# அடிப்படை கற்றல் #UPSCTAMIL
இந்திய கிராமங்களில் இருக்கும் ஏழைகளில் வீடுகளுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் கொடுக்கும் வகையில் சௌபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார். எரிவாயு, மின்சார வசதி, மருத்துவ வசதிகளை பெற்ற தனித்தனி திட்டமாக இருந்த நிலையில் அவற்றை சௌபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக அறிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் ரூ.16,320 கோடி ஒதுக்கீடு செய்யதுள்ளது. மேலும் இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 10 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும். சில சிறப்பு மாநிலங்களுக்கு மத்திய அரசு 85 சதவீதம் அளவில் நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மின் விநியோகம் தொடர்பான இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதுதான் இலக்காகும். இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். இந்த ரூ.500-ஐ 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் உண்டு.
No comments:
Post a Comment