ஜி. எஸ். எல். வி
ஜி.எஸ்.எல்.வி - ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (வாகனம்) இது இஸ்ரோவினால் இயக்கப்படும் ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு).
ஊர்தியின் கட்டமைப்பு
ஜி. எஸ். எல். வி மூன்று பகுதிகள் கொண்ட வாகனமாகும். 49 மீ உயரமும் 414 தொன் ஏவு நிறையும் உடையது; இதன் தள்ளுசுமை-சீர்வடிவத்தின் பெரும விட்டம் 3.4 மீ. தள்ளுசுமையாக 2.5 டன் நிறையுடைய துணைக்கோள். இதன் முதல்/கீழ் பாகத்தின் உள்ளகமாக 129 டன் நிறையுடைய S125 எனப்படும் திட உயர்த்தி உள்ளது; இதைச்சுற்றி L40 எனப்படும் ஒவ்வொன்றும் 40 டன் நிறையுடைய நான்கு திரவ இணைப்பு-உயர்த்திகள் உள்ளன. இரண்டாவது அடுக்கு: 37.5 டன் நிறையுடைய திரவ உந்தி; மூன்றாவதாக, GS3 எனப்படும் கடுங்குளிர் மேல் பாகத்தில் 12 டன் நிறையுடைய திரவ ஆக்சிசனும் திரவ ஹைடிரசனும் உள்ளன.
ஜி.எஸ்.எல்.வி-D3 (மார்க் II வகை)
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஃது மூன்றாவது மேம்பாட்டுப் பயணம்; ஜீயெசெல்வியின் ஆறாவது பயணம். இவ்விரிசு 15 ஏப்ரல் 2010 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது; இப்பயணத்தில் 2,220 கிகி நிறையுடைய ஜீசாட்-4 என்ற (ஆய்வுக்குரிய) தொடர்புத் துணைக்கோள் புவிநிலை இடைப்பாதையில் செலுத்தப்படுவதாக இருந்தது.ஆனால், முதலிரு பாகங்களும் சரியாக எரிந்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் (304 விநாடிகளுக்கு பிறகு), மேல் பாகமான கடுங்குளிர் பாகத்தில் இருக்கும் முக்கிய கடுங்குளிர் இயந்திரம் சரியாக எரிந்தும், இரு வெர்னியர் கடுங்குளிர் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், விரிசு தன் நிர்ணயித்த பாதையில் செல்லாமல் வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இவ்விரு இயந்திரங்களும் தான் கடைசி பாகத்தை நிலையான பாதையில் செலுத்தவல்லன. இருப்பினும், இந்தியக் கடுங்குளிர் இயந்திரத்துடன் அடுத்த பயணம் ஒரு வருடத்திற்குள் நடக்கும் என்று இசுரோ தலைவர் கே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஜீயெசெல்வி ஊர்தியும் பெங்களூருவிலுள்ள இசுரோ துணைக்கோள் மையத்தில் ஜீசாட்-4 துணைக்கோளும் கடுங்குளிர் மேலடுக்கு மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்துகை அமைப்பு மையத்திலும் தயாரிக்கப்பட்டன. இதுவரை ஏவப்பட்டிருந்த ஐந்து ஊர்திகளும் (ஜீயெசெல்வி-மார்க் I) ரஷ்ய கடுங்குளிர் மேல் பாகத்தைக் கொண்டிருந்தன;
ஜீயெசெல்வி-D3 யின் சிறப்புகள்
- இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவான கடுங்குளிர் மேலடுக்கு.
- மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, மேம்படுத்தப்பட்ட திட்டக் கணினிகள்.
- பெரியளவிலான கூட்டுப்பொருள் தள்ளுசுமை-சீர்வடிவம்.
ஜி. எஸ். எல். வி மார்க் III
ஜி. எஸ். எல். வி மார்க் III (The Geosynchronous Satellite Launch Vehicle Mark III) ஒரு செயற்கைக்கோள் ஏவுகணை ஆகும். இஸ்ரோ (ISRO)வினால் தயாரிக்கப்பட்ட இது ஒரு முறை மட்டுமே ஏவும் மீளப்பாவிக்க இயலாத வகை செலுத்து வாகனம் ஆகும். 5 ஜூன் 2017 அன்று 17:28 மணியளவில் இந்தியாவின் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செலுத்து வாகனத்தின் மூலம் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த இயலும். மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் இயலும். இச்செலுத்து வாகனத்தின் மூன்றாவது அடுக்கில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக எடையுடையவற்றை உந்தித் தள்ள இயலும்.
கிரையோஜெனிக் என்ஜின்
ஹைட்ரஜனையும், ஆக்சிஜ னையும் குளிர்வித்து அதனை திரவ வடிவத்தில் எரிபொருளாக பயன்படுத்துவதுதான் கிரையோ ஜெனிக் தொழில்நுட்பம். இந்த வகை இன்ஜினில்தான் அதிக உந்துசக்தி கிடைக்கும். அதன் மூலம் ராக்கெட் விண்ணை நோக்கி சிறப்பாக சீறிப்பாயும். ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் வாயுவாக ராக்கெட்டில் வைத்து அனுப்ப ராக்கெட்டில் போதுமான இடம் இருக்காது. எனினும் ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகும். ஆக்சிஜனை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர் வித்தால் திரவமாகும். இந்த திரவங்கள் ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி இடங்களில் சேமித்து வைக்கப்படும். ராக்கெட் உயரே செல்லும்போது இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புற முள்ள பகுதியில் வாயுவாக மாறி ஒன்றுசேர்ந்து எரிந்து சிறப்பான உந்துசக்தியை வெளிப்படுத்தும்.
விண்வெளியில் மேலே செல்ல செல்ல எரிபொருளுக்கு உதவும் ஆக்சிஜன் கிடைக்காது என்பதால் அது ராக்கெட்டிலேயே வைத்து அனுப்பப்படுகிறது.
No comments:
Post a Comment