உலக வணிக அமைப்பு (WTO)

General Studies- II:

Topic
Important International institutions, agencies and fora- their structure, mandate.


Expected Question for UPSC  exam (Tamil): 


1.WTO ன் முக்கியத்துவத்தினை  விளக்குக ? வளர்ச்சியடைந்த நாடுகளின் கொள்கைகளால் WTO  முக்கியத்துவத்தை இழக்கிறதா ?


2.The WTO has made limited progress over the past two decades on various issues of significance. Do you think WTO as an institution is in decline? Critically comment.


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

contact mail ID  tnpscprime@gmail.com

நன்றி : 
தமிழ் ஹிந்து



டபிள்யூ டி ஓ-வின் வீழ்ச்சி!


புத்தாண்டில் தனது 23-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது டபிள்யூ டி ஓ எனப்படும் உலக வர்த்தக அமைப்பு. அமெரிக்காவில் தலைமையிடம் இல்லாத ஓரிரு சர்வதேச அமைப்புகளில் இதுவும் ஒன்று என்ற சிறப்பும் இதற்கு உண்டு. சர்வதேச அளவில் வர்த்தகங்களை மேற்கொள்வதற்கான
கொள்கைகளை வகுக்கும் டபிள்யூ டி ஓ-வின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இந்த அமைப்பு தேவையா என்ற கேள்வியோடு தனது அதிகாரத்தையும் இழந்து வருகிறது.
தங்கள் நாட்டில் தலைமையகம் இல்லை என்ற ஒரு காரணத்துக்காகவே டபிள்யூ டி ஓ அமைப்பை புறந்தள்ளும் போக்கைக் கையாண்டு வருகிறது அமெரிக்கா. வல்லரசான அமெரிக்காவின் ஒத்துழையாமை இந்த அமைப்பின் அதிகார வரம்பை ஆட்டம் காணச் செய்துள்ளது. டபிள்யூ டி ஓ-வின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சமும் வளரும் நாடுகளிடையே உருவாகி வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போரில்லா உலகம் படைப்போம் என்ற சூளுரையோடு, நாடுகளிடையே வர்த்தகத்தை மேற்கொள்ள ஒரு சர்வதேச அமைப்பு தேவைப்பட்டது. அப்போது 23 நாடுகள் இணைந்து பொதுவான வர்த்தக பரிவர்த்தனை ஒப்பந்தம் (காட்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.1948-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 1995-ம் ஆண்டில் `காட்’ பெயர் மாற்றப்பட்டு டபிள்யூ டி ஓ- வானது. 123 நாடுகள் இதன் அங்கத்தினர்களாயினர்.
`காட்’ அமலில் இருந்தபோது நாடுகளிடையிலான சரக்குகளுக்கான வரி விகிதம் 22 சதவீத அளவுக்கு இருந்தது. வரி விதிப்புதான் இந்த அமைப்பின் செயல்பாடுகளை முடக்குகிறது என்ற கோரிக்கை வலுக்கவே வரி விகிதம் படிப்படியாகக் குறைந்து தற்போது 5 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பு நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடி நாடுகளிடையிலான வர்த்தகத்தின் போக்கு, எந்தெந்த வகைகளில் பிரச்சினைகள் உருவாகின்றன,அவற்றைத் தீர்ப்பது எப்படி என்று விவாதிப்பார்கள். குறிப்பாக டபிள்யூடிஓ-வின் கொள்கைகளை வகுப்பார்கள். நாடுகளிடையிலான தாராள வர்த்தகத்தை பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் இம்மாத தொடக்கத்தில் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கூட்டங்களை விட இரண்டு வகையில் வேறுபட்டிருந்தது இந்தக் கூட்டம். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன் தனக்கான விதிகளை அதாவது பன்முக வர்த்தகத்துக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டது. மற்றொருபுறம் டபிள்யூ டி ஓ அமைப்பின் பன்முக வர்த்தகத்தால் தங்கள் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால் அமெரிக்காவின் வாதங்கள் இதில் முன்னிலை பெறாமல் போனது. இதனால் இந்தக்கூட்டத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு முற்றிலும் இல்லாத சூழல் உருவானது.
இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் எட்டப்பட்டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற டபிள்யூடிஓ கூட்டங்கள் அனைத்துமே முந்தைய கூட்டங்களைக் காட்டிலும் ஓரளவு முன்னேற்றத்தை எட்டி அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தது. மானியங்கள் அளிப்பது, உணவு பாதுகாப்பு, வேளாண் மானியம் ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் டபிள்யூடிஓ கூட்டங்கள் ஓரளவு அர்த்தமுள்ளதாக இருந்தன.
ஆனால் நாடுகள் இப்போது வெளிப்படையாகவே வர்த்தக பேரம் பேசத் தொடங்கிவிட்டன. தங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்க, அதேசமயம் அதற்கு இடையூறாக இருக்கும் டபிள்யூடிஓ விதிகளை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டன. இதுவே சர்வதேச வர்த்தகத்துக்கு விதிகளை வகுக்கும் அமைப்பாக விளங்கிய டபிள்யூடிஓ-வுக்கு பெரும் சரிவாக அமைந்துவிட்டது.
சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு மானிய உதவி அளிப்பதை தடுக்கும் சட்டத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை என்று ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டதிலிருந்தே டபிள்யூடிஓ-வின் பலவீனம் புலனாகும்.
மேலும் டபிள்யூடிஓ அமைப்பின் விதிமுறைகள் மிகவும் சிக்கலாக இருப்பதும் பிரச்சினையை பெரிதாக்கி வருகிறது. வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதிகள் 1995-ம் ஆண்டிலிருந்தே டபிள்யூ டி ஓ-வில் இருந்தாலும், இந்த தளர்வு விதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதான குற்றச்சாட்டும் எழுந்துவிட்டது.
தங்கள் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகள் டபிள்யூடிஓ விதிமுறைகளுக்கு எதிரானது என்று சிறிய நாடுகளான பார்படாஸ், ஆன்டிகுவா ஆகியன வெகுண்டெழுந்து தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இதற்கு டபிள்யூடிஓ தீர்வு காணும் முயற்சியில் இறங்கியதால் ஓரளவு டபிள்யூடிஓ மீதான நம்பிக்கை துளிர்த்தது.
இந்த சமரச தீர்வானது பரஸ்பர ஆலோசனை, உயர்நிலைக் குழுவின் ஆய்வு, மேல் முறையீட்டு ஆணையத்தின் விதிமுறைகள் என நீண்டு அதை அமல்படுத்துவது என்ற நிலையை எட்டுவதற்கு நீண்ட காலம் பிடித்தது.
வர்த்தகம் தொடர்பான முறையீடு இருந்தால் அதை மேல் முறையீட்டு அமைப்பு ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை அளிக்கும். இதை சமரச தீர்வு அமைப்பு (டிஎஸ்பி) அப்படியே ஏற்கும். இதை ஏற்றால் டபிள்யூடிஓ விதிமுறைகள் மீறப்பட்டதாக டபிள்யூடிஓ அமைப்பு அறிவிக்கும். அதேபோல தீர்வு அமைப்பு பரிந்துரைத்த விதிமுறைகளை பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட நாடுகளை டபிள்யூடிஓ வலியுறுத்தும்.
தீர்வு அமைப்பு அளித்த பரிந்துரை, அதை அமல்படுத்த டபிள்யூடிஓ வெளியிட்ட வலியுறுத்தல் இவை எதையுமே அமெரிக்கா கண்டு கொள்வதில்லை. உதாரணத்துக்கு காட் ஒப்பந்தத்துக்கு எதிரான அமெரிக்காவின் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, டபிள்யூடிஓ 20 கோடி டாலர் அபராதத்தை ஆன்டிகுவா, பார்படாஸுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அமெரிக்கா இதுவரை 20 லட்சம் டாலரை மட்டுமே அளித்துள்ளது.
டபிள்யூடிஓ விதிகளை அமெரிக்கா மதிப்பதேயில்லை என்பதாக தென்கொரியாவின் குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை. தென்கொரிய தயாரிப்புகளான சலவை இயந்திரங்கள் மீதான டபிள்யூடிஓ விதிமுறையை 15 மாதங்களாகியும் அமெரிக்கா நிறைவேற்றவில்லை.
இதேபோல மூன்றாம் தரப்பு நாடுகளிடையிலான சமரசம் தொடர்பாகவும் அமெரிக்காவின் நிலைப்பாடு டபிள்யூடிஓ விதிகளுக்கு எதிரானதாகவே உள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு எதிராக கத்தார் தொடுத்த வர்த்தக விதிமீறல் சர்ச்சை புகாரில், டபிள்யூடிஓ விதிகளை பின்பற்ற முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல டபிள்யூடிஓ சமரச தீர்ப்பாய நீதிபதிகள் நியமன விஷயத்தில் பங்கேற்க முடியாது என்று அமெரிக்கா கூறியது டபிள்யூடிஓ-வுக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகோபித்த கருத்தொற்றுமை அடிப்படையில்தான் டபிள்யூடிஓ உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் போக்கு, உறுப்பினர் நியமனத்தையே கேள்விக்குறியாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளரும் நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிக்கப்படும்போது அவை நாடுவது சமரச தீர்ப்பாயத்தைத்தான். ஆனால் பொதுவாக இந்த விதிகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்காவால், வளரும் நாடுகள் கடுமையாக பதிக்கப்படுகின்றன.
`அமெரிக்காதான் பிரதானம்’ என்ற அதிபர் ட்ரம்பின் நிலைப்பாடு முதலில் காவு வாங்கியது டிரான்ஸ் பசிபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தைதான். இப்போது டபிள்யூடிஓ-வின் விதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கி மலினப்படுத்தி வருகிறது. இந்த போக்கானது சர்வதேச வர்த்தகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் பரவலாகியுள்ளது.
டபிள்யூடிஓ-வின் வீழ்ச்சி சர்வதேச வர்த்தகத்துக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கும். எல்லை தாண்டிய வர்த்தகம் சாத்தியமாகாமல் போகும். வலைதளம் பரந்து விரிந்தாலும் வர்த்தகம் சுருங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

-


உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும்சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும்நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம்மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாகமர்ரகேஷ்ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியதுஉலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தைஒழுங்குமுறைப்படுத்துகிறதுபேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது.இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்குஉலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமானதீர்வுகாண வழிவகுக்கிறதுஇந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டுஅவற்றைஅந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும். இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்குமுனனால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும்அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும்இந்த அமைப்பானது,தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்றுஎன்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்தமுடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


 ஒப்பந்தங்கள்:


வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA):

வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு தொடக்கத்திலேயே செயல்படுத்தியதுஇந்த ஒப்பந்தம் மூன்றுமையக்கருத்துகளை கொண்டதுஅல்லது "தூண்கள்": உள்நாட்டு ஆதாரம்சந்தையுடன் தொடர்பு மற்றும் ஏற்றுமதிக்கான மானியங்கள்.

சேவைகள் வழங்குவதற்கான பொது ஒப்பந்தம் (GATS)

ஜிஏடிடி (GATT) அதாவது சரக்குகளில் வணிகம் செய்வதற்காக உருவாக்கிய கட்டணம் மற்றும் வணிக (முறைகளுக்கானபொது ஒப்பந்தத்தை போலவேஒரு உடன்பாட்டை சேவைகள் புரியும் தொழில்துறைக்கும் நீட்டுவதற்காகவேசேவைகள் புரியும் வணிகத்திற்கான பொது ஒப்பந்த முறை (GATS) உருவானது.இந்த ஒப்பந்தம் ஜனவரி 1995 முதல் அமுலில் உள்ளது.

அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs)

துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த ஒப்பந்தத்தை பயன் படுத்துவது குறித்தான - SPS ஒப்பந்தம் எனவும் அறியப்படுவது - உருகுவே சுற்றில்ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப் பேச்சுவார்த்தைகளின் போது நிகழ்ந்ததுமேலும் 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதில்இருந்து செயலாக்கத்தில் உள்ளது.

Special Safeguard Mechanism (SPS) ஒப்பந்தத்தின் கீழ்உலக வணிக அமைப்பு உணவுப் பொருட்களின் பாதுகாப்புடன் கூடிய பயன்பாட்டிற்கான தீங்குவிளைவிக்கும் பொருட்களுக்கான எல்லைகளை தெளிவு செய்யும் கொள்கைகளை வெளியிட்டது (நுண்மை தீங்குயிரிகள்உயிர்கொல்லிகள்சோதனைசெய்தல் மற்றும் விவரச்சீட்டுகளை பொருந்துதல்மேலும் விலங்குகள் மற்றும் தாவர உடல்நலம் (இறக்குமதி செய்த பூச்சிகள் மற்றும் வியாதிகள்).

வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT)

வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) என்பது உலக வணிக அமைப்பின் ஒரு சர்வதேச உடன்பாடாகும்உருகுவே சுற்றில் ஜிஏடிடியின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப்பேச்சுவார்த்தைகளின் போது அது நிகழ்ந்ததுமேலும் 1994 ஆம் ஆண்டிறுதியில் உலக வணிக அமைப்பு நிறுவியபோதிலிருந்து செயலாக்கத்தில் இருந்து வருகிறது.

தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள்தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வது மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற காரணங்களால்வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் இவை செயல்படுகின்றன

முக்கியத்துவமனா கூட்டங்கள்:

(A).உருகுவே கூட்டம் (1986):

முக்கியத்துவம்:

1.இச்  சுற்று உலக வணிக மையத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டது.

2.வணிகப் பேச்சுவார்த்தை எல்லைகளை விரிவாக்கியதுகட்டண வீதங்களும்                      (ஏறத்தாழ 40%) வேளாண்மைக்கான மானியங்களும்பெருமளவு குறைந்தன.

3.வளர்முக நாடுகளின் ஆடை வகைகளுக்கான முழு அணுக்கம்அறிவுசார்                             சொத்துரிமைகளின் விரிவாக்கம் என்பன.

(B).தோகா கூட்டம் ( 2001- முடிவுறவில்லை ) வளர்ச்சிகாண கூட்டம்
( DEVELOPMENT ROUND )

            கட்டண வீதங்கள்கட்டணமல்லாத நடவடிக்கைகள்வேளாண்மைதொழிலாளர் தரப்பாடுகள்சூழல்போட்டிமுதலீடு, transparency, உரிமங்கள்முதலியன.

வணிக முறையின் கொள்கைகள்:

பாகுபாடு இல்லாமை (Most Favored Nation):

 இதில் இரண்டு பெரிய பாகங்களுண்டுமிகவும் வேண்டிய நாடு (MFN) விதிமுறைமற்றும் தேசிய நடத்துதல் கொள்கை
இவை இரண்டும்சரக்குகள்சேவைகள் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை உலக வணிக அமைப்பின் விதிமுறைகளில் வரையறுத்துள்ளது,ஆனால் அவற்றின் துல்லியமான நோக்கம் மற்றும் இயல்பு ஒவ்வொரு வகைக்கும் வேறுபடும்இந்த மிகவும் வேண்டிய நாடு MFN விதிமுறைகளின் படி உலகவணிக அமைப்பு உறுப்பினர் ஒரே மாதிரியான நியமங்களை இதர உலக வணிக அமைப்பின் உறுப்பினருடைய அனைத்து வணிக விவகாரங்களுக்கும் அமைக்கவேண்டும்அதாவது ஒரு உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக வணிகம் செய்யும் போது அதற்காக அளிக்க விரும்பும் மிகவும்உன்னதமான நிலவரங்களை மற்ற இதர உறுப்பினர்களுக்கும் பாகுபாடில்லாமல் அளிக்க முன்வரவேண்டும்


National Treatment --- வெளிநாட்டினரையும் உள்நாட்டினரையும்  ஒரேமாதிரி பாவித்தல்.


விமர்சனம்



உலக வணிக அமைப்பின் குறிக்கோளானது தடைகள் இல்லா வணிகத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதேயாகும்தடையிலாவணிகத்தைப்பற்றி திறனாய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் அதனால் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே வருவாய் அளவுகள் ஒருங்குவதற்குபதிலாக திசை விரிந்து செல்வதே (அதாவது பணக்காரன் மேலும் பணக்காரனாவான் ஆனால் ஏழை இன்னும் ஏழ்மையில் தவிப்பான்).மார்டின் க்ஹோர்தேர்ட்வோர்ல்ட் நெட்வர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனர்சொல்வது என்னவென்றால் உலக வணிக அமைப்பு உலகப்போருளாதாரத்தை பாகுபாடில்லாமல்நிர்வாகம் புரிய தவறிவிட்டது என்றும் அதன் செயல்பாடுகள் பணக்கார நாடுகள் மற்றும் பல்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பதாகவும்,மேலும் அதனால் சிறிய நாடுகளிடம் பேரம் பேசுவதற்கான ஆற்றல் குறைவாக உள்ளதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறுகிறார்



No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN