புவி ஈர்ப்பு அலைகள் (Gravitational waves) என்றால் என்ன?

# அடிப்படை கற்றல் #UPSCTAMIL




நன்றி : விகடன் 


வானியல் ஆய்வில் மைல்கல்: புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், ஐன்ஸ்டின் கண்டுபிடித்து சொன்ன  புவி ஈர்ப்பு அலைகள் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவில் 'லிகோ ('Laser Interferometer Gravitational-wave Observatory (LIGO) )குழு இந்திய விஞ்ஞானிகளின்
உதவியுடன் இதனை கண்டுபிடித்துள்ளது. இதனை கண்டு பிடித்த 'லிகோ' ஆய்வு மையம்  வானில் இரு பிளாக் ஹோல்கள் உராயும் போது ஏற்படும் சத்தத்தையும் பதிவு செய்துள்ளது.

விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் உருவாவது கண்டறியப்பட்டுள்ளது.  சுமார் 1.3 பில்லியன் ஒலி ஆண்டுகளுக்கு அப்பால் புவிஈர்ப்பு அலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. புள்ளிகள் உராயும் இந்த சத்தம் 20 மில்லி வினாடிகள் மட்டுமே பதியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில்ம் உள்ள லிகோ புவிஈர்ப்பு  அலைகள் ஆய்வு மையத்தில்,   கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு ஏற்பட்ட உராய்வு, பதிவு செய்யப்பட்டது. அதே வேளையில் வாஷிங்டனில் உள்ள மற்றொரு புவி ஈர்ப்பு ஆய்வு மையத்திலும்  உறுதி செய்யப்பட்டது.
தற்போது அந்த சத்தம் இணையத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.  வானியல் ஆராய்ச்சிக்காக,  கலிலியோ 300 ஆண்டுகளுக்கு முன் 'டெலஸ்கோப் ' கண்டுபிடித்தது எத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதோ அதே போல் புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாஷிங்டன் நகரில்,  நேற்று விஞ்ஞானிகள் மக்கள் மத்தியில்  மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.  

புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பிற்கு,  இந்தியாவின் 9 விஞ்ஞான ஆய்வு நிறுவனங்களை சேர்ந்த 60 விஞ்ஞானிகளும் பல கட்டங்களில் உதவியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பில் உதவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில்,''சவால் மிகுந்த இந்த பணியில் ஈடுபட்ட இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். இது அண்ட உலகத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பு ''என குறிப்பிட்டுள்ளார். 

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் தனது வாழ்த்துக்களை 'லிகோ' குழுவினருக்கு தெரிவித்துள்ளார். அதில்,''  1970-ம் ஆண்டு பிளாக் ஹோல் குறித்த தியரி ஏற்படுத்தினேன்.தியரியாகவே அறியப்பட்டு வந்த 'பிளாக் ஹோல்' இருப்பது  நிரூபணமாகியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. 
எனது வாழ்க்கையில் பெரும்பகுதியை இயற்பியல் கண்டுபிடிப்பிலும் அண்டத்தை புரிந்து கொள்ளவுமே  செலவழித்திருக்கிறேன். வாழ்வில் ஒரு முறையாவது 'பிளாக் ஹோல்' உராய்வு சத்தத்தை கேட்க முடியுமா? என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது. தற்போது அதனை கேட்கும் வாய்ப்பை 'லிகோ ' குழு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.  வானியல் ஆய்வில் அதிசயத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பு இது '' என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN