திவால் சட்ட திருத்த மசோதா

திவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. திவால் சட்ட நடைமுறைகளின் கீழ் நடக்கும் ஏலத்தில் கடனாளிகளே பங்குபெற முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இருப்பினும் கடன் தொகைக்கான வங்கி கணக்கு செயல்படத் தொடங்கி வட்டி செலுத்தினால் மட்டுமே இந்த ஏலத்தில் பங்குபெற முடியும் என்று அருண் ஜேட்லி நேற்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.
திவால் சட்டத்திருத்த மசோதவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களவையில் விவாதங்கள் நடைபெற்றன. `வெறுமனே சிறு கடன் தொகையை செலுத்திவிட்டு ஏலத்தில் கடனாளிகள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது’ என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். அதற்கு பிறகு ஓட்டெடுப்பு அடிப்படையில் திவால் சட்டத்திருத்த மசோதா 2017 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தவறான நபர்கள் திவால் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக கடந்த நவம்பர் மாதம் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்த சட்டத்துக்குப் பதிலாக தற்போது இந்த புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கடனாளிகள், கடன் தொகையை செலுத்தாமல் முறைகேடான வழியில் ஏலத்தில் பங்கேற்று நிறுவனத்தை கைப்பற்றி வந்தார்கள். அதற்கு தடைபோடும் விதமாக இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில், ``வாராக்கடன் என்பது நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பொறுப்பற்ற வகையில் வங்கிகள் கடன் வழங்கியதே இதற்கு காரணம். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் வாராக்கடன் மதிப்பை விட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வாராக்கடன் மதிப்பு குறைவாக இருந்தது.
மேலும் உலக வங்கி தகவலின் படி, இந்தியாவின் வாராக்கடன் விகிதம் 2011-ம் ஆண்டில் 2.7 சதவீதமும், 2012-ம் ஆண்டில் 3.4 சதவீதமும், 2013-ம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்தது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-ம் ஆண்டில் 4.3 சதவீதமாகவும் 2015-ம் ஆண்டில் 5.9 சதவீதமாகவும் 2016-ம் ஆண்டில் 9.6 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.’’ என்று காங்கிரஸ் உறுப்பினர் கவு ரவ் கோகோய் குற்றம் சாட்டினார். இதற்கிடையே உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கான தேவை என்ன என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ``கோகோய் உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தவர். அவர் நிச்சயம் இந்த பழமொழியை கேட்டிருப்பார். அதாவது மூன்று பொய்கள் இருக்கிறது. பொய், தேவைக்கான பொய் மற்றொன்று புள்ளிவிவர பொய். இதில் மூன்றாவதை கோகோய் தேர்ந்தெடுத்துள்ளார். திவால் சட்டத்திருத்த மசோதா மிக அவசியமான ஒன்று. இதன்மூலம் கடனாளிகள் முறைகேடுகளில் ஈடு படுவதை தடுக்கமுடியும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN