வர்த்தக போர் என்றால் என்ன?


GENERAL STUDIES- II:


TOPIC: 
Bilateral, regional and global groupings and agreements involving India and/or affecting India’s interests


Expected Question for UPSC  exam (Tamil): 

The recent trade war between US and China signals that there are looming threats over free trade. Comment. Also discuss the implications of such trade war on developing countries like India.


அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அண்மையில் நடக்கும் வர்த்தகப் போர், தடையற்ற வணிகத்திற்கு  அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துவதாய் உள்ளன.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இத்தகைய வர்த்தக போரின் விளைவுகள் என்ன? விவாதிக்க.


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

Discuss

விவாதிக்க




இது ஒரு முழுமையான பதிலை எழுத முற்படுவதாகும், இது கேள்வியின் முக்கிய கோரிக்கையைப் பற்றி விரிவாக எழுதுவதாகும். பிரச்சினை பற்றிய ஒரு முழுமையான தகவல்களை (நேர்மறை மற்றும் எதிர்மறை) வெளியில் கொண்டு வர வேண்டும், கேள்விக்குரிய மற்றும் முக்கியமான அம்சங்களைப் பற்றியும் நீங்கள் விவாதிக்க வேண்டும்.

contact mail ID  tnpscprime@gmail.com

வர்த்தக போர் என்றால் என்ன? உலக வர்த்தக போர் அச்சுறுத்தல்கள் ஒரு பார்வை..!


வர்த்தக யுத்தம் இறக்குமதிக்குத் தடைவிதிப்பதன் மூலம் மற்ற நாடுகளின் வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைச் சில நாடுகள் வர்த்தக யுத்தம் என்ற பெயரில் செய்து வருகின்றன. அறிவுசார் சொத்துகளைத் திருடியதற்காகச் சீனா
மற்றும் பிற பொருளாதாரங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் டிரம்பின் செயல்பாடுகள், வர்த்தகப் போரின் மீதான பயத்தை மேலும் கூட்டியுள்ளன.

டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் சென்ற வியாழக்கிழமை, சீனா பொருட்களின் மீது 60பில்லியன் டாலர் வரிவிதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பொருட்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க நிர்வாகத் துறை அப்பட்டியலை வெளியிட்டு 30 நாட்களுக்குப் பின்பு வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். அதற்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 3மில்லியன் டாலர் அளவில் வரிவிதித்துள ளது. சீன தூதர் கூறுகையில், எங்களிடம் வாலாட்ட நினைத்தால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம். ஒரு கை பார்த்துவிடுவோம் என்கிறார். தற்போது, உலோகத்திற்கான வரியின் மீதான விலக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவும் இதுபோன்று உலோகங்களின் மீதான சலுகையை எதிர்பார்க்கிறது.

பங்குசந்தையில் அதிக விற்பனை வர்த்தகப் போரின் பயத்தில் உலகளவில் பங்குசந்தைகள் பெரும்விற்பனையுடன் முடித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, ஆசிய பங்குசந்தைகள் பெரும் விற்பனையுடன் டோவ்ஜோன்ஸ் தொழில் சராசரி 3% வீழ ச்சியடைந்தது. மற்ற சந்தைகளைப் போல ஐப்பானின் நிக்கி மோசமான அடி வாங்கியுள்ளது. இந்த வர்த்தகப் போரின் பாதிப்புகளில் இந்திய பங்குசந்தையும் தப்பவில்லை. நிப்டி வீழ்ச்சியடைந்து 10000 என்ற அளவைத் தொட்டு , 23மார்ச் 2018 முடிவில் 9998 என இருந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் அளவிற்குச் சரிந்தது.

இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

இந்திய பெரிய அளவில் அந்த இரு உலோகங்களையும் ஏற்றுமதி செய்யாவிட்டாலும், வர்த்த போர் மூண்டால் இந்தியாவின் வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். 2018-19 ஆண்டுக்கான ஏற றுமதியில் இரண்டு இலக்க வளர்ச்சி என்னும் இந்தியாவின் இலக்கை அடைவது கடினமே.

ரகுராம் ராஜனின் பார்வையில் வர்த்தகப் போர்

 இன்னும் நிலைமை அந்த அளவிற்கு மோசமடையவில்லை என்பதால் , வர்த்தகப் போர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை என்கிறார் ரகுராம் ராஜன். மேலும் அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், நடப்பு பொருளாதார மீட்புப்பணிகளைத் தாக்கினால் உலக அளவில் இலாபகரமாக இருக்கும். அமெரிக்கா நல்ல வலுவான நிலையில் இருக்கும் போதே இவற்றைச் செய்தால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என எண்ணுகிறார் டிரம்ப். ஆனால்இதை நாம் பின்பற்ற கூடாது என்று உலக மின்னணு மாநாட்டில் கூறினார் ரகுராம் ராஜன். மேலும் அவர் கூறுகையில்,சில நாடுகள் இப்படி வர்த்தக வரிவிதிப்பை அதிகப்படுத்துவது , நடப்பு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.


கட்டுரை எண் 2:


வர்த்தக போர்.. அமெரிக்காவை சீனாவுடன் சேர்ந்து எதிர்க்கும் இந்தியா..!


அமெரிக்கா ஸ்டீல் மற்றும் அலுமியன் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதை அடுத்து அதிகளவில் அமெரிக்காவிற்கு ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவும், சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியினை உயர்த்தித் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்திய அரசு அமெரிக்காவிற்கு எதிராகத் தங்களது எதிர்பினை காண்பிக்க உடனடியாக 28 பொருட்கள் மீதான வரியினை உயர்த்தியது மட்டும் இல்லாமல் ஆர்த்தீமியா என்ற ஒரு வகையான இறாலுக்கு மட்டும் ஆகஸ்ட் 4 முதல் வரியினை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.

வர்த்தகப் போர் அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் வர்த்தகப் போர் நிகழ வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சீனா, இந்தியாம் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தற்போது வர்த்தகப் போரினை எழுப்பி வருகிறது. அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா வரியினை உயர்த்தியதை அடுத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரியினை வித்துள்ளன.

விலை உயரும் பருப்புகள் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டாணி, கடலைப் பருப்பு, மசூர் பருப்பு போன்றவற்றின் மீது 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாகவும், அவரைப் பருப்புகள் மீது மீது 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும் இறக்குமதி வரியினை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாதாம் 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பொருட்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் இறக்குமதி வரி இருந்து வந்த நிலையில் தற்போது 120 ரூபாய் என அதிகரித்துள்ளது. அதே நேரம் உரிக்கப்படாத பாதாம் பருப்புகள் மீது கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் என்று இருந்த வரி 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. 

அமிலங்கள்

போரிக் அமிலம் மீது 17.50 சதவீதமாகவும், 10 சதவீதமாக இருந்த போஸ்பாரிக் அமிலம் மீது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் இறக்குமதி வரியினை உயர்த்தியுள்ளனர்.

இரும்பு மற்றும் ஸ்டீல் 

குறிப்பிட்ட இரும்பு தகடுகள் போன்றவற்றுக்கு 15 சதவீதத்தில் இருந்து 27.50 சதவீதமாகவும், துருப்பிடிக்காத ஸ்டீல்பொருட்கள் மீது 15 சதவீதத்தில் இருந்து 22.50 சதவீதமாகவும் இறக்குமதி வரியினை உயர்த்தியுள்ளனர்.

இணையான வரி அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு இறக்குமதி செய்ய எவ்வளவு வரி விதித்துள்ளதோ அதற்கு இணையான அளவிற்கே இந்திய அரசும் அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்ய வரி விதித்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

பாதிப்பு இந்தியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்துள்ள வரியால் முறையே 198.6 டாலர் மற்றும் 42..4 மில்லியன் டாலர் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது

ஸ்டீல் ஏற்றுமதியும் இறக்குமதியும் இது குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா புகார் அளித்தும் இது வரை எந்த முடிவும் எட்டவில்லை. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் 22.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஸ்டீல் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கட்டுரை எண் 3:

பாதிப்புகள்:

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, சீனாவைக் குறிவைத்து பல அடுக்குகளில் பல்வேறு விதமான வரியை விதித்து இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போரை துவக்கி வைத்துள்ள காரணத்தால் தற்போது வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல பிரச்சனைகள் சந்தித்து வருகிறது.

10 சதவீத வீழ்ச்சி 

தற்போது சந்தையில் இருக்கும் பாதிப்புகளை விடவும் அதிகமானப் பாதிப்புகள் வர உள்ளதாகச் சர்வதேச முதலீட்டாளரான மார்க் மொபியஸ் கூறுவது மட்டும் அல்லாமல் வளரும் நாடுகளில் பங்குச்சந்தையில் 10 சதவீதம் வரையிலான சரிவும், அதிகளவிலான நிதி நெருக்கடியும் உருவாகும் எனக் கூறியுள்ளார்.

நாணய மதிப்பு 

தற்போது வளரும் நாடுகளில் நாணய மதிப்பு மோசம் அடைந்து வரும் காரணத்தால், அடுத்தச் சில வாரத்திலோ அல்லது மாதத்திலோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிதி நெருக்கடி உருவாகும் என நிச்சயம், இதில் சந்தேகமே இல்லை.

பாதிப்பு 

இந்த மோசமான நாணய மதிப்பு மூலம் பல நிறுவனங்கள் பாதிப்படையும், மேலும் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகத்தை இழுத்து மூடும் நிலை கூட உருவாகும் எனத் தெரிகிறது.

மத்திய வங்கிகள் 

நாணய கொள்கையை நிலைப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பெடரல் வங்கியும், ஐரோப்பிய சென்ரல் பேங்க்-ம் பணப் புழக்கத்தை அதிகளவில் கட்டுப்படுத்தியுள்ளது. இதோடு டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தகத் தொய்வும் வளரும் நாடுகளுக்குக் கூடுதலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க மக்களுக்குப் பாதிப்பு இல்லை.

வரி விதிப்புகளை அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் விதித்திருந்தாலும், அமெரிக்காவில் உருவாகும் பணவீக்க பிரச்சனையை அமெரிக்க அரசு சம்பள உயர்வு மூலம் ஈடு செய்கிறது. காரணம் தற்போது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் வர்த்தக வாயிலாக மட்டுமே அமெரிக்காவிற்குப் பாதிப்பு ஏற்படும், முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என மறைமுகமாக மொபியஸ் கூறுகிறார்.

வளரும் நாடுகள்

இந்தப் பாதிப்புகளால் வளரும் நாடுகளில் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் 10 சதவீதம் வரையில் பங்குச்சந்தை பாதிப்படையும் என்றும், 2019 ஜனவரிக்குப் பின்பு 16 சதவீதம் வரையில் சரிய அதிகளவிலான பாதிப்பு ஏற்படும் எனவும் மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம் 

இந்த மாற்றத்தால் வளரும் நாடுகளில் பணவீக்கம் அதிகமாகி, முதலீடுகள் பெரிய அளவில் குறையும். இதன் எதிரொலியாக நாணய மதிப்பு பாதிப்படையும். நாணய மதிப்பில் ஏற்பட உள்ள வீழ்ச்சியைச் சமாளிக்க டர்கி முதல் அர்ஜென்டினா வரையிலான அனைத்து மத்திய வங்கிகளும் வட்டியை உயர்த்தும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

நாடுகளும் பாதிப்படையும் துறையும் 

இந்நிலையில் இந்தப் பிரச்சனைகளால் எந்தெந்த நாடுகள், எந்தத் துறையில் பாதிப்படையும் என்று மார்க் மொபியஸ் கூறியுளார். 

இந்தியா - உற்பத்தி 
தென் கொரியா - தொழில்நுட்பம் 
பிரேசில் - விவசாய உற்பத்தி 
அர்ஜென்டீனா - சோயா பீன்ஸ் 
வியட்நாம் - காலணி 
பங்களாதேஷ் - ஆடை உற்பத்தி
மேலும் அறிய (ஆங்கிலம் 1)
மேலும் அறிய (ஆங்கிலம் 2 )


No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN