முத்தலாக் என்றால் என்ன?



#அடிப்படை கற்றல்


முத்தலாக்




முத்தலாக் (Triple Talaq) என்பது இந்திய இஸ்லாமிய ஆண்கள் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை ஆகும். மூன்று முறை தலாக்எனும் சொல்லை மனைவியிடம்
தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இது சர்ச்சைக்குரிய விசயமாகவும் பேசுபொருளாகவும் இந்தியாவில் உள்ளது. இதன் மூலம் பாலினச் சமத்துவம் பாதிக்கப்படுகிறது எனவும், நீதி மறுக்கப்படுகிறது எனவும், மனித உரிமை மீறல் எனவும் கருத்துகள் உள்ளன. இந்திய நடுவண் அரசும், உச்ச நீதி மன்றமும் இது தொடர்பாக கருத்துகளைக் கொண்டுள்ளன. இதன் காரணமாகவே பொது உரிமையியல் சட்டம்கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.



வழிமுறை

முத்தலாக் என்பது இந்திய இஸ்லாமிய சமூகத்தில் பொதுவாகக் கடைபிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். இதன்படி ஓர் இஸ்லாமிய ஆண் தனது மனைவியிடம் தலாக் (விவாகரத்து என்பதற்கான அரபிச் சொல்) எனும் அரேபிய வார்த்தையை மூன்று முறை தெரிவிப்பதின் மூலம் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றவராகிவிடுவார். இவ்வழிமுறை 1400 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது. தலாக் என்பதை உச்சரிப்பின் மூலமோ, எழுத்தின் மூலமாகவோ சமீப காலங்களில் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தெரிவிப்பதன் மூலம் விவாகரத்து செய்யப்படுகிறது. இதில் இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்துச் செய்வதற்கான காரணத்தைத் தெரிவிப்பது அவசியமல்ல. இவ்வாறு தெரிவிக்கும் போது ஒவ்வொரு தலாக்சொல்வற்கு இடையே மனைவியின் மாதவிடாய் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் ஒரே சமயத்திலேயே மூன்று முறை தலாக் எனச் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கமே வழக்கத்தில் உள்ளது. மூன்று முறை தலாக் சொல்லி முடித்த பின்னர் அவ்விவாகரத்தை திரும்பப் பெறவோ அல்லது செல்லாததாக்கவோ முடியாது. இவ்விவாகரத்திற்குப் பின்னரும் மனைவி தன்னை விவாகரத்து செய்த கணவருடன் இணைந்து வாழ விரும்பினால், பெண் நிக்காஹ் ஹலாலா என்ற முறைப்படி வேறு ஒருவரை மணந்து உடலுறவு கொண்டபின்னர் அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்ற பின்னரே முதலாமவருடன் இணைந்து வாழ இயலும்.





எதிர்ப்பு





முத்தலாக் முறைக்கு எதிராக இஸ்லாமியப் பெண்கள் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனப் பிரிவு 14 -ற்கு முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 




முத்தலாக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்


BBC TAMIL

உடனடி முத்தலாக் என்றால் என்ன?

"உடனடி முத்தலாக்" அல்லது "தலாக்-அல்-பித்தத்" என்பது மூன்று முறை தங்கள் மனைவியிடம் 'தலாக்' என்று ஒரே நேரத்தில் சொல்லி ஆண்கள் விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் இஸ்லாமிய வழக்கமாகும்.
இதை நேரடியாக சொல்வது, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பவது என எப்படியும் செய்யலாம். இந்த வழக்கத்திற்கு எதிராக பல இஸ்லாமிய பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த பின் அது செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள சுன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே இந்த வழக்கம் பரவலாக இருந்தது. எனினும், சில சுன்னி இஸ்லாமியர்கள் இதை தற்போது செல்லுபடியாவதாக கருதுவதில்லை. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யப்படும் பெண்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை எதுவும் இல்லை.
ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமியர்களே இந்தியாவில் இதை பின்பற்றுவதாக ஒரு இணையதள கணக்கெடுப்பில் தெரியவந்தது.

இது பற்றி குரான் என்ன சொல்கிறது ?

"தலாக்-அல்-அசான்" மூலம் ஓர் ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதானால், ஒரு முறை தலாக் சொல்வதற்கும் மறுமுறை சொல்வதற்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இது அவர்களின் மன மாற்றத்திற்கு வழங்கப்படும் கால அவகாசம்.
இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து கேட்பது 'கூலா' எனப்படும்.
விவாகரத்து கேட்கும் மனைவிக்கு கணவன் பராமரிப்பு செலவுக்கு பணம் கொடுக்க மறுத்தால், அம்மனைவி 'காசி' அல்லது ஷரியா நீதிமன்றத்துக்கு செல்லலாம். அங்கு வழங்கப்படும் விவாகரத்து 'ஃபஸ்க்-ஈ-நிக்கா' எனப்படும்.
திருமண ஒப்பந்தத்திலேயே தலாக் எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் குறிப்பிடலாம். இது 'தஃப்வீத்-ஈ-தலாக்' எனப்படும். அதன் பொருள் மனைவிகளுக்கு தலாக் உரிமையை மாற்றுவதாகும்.

உடனடி முத்தலாக் தடை மசோதாவுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

இஸ்லாமிய பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) சட்டம், கால இடைவெளி இன்றி உடனடியாக முத்தலாக் சொன்னால், அதைச் சொல்லும் இஸ்லாமிய கணவன் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என்கிறது.
வழக்குத் தொடுக்கும் மனைவிக்கு, சிறையில் இருக்கும் காலகட்டத்தில் பராமரிப்பும் வழங்க வேண்டும் என்றும் அச்சட்டம் சொல்கிறது.
ஆனால், இந்த சரத்து தங்களுக்கு உதவாது என்றும் தங்கள் திருமண வாழ்வு நீடிக்க ஏதாவது வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் சில இஸ்லாமிய பெண்கள் உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
கணவனை சிறையில் அடைத்தால், திருமண வாழ்வு நீடிக்காது என்றும், சிறையில் இருக்கும்போது அவரால் பராமரிப்பு செலவுக்கு பணம் தர முடியாது என்பதால் மனைவியும் குழந்தைகளும் இன்னலுக்கு ஆளாகவே நேரிடும் என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.




No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN