ஒரு நாடு ஒரே தேர்தல்(SIMULTANEOUS ELECTION)

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg



General Studies-II: 

Topic: Parliament and State Legislatures – structure, functioning, conduct of business, powers & privileges and issues arising out of these. 

Expected Question: 

1. Examine the merits and demerits of conducting simultaneous elections for Lok Sabha and Assembly


2. Analyze the feasibility of holding simultaneous election in India in the near future?



1.மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கு ஒரே நேரத்தில்  தேர்தல் நடத்தினால் ஏற்படும்  நிறை  மற்றும் குறைகளை  ஆய்க.



2.எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்.




கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்.


contact mail ID  tnpscprime@gmail.com


நன்றி : இந்து தமிழ்

ஒரே நேரத்தில் தேர்தல்(SIMULTANEOUS ELECTION) : மத்திய அரசு கைவிட வேண்டிய கோரிக்கை


மக்களவைத் தேர்தலையும் மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசும் பாஜக தலைவர்களும் கோரிவந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணான இந்தக் கோரிக்கையை, வலுவற்ற காரணங்களின் அடிப்படையில் வலியுறுத்திவரும் பாஜக தலைவர்கள் அதைக் கைவிட வேண்டும் என்பதை உணர்த்தும் சமிக்ஞை இது.

Image result for one nation one election


ஒரே சமயத்தில் தேர்தல்(SIMULTANEOUS ELECTION) நடத்துவதற்கு எண்ணற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு ஒப்புகைச்சீட்டுப் பதிவு இயந்திரங்களும் தேவைப்படும். சட்டப்பேரவையின் கால அளவு குறித்து அரசியல் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர வேண்டியிருக்கும் என்பதையும் ராவத் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
டிசம்பரில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுடன், மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தேர்தலை நடத்துவது குறித்த பரிசீலனைகளையும் நிராகரித்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை ஆதரிப்பவர்கள், ‘ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்று இல்லாமல், மாநில அரசுகளின் ஆட்சிக் காலத்துக்கேற்ப தேர்தல் நடத்துவதால் பெருமளவு செலவு ஏற்படுகிறது; தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதால் புதிய திட்டங்களைக் கொண்டுவர முடிவதில்லை’ என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள்.
உண்மையில், எல்லா மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சராசரியாக ரூ.8,000 கோடி மட்டுமே செலவாகிறது. இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டுக்கு இது பெரிய செலவு அல்ல.
மேலும், ஒரே சமயத்தில்தான் தேர்தல் என்பது நடைமுறைப் படுத்தப்பட்டு, ஒரு சட்ட மன்றம் கலைக்கப்பட்டுவிட்டால், ஆளுநர் ஆட்சி மூலம் மத்திய அரசின் வசம் அரசு நிர்வாகம் சென்றுவிடும்.
இது கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்குப் பரவலான அரசியல் கருத்தொற்றுமையும் வெவ்வேறு மாநில, தேசியக் கட்சிகளின் சட்டபூர்வ ஒத்துழைப்பும் தேவைப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு 24 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதற்கு ஈடான வாக்கு ஒப்புகைச்சீட்டுப் பதிவு இயந்திரங்களும் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கும் பொருட்டு இந்தியாவுக்கு முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்றங்களின் பதவிக்காலத்தை ஒரே நேரத் தேர்தல் என்பதற்காக இப்போது குறைக்க முற்பட்டால் அது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் அவமதிப்பதாகாதா?
ஒரே நேரத்தில் தேர்தல்களை(SIMULTANEOUS ELECTION) நடத்த முற்பட்டால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள், சவால்களும் மிக அதிகம். எனவே, இந்த யோசனையைக் கைவிட்டுவிட்டு அடிப்படையான தேர்தல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது நல்லது.



கட்டுரை எண் 2: BBC தமிழ் 



நடைமுறை சாத்தியமா?
மத்தியில் இருக்கக் கூடிய ஓர் ஆட்சி, பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தினால், மூன்று ஆண்டுகளில் கவிழுமானால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணத்துக்காக அனைத்து மாநில ஆட்சிகளையும் கவிழ்ப்பார்களா? அல்லது இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தின் ஆட்சி கவிழுமானால் இவர்கள் மத்தியில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஆட்சி கவிழ்ந்த மாநிலத்தில் ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக நடைமுறை. இவர்கள், ஆட்சி கவிழ்ந்த ஏதோ ஒரு மாநிலத்தில், ஒரே சமயத்தில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்ற யோசனையுடம் `ஒரே தேர்தல்` முறையை முன்வைப்பார்களானால் அது ஜனநாயக படுகொலை என்கிறார்.
ஜனநாயக முதலீடு
தேர்தல் செலவு குறையும் என்ற வாதத்தையும் செந்தில்நாதன் எதிர்க்கிறார்.
"தேர்தல் செலவை குறைக்கிறோம் என்ற காரணத்தை முன்வைத்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துகிறோம் என்று சொல்ல முடியுமா? தேர்தலுக்காக செலவு செய்வது என்பது ஜனநாயகத்துக்கான முதலீடு. இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்பதே அதன் தேர்தல் முறையில்தான் இருக்கிறது. அந்த தேர்தல் முறையையே ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைப்பதன் தொடக்கம்தான் இந்த `ஒரே தேர்தல்` என்ற வாதம்." என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

அரசமைப்புச் சட்டம் திருத்தம்
"நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்." என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.
மற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN