# அடிப்படை கற்றல் #UPSCTAMIL
சந்திரயான்-2 நிலாவை ஆராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கப்படும் `சந்திரயான்-2' செயற்கை கோளின் வடிவமைப்பு பணி நிறைவடைந்து விட்டதாக `இஸ்ரோ' தலைவர் கலசவடிவு சிவன்தெரிவித்தார்.
நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.
சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டன.
இப்பணித்திட்டங்களின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார்.
சந்திரயான்-2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான ராக்கெட் (ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள்), நிலவில் தரையிறங்கி சோதனை நடத்துவதற்காக ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும். இது தவிர செயற்கை கோளில் பிற நாடுகளின் சார்பாகவும் கருவிகள் அனுப்பப்படும். அது தொடர்பாக வெளிநாடுகளிடம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் கருவிகளை சுமந்து செல்வதற்காக, இஸ்ரோவுக்கு அவை கட்டணம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேண்ட் ரோவர்
தற்போது, சந்திரயான் -2 செயற்கைகோள் வடிவமைப்பு பணிகள் முடிந்து விட்டன. இதைத் தொடர்ந்து ரஷிய விஞ்ஞானிகளுடன்சேர்ந்து ஒரு கூட்டு ஆய்வை மேற்கொள்ள இருக்கிறோம். அடுத்தபடியாக, செயற்கை கோளின் பாதுகாப்பு அம்சங்களை வடிவமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு முழுவதும் அந்த பணிகள் நடைபெறும்.
அதற்காக, சந்திரயான் -1 கருவிகள் மூலமாக கிடைத்த விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது. அந்த கருவியை ரஷ்ய விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இது தவிர வெளிநாடுகளின் பல்வேறு கருவிகளும் அந்த செயற்கை கோளில் எடுத்துச் செல்லப்படும்.
அதிக வெப்ப கதிரியக்கம்
லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்க செய்வது என்பதை அடையாளம் கண்டு வருகிறோம். சந்திரயான் -1 அனுப்பியுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் அதுபற்றி முடிவு எடுக்கப்படும். நிலவை சுற்றிலும் நிலவும் வெப்ப கதிரியக்கம் குறித்த முக்கியமான தகவலை சந்திரயான் -1, அளித்ததாக கருதுகிறோம்.
அதில் இருந்த `ஸ்டார் சென்சார்' கருவி பழுதானதன் மூலமாக அதை அறிந்து கொண்டோம். எதிர் பார்த்ததை விட அதிக அளவில் வலுவானதாக கதிரியக்கம் உள்ளது. சந்திரயான் -2 செயற்கைகோளில் வெப்ப ஏற்பு கருவி வடிவமைக்கும் போது, அந்த தகவலை கருத்தில் கொள்வோம்.
சில பிரத்யேக இடங்களில் கேமராக்களை பொருத்தும் திறமை நம்மிடம் இருக்கிறது. அதன் மூலமாக ஸ்டீரியோ டைப்பிலான படங்களை பெற முடியும். சமீபத்திய சூரிய கிரகணத்தின் போது, துல்லியமான படங்களை பெற்றதை குறிப்பிடலாம். பெங்களூர் அருகே பையலாலு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வு மையத்தின் மூலமாக நாசாவை விட சிறந்த படங்களை பெற முடிகிறது.
சந்திரயான்-1 செயற்கை கோளில் கருவிகளை அனுப்பி வைத்துள்ள ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கூட, மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. சந்திரயான் -1 மூலமாக, அவர்களிடம் இருப்பதை விட கூடுதலான அத்தியாவசிய தகவல்களை பெற்றிருப்பதாக கூறினர். இனிமேல், இந்திய விஞ்ஞானிகளும் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கூட்டாக அமர்ந்து, சந்திரயான் -1 அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ய இருக்கிறோம்.
ஆங்கிலத்தில் ......
GSLV-F10/Chandrayaan-2 Mission
Chandrayaan-2, India's second mission to the Moon is a totally indigenous mission comprising of an Orbiter, Lander and Rover. After reaching the 100 km lunar orbit, the Lander housing the Rover will separate from the Orbiter. After a controlled descent, the Lander will soft land on the lunar surface at a specified site and deploy a Rover.
The mission will carry a six-wheeled Rover which will move around the landing site in semi-autonomous mode as decided by the ground commands. The instruments on the rover will observe the lunar surface and send back data, which will be useful for analysis of the lunar soil.
The Chandrayaan-2 weighing around 3290 kg and would orbit around the moon and perform the objectives of remote sensing the moon. The payloads will collect scientific information on lunar topography, mineralogy, elemental abundance, lunar exosphere and signatures of hydroxyl and water-ice.
GSLV-F10/Chandrayaan-2 Mission is planned during second half of 2018.
No comments:
Post a Comment