#அடிப்படை கற்றல் #UPSCTAMIL
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal , NGT) இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவுக் கூற்றின் கீழ், சுற்றுச்சூழல்தொடர்பான பிணக்குகளை விரைவாக தீர்க்கவும் உயர்நீதிமன்றங்களில் நடப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் இந்தியக் குடிகளுக்கு நலம்மிகு சுற்றுச்சூழலுக்கான உரிமையை நிலைநாட்டவும் 2010இல் நிறுவப்பட்டது. இந்தத் தீர்ப்பாயத்தின் முதன்மை இருக்கை புது தில்லியிலும் கிளை இருக்கைகள் சென்னை, போபால், புனே மற்றும் கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டுள்ளன.
தீர்ப்பாயத்தின் முக்கிய அமர்வு போபாலில் அமைக்கப்படும். நான்கு சுழலும் அமர்வுகளை தீர்ப்பாயம் கொண்டிருக்கும். இவை அனைத்து காற்று மற்றும் நீர் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுசூழல் சட்டங்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம், காடுகள் பாதுகாப்பு சட்டம், மற்றும் உயிரினப் பல்வகைமை சட்டங்களோடு இது தொடர்பு கொண்டிருக்கிறது. கமிட்டியால் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் சட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்கு விரைவில் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார அமைப்பு ஒன்று மேலும் நிறுவப்படும்.
சென்னைக் கிளை
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை அக்டோபர், 2012 முதல் செயல்படத் துவங்கியுள்ளது. இதன் நீதித்துறை சார் உறுப்பினராக ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் எம். சொக்கலிங்கம் பொறுப்பாற்றி வருகிறார்; துறைசார் வல்லுநராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அரும்பாக்கத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தில் இயங்குகிறது
No comments:
Post a Comment