பாகிஸ்தான்: புதிய அரசும் பழைய பிரச்சினையும்

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg



General Studies- II

Topic :Bilateral, regional and global groupings and agreements involving India and/or affecting India’s interests

நன்றி : இந்து தமிழ்


பாகிஸ்தான்: புதிய அரசும் பழைய பிரச்சினையும்


பாகிஸ்தான் பிரதமராக பி.டி.ஐ (தெஹ்ரீக் இ- இன்சாப்) கட்சித் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றிருக்கும் நிலையில், அவரது வெற்றியின் பின்னணி குறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன. இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசடியான தேர்தல் இது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. “அதிகாரங்களின் கைகளிலேயே நீதி தங்கியுள்ளது அதனை மக்களிடம் கொண்டுவர வேண்டும்” என்றெல்லாம் பிரச்சாரம் செய்த இம்ரான் கான் ராணுவ அதிகாரத்தின் துணையுடனேயே ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. பல அடுக்குகளைக் கொண்ட விவகாரம் இது.


Image result for pak pM


பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பி.எம்.எல். என்) போன்ற கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த முறை அக்கட்சிகளைத் தவிர்த்துவிட்டு இம்ரான் கானைப் பிரதமராக்கியிருக்கிறது ராணுவம். பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ-யுடன் இணைந்து பி.டி.ஐ. கட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்கும் வேலைகளை, அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சிதைக்கும் வேலையை ராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்தது.
அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும்நவாஸ் ஷெரீப் லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்து, அவர் ஊழல் செய்ததாக நிரூபித்து அவரைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். தேர்தலில் நிற்பதற்குத் தடை விதித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது. ராணுவத்துடன் மோதல் போக்கை நவாஸ் ஷெரீப் கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. பி.டி.ஐ. அல்லாத பிற கட்சி வேட்பாளர்களது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்தது தேர்தல் ஆணையம். மேலும் வேட்பாளர்களைக் குறி வைத்து குண்டுத் தாக்குதல்களும் நடந்தன. டான், ஜங் உள்ளிட்ட முன்னணி பத்திரிகைகளின் விநியோகம் முடக்கப்பட்டது, செய்தித் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்.
மொத்தத்தில், இம்ரான் கானுக்கு எதிராகக் களமிறங்கியவர்களை அச்சுறுத்தும் நோக்கில் ராணுவம், ஐ.எஸ்.ஐ, நீதிமன்றம் ஆகியன ஒன்றிணைந்து பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டன. வாக்குப்பதிவின்போதும் அடக்குமுறை தொடர்ந்தது. சில வாக்குச்சாவடி நிலையங்களுக்குள் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. ராணுவ அதிகாரத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் இம்ரான் கான் மக்கள் நலனை விட ராணுவத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் எனும் அச்சமும் எழுந்திருக்கிறது.
ராணுவ ராஜ்ஜியம்பாகிஸ்தான் வரலாற்றை அறிந்தவர்கள் அந்நாட்டின் ராணுவம் கொண்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் தெரிந்துவைத்திருப்பார்கள். பாகிஸ்தானின் அதிகாரமானது ஜனநாயகரீதியிலான அரசின் கையிலும் ராணுவத்தின் கையிலும் மாறி மாறிச் சென்றிருக்கின்றன. 35 வருடங்களுக்கு மேலாக நேரடியான ராணுவ ஆட்சியில் இருந்தது பாகிஸ்தான். மீதம் உள்ள ஆண்டுகளிலும் ராணுவத்தின் மறைமுக ஆட்சி இருந்தது வேறு விஷயம். பொதுவாக, ஒரு நாட்டில், அரசு நிறுவனங்களையும் ராணுவத்தையும் அரசே கட்டுபடுத்தும். பாகிஸ்தானில் கதையே வேறு. நாட்டின் மொத்த உற்பத்தித் துறையின் மூன்றில் ஒரு பங்கை ராணுவம் கட்டுப்படுத்துகிறது.
ராணுவத் துறையிலுள்ள தனியார் சொத்துக்களின் பெறுமதி 20 பில்லியன் டாலர்களாகும். மிகப் பெரும் உற்பத்தி நிறுவனங்கள், பேக்கரிகள், பல் பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கோல்ப் மைதானங்கள் என்பன பாகிஸ்தானிய ராணுவத்தினரின் கட்டுப்பாடின் கீழேயே உள்ளன. பல ராணுவ அதிகாரிகள் பில்லியனர்கள். ஒரு புறம் வறுமை, ஊழல், வேலையில்லாப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மறுபுறம் இராணுவ அதிகாரிகள் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுபட பாகிஸ்தானிய ஒடுக்கப்படும் மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் திரண்டு போராட வேண்டும் என்று அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள், அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மேலும், ஒடுக்கப்படும் மக்களுக்காக இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் இயங்கும் மக்கள் அமைப்புகள், தொழிலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து தங்கள் பிராந்திய பலத்தை விஸ்தரிக்க வேண்டும்.
பாகிஸ்தான் மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானின் வளங்களை ராணுவத்துக்குப் பதிலாக மக்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதன் மூலம் திட்டமிட்ட பொருளாதாரக்கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
 - சு.கஜமுகன் (லண்டன்)
தொடர்புக்கு: gajan2050@yahoo.com



Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN