மருத்துவக் காப்பீடு திட்டம்: போதாமைகளைக் களைய வேண்டும் அரசு!

GENERAL STUDIES- II:


TOPIC: 
Issues related to health


Expected Question for UPSC  exam (Tamil): 


What is Jan Arokya Yojana?Removing the Loopholes in the Insurance Scheme We can Achieve Free Medical Facility to All.Analyze.

ஜன் ஆரோக்ய யோஜனா என்றால் என்ன?காப்பிட்டு முறைகளில் உள்ள போதாமைகளை கலைவதன் மூலம் அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கை அடைய முடியும் பகுப்பாய்வு செய்.




கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  


Analyze

பகுப்பாய்வு செய்



பகுப்பாய்வு செய்வதற்கு கேட்கும்போது , கேள்வியை பகுதி பகுதியாக பிரித்து இயல்பைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.




பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா என்றால் என்ன?



மருத்துவக் காப்பீடு திட்டம்: போதாமைகளைக் களைய வேண்டும் அரசு!


நன்றி: தமிழ் ஹிந்து 


நாட்டின் 40% மக்களுக்கு கட்டணமற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வகைசெய்யும் ‘ஆயுஷ்மான்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் பிரதமர் மோடி. ஏழை மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் திட்டமான இந்தத் திட்டம் வரவேற்புக்குரிய ஒன்று. எனினும், போதுமான அளவில் நிதி ஒதுக்காததும், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தாததும், ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பாஜக அரசு இதை
அறிமுகப்படுத்தியிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.


Image result for JAN AROGYA YOJANA


இத்திட்டத்தின்கீழ், சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கியிருக்கும் 10.74 கோடிக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வசதியளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. ஆனால், நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நடப்பு ஆண்டில் இத்திட்டத்துக்கு வெறும் ரூ.2,000 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருக் கிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மருத்துவத் தேவைக்கு இந்தத் தொகை உத்தரவாதம் வழங்க முடியுமா எனும் கேள்வி இயல்பானது. சில மாநிலங்கள் இன்னும் இத்திட்டத்தின் கீழ் இணையாத நிலையில் இந்தத் திட்டம் எப்படி முழுப் பலனைத் தரும் என்பது இன்னொரு கேள்வி.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி செலவைக் குறைத்து மருத்துவ சேவைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆனால், இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டணங்களைப் பல மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. லாப நோக்கம் கொண்ட மருத்துவமனைகள், இந்தக் கட்டணங்கள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை என்று ஒதுங்குகின்றன. பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், மாநில அரசுகளின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம், 2010-ஐப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். மருத்துவ வசதிகளைத் தரம் உயர்த்துவது பற்றியும் சிகிச்சைகளுக்கு நியாயமான கட்டணங்களை வசூலிப்பது பற்றியும் விரிவாகப் பேசும் சட்டம் அது. தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகள், அரசு மருத்துவமனைகளிலிருந்து சில அத்தியாவசியமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்குமா என்பதும் சந்தேகம்தான்.
அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் மருத்துவமனைகளைத் தவிர்த்துவிட்டு, நோய்த் தடுப்பு முறைகளிலும் ஆரம்ப சுகாதாரத்திலும் அரசு தீவிர கவனம் செலுத்துவது அவசியம். அரசு மருத்துவமனைகளின் வாயிலாகவே அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கை எட்ட முடியும். மக்களின் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டிருக்கும் ஓர் அரசு செய்ய வேண்டியது அதைத்தான்!



மேலும் அறிய ஆங்கிலம் 




மருத்தவ காப்பீடு திட்டம் ‘மோதி கேர்’ - சுகாதார துறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருமா?


நன்றி : BBC தமிழ் 



இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தின் போது ஹரியானா கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்தார் கரிஷ்மா. இந்தியாவின் புதிய சுகாதார காப்பீடு திட்டத்தின் முதல் பயனாளி கரிஷ்மாவின் அம்மா புஷ்பாதான்.

ஹரியானாவில் புதிய காப்பீடு திட்டத்தின் மாதிரி திட்டத்தில் புஷ்பா உட்பட பலர் பதிவு செய்திருந்தனர்.
புஷ்பா, "எனது முதல் குழந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்தது. எங்களுக்கு மருத்துவத்திற்கு மட்டும் ஒன்றரை லட்சம் செலவானது. இந்த முறை இந்த காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தேன். அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றேன். அதனால் எங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகவில்லை" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் இலவசம்தான் என்றாலும், மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுப்பதற்காக அனுமதிக்கப்படுபவர்கள் மருந்து மாத்திரை, போக்குவரத்து போன்ற விஷயங்களுக்காக பணம் செலவிட நேரிடும்.
ஆனால், இந்த திட்டத்தின் கீழ் புஷ்பா சிறுதொகை கூட செலவிட தேவையில்லை. மருத்துவமனை மாநில அரசு மோதிகேர் பொதுநிதியிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை திரும்ப பெற்றுக் கொள்ளும்.
"நாங்கள் மருத்துவ பயனாளிகள் குறித்த தகவலகளை அதற்கான தளத்தில் பதிவேற்றம் செய்த உடன், எங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். ஆயுஷ்மான் பாரத் குழுவும் எங்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தனர்.இது ஆண்டுக்கொரு முறை அரசு நிதி ஒதுக்கீடு செய்வதுபோல அல்ல." என்கிறார் கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் சுரேந்தர் காஷ்யப்.
இந்திய உச்ச நீதிமன்றம் ஆஸ்பெட்டாஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் உடல்நிலை தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை 1995 ஆம் ஆண்டு வழங்கியது. மருத்துவசதி என்பது ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமை என்று விவரித்தது அந்தத் தீர்ப்பு.
ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா அந்த கனவை நிறைவேற்றி இருக்கிறது. அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்திருக்கிறது.

இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜானா, சுருக்கமாக 'மோதி கேர்' திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக மக்கள் தொகையில் 40 சதவீத பேர் பலனடைவார்கள்.

காப்பீடு திட்டம்

இந்த நாட்டின் வறுமையில் வாழும் ஏறத்தாழ 50 கோடி பேர் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த காப்பீடு திட்டத்தால் பயனடைய தகுதி உடையவர்கள். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பின் படி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் 8000 மருத்துவமனைகள் செயல்படுத்துகிறது. பயனாளிகள் குறித்த அனைத்து தகவல்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டு இந்த மருத்துவமனைகளுடன் பகிரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் அரசாங்கம் 'ஆயுஷ்மான் கேந்திராஸ்' மையத்தை திறந்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அடையாள அட்டையுடன் இந்த மையங்களுக்கு சென்று உதவி கோரலாம். அங்குள்ள அலுவலகர்கள் இவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனுடைய தகுதி உள்ளவர்களா என சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்வார்கள்.

யார் இந்த காப்பீடு திட்டத்திற்கு நிதி அளிக்கிறார்கள்?

மாநில அரசாங்கம் இந்த திட்டத்திற்காக லாபநோக்கமற்ற அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறது. தங்களது பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை இந்த அறக்கட்டளைக்கு அளிக்கிறது. மத்திய அரசும் 60 சதவீத நிதியை வழங்குகிறது.
இன்னொரு மாதிரியும் இருக்கிறது. அதில் மாநில அரசு தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கலாம்.


கள நிலவரம் என்ன?

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு 2.65 லட்சம் மருத்துவ படுக்கைகள் கிடைக்க வழிவகை செய்கிறது என்கிறது அரசு. ஆனால், உண்மையில் களநிலவரம் அவ்வாறாக இருக்கிறதா?
கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிம்ன் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜகதீஷ்,"இருபது சதவீதம் வரை மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரலாம் என கணிக்கிறோம். மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவார்கள். மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் போதுமான அளவு இல்லை" என்கிறார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி 11, 082 நபருக்கு ஒரு அலோபதி மருத்துவர், 1844 பேருக்கு ஒரு மருத்துவ படுக்கை, 55, 591 பேருக்கு ஒரு அரசு மருத்துவமனை என்ற அளவிலேயே உள்ளது என்கிறார்.

பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள். ஏழைகள் இந்த மருத்துவமனைகளுக்கு செல்வதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயம்.
இதுவரை 4000 தனியார் மருத்துவமனைகள் இந்த 'மோதிகேர்' திட்டத்திற்குள் வர ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைக்காக அரசாங்கம் உறுதி செய்துள்ள தொகை குறைவாக இருப்பதாக கூறி இந்த திட்டத்தில் இணையவில்லை.
தனியார் மருத்துவமனைகளை இந்த திட்டத்திற்குள் கொண்டுவர கட்டணத்தை திருத்தி அமைக்க தயாராக இருப்பதாக கூறுகிறது அரசாங்கம்.


பிற நாடுகளின் நடைமுறை என்ன?

 ஒரே அடிப்படையான வித்தியாசம் மக்கள் தொகை. எடுத்துக்காட்டாக பிரிட்டன் போன்ற நாடுகளில் தேசிய சுகாதார சேவைகளில் அனைத்து மக்களும் அங்கமாக இருப்பார்கள். பொது மருத்துவமனைகளில் பெரும்பாலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். ஆனால் மோதிகேர், இந்தியாவில் சுகாதார சேவைகளை பெறக்கூடிய வசதியற்றவர்களுக்காக தொடங்கப்பட்டது.



அமெரிக்காவின் ஒபாமா கேரும், இந்தியாவின் மோதி கேரும்

மெரிக்காவின் ஒபாமாகேர் அனைத்து குடிமக்களுக்கும் காப்பீட்டை கட்டாயமாக்கியது. பின் குடிமக்கள் கட்டும் காப்பீட்டு தொகைக்கு மானியம் வழங்கியது.
தற்போது டிரம்பின் நிர்வாகத்தில் காப்பீட்டு தொகைகள் குறித்து பல அரசியல் விவாதங்கள் நிகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன?

 பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சில இன்னும் இந்த திட்டத்தில் சேரவில்லை அவைகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவில்லை.
மோசடி மற்றும் தவறாக பயன்படுத்துவதை கண்காணிப்பது இந்த திட்டத்தின் இதில் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
 தவறுகள் நடக்காமல் இருக்க அரசாங்கம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், கட்டண ரசீதுகள் மற்றும் பயன்பாட்டாளர்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்கும் கள ஊழியர்களையும் நம்புயுள்ளது.
"பயன்பாட்டாளர்களை அறிய எங்களிடம் வலுவான கணினி தொழில்நுட்பம் உள்ளது. எனவே யார் வேண்டுமானாலும் இந்த சேவையை தவறாக பெறலாம் என்பதெல்லாம் கிடையாது." என ஆயுஷ்மான் பாரத்தின் நிர்வாக தலைவர் இந்து பூஷன் பிபிசியிடம் தெரிவித்தார்

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN