பொது தாள் 4 (GS 4 எப்படி அணுகுவது)

Image result for upsc gs 4



இப்போது முதலில் பொதுப் பாடங்களின் நான்காவது தாளைப் பற்றி பார்ப்போம். இதில் வரும் தலைப்புகள் மற்ற தாள்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவை. நாம் படித்து மனதில் வைத்து எழுதும் விடைகளைவிட நம் மனதில் தோன்றும் நேர்மையான பதில்களுக்கும் நமது அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய தாள் இது. ஏனென்றால் சுமார் 50 சதவிகித கேள்விகள் வழக்கு ஆய்வுகளாக (case study) அமைகின்றன. இதனால் நம்முடைய நேர்மை, நெறிமுறைகள், நாணயம், மனப்பான்மை ஆகியவை இந்த தாளில் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 
நெறிமுறைகளை நிர்ணயம் செய்பவை, அவற்றை கடைபிடிப்பதன் எதிரொலி, பொது மட்டும் தனிப்பட்ட வாழ்வில் நெறிமுறைகள், மிகப் பெரிய தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், நிர்வாகிகள் ஆகியோரின் வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தத்துவங்கள், நெறிமுறைகளை கற்றுத் தருவதில் கல்வி, குடும்பம் மற்றும் சமூகத்தின் பங்கு, தார்மீக அணுகுமுறைகள், பாரபட்சமற்ற நடத்தை, உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence) ஆகிய தலைப்புகள் மிக முக்கியமானவை. அதேபோல, நேர்மையான நிர்வாக முறைகள், அரசு மற்றும் தனியார் துறைகளில் அதற்கு ஏற்படும் இடர்ப்பாடுகள், அது சார்ந்த விதிமுறைகள், பொது சேவை பற்றிய அடிப்படை, ஊழல், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தகவல் உரிமை உள்ளிட்ட குடிமக்களுக்கான முக்கிய சட்டங்களை அறிந்து கொள்வது அவசியம். 
உதாரண கேள்வி 

 1.நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு சமூக மற்றும் தனி மனித நன்மை ஏற்படுகிறது ? ( UPSC 2017 , 10 marks ) 

2. 'ஆட்சி', 'நல்லாட்சி' , ' நெறிமுறையான, நேர்மையான ஆட்சி' ஆகியவற்றின் மூலம் நீங்கள் அறிவதை விவரிக்கவும். ( UPSC 2017 10 marks) 
3. case study: நீங்கள் ஓர்  ஊரில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரியாக உள்ளீர்கள். மிகவும் ஏழ்மையான பெண் ஒருவர் உங்களிடம் ஆதரவற்ற பெண் சான்றிதழ் கேட்டு வந்து நிற்கிறார். விசாரித்ததில் அவர் உண்மையிலேயே ஆதரவற்ற பெண் என்று தெரிகிறது. ஆனால், அந்த பெண்ணிடம் ஆவணங்கள் சரிவர இல்லை என்பது தெரிய வருகிறது. இவருக்கு சான்றிதழ் வழங்கினால் நீங்கள் விதிமுறைகளை மீறுகிறீர்கள் என்று ஆகும் அதேசமயம் அந்த பெண்ணுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ( UPSC 2017 20 marks ) 

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN