# அடிப்படை கற்றல் #TNPSC MAINS
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்பது கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாகும். ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) என்கிற இரண்டு திட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு "ஆம் ஆத்மி பீமா யோஜனா" என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. இது 1-1-2013 முதல் அமலில் இருக்கும் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் தலைவர் அல்லது ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரு உறுப்பினர் போன்றவர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.
தகுதி
இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் வரவிருக்கும் பிறந்த நாளில் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் அல்லது 59 வயதிற்குள் இருக்க வேண்டும். உறுப்பினர் குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தின் (BBL) அல்லது வறுமைக் கோட்டிற்கு சற்றே மேலேயிருக்கும் அடையாளம் காணப்பட்ட வரைமுறையின் கீழுள்ள தொழில்சார் குழு / கிராமப்புற நிலமற்றக் குடும்பமாக இருக்க வேண்டும்.
நற்பயன்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழுள்ள நற்பயன்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இறப்பு ஏற்பட்டால் கிடைக்கும் பயன்கள்:
காப்பீட்டுதாரர் இறந்துவிட்டால் காப்பீட்டுதாரருடைய உயிரோடு இருக்கும் நியமனப்பட்டவர்கள் அல்லது குடும்பத்திற்கு ரூ 30,000 வழங்கப்படும். விபத்துக் காரணமாக இறப்பு ஏற்பட்டால் அல்லது விபத்துக் காரணமாக நிரந்தரமாக உடல் பாகங்கள் அல்லது உறுப்புக்களுக்கு முழுமையான செயலிழப்பு ஏற்பட்டால் காப்பீட்டின் உரிமையாளரின் நியமனப்பட்டவர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ 75,000 ஆகும். விபத்துக் காரணமாக உடல் பாகங்கள் அல்லது உறுப்புகளுக்கு பகுதியாக நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டால் (ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது காலை இழத்தல்) காப்பீட்டு உரிமையாளரின் நியமனப்பட்டவர்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ 37,500 இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
கல்வி உதவித் தொகை பயன்கள்
அதிகப்பட்சமாக பயனாளரின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கிடையே படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு, ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ 100 வீதம் கூடுதலாக சேர்க்கப்பட்ட பயனாக இலவசக் கல்வி உதவித் தொகையைப் பெறலாம். இது அரை ஆண்டு அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 மற்றும் ஜனவரி 1 அன்று செலுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment