General Studies-IV:
Topic – ethical concerns and dilemmas in government ; strengthening of ethical and moral values in governance
Expected Question for UPSC exam (Tamil):
How we deal with those excluded out of NRC will determine how humane our democracy actually is. Comment.(250 words)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
நன்றி : Economic and Political Weekly

என்.ஆர்.சி.-யின் மையக் கருத்தும் உட்கருத்தும்
குடிமக்கள் தேசியப் பதிவேடு நேரடியாக வெளிப்படுத்தும் விஷயங்களை விட அதில் மறைந்திருக்கும் விஷயங்கள் அதிகம்.
குடிமக்கள் தேசியப் பதிவேடு (நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிஸன்ஸ்; என்.ஆர்.சி) கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியவர்கள் இதன் வரைவு இறுதிபடுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவது ‘’வெளியாட்களின் தொல்லைகளிலிருந்து’’ ஓரளவு நிம்மதியை பெற்றுத்தரும் என இப்போது கருதக்கூடும். வெளியாட்கள் பற்றி புகார் கூறுபவர்களைப் பொறுத்தவரை ‘’வெளியாட்கள்’’ என்பவர்கள் என்.ஆர்.சி-யின் கீழ் கருத்தில்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள
சமூக மற்றும் நிறுவன கட்டமைப்பு உருவாக்கித்தரும் வாய்ப்புகளை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியவர்கள். இந்த நடவடிக்கையில் உள்ள இந்த சாதகமான அம்சத்தைத் தவிர்த்து, புகார் தெரிவிப்பவர்கள் சிலருக்கும் இது நிம்மதியைத் தந்திருக்கிறது. தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்ற தங்களது அடையாளம் ‘’முறையான, பாரட்சமற்ற வகையில்’’ உறுதிபடுத்தப்படும் பட்சத்தில் எந்தக் கவலையும் இல்லாமல், எந்த சந்தேகப்பார்வைக்கும் ஆளாகாமல் பொதுவெளியில் நடமாடும் சமூக உரிமையைப் பெற முடியும் என்று நம்புகின்றனர்.

ஓர் ‘’இந்தியர்’’ வெளியாட்களுக்கு அல்லாமல் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆற்ற வேண்டிய தார்மீகக் கடமையை ஆற்றுவதற்கான ஆரோக்கியமான, சமூக மற்றும் தார்மீகச் நிபந்தனைகளை இந்த நடவடிக்கை உருவாக்கும் என என்.ஆர்.சி-யின் மையக் கருத்து தெரிவிக்கிறது. இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஒருவர் வெளியாட்களுக்கு அல்லாமல் தனது சொந்த ஆட்களுக்கு செய்ய வேண்டிய கடமையை ஆற்றுவதற்கான ‘நியாயமான’’ சூழல்களை உருவாக்குவதில் தனக்கிருக்கும் விருப்பத்தை அது முறையாக தெரிவிப்பதாகத் தெரிகிறது. என்.ஆர்.சி மூலம் வெளியாள் பிரச்னை தீர்க்கப்பட்ட பின்னர் வெளியாட்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள், ஒருவருக்கொருவர் கடன்பட்ட உள்ளூர்காரர்கள் மட்டுமே இருப்பர் என்பதே இதன் பொருள்.
இதுதான் நிலவும் நிலைமையா? குடியேற்றக்காரர்கள் தாங்கள் வாழும் பகுதியிலுள்ள மண்ணின் மைந்தர்களுடனான அவர்களது தினசரி அனுபவம் காட்டுவது என்ன? ’’உள்ளூர்காரர்கள்’’ அதாவது மண்ணின் மைந்தர்கள் குடியேற்றக்காரர்களை பார்க்கும் பார்வையானது தாங்கள் மனிதகுலத்தைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணத்தையே குடியேற்றக்காரர்களிடம் அழித்துவிடுவதாக இருக்கிறது. ஆக, பொதுவெளியில் தன்னம்பிக்கையுடன், சுதந்தரத்துடன் நடமாடுவது பற்றிய கேள்வியே இந்தியச் சூழலில் ஒரு பொத்தாம் பொதுவான கேள்வி. நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து வந்த ஒரு குறிப்பிட்ட வெளியாளை சுட்டுவதன் அடிப்படையில் இந்தக் கேள்வியை வரையறுக்க முடியாது.
மனித உரிமைகள் இழப்பு, தவறாக அடையாளம் காணப்படுதல் ஆகியவற்றை என்.ஆர்.சி. முடிவுக்கு வந்துவிடாது. நகைமுரணுக்குரிய வகையில் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தங்களது வழக்கமான மொழியில் சொல்லும் ‘’இதை செய்யும் துணிவு எங்களுக்கு இருக்கிறது, நாங்கள்தான் இதை முதலில் செய்கிறோம்’’ என்ற பேச்சில் தார்மீக வலு இல்லை. இத்தகைய மொழியின் வீரமான தொனி அதன் உள்ளுறையும் சோகத்தை காண மறுக்கிறது. அது எவ்வளவு விரும்பத் தகுந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், என்.ஆர்.சி.யை நிறைவேற்றுவதன் மூலம் உருவாகக்கூடிய நெருக்கடியை, ஏராளமானவர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியை வெறும் துணிவு ஒன்றுடன் மட்டும் தீர்த்துவிட முடியுமா?
