#அடிப்படை கற்றல் #UPSCTAMIL
ஒரு சாதாரண பல்பு எரியும் போது எரிசக்தி மிகவும் விரையமாகிறது. அந்த பல்பு எரிவதற்காக அனுப்பப்படும் மின்சக்தியில் ஐந்து சதவீதம் மட்டுமே வெளிச்சமாக மாறுகிறது. ஆனால் ஒரு சாதாரண பல்புக்கு வேண்டிய மின்சக்தியில் பத்தில் ஒருபங்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அதே அளவு பிரகாசமான ஒளியை எல்இடி (LED) என்கிற ஒளி உமிழும் டையோடுகளால் ஆன பம்புகள் தருகின்றன. எனினும் எல்இடி பல்புகளின் விலை அதிகமாக இருப்பதால் பலரும் அதைப் பயன்படுத்தவில்லை. அதனால் மின்சார சிக்கனமும் ஏற்படவில்லை. இதனைத் தாண்டி வருவதற்காக உஜாலா (UJALA) என்ற நிதி உதவித்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. எல்லாருக்கும் வாங்கத்தக்க விலையில் எல்இடி பல்புகளை வழங்கும் உன்னத ஜோதித்திட்டம் என்பதன் சுருக்கமே “உஜாலா” என்பதாகும்.
நோக்கம்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மின்சார சிக்கனமுள்ள விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் மின்சிக்கனமுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின்கட்டணச் செலவைக்குறைத்து அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் துணைபோவதும்தான்.
இலக்குகள்
1. 20 கோடி சாதாரண பல்புகளை மாற்றி, (LED) பல்புகள் வழங்குவது.
2. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தைச் சேமிப்பது.
3. மின்சார நிலையங்களின் உற்பத்தியில் சுமார் 5000 மெஹாவாட் குறைப்பது
நுகர்வோரின் மின்கட்டணச் செலவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடியைக் குறைப்பது.
3. பசுமை இல்ல வாயு (கார்பண்டை ஆக்ளைடு) வெளியேற்ற அளவை ஆண்டுக்கு 7.9 கோடியுடன் குறைப்பது.
செயல்படுத்தும் முகமைகள்
மின்சார விநியோக நிறுவனங்களும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனமும் (EESL) இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
LED பல்புகள் பெறுவதற்கான தகுதி
வீட்டில் மின்சார இணைப்புப் பெற்றுள்ளவர்கள், தமக்கு மின்விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து LED பல்புகளை நாற்பது சதவீத விலை மட்டும் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். LED பல்புகளுக்கான விலையை மாதாந்திரத் தவணைகள் மூலமாகவும் செலுத்தலாம்.
LED பல்புகளை கொள்முதல் செய்தல்
ஒருநகரத்தில் / ஊரில் குறிப்பிட்ட இடங்களில் LED பல்புகள் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்கள் வாரியாக விநியோகிக்கப்படும். இந்தத் திட்டம் பற்றி, துண்டறிக்கைகள், போஸ்டர்கள், விளம்பரங்கள் மூலமாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
பழுதான LED பல்புகளை மாற்றுவது
பொதுவாக LED பல்புகளை நீண்ட நாட்கள் எரியும். நாளொன்றுக்கு நான்கு – ஐந்து மணி நேரம் எரியவிட்டால் 15 வருடங்களுக்கும் மேல் அது நன்றாக உழைக்கும். எனினும் தொழில்நுட்பக் காரணங்கால் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதற்கு மூன்று வருடங்களுக்கு இலவசமான வாரண்டியை எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனம் வழங்குகிறது. எந்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ஆனாலும் மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளாலும், உள்ளுர்க்கடைகளில் மாற்றித்தர ஏற்பாடு செய்யப்படும்.
வீடுகளில் LED பல்புகளை பயன்படுத்துவதற்கான உச்சவரம்பு
உஜாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது இரண்டு (LED) பல்புகள் முதல் அதிகபட்சம் 10 பல்புகள் வரை மானிய விலையில் தரப்படும். சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் 5 – 6 பல்புகள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிய வந்துள்ளது.
இத்திட்டம் எப்படி செயல்படுகிறது
- அரசாங்கத்தின் மூலம் இத்திட்டத்திற்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
- மின்கட்டண விகிதமும் மாறுவதில்லை.
- ஆனால், எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனம், LED பல்புகளை 40 சதவிகித விலைக்குத் தருகிறது.
- நுகர்வோருக்கு மின் கட்டணம் குறைகிறது.
- அரசுக்கு மின்உற்பத்தி முதலீட்டுச் செலவு குறைகிறது.
- சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment