#UPSCTAMIL
பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் 'மரபணு". ஆங்கிலத்தில் இதை ஜீன் என்று அழைக்கிறார்கள்.
:-
ஒரு குழந்தை பிறந்த உடன் அதை பார்ப்பவர்கள் 'அப்பா மாதிரி மூக்கு, அம்மா மாதிரி காது" என்று சொல்லிக்
கேட்டிருக்கலாம். இப்படி அப்பா மாதிரி, அம்மா மாதிரி, தாத்தா மாதிரி ஒரு குழந்தை பிறக்க காரணமாக இருப்பது
ஜீன (மரபணுக்)களே.
ஒரு உயிரினத்துக்கு (மனிதன்அல்லது விலங்கு அல்லது தாவரவகை) தேவையான புரதங்களை உருவாக்கும் தகவல்கள் பதிவு செய்யப் பட்டவை ஜீன் (மரபணுக்)கள் ஆகும். உயிரினம் எப்படி இருக்க வேண்டும். அதன் உடல் அமைப்பு, நிறம், உடலின் ரசாயன மாற்றங்கள் போன்ற தகவல்கள் பதிவானவைதான் ஜீன்கள். அந்த உயிரினத்தின்உணவு பழக்கவழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி, உடலை பாதிக்கும் நோய்கள் விவரம்,அதன் மனநிலை, பழக்கவழக்கம் போன்றவை ஜீன்களில் பதிவாகி இருக்கும் . பல கோடி ஜீன்கள்(மரபணுக்கள்) இணைந்து சங்கிலித் தொடர் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன.
:-
மரபணு வரைபடத்தின் பயன் ?
மனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிறஉயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு,அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், புத்திசாலித்தனம், உடலில் தாக்கும் நோய்கள் போன்றவை அமைகின்றன.
:-
ஒரு மனிதன் (அல்லது உயிரினம்) பிறக்கும் போது ஏற்படும் கோளாறுகள் அல்லது பின்னாளில் அவனுக்கு வரும் நோய்கள் எவை என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள "மரபணு வரைபடங்கள்" உதவுகின்றன. மேலும் இந்த வரைபடம் மூலம் குறைபாடுகள்,நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். எந்த மரபணு குறை உள்ளதோ அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.
:-
இது தவிர மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் செயல்பாடு, திறனை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக ஒருவர் நோஞ்சான் உடம்புடன் இருக்கிறார். அவரால் எந்த காரியத்தையும் திறமையாக செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
:-
அந்த நபரின் மரபணு வரை படத்தை எடுத்து, அதை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்வேகத்தை அதிகப்படுத்தினால் போதும். அந்த நோஞ்சான் பயில்வான் ஆகிவிடுவார். உருண்டு திரண்ட சதைப்பற்றுடன் அவரது உடல் அமைப்பு மாறிவிடும். ஒரு பலசாலி போல அவரால் செயல்பட முடியும்.
:-
இதுபோன்ற மருத்துவ அதிசயங்களை வருங்காலத்தில்செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். இதை ஒரு 'எலி சோதனை" மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த சோதனைஆராய்ச்சியின் மூலம் உருவானதுதான் ''மராத்தான் எலி".
:-
மருத்துவ உலகின் அதிசயமாக கருதப்படும் 'மராத்தான் எலி" பற்றிய தகவல்கள் வருமாறு:-
அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு வரைபடம் மூலம் புதிய சிகிச்சை முறைகள் , நவீன மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
:-
நவீன வளர்ச்சிக்கு ஏற்ப 21-ம் நூற்றாண்டில் புதிய நோய்களும், தொற்று நோய்களும் மனித இனத்தை தாக்குகின்றன. சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுதல், தண்ணீர், உணவில் ஏற்பட்டுள்ள சத்துக் குறைவு, நாகரீக மான வாழ்க்கை முறை போன்றவற்றால் மனித இனம் பாதிக்கப் பட்டுள்ளது.
:-
இன்றைய குழந்தைகளில் பலர் பிறக்கும் போதே 'குண்டு குழந்தை"யாக உள்ளனர். வளர வளர உடல் எடை அதிகரித்து 'சதைக்குன்று" போல மாறி விடுகின்றனர் . மன இறுக்கம்,வாழ்க்கை சவால்கள்,அதிக ஆசை, தேவைக்கு அதிகமான உணவு... போன்றவை காரணமாக சிறிய வயதிலேயே மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எய்ட்ஸ், புற்று நோய், மாரடைப்பு, நரம்பு, மூளை பாதிப்பு நோய் போன்றவை காரணமாக மனித இனம் பெரிதும்பாதிக்கப்படுகிறது.
:-
இத்தகைய நோய் தொந்தரவு பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ என்ன சிகிச்சை முறை, அல்லது மருந்து தேவை என்பது குறித்து அமெரிக்காவின் சான்டிகோ நகரில் உள்ள சால்க் இன்ஸ்டிடிய+ட் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான ரோனால்டு இவான்ஸ் தலைமை யிலான குழு இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.
:-
மரபணு சிகிச்சை மூலம் உடல் பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக சாதாரண எலி ஒன்றை தேர்ந்தெடுத்தனர். அது கருவில் இருக்கும் போதே 'மரபணு சிகிச்சை" அளிக்கப்பட்டது. உடலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் மரபணுவின் பி.பி.ஏ.ஆர். டெல்டா (PPயுசு-னுநடவய) என்பதை மாற்றி அமைத்தனர்.
:-
அதன் பிறகு வளர வளர அந்த எலியின் தன்மை, உடல் எடை, ஓடும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தனர். சாதாரண எலி தொடர்ந்து 900 மீட்டர் (2950 அடி) ஓடினால் மரபணு சிகிச்சை பெற்ற எலி 1800 மீட்டர் (5,900 அடி) தூரம் தொடர்ந்து நிற்காமல் ஓடியது. இந்த ஓட்ட சோதனைக்காக விசேஷ ஓடுதளம் (வுசநயன அடைட) வடிவமைக்கப்பட்டது.
:-
சாதாரண எலியை விட இரண்டு மடங்கு சக்தியுடன் இரண்டு மடங்கு தூரம் ஓடியதால் இந்த எலிக்கு 'மராத்தான் எலி" என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினார்கள்.
மேலும் சோதனையின் போது சில நாட்கள் இந்த எலிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் 'சும்மா" உட்கார வைத்து 'தீனி" போட்டனர். கொழுப்பு சத்து நிறைந்த உணவு தாராளமாக கொடுக்கப்பட்டது. வயிறு புடைக்க தின்ற போதிலும் எலி 'குண்டு" ஆகவில்லை. அழகிய உடல் தோற்றத்துடன்தான் இருந்தது.
:-
மேலும் சாதாரண எலியை விட புத்திசாலித்தனம் கூடுதலாகவும் கற்றுக் கொடுப்பதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் திறன் கொண்டதாகவும் மராத்தான் எலி இருந்தது.

No comments:
Post a Comment