வெற்றியைக் கொண்டாடும் இத்தகைய மொழி மனித சமூகத்திற்கு தன்னை நீட்டிக்கத் தவறுவதுடன் தார்மீக உணர்வுகள் வற்றிப்போவதையும் காட்டுகிறது. எல்லைக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் தங்களது சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தும் அதில் தொக்கியிருக்கிறது. 1984-85 காலகட்டத்தில் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரின் போது இஸ்ரேல் அரசாங்கம் கடைபிடித்த அணுகுமுறையை இது ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த உள்நாட்டுப் போரின் போது சூடானின் அகதி முகாம்களில் சிக்கிக்கொண்டிருந்த எத்தியோப்பிய யூதர்களை மட்டும் காப்பாற்ற இஸ்ரேல் விமானங்களை அனுப்பியது. இதற்கு அரபு நாடுகள் தெரிவித்த எதிர்ப்பை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டவர்களில் எத்தியோப்பிய யூதர்களிடம் மட்டும் அதிக மனித மதிப்பை இது காண்பதால் தார்மீக அடிப்படையில் பார்க்கும்போது இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த நிலைபாடு பிரச்னைக்குரிய ஒன்று. ஆனால் இந்தியாவின் விஷயத்தில் அதிகாரவர்க்க எந்திரத்தால் அல்லது பிரிவினையால் உந்தப்பெற்ற தலைவர் அல்லது அத்தகைய தலைவர்களின் தலைமையில் நடத்தப்படும் எந்தவொரு அரசும் மனிதகுலத்தின் விதியை தீர்மானிக்கும் விஷயத்தில் பிரிவினைவாத அணுகுமுறையையே மேற்கொள்கிறது. இங்கு எழும் கேள்வி இதுதான்: மண்ணின் மைந்தர்களின் வெறுப்பிற்கும் பரிதாபத்திற்கும் எளிதில் ஆளாகக்கூடிய நிலைக்கு ஏராளமானவர்களை அனுப்பும் ஒரு நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டுமா? பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள் குடிமைச் சமூக உறுப்பினர்களின் தீவிரமான வெறுப்புணர்வுக்கும் இந்திய அரசின் நிரந்தரமான சந்தேகத்திற்கும் இடையில் பந்தாடப்படுவார்கள் என்பதே என்.ஆர்.சி.யின் உட்கருத்து. சிலர் வேண்டுமானால் வெளியாட்களை வெறுப்பாக பார்க்காது, பரிதாபப்படலாம். ஆனால் விலக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பரிதாபம் எந்த இளைப்பாறலையும் தராது.
விலக்கப்பட்டதால் பாதிப்பிற்குள்ளானவர்களின் பேரதிர்ச்சியடைந்த, கலங்கிப்போன முகங்களை அரசாங்கம் நோக்குமெனில் பாதிக்கப்பட்டவர்களிடம் அதற்கு பரிவு ஏற்படும், பிரச்னையில் தெளிவான நிலைபாட்டையாவது எடுக்காதிருக்கும். பாதிக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களுக்கு தெளிவற்ற நிலைபாட்டை எடுப்பது தவறாகபடக்கூடும். ஏனெனில் அது, உள்ளூரிலுள்ள சட்டபூர்வமான குடிமக்களுக்கும் அப்படியாக அல்லாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டை வரையறுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக போராடுபவர்களின் ஊக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்துகிறது. ஆனால் தெளிவான நிலைபாட்டை எடுக்காதிருப்பது தவறான நோக்கத்தைக் கொண்டதல்ல என்ற வகையில் இந்தத் தவறுக்கு நெறி சார்ந்த கோணம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனை பேரிடருக்குள்ளாக்கும், கலங்கவைக்கும் நடவடிக்கையை இந்தத் தவறு (தெளிவான நிலைபாட்டை எடுக்காதிருப்பது என்ற தவறு) தவிர்க்கிறது.
ஆகவே, ஒருவரது சொந்த மக்களிடமே காட்டப்படும் விருந்தோம்பலின்மை, சில சமயங்களில் வெளிப்படையான பகைமையுணர்வு மனித சமூகத்தின் மீதான அக்கறையுணர்விலிருந்து விலகிச்செல்கிறது. இந்த அடிப்படையான தார்மீக அம்சம் அரசு, குடிமைச் சமூகம் இரண்டுக்குமே பொருந்துவது.
Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice
No comments:
Post a Comment