General Studies-III:
Topic : Conservation, environmental pollution and degradation, environmental impact assessment
Expected Question:
Discuss the reasons why Kerala is experiencing unprecedented flooding? Also, highlight how can we enhance our preparedness for such events?(250 words)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
நன்றி : இந்து தமிழ்
கட்டுரை எண் 1
Expected Question:
Discuss the reasons why Kerala is experiencing unprecedented flooding? Also, highlight how can we enhance our preparedness for such events?(250 words)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதிப்புகளைக் களைய வேண்டும்
கட்டுரை எண் 1
கேரளமும் கர்நாடகத்தின் சில பகுதிகளும் மழை வெள்ளத்தால் உருக்குலைந்திருக்கும் நிலையில், மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் முறைகேடான நடவடிக்கைகளைக் களையும் பொருட்டு, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விஷயங்களை மறுஆய்வுசெய்ய
வலியுறுத்தியிருக்கிறார் கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ். இந்தச் சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு முக்கியப் பொறுப்பு வகிக்கும் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள், காட்கில் குழுவும் கஸ்தூரி ரங்கன் குழுவும் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், தங்களது வரைபடங்களை மீளாய்வு செய்ய வேண்டும்.
வலியுறுத்தியிருக்கிறார் கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ். இந்தச் சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு முக்கியப் பொறுப்பு வகிக்கும் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள், காட்கில் குழுவும் கஸ்தூரி ரங்கன் குழுவும் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், தங்களது வரைபடங்களை மீளாய்வு செய்ய வேண்டும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மேற்குத் தொடர்ச்சி மலையின் பலவீனமான பகுதிகளைப் பாதுகாக்கச் சொல்லி மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு பரிந்துரைத்தது. கொள்கைகள் வகுப்பதில் கேரளம் கொண்டிருந்த குறுகிய பார்வையின் விளைவாகவே இப்போது இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது என மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழுவின் தலைவர் மாதவ் காட்கில் சாடியிருக்கிறார்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆயத்தமாவதுதான் இம்மாநில அரசுகளின் முதன்மையான பணி. மனிதவள மேம்பாட்டையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமஅளவில் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், இந்தப் பணி எளிமையாக இருக்கப்போவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழுவும் (1,29,037 சதுர கி.மீ.) கஸ்தூரிரங்கன் குழுவும் (1,64,280 சதுர கி.மீ.) வரையறுத்திருக்கின்றன.
கேரளத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு குறிப்பிட்ட இடங்களில் 39 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், கஸ்தூரிரங்கன் குழு அடையாளம் காட்டிய சிறு மண்டலப் பகுதிகளில் 4 லட்சம் குடும்பங்களே இருக்கின்றன. இத்தகைய மக்கள்தொகை மாற்றங்களையும், மின்சாரப் பற்றாக்குறையையும் அதன் தேவையையும் கருதி எண்ணற்ற பெரிய அணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி, இதுபோன்ற திட்டங்களை உருவாக்கும்போது இயற்கையின் எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
புதிய அணைகளுக்கான திட்டங்களைக் கைவிட வேண்டும். மின் தேவைக்காக, பெரும் பாதிப்பு தராத பசுமைவழி சூரிய மின்உற்பத்தியைச் சாத்தியப்படுத்த வேண்டும். கேரளம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருக்கும் குவாரி, சுரங்கங்களை அடையாளம் கண்டு அவற்றை நிறுத்திவைக்க வேண்டும். மலைகளைக் குடையும் குவாரி, சுரங்கம் போன்றவை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதியளித்தால் அது நிச்சயம் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். காட்கில் குழு பரிந்துரைத்தவற்றை செயல்படுத்துவதுதான் சிக்கல்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி. இதன் மூலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நடைபெறும் முறைகேடான நடவடிக்கைகளையும் தவிர்க்க முடியும்!
Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice
கட்டுரை எண் 2
நன்றி: Economic and Political Weekly
கேரளாவின் வெள்ளப் பேரழிவை புரிந்துகொள்ளுதல்
கேரளாவின் பேரிடர் தொடர்பான மனிதாபிமான எதிர்வினை ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் விவகாரமாக இல்லை.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட துயரமானது பொதுவெளி எதிர்வினையை மூன்று தளங்களில் உருவாக்கியதாகத் தோன்றுகிறது. முதலில், அடிப்படையான தளத்தில், மாநில மற்றும் நாட்டு எல்லைகளை தாண்டிய, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தன்னியல்பாக வெளிப்படுத்திய மனிதாபிமானம். இந்த தளத்திலான எதிர்வினைகள் எந்த முன்கூட்டிய கணக்குகளும் கொண்டிராதவை. உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், அதிலும் குறிப்பாக அரசு சாரா அமைப்புகளிடமிருந்து கேரளாவிற்கு வந்து குவிந்துகொண்டிருக்கும் மனிதாபிமான உதவிகள் அசாதாரணமானவை. இந்தச் செயல்கள் வரையறுக்கபட்ட எல்லா எல்லைகளையும் தாண்டியவை, பொதுவான மனிதாபிமானம் எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுகிறவை, உள்நாட்டின் மற்றும் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து உதவிப்பொருட்களை திரட்ட வைத்தன, மனித உணர்வுகளைத் தூண்டின. இந்த முதல் தளத்தில் நடந்த எதிர்வினை மூன்று விஷயங்களில் தார்மீக ரீதியாக தூய்மையானது. முதலில், இது யாரும் யாரையும் குற்றம்சாட்டவில்லை. இரண்டு, மோசமான வெள்ள நிலைமையின் அவலத்தை குறைக்க, அதில் பங்கெடுக்க தங்களது சொந்த சொத்துக்களைக் கூட நன்கொடையாகத் தர முன்வந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் தார்மீக எண்ணங்களை சுருக்கமாக, தெளிவாகக் காட்டியது. இறுதியாக, இந்த தார்மீக முயற்சி யாருடைய வேண்டுகோளுக்கும், வாழிகாட்டுதலுக்கும் காத்திராமல் தன்னியல்பாக நடந்தது.
ஆனால், இரண்டாவது தளத்தில் எழும் எதிர்வினையில் இது நடப்பதில்லை. நிலைமையை சமாளிப்பதைப் பற்றிய இடைவிடாத விமர்சனத்துடன் இது தொடங்குகிறது. இதில் இந்த முறை இலக்கு வைக்கப்பட்டிருப்பது பேரழிவில் சிக்கியிருக்கும் கேரள அரசாங்கம். கேரளா நிகழ்வு காட்டுவதைப்போல் முக்கியமாக இரண்டு விதமான விமர்சங்னகளால் இந்த எதிர்வினை நடந்தது: சுற்றுச்சூழிலாளர்கள், கேரள அரசியலில் மற்றும் பொருளாதரத்தில் பங்குகொண்டிருப்பவர்கள். தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கு அவ்வப்போது தந்துவந்த எச்சரிக்கைகளை எந்த அரசாங்கமும் காதுகொடுத்து கேட்கவில்லை என்பது சுற்றுச்சூழிலாளர்கள் வைக்கும் விமர்சனம். கேரள வளர்ச்சி மாதிரி மற்றும் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தால் உருவாகியுள்ள நுகர்வோர் மற்றும் வீட்டுச் சந்தை ஆகியவற்றுடன் ‘’வளர்ச்சி’’ குறித்த வழிபாட்டுணர்வு ஆகியவற்றின் காரணமாக கேரளா மற்றும் கேரளாவிற்கு வெளியே உள்ள நிபுணர்கள் தந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. சமீப காலங்களில் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த அரசாங்கங்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகள் தரப்பட்டன, அவை குப்பைத்தொட்டியில் போடப்படவில்லை என்றாலும் படித்துவிட்டு ஓர் ஓரமாக வைக்கப்பட்டுவிட்டன. ஆக, வளர்ச்சி பற்றிய அரசியல் தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து மனிதகுலத்தின் பேரழிவிற்கு அழைப்புவிடுத்தது. ஆகவே இரண்டாவது தளத்திலான எதிர்வினையானது முதல் தளத்திலிருப்பதைப் போலல்லாமல் உணர்வுரீதியாக தன்னியல்பானதல்ல என்பதுடன் அறிவியல் உண்மை என்ற சக்தியைக் கொண்டுள்ளது. ஆகவே நிபுணர்கள் பொறுப்பை இயற்கையின் மீது சுமத்தாது மனிதர்களின் சுயநலன்கள், அந்த நலன்களை பாதுகாக்கும் அரசு நிறுவனங்களின் மீது சுமத்துகின்றனர்.
ஆனால், கேரள பொருளாதாரத்தில் பங்குடையவர்கள் பொருளாதாரத்தின், அதன் உற்பத்தித் துறைகள் மற்றும் பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் மீதான இந்தப் பேரழிவின் பாதிப்பு பற்றி கவலை கொண்டிருக்கிறார்கள். இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவு கேரளாவின் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளையும், சுற்றுலா மற்று வீட்டுவசதித் துறைகள், விவசாயம் மற்றும் முதன்மைத் தொழிற் துறைகளை பாதிப்பதுடன் பாரம்பரியமான தொழிற்துறையையும் பாதிக்கும். ஏற்பட்டுள்ள சேதங்களைப் பற்றிய தொடக்க மதிப்பீடு 20,000 கோடி. ஆனால் இன்னும் முறையாக மதிப்பீடு செய்யாததால் சேதங்கள் இதை விட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றுலாத் துறையின் மதிப்பு 30,000 கோடி. இது கேரளாவின் மொத்த பொருளாதாரத்தில் 10%, சுமார் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கும் இந்தத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலம் இருக்கக்கூடிய பொருட்கள், குறைந்த காலமே இருக்கக்கூடிய பண்டங்கள் என இரண்டிற்குமான தேவை அடுத்த கொஞ்ச காலத்திற்கு, குறிப்பாக இப்போது வரக்கூடிய ஓணம் விழாவின் போது பெருமளவில் குறையும். இந்த விழாக் காலத்தில் எந்திர வாகனங்களின் விற்பனையையும் இது எதிர்மறையாக பாதித்துள்ளது. இந்த எதிர்வினைகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பானவை. நட்டமும், வாழ்வாதார இழப்புகளும் மதிப்பிடப்பட வேண்டியுள்ளது.
மூன்றாம் தளத்தில், எதிர்வினை சற்று தாமதமாக வந்தது. அது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் அது அறிவியலின் அடிப்படையிலோ அல்லது பிரச்னையை தீர்ப்பதன் அடிப்படையிலோ வெளிப்படுத்தப்படவில்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஏற்பட்டது என்று எதிர்வினை வந்தது. கேரள அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பிய ஆனால் அது செய்ய முடியாது போனவர்களான வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் எதிர்வினையில் இது வெளிப்பட்டது. கேரள அரசாங்கத்தை வேறு வகையில் தாக்கினார்கள். சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்வதை சாத்தியமாக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் காரணமாகவே இந்தப் பேரழிவு ஏற்பட்டதாகச் சொல்லி பேரழிவிற்கு அரசாங்கத்தை குயுக்தியான வழியில் பொறுப்பாக்கினர். ஆனால் இந்த எதிர்வினையானது 1934ல் நடந்த நேபாளம்-பீகார் பூகம்பத்தின் போது எம்.கே.காந்தி வைத்த எதிர்வினையிலிருந்து வேறுபட்டது. தங்களது லட்சக்கணக்கான சகமனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் பீகாரின் உயர் சாதியினரை கடவுள் தண்டிக்க செய்த செயல் அது எனக் கூறினார். கேரளாவின் பேரழிவை வலதுசாரிகள் பார்ப்பதைப் போலல்லாமல் கடவுளின் மூலமாக சமூகப் பொறுப்பை சக மனிதர்களை மனிதர்களாக நடத்தாத மனிதர்களின் மீது சுமத்தினார். கேரளாவின் வெள்ள விஷயத்தில் சமத்துவத்தை கடைபிடிக்காத மக்களின் மீது வலதுசாரிகள் பொறுப்பை சுமத்தவில்லை. மாறாக, குயுக்தியான முறையில் கடவுள் வழிபாட்டில் பாலின சமத்துவமின்மையை நீட்டிக்க கடவுளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த மூன்று தள எதிர்வினைகளை தாண்டிச் செல்கையில் பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளானது மாநில அரசின் நிர்வாக எந்திரம் மற்றும் அதிகாரிகள், ராணுவம், கப்பற்படை, விமானப்படை, தேசிய பாதுகாப்பு மற்றும் மீட்புப் படைகள், தேசிய மற்றும் மாநில அளவிலான மருத்துவ அணிகள் ஆகியோரால் பாராட்டிற்குரிய வகையில் திறம்பட செய்யப்பட்டது. மீனவ சமூகத்தின் நிபுணத்துவம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் அவர்கள் காட்டிய மேன்மையான மனம் கொண்ட முயற்சிகள் பெரும் பாராட்டிற்குரியவை. கேரளாவின் கிராம மற்றும் நகர்ப்புறத்தின் பெரும்பகுதி பேரழிவின் துயரத்தில் சிக்கியிருந்த நிலையில் கேரள மக்கள் மேலோட்டமான எல்லைகளை மீறி எழுந்து நின்று தங்களை சூழ்ந்திருக்கும் பொதுவான துயரத்தை வெல்வதில் தங்களது உறுதியை, துணிச்சலை, ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice
Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice
No comments:
Post a Comment