#அடிப்படை கற்றல்
பொது அறை அலது கட்டிடத்தில் எந்த ஒரு அறிவுப்பூர்வமான விஷயமும் இல்லாமல் பணம் வைத்து விளையாடுவது கேஸினோ
விளையாட்டாகும். இன்றைய இணையதள உலகில் இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் வந்து விட்டது. எனவே ஒரு இடத்திற்குச் சென்று விளையாடுவதை ஆன்லைனிலேயே விளையாடலாம் என்று கூறுகின்றனர். அதே நேரம் இந்தியாவில் சில இடங்களைத் தவிரப் பிற இடங்களில் கேஸினோ விளையாடத் தடை உள்ளது. எனவே இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆன்லைன் கேஸினோ சட்டப்பூர்வமானதா?
இந்தியாவில் பொது இடத்தில் பெட்டிங் அல்லது சூதாட்டம் விளையாடுவது சட்டப்பூர்வமானது இல்லை. பொதுச் சுதாட்ட சட்டத்தின்படி இந்தியாவில் அனைத்து விதமான சூதாட்டமும் சட்டப்பூர்வமானது அல்லது. ஆனால் அதில் ஆன்லைன் பெட்டிங் இன்னும் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவில் கேஸினோ விளையாட எங்கு எல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளது?
கூடுதல் சூதாட்ட வருமான வரிச் சட்டம் 2000-ம் கீழ் சில மாநிலங்களில் சூதாட்டம் சட்ட ரீதியாகச் செயல்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெட் வைத்தல் மற்றும் கேஸினோ விளையாடுதல் போன்றவற்றுக்குச் சிக்கிம் அரசு அனுமதி அளிக்கிறது.கோவாவில் சட்டரீதியான கேஸினோக்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் 13 மாநிலங்களில் லாட்டிரியும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டப்பூர்வமாக இயங்கி வரும் கேஸினோக்கள் சிக்கிமில் கேஸினோ சிக்கும் மற்றும் கேஸினோ மஹ்ஜாங் என்று இரண்டு உள்ளன. கோவாவில் 10 கேஸினோக்கள் உள்ளன. அதில் 4 கேஸினோக்கள் கப்பல்களில் செயல்படுபவனவாகும். தமன் மற்றும் தியூவை பொருத்தவரையில் 5 நட்சத்திர ஓட்டல்களில் கேஸினோ விளையாட்டுக்களை நடத்திக்கொள்ளலாம்
அபராதம் எவ்வளவும்?
இந்தியாவில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவது குறித்து முறையான சட்டங்கள் இல்லை என்றாலும் 2009-ம் ஆண்டு ம் முதல் 90,000 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது
விரிச்சுவல் கேஸினோ என்றால் என்ன?
ஆன்லைன் கேஸினோக்கள் தான் விரிச்சுவல் கேஸினோ என்று அழைக்கப்படுகின்றன. பொது இடத்தில் சூதாட்டம் ஆட தடை உள்ளதில் இருந்து தப்பிக்கவே இந்த விரிச்சுவல் சூதாட்ட முறை பயன்பாட்டிற்கு வந்தது.
ஆன்லைன் போக்கர் விளையாட்டு சட்டப்பூர்வமானதா?
சூதாட்டம் மற்றும் கேஸினோ உள்ளிட்டவை இந்தியாவில் சட்டப்பூர்வமானது இல்லை. அதே நேரம் அறிவுப்பூர்வமான விளையாட்டுகளுக்கு அந்த விதி பொருந்தாது. எனவே போக்கரினை மகிழ்சிக்காக விளையாடும் போது அது சட்டப்பூர்வமானதாக உள்ளது.
இந்தியாவில் ரம்மி விளையாட்டு சட்டப்பூர்வமானதா?
அசல் பணத்திற்காக இந்தியாவில் ரம்மி விளையாடுவது சட்டப்பூர்வமானதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்தியாவில் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் சட்டப்பூர்வமானது. ரம்மின் திறன் அடிப்படையிலான விளையாடு பட்டியலில் உள்ளது. எனவே இது சூதாட்டம் கிடையாது.
தமிழகத்தின் நிலை என்ன?
தமிழகத்தில் கோழி சண்டை, பறவைகள் சண்டை உள்ளிட்டவை மூல சூதாட்டங்கள் நடைபெற்று வந்தது. தற்போது இதுவே பல விதிமுறைகளுக்கு உட்பட்டுக் காவல் துறை அனுமதியுடன் சில இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டிலும் சூதாட்டத்திற்குத் தடை உள்ளது.
டெல்லி
டெல்லியில் ஆன்லைன் கேஸினோ மூலமாகத் திறன் அடிப்படையில் இல்லாமல் வாய்ப்புகள் அடிப்படையில் சூதாட்டம் நடைபெறுவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அப்படித் தான் 14 நபர்களை ஞாயிற்றுக்கிழமை 14 நபர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment