வங்கிகளை சூறையாடும் வாராக்கடன் பிரச்னை!

GENERAL STUDIES- III:


TOPIC: 
Indian economy – growth and development


Expected Question for UPSC  exam (Tamil): 

Non-performing assets have become a major challenge to the country’s banking system. To combat these, what has government done? Will these measures be effective? Examine.


வரா கடன் வங்கிகளுக்கு  பெரும் சவாலாக மாறிவிட்டன.இதை குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை ? இந்த நடவடிக்கைகள் திறன்மிக்கதாக உள்ளனவா?ஆராய்க 


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

Examine

ஆய்வு செய்



இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்


contact mail ID  tnpscprime@gmail.com

வராக் கடன்



வராக் கடன் அல்லது அறவே வசூலிக்க முடியாத கடன் (Bad Debt) என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கிய கடனை, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க இயலாத கடன் ஆகும். கணக்கீகீடு அல்லது நிதியியலில் இது கடன்
பெற்றவர்களிடமிருந்து நீண்டகாலமாக அறவிடமுடியாமல் போன கடன்களின் ஒரு பகுதியைக் குறிக்கும். அவ்வாறு வசூலிக்க இயலாத வராக் கடன் தொகைகளை கணக்கீட்டுப் பதிவின்போது தொடர்புடைய கடனாளியின் பேரேட்டுக்கணக்கு பதிவு அழிக்கப்படுவதுடன் அந்நிதி நிறுவனம் அக்கடனைத் தள்ளுபடி செய்து அவ்வாண்டின் வணிகத்தில் ஏற்பட்ட நட்டமாக நட்டக் கணக்கில் தாக்கல் செய்வர். ஒரு நிதி நிறுவனத்திற்கு வரவேண்டிய மொத்தக் கடன் தொகையில், வராக் கடன் விகிதம் இரண்டு விழுக்காட்டிற்கு மேல் இருப்பின் அந்நிறுவனம் நிதி மேலாண்மையில் தரம் குறைந்த நிறுவனமாக, கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பர்.


வாராக் கடனின் போக்கு



இந்திய வங்கிகளை பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள் என்று மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்த்தால் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த நான்காண்டுகளில் வாராக்கடன் அளவு பொதுத் துறை வங்கிகளில் 1.5 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகவும், தனியார் துறையில் 0.3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாகவும், வெளிநாட்டு வங்கிகளில் 0.4% முதல் 0.9% ஆகவும் இருக்கிறது. 2012-ல் வாராக் கடன் விழுக்காடு பொதுத்துறை வங்கிகளுக்கும் மற்றவைக்கும் உள்ள வேறுபாடு 1 சதவீதத்தைவிட குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று வாராக் கடன் விழுக்காடு இடைவெளி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உள்ளது.



வராக் கடன்களுக்கான காரணங்கள்


வியாபார நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதிலும், கடனை தள்ளுபடி செய்வதிலும், கடன் சீரமைப்பு செய்வதிலும், அரசியல் தலையீடுகளும், லஞ்சமும் இருப்பதாக பல நிகழ்வுகள், கிங்பிஷர் விமான நிறுவனம் வரை, எடுத்துக்காட்டுகளாக உள்ளது.


வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன் வியாபாரத்தின் எதிர்கால போக்கு, வியாபார நிறுவனத்தின் சொத்து, வியாபாரத்துறையில் உள்ள இடர்கள் என பலவற்றை ஆராய்ந்து கடன் கொடுக்கவேண்டும். பெரிய தொகை கடன்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் ஒன்றாக இணைந்து கடன் வழங்க வேண்டும். இதனால் பல வங்கிகள் ஒரு வணிகத்தின் தன்மையை பற்றி ஆராயும்போது அதில் உள்ள சிக்கல்கள் தெரிவதுடன், கடன் கொடுப்பதில் உள்ள இடர்களும் நீக்க வேண்டும்.


வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன், வியாபார நிறுவனம் குறித்த ஆய்வுகளை செய்யத் தவறுகிறது. கடன் வாங்கிய நிறுவனங்களும் கடனை அடைக்காமல் வருவாயை வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, வங்கிகளை ஏமாற்றிவிடுகிறது. இதற்கு அரசியல் தலையீடும், வங்கி அதிகாரிகளும் காரணம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.


பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன்


2002-03 முதல் இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. வளரும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அதிக லாபத்தை எதிர்பார்த்து, பெரிய அளவில் முதலீடுகள் வரத்தொடங்கின. இதே காலத்தில் அரசின் முதலீட்டு செலவு குறைய ஆரம்பித்தது. இந்திய பொருளாதாரத்தில் தனியார் துறை பங்களிப்பு உயரும் போது, இந்திய பொருளாதாரமும் வேகமாகவே வளரத் தொடங்கியது. பெரும் பகுதி நிதி, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் ஆகும்.


2008-ல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு பிறகு பொருளாதாரத்துடன் வியாபார நிறுவனங்களின் நிதி வரத்து குறைய ஆரம்பித்தது. 2011 முதல் வங்கிகளின் வராக் கடன் உயர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து வியாபார நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மேலாண்மையை மாற்றுவது, கடனை மறுசீரமைத்து கூடுதல் கடனுடன் அதிக கால அவகாசம் கொடுப்பது என்ற பல வழிகளை கையாண்டன. இந்த மாற்று முறைகள் வராக் கடன் அளவினை குறைக்கவில்லை.
வராக் கடனுக்கான பொருளாதார காரணங்கள்


2012 முதல் பொது துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு உயர்வதற்கு பொருளாதார மந்தநிலை ஒரு முக்கிய காரணம் என்பதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை 2016-17 அழுத்தமாக கூறுகிறது. கிரெடிட் சூயிஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல நிறுவனங்களின் வரிக்கு முந்தைய வருவாயானது அந்நிறுவனங்களின் வட்டியை செலுத்தக்கூட போதவில்லை என்று கூறுகின்றது. எனவே வட்டியை செலுத்தும் அளவிற்குகூட போதுமான விற்பனை வரவை நிறுவனங்கள் பெறமுடியவில்லை என்பதால் வராக் கடன் உயர்கிறது.


வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் இருக்கின்றன. குறிப்பாக மின்சார உற்பத்தி துறையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி வரத்து பெரிய சரிவை சந்தித்துள்ளன. மின்சார உற்பத்தி குறைந்ததுடன், மின்சாரத்தின் விலையும் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.4 ல் இருந்து ரூ. 2.50 ஆகக் குறைந்துள்ளது. நீண்ட கால ஒப்பந்தம் உள்ள மின்சார நிறுவனங்கள் மட்டுமே முழுமையான திறனுடன் மின்சார உற்பத்தி செய்கின்றன. அதிக போட்டியினால் ஏற்பட்ட விலை குறைப்பு என்பதால் தொலை தொடர்பு நிறுவனங்களும் நிதி சிக்கலை சந்திக்கின்றன. கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்களிலும் இது போன்ற நிதி சிக்கல் நீடிக்கின்றது.


பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் செயல் திறன், தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடன் அளித்தல், வட்டி மற்றும் கடனை திரும்பப் பெறுவதில் வங்கி அதிகாரிகள் காட்டிய மெத்தனம், இவை எல்லாவற்றிலும் இருந்து வந்த அரசியல் தலையீடு மற்றும் லஞ்சம் என்று பார்க்கும் போது, வாராக் கடனை திரும்பப் பெறுவதற்கு ஒவ்வொரு கடனையும் தனித்தனியாக ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
வாராக் கடனுக்கு தீர்வுகள்


இந்திய ரிசர்வ் வங்கி இதற்காக பல வழிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கையாண்டுள்ளது. எட்டு முக்கிய அடிப்படை மற்றும் கட்டுமான தொழில்களில் ஒவ்வொரு நிறுவனத்தின் வராக் கடனை 25 ஆண்டு நீண்ட காலக் கடனாக மாற்றி சிலவற்றிற்கு கூடுதல் கடனும் கொடுத்தன. இவற்றால் நிறுவனங்களின் வட்டிச் செலவு கூடி வராக் கடன் பிரச்சினையை பெரிதாக்கியது. அடுத்து சொத்து மீட்பு நிறுவனங்கள் (Asset Reconstruction Company - ARC). இதில் வங்கிகளே முதலீடு செய்தன. நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய கடனை சொத்து மீட்பு நிறுவனங்களே வழங்கும். அதன் பிறகு கடன் கொடுக்கவேண்டிய நிறுவனங்களில் சில மாற்றங்களை செய்து அவற்றின் பங்குகளை விற்று தங்கள் வருவாயைத் தேடிக்கொள்ளும். இதில் உள்ள சிக்கல்களை அறிந்த சொத்து மீட்பு நிறுவனங்கள், கடன் தொகை முழுவதையும் கொடுக்காமல் மிகக் குறைந்த தொகையை கொடுக்க முன்வந்தன. இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஓரளவுக்கு மட்டுமே குறையும் என்பதால் சொத்து மீட்பு நிறுவனங்களிடம் வாராக் கடனை கொடுக்க வங்கிகள் முன்வரவில்லை.
உத்திசார் கடன் மறு சீரமைப்பு (Strategic Debt Restructuring) திட்டம்


உத்திசார் கடன் மறு சீரமைப்பு திட்டத்தில் நிறுவனங்களின் கடனை அந்நிறுவனத்தில் பங்குகளாக மாற்றி அதனை புதிய முதலீட்டாளர்களிடம் விற்கும் முயற்சியும் நடைபெறுகிறது. புதிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தை செம்மையாக நடத்த முன்வருவார்கள் என்ற கருத்து இருந்தது. அதிக கடன் உடைய நிறுவனங்களின் பங்குகளை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் இந்த திட்டமும் தோல்வி அடைந்தது.



இந்தியாவில் வராக் கடன்


இந்திய பொதுத்துறை வங்கிகளின் பலவற்றில் வராக் கடன் விழுக்காடு அதிகரித்துள்ளது. பல தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கிய ஆயிரக்கணக்கான கோடி இந்திய உரூபாய் கடன் தொகை வசூலிக்க இயலாத காரணத்தால் டிசம்பர் 2016-வரை வங்கிகளின் மொத்த வராக் கடன், 6 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு வரவேண்டிய கடன் தொகை மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரம் கோடி.


#தொடர்புடைய கேள்விகள்


திறமையான பொதுத்துறையும் ஆக்ரோஷமான தனியார்துறையும் சமூக நீதியுடன் இணைந்த வளர்ச்சியை அடைய உதவும் என வாதிடுகின்றனர்.இந்த கூற்றின் அடிப்படையில் சமீபத்திய வங்கி இணைப்பு முடிவு சரியானது என நினைக்கிறீர்களா? விமர்சன ரீதியான கருத்து தெரிவிக்கவும்.



வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலிலின்படி, கீழ்கண்ட தனியார் நிறுவனங்களின் வராக் கடன் தொகைகள் விவரம்:
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
எலக்ட்ரோதெர்ம் இந்தியா - ரூ 2,211 கோடி
ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி


மேலும் 400 தனியார் நிறுவனங்கள், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளிடருந்து வாங்கிய வசூலாகாத வராக் கடன் தொகை இந்திய ரூபாய் 73,000 கோடியாக உள்ளது.


வராக் கடனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையை களைய நிதியமைச்சகம், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நபர்களின் மீது அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க அனுமதியளித்துள்ளது.






வங்கிகளை சூறையாடும் வாராக்கடன் பிரச்னை!

நன்றி : தமிழ் ஹிந்து 

எஸ். ராமன்


அரசு வங்கிகளின் வாராக்கடன்கள், அளவுக்கு அதிகமாக வளர்ந்து நிற்பது, எளிதாக ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு பொருளாதார நிகழ்வு இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு, ரிசர்வ் வங்கியும் மேற்கொள்ளும் என்று வங்கி நிர்வாகிகளுடனான சமீபத்திய சந்திப்பிற்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தன் கருத்தைக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.அரசு வங்கி கள் வழங்கியுள்ள மொத்த கடன் தொகையில், வாராக்கடன்களின் அளவு, ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில், 5.2 சதவீதத்திலிருந்து, 6 சதவீதத்திற்கு மேல் (சுமார் 3.14 கோடி ரூபாய்) அளவு அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


சீரமைக்கப்பட்ட கடன்களை (Restructured loans) கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்த கடன் தொகையில், 11.1 சதவீத அளவு வரை (சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்) பழுதடைந்த கடன்கள் (Stressed loans) வளர்ந்துள்ளன என்ற கூடுதல் விவரங்களும் வெளியாகி, பொருளாதார வட்டாரங் களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு, இரும்பு, ஜவுளி, நிலக்கரி உள்ளிட்ட சுரங்கம் மற்றும் விமான போக்கு வரத்துத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் பெருமளவில் பழுதடைந்துள்ளன.


வாராக்கடன்களை வசூலிக்க, வங்கிகளுக்கு போதிய அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருக் கின்றன. அவற்றை, வங்கிகள் முழுமையாகப் பயன்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இம்மாதிரி கருத்துகளுக்கும், நடைமுறை நிகழ்வுகளுக்கும் இடையே பெருத்த இடைவெளி நிலவுகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்து வரும் இந்தப் பொருளாதாரப் பிரச்னையின் அடித்தளத்தை அதிகார வர்க்கம் இன்னும் ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொண்டு, போதிய வேகத்தில் நிவாரண சீர்திருத்தங்களை மேற்கொள்ள வில்லை என்பதை இம்மாதிரி இடைவெளி வெளிப்படுத்துகிறது.


2009-10ஆம் ஆண்டுகளில், பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட தொழில்களை புனரமைக்கும் நோக்குடன், கடன் சீரமைப்பு சலுகைத் திட்டம் (Restructuring of loans) ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப் பட்டது. கடன் சீரமைப்புக்கான தகுதி விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. வட்டி விகிதம் குறைக்கப் பட்டு, கடனை செலுத்தும் காலத்தைத் தள்ளிப்போடுவது வரை பல பொருளாதார சலுகைகள், இந்த திட்டத்தால் அரவணைக்கப்பட்ட கடன்தாரர்களுக்கு வழங்கப்பட்டன. இம்மாதிரி சலுகைகளால், வங்கி கள் பல கோடி ரூபாய் வரவுகளை, பெருந்தன்மையோடு தியாகம் செய்தன. இதனால், வங்கிகளின் லாபம் பெருமளவில் குறைந்தது.


குறிப்பிட்ட காலத்துக்குள் சீரமைக்கப்பட்ட கடன்கள், வாராக்கடன் பட்டியலில் சேராமல் தப்பிக்கும் என்பது இத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு கூடுதல் சலுகையாகும். நிதி ஆதார வரைமுறைகளின் அழுத்தத்தால், நாட்டில் தொழில்கள் நலிவ டைந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இத் திட்டம் ரிசர்வ் வங்கியினால் இயற்றப்பட்டது. ஆனால், நிகழ்வுகள் வேறு விதமாக அமைந்தன. இச் சலுகை, கடன் வசூல் நிர்வாகத் திறமை குறைவினால், பெருமளவில் வாராக்கடன்களை சுமந்து நின்ற வங்கிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது எனலாம். இச் சலுகைகளைப் பயன்படுத்தி, வாராக் கடன் வளர்ச்சியின் அளவை குறைத்து மதிப்பிட்டு, அதற்காக ஒதுக்கப்பட வேண்டிய உடனடி ஒதுக்கீடு களை தவிர்க்கலாம். கடன் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி விதிமுறைகளுக்கு உள்பட்டதாக இருந்தா லும், பெரும் பகுதி, வாராக்கடன்களை தள்ளிப்போடும் உத்தியாக வங்கிகளால் பயன்படுத்தப் பட்டன. இதனால், சீரமைப்பு கணக்கில் சேர்க்கப்பட்ட, வாராக்கடன் என்ற புதைகுழியை நோக்கி நகர்ந்து நின்ற தகுதியற்ற பல கடன்கள், தற்போது, தங்கள் சுய ரூபத்தை வெளிப்படுத்தி, வாராக்கடன்களாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.


சமீப காலங்களில், ஒவ்வொரு காலாண்டும், வங்கிகளின் வாராக்கடன்கள், தொடர்ந்து வளர்ந்து வருவதற்கு, மேலே குறிப்பிட்டபடி, வங்கிகளின் எதிர்மறை செயல்பாடுகள் ஒரு முக்கியக் காரண மாகும். தகுதியற்ற கடன்கள், சீரமைப்புத் திட்டத்தில் சேர்க்கப்படாமல், அதற்குரிய காலத்தில் வாராக் கடன்களாக பட்டியலிடப்பட்டிருந்தால், அந்தக் கடன்களுக்கு பிணையாக கொடுக்கப்பட்ட அசையா சொத்துக்களை சட்டப்படி பறிமுதல் செய்து, நிலுவையிலிருந்த கடன்களை, வங்கிகள் ஓரளவு வசூல் செய்திருக்கலாம். அம்மாதிரி வாய்ப்புகளையும், தங்கள் செயல்பாடுகளால் வங்கிகள் நழுவ விட்டு விட்டதால்தான், தற்போது வாராக்கடன்களின் சுமை அதிகரித்து உள்ளது. தகுந்த தருணங்களில் அவ்வப்போது, வாராக்கடன் எனும் அழுக்கை வெளியேற்றத் தவறியதுதான் தற்போதைய நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம்.


வங்கிகளின் இம்மாதிரி செயல்பாடுகளால், பெரும் பயன் அடைந்தவர்கள், வட்டி குறைப்பு போன்ற திட்ட சலுகைகளை அனுபவித்து, கடனை திருப்பிச் செலுத்தும் நோக்கமின்றி வலம் வரும் ஏமாற்றுக்காரர்கள்தான்.கடனாளிகளின் ஆடம்பர விளம்பரங்களையும், சமூக அந்தஸ்தையும் மட்டும், அடிப்படை தகுதிகளாகக் கருதி வழங்கப்பட்ட கடன்கள், சீரமைப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது, வாராக்கடன்களாக விசுவரூபம் எடுத்திருக்கின்றன. மற்ற வங்கிகளில் 7,000 கோடி ரூபாய் வரை கடன் பாக்கித் தொகை நிலுவையில் இருந்த விமானக் கம்பெனிக்கு இன்னொரு அரசு வங்கி 900 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிகழ்வுகளை சி.பி.ஐ. தற்போது விசாரித்து வருவது, இதற்கு ஓர் உதாரணமாகும். வழங்கப்பட்ட கடன், அங்கீகரிக்கப்படாத வழிகளில் செலவழிக்கப்பட்டது என்ற உண்மையை ஆராயாமல், இம்மாதிரி கடன்கள் சீரமைப்பு திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது, பல சந்தேகக் கேள்விகளை எழுப்பும்.


இம்மாதிரி நிகழ்வுகளின் அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து, அம்மாதிரி நிகழ்வுகள் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பம்.ரிசர்வ் வங்கி, வருடாந்திர தணிக்கைகளின் போது, வரை முறை களின்படி, வாராக்கடன்களாக பட்டியலிடப்படாத கடன்களை அடையாளம் கண்டு, சம்பந்தப் பட்ட வங்கிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்குகிறது. இம்மாதிரி நிலை இனி நீடிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைத்து வாராக் கடன் களும், மார்ச் 2017-க்குள் முழுவதும் பட்டியலிடப்பட்டு, அவைகளுக்கான பிரத்யேக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, வங்கிகளின் நிதி அறிக்கைகள் சுத்தம் செய்யப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.


பாதிக்கப்பட்ட நிலையில் நிற்கும் கடன்களை பங்குகளாக மாற்றி, சம்பந்தப்பட்ட தொழிலக நிர் வாகத்தை மாற்றும் அதிகாரத்தை வங்கிகளுக்கு வழங்கும் திட்டம் (Strategic debt restructuring) சமீபத்தில் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வரைமுறைகளின்படி, புதிய மூல தனக்காரர்களை அடையாளம் கண்டு, நலிந்த தொழிலை மேம்படுத்தும் பணியை அவர்களிடம் ஒப்படைக்க, வங்கிகளுக்கு 18 மாத அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது நிர்வாக கோளாறினால் தொழில்கள் நலிவடையாமல் பாதுகாக்க உதவும் ஒரு நல்ல திட்டமாகும். ஆனால், பல வங்கிகள், பாதிப்பு நிலையில் இருக்கும் கடன்கள், வாராக்கடன்களாக மாறாமல் இருப்பதற்கான ஓர் ஆயுதமாக மட்டும் இத் திட்டத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. வங்கிகள் அம்மாதிரி செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வெறும் அறிவுரைகளால் மட்டும் கடந்த காலங்களில், இம்மாதிரி தவறுகளைத் தடுக்க முடியவில்லை என்பதால், ரிசர்வ் வங்கியின் அணுகுமுறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.


வங்கி நிர்வாகங்களின் அதிகார மையப்பகுதியான இயக்குனர் குழுவில், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் இடம் வகிக்கின்றனர். பெரும் குறைகளை அடையாளம் கண்டு, அவற்றைக் களைவதற் கான முயற்சிகளை அவர்கள் இதுவரை மேற்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. வங்கித் துறையில் அனுபவமுள்ளவர்கள் மட்டும்தான், நிர்வாகிகள் குழுவில் இடம் பெறவேண்டும் (Professionalisation of Bank boards) என்ற நாயக் கமிட்டியின் பரிந்துரைகள் இந்நேரத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட்டு, செயல் படுத்தப்படவேண்டிய அவசியத்தை மத்திய அரசு உணர வேண்டிய தருணம் இது.


வாராக்கடன்களை மறைக்காமல், மார்ச் 2017-க்குள், அவைகளை முழுவதும் வெளிப்படுத்துவதற்கான அறிவுரை, ரிசர்வ் வங்கி விழித்துக்கொண்டதற்கான நல்ல அடையாளமாக பொருளாதார வல்லுனர் களால் கருதப்படுகிறது. வாராக்கடன்களை, ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் மறைக்க முயல்வதற்குப் பதிலாக, கடன் வழங்குவதிலும், வழங்கிய கடனை வசூல் செய்வதிலும் தங்கள் முழுத் திறமையையும் வங்கிகள் வெளிப்படுத்துவதுதான் தற்போதைய உடனடி தேவை. வாராக்கடன்களால் கரைந்து கொண் டிருக்கும் வங்கிகளின் பெரும் மூலதன தேவைகளை அரசாங்கத்தால் மட்டும், மக்களின் வரிப்பணத்தி லிருந்து நிரப்ப முடியாது. சந்தையிலிருந்து போதிய நிதி ஆதாரங்களைத் திரட்ட, வங்கிகளின் செயல் பாடுகள், அனைவரின் நம்பிக்கையையும் வசீகரிக்கும்படி, வெளிப்படையாக அமைய வேண்டும். சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் சேவை தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.


வங்கிகள், திறமையோடும், புத்துணர்வோடும் செயல்படத் தேவையான அனைத்து சீர்த்திருத்தங்களும் போர்க்கால அடிப்படை யில் அமல்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திர தனுஷ் திட்டம் இதற்கான ஒரு நல்ல துவக்கம் என்றாலும், அதன் செயல்பாடுகள், துரிதப்படுத்தப்பட வேண்டி யது மிக அவசியம். நலிவடைந்திருக்கும் சில அரசு வங்கிகளை, செயல் திறனுள்ள வங்கி களோடு இணைப்பதால், வங்கித் துறை வலுப்பெறும். வலுவான வங்கித் துறை, நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும்.வாராக்கடன்களை வசூலிக்க, வங்கிகளுக்கு போதிய அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை, வங்கிகள் முழுமையாகப் பயன் படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.






வாரா கடன் சுமை


நன்றி : தமிழ் ஹிந்து 

நா ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திற்கும் நிதி ஆதாரம் அதிக அளவில் தேவைப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 1969ல் மத்திய அரசு ஓர் அவசர சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 14 தனியார் வர்த்தக வங்கிகளை தேசியமயமாக்கியது. அப்போது, நாட்டின் மொத்த டிபாசிட்களில் 85 சதவீதம் இந்த வங்கிகளில் தான் இருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 48 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவற்றின் வளர்ச்சி பெருமைப்படும் அளவில் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே வேளையில், செயல்பாடுகளில் பெரும் கேள்வி-சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வங்கிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி இருந்தும், தற்போது பொதுத்துறை வங்கிகளின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் ‘வாராக்கடன் சுமை’ பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.



பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் கடன் வாங்கிய கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளார். இதுபோல், வின்சன் டயமன்ட் ஜூவல்லரி அதிபர் ஜாட்டின் மேத்தா பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.5,500 கோடி பாக்கி இருக்கிறது. இவர்களை தொடர்ந்து ரெய் அக்ரோ லிமிடெட் ரூ.2,730 கோடி, மெஹூவா நிறுவனம் ரூ.2,416 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,371 கோடி, ரெய்ட் அண்ட் டெய்லர் எஸ்குமார்ஸ் நேஷன் ஒய்டு லிமிடெட் ரூ.2,080 கோடி என பட்டியல் நீள்கிறது. வாராக்கடன் பட்டியல் வங்கிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் எச்சரிக்கை மணியாகவும் இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வாராக்கடன் அளவு சுமார் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013, செப்டம்பரில் ரூ.28,417 கோடியாக இருந்த வாராக்கடன் கடந்த ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி ₹ரூ.1.1 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

#தொடர்புடைய பதிவுகள் 


வங்கி திவால் சட்டம் என்றால் என்ன?


இதுபோல் ரூ.250 கோடிக்கும் மேல் கடன் பாக்கி வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தரவேண்டிய நிலுவை மட்டும் ரூ.48,000 கோடியாகும். வாராக்கடன் பிரச்னையால் சிக்கலில் உள்ள வங்கிகளின் நிதி நிலையை சீராக்கவும், அவற்றை மீட்டெடுக்கவும் மூலதன நிதியாக 2018-19 நிதியாண்டுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.52,800 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏறக்குறைய இதே அளவுக்கு வாராக்கடன் நிலுவை உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தவிர பிற பொதுத்துறை வங்கிகளின் கடன் நிலுவை மேற்கண்ட மொத்த தொகையில் சுமார் 60 சதவீதம்.

அரசு வங்கிகளில் வாராக்கடன் சுமை அதிகரித்து வந்தபோது, அரசு அவற்றை தள்ளுபடி (ரத்து) செய்யும் முடிவை எடுக்கிறது. இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி ஒப்புதலை பெற வேண்டும். அவ்வாறு செய்தால், எங்கே தவறு நடக்கிறது, அதற்கு காரணம் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். வங்கிகளில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை கணக்கு தணிக்கை நடந்தும் வாராக்கடன் சுமை அதிகரிப்பது புரியாத புதிர். திட்டமிட்டு பணத்தை மோசடி வழிகளில் ஒரு சாரார் கொள்ளை அடித்து செல்வதை தடுக்கவில்லை என்றால் நாட்டின் வளர்ச்சி கேள்விக்குறியாகவே இருக்கும். வங்கிகளின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டிய தருணம் இது. புரிந்து கொண்டால் சரி.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN