக் கவலையுமற்ற  சமூக சூழலை உருவாக்க முடியும்’’ என்கிறார் அமீர்கான்
.




முதியோரை 'அழகான ஆண்டுகளுக்கு' அழைத்துச் செல்லும் அன்பான அமைப்பு!


இங்கே இளைஞர்களை கண்டுகொள்ளும் அளவிற்கு யாரும் முதியவர்களை சட்டை செய்வதில்லை. சினிமா, பத்திரிக்கை, பிசினஸ் என எதை எடுத்தாலும் அது இளைஞர்களை மனதில் வைத்தே உருவாக்கப்படுகிறது.
இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த தேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட அதிகரிக்கப்போகிறது. அவர்களை கவனிக்கப் போதுமான வசதிகள் இல்லை. ஒருகாலத்தில் இந்த தேசத்திற்காக உழைத்த, பல பெரும் நிறுவனங்களை கட்டமைத்த அவர்களை கடைசி காலத்தில் போற்றி பாதுகாக்க எதேனும் செய்ய வேண்டும் இல்லையா?
"இந்தியாவில் இப்போதைக்கு வயதானவர்கள் 100 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இது 2050ம் ஆண்டு 323 மில்லியனாக அதிகரிக்கக்கூடும், அப்போது மொத்த மக்கள் தொகையில் இது 20 சதவீதமாக இருக்கும்” என்கிறது ஐக்கிய நாடுகளின் ஜனத்தொகை நிதியம். எனவே இந்தத் துறையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

துறை விவரம்


கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நிறுவனங்கள் 60 வயதிற்கும் அதிகமானோருக்கு உதவும் வகையில் நிறுவனத்தை துவங்கினர். குட்ஹாண்ட்ஸ், சீனியர் ஷெல்ஃப், ப்ரமதி கேர், சீனியர்வேர்ல்ட் மற்றும் சில்வர் டாகீஸ் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வயதானவர்களின் எல்லா வகையான தேவைகளையும் பூர்த்தி செய்வதே இவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் உருவாக்கியவர்கள் இளைஞர்கள். எனவே வயதானவர்களின் உண்மையான பிரச்சினைகளை இவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் சில மோசமான அனுபவங்களை பெற்றனர்.
முதியவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் "ப்யூட்டிஃபுல் இயர்ஸ்" (Beautiful years). இதை துவங்கியிருப்பவர் 51 வயதான விளாடிமிர் ருப்போ(விளாடி). “நான் என் குழந்தைகளை சார்ந்து இருக்க விரும்பவில்லை. வயதான காலத்தில் என்னை நானே பார்த்துக்கொள்ள தான் விரும்புகிறேன்” என்றார் விளாடிமிர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறார்.
நிறுவனத்தின் நோக்கம் பற்றி கூறும்போது “வயதானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். அவர்கள் மீதான அக்கறை என்பது பரஸ்பர ஆதரவு வழங்குவதன் மூலமாகவும் அவர்களுக்கான புதுமையான தயாரிப்புகள் மூலமும் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். மூத்தோர் பாதுகாப்பு சேவைகளை சமூக அளவில் சரிபார்த்து பரிந்துரைக்கவும் வேண்டும்” என்றார். மேலும் "நாங்கள் ட்ரிப் அட்வஸர் மற்றும் ஜொமாடோவின் மூத்தோர் சேவையை நோக்கி நகரவிருக்கிறோம்” என்றார்.

விளாடிமிர், 30 ஆண்டு அனுபவம் நிரம்பிய பக்குவப்பட்ட மென்பொருள் நிர்வாகி, உலக அளவிலான அனுபவம் பெற்றவர். பிறந்து வளர்ந்ததெல்லாம் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் தான். பெங்களூரு வருவதற்கு முன் 12 ஆண்டுகள் ஜெருசலேம், இஸ்ரேல் போன்ற இடங்களில் பணியாற்றி இருக்கிறார். பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தை நிறுவ 2000ம் ஆண்டு பெங்களூர் வந்தார். இப்போது 2,200 பேர் இந்த கிளையில் பணியாற்றுகிறார்கள். வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டியவர் இப்போது 16 வருடங்களாக இருக்கிறார்.
சிஸ்கோ நிறுவனத்தில் பொறியியல் துணைத்தலைவராக இருக்கும் இவர் ஜனவரி 2016ன் இறுதியில் முழுமூச்சாக பியூட்டிபுல் இயர்ஸ் நிறுவனத்தை மட்டுமே கவனித்துக் கொள்ளப்போகிறார்.

வயது தடையல்ல


”என் அத்தையின் கதையை சொல்லவா? அவருக்கு இப்போது 86 வயது ஆகிறது. அவர் சமீபத்தில் என்னிடம் சொன்னார் “ஒவ்வொரு முறையும் கண்ணாடி பார்க்கும்போதும் யார் இந்த அசிங்கமான பெண் என்று நினைத்துக்கொள்வேன். அது நான் இல்லை. எனக்கு தெரியும் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஆள் தான் நான். ஆனால் எல்லோரும் என்னை வயதான பெண்மணியாகவே பார்க்கிறார்கள். என்னையல்ல” வயதானவர்களை புரிந்து வைத்திருக்கிறார்களா? அவர்களைப் பற்றி உண்மையில் புரிந்துள்ளதா?” என்கிறார் விளாடிமிர்.



இந்தக் கேள்வி தான் அவர் வாழ்நாள் முழுக்க சேர்த்துவைத்த பணத்தை கொண்டு பியூட்டிஃபுல் இயர்ஸ் நிறுவனத்தை துவங்க உதவியது.

இந்த தளத்தை எல்லோரும் இலவசமாக பயன்படுத்தலாம். இதில் சில பொருட்களை இணையவழியில் விற்பதன் மூலம் பணம் பண்ணும் திட்டமும் இருப்பதாக தெரிவிக்கிறார். "எங்கள் இணையதளம் மூலம் வயதானவர்களுக்கான சின்ன சின்ன பொருட்கள் கூட விற்கப் போகிறோம். உருப்பெருக்கியுடன் கூடிய நகம்வெட்டி, புத்தகம் வைப்பான், மாத்திரை வெட்டி மற்றும் அறைப்பான், மோட்டார் பொருத்தப்பட்ட வீல்சேர்கள், நோயாளி தாங்கி(hoists) என பல. உள்ளூர் பொருட்கள் மட்டுமல்ல சிலவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். பார்கின்சன் நோயாளிகளுக்கான மிகை யதார்த்த கண்ணாடிகள், அது அவர்கள் தடுமாறாமல் நடக்க உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு ஷூக்கள், படுக்கை நோயாளிகளுக்கான ஆடைகள் போன்ற பலவற்றை விற்கவிருக்கிறோம்” என்றார்
வயதானவர்களுக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அது சார்ந்த சில சேவைகளும் தேவைப்படும். “பராமரிப்பாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள், வீட்டு நோய் மேற்பார்வை சேவை, மருத்துவ உபகரணங்களை விநியோகிப்பவர்கள் போன்றோரின் பட்டியல்களையும் பட்டியலிட்டிருக்கிறோம்” என்கிறார் பவித்ரா ரெட்டி. இவர் சேவை வழங்குபவர்களை சரிபார்க்கக்கூடிய தன்னார்வலர்.
பெரிய மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்கள் மூலமாக பிரச்சாரம் செய்யும் திட்டமும் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் விளாடிமிர்.

கதைகள்


விளாடிமிர், தற்போதைக்கு வயதானவர்களை உள்ளடக்கிய கூட்டத்தை உருவாக்கி வருகிறார். கதைகளை பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களும், நண்பர்களை உருவாக்கிக்கொள்ள விரும்புபவர்களையும் இதில் இணைத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார். வயதானவர்களை பார்த்துக்கொள்ள விரும்புபவர்களும் இடமளிக்கிறார். "வயதானவர்களை பார்த்துக்கொள்ள விரும்புபவர்களை வைத்து நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. குறைந்தபட்சம் நம் பெற்றோர்களின், தாத்தா பாட்டிகளின் கதைகளையாவது பகிர்ந்துகொள்ளலாம். பலரின் எழுச்சியூட்டும் கதைகளும் எங்கள் தளத்தில் எழுதியிருக்கிறோம். ப்யூட்டிஃபுல் ஏஜிங் என்ற பகுதியில் இதை பார்க்கலாம்.” என்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தன் கணவரை இழந்தார், தன் சகோதரி, மகன், மருமகன் எல்லோரையும் இழந்த பிறகு தற்போது 83 வயதில் கணினியை இயக்க கற்றுக்கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத அழகான தருணங்களையெல்லாம் அதில் எழுதத் துவங்கியிருக்கிறார். “உண்மையில் அவர் மிகுந்த ஆர்வத்தோடு எழுதி வருகிறார். அது அவரது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுத்திருக்கிறது. மக்களின் குரலாகவும், மறைந்த தலைமுறைகளின் குரலாகவும் அது ஒலிக்கிறது. இதன்மூலம் தனது பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் ஒரு முன்மாதிரி ஆகி இருக்கிறார்” என்றார் விளாடி.

மனதளவில் இளமை


வயதானவர்களை இந்தியர்கள் மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்களா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் பத்திரிக்கைகளில் தினம்தோறும் வரும் வயதானவர்களின் கொலைகள் பற்றிய செய்திகள் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கின்றன. வயதானவர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் பெங்களூரு தற்போது ஐடிக்காரர்களின் இடமாகவும் அது தொடர்பான துறைகளுக்கானதாகவும் மாறி வருகிறது. மும்பையும் டெல்லியும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் நடுத்தர வர்க்கத்தில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. "எந்த அமைப்பும் சரிவர இல்லாத ஒரு இடத்தில் ஆயிரம் பேரை கையாள்வதை விட பத்து பேரை கையாள்வது கடினமாக இருக்கிறது. எல்லாமே சவாலாக இருக்கிறது. ஆனால் அது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதை சாதிக்க முடியும் என நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். என் தலைமுறை அதை சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன்” என்கிறார் விளாடிமிர்.
மத்திய பட்ஜெட் 2018 புள்ளி விபரம் (மூத்த குடிமக்களுக்கு சலுகை)




மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்புக்கு 50,000 ரூபாய் வரை வட்டிக்கு வரியில்லை.
மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு தற்போது 10,000 ரூபாய் வரை மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூ. 40,000 நிரந்தர கழிவு

* மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் இருந்து ரூ. 40,000 வரை நிரந்த கழிவு வழங்கப்படும்


போக்குவரத்து, மருத்துவ செலவினங்களுக்கு கழிவு பெறலாம்



மூத்த குடிமக்களின் மேல் அக்கறை --- திட்டம் DOWNLOAD

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN