பிட்காயின் என்றால் என்ன ?

GENERAL STUDIES- III:


TOPIC: 
Awareness in the fields of IT, Space, Computers



Expected Question for UPSC  exam (Tamil): 


What are bitcoins? How are they beneficial in financial services? Can they be sustainable as an idea? Discuss.

மெய் நிகர் நாணயங்கள் என்பது என்ன ? அவை நிதியியல் சேவைகளில் எவ்வாறு உதவுகின்றன.அதன் நிலைத்தன்மை குறித்து விவாதி.

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

Discuss

விவாதிக்க


இது ஒரு முழுமையான பதிலை எழுத முற்படுவதாகும், இது கேள்வியின் முக்கிய கோரிக்கையைப் பற்றி விரிவாக எழுதுவதாகும். பிரச்சினை பற்றிய ஒரு முழுமையான தகவல்களை (நேர்மறை மற்றும் எதிர்மறை) வெளியில் கொண்டு வர வேண்டும், கேள்விக்குரிய மற்றும் முக்கியமான அம்சங்களைப் பற்றியும் நீங்கள் விவாதிக்க வேண்டும்.

contact mail ID  tnpscprime@gmail.com




பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின்களுக்கென இரண்டு முக்கிய பண்புகளுள்ளன: இது மின்னணு வடிவிலானது மற்றும் மாற்று பணமாக கருதப்படுகிறது. உங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் பணத்தாள் அல்லது சில்லரைகளை போன்றல்லாமல், இது பெரும்பாலும் இணையத்திலேயே இருக்கும்.
இரண்டாவதாக, பிட்காயின் என்பது அரசாங்கத்தாலோ அல்லது பாரம்பரிய வங்கிகளினாலோ அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதில்லை. எக்ஸ்பீடியா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தங்களது சேவைகளில் பிட்காயின்களை மெய்நிகர் டோக்கன்களை போன்று ஏற்றுக்கொள்கின்றன.
இருந்தபோதிலும், பெரும்பான்மையான பயனர்கள் பிட்காயின்களை ஒரு நிதி முதலீடாக எண்ணி அவற்றை வாங்கி விற்கிறார்கள்.


ஆனால், கடைசியில் பார்க்கும்போது பிட்காயின் என்பது மின்னணு குறியீட்டை கொண்ட ஒரு மென்பொருளேயாகும்.
வங்கியில் பணத்தை செலுத்துவதைவிட பிட்காயின் என்பது பாதுகாப்பானதாகுமா?
"பிட்காயின்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. எனவே, தற்போது பிட்காயின்களில் முதலீடு செய்துள்ளவர்கள் அதன் விவரங்களை பிரதியெடுத்து, லாக்கருக்குள் வைத்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றால், ஒரு உலகளாவிய பணப்பை பதிவேட்டை தொடங்கி, அதன் மூலம் யார் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதையும் பரிவர்த்தனைகள் எங்கிருந்து நடைபெற்று வருகின்றன என்பதையும் நாம் அறியும்படி செய்யலாம். 

பிட் காயின்! ஒரு அடிப்படை அலசல்...
சில மாதங்களுக்கு முன்பு 150 நாடுகளில் இன்டர்நெட் மூலம் வைரஸ் பரவியது.கூடவே அவ்வைரஸை பரப்பிய மர்ம நபர்களிடமிருந்து ஒரு மிரட்டாலும் வந்தது. இதை சரி செய்யவேண்டுமெனில் எங்களுக்கு பிட்காயின்ஸ் வேண்டும் என்பதுதான் அந்த மிரட்டல். அப்போதுதான், உலகில் பலர் பிட்காயின் என்றால் என்ன?!!... என்று யோசிக்க அரம்பித்தார்கள். பிட்காயினை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுமெனில், நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது, பணத்தின் வரலாறு.

முதலில், பண்டமாற்று முறையிருந்தது, பின்பு நாணயங்கள் வந்தது, அதைத் தொடர்ந்து கரன்சி நோட்டுகள் வந்தன, அதன் பின்பு டெபிட், க்ரெடிட் கார்டுகள், தற்போழுது அது ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை வரை வந்திருக்கிறது. இதே வரிசையில்தான் இப்பொழுது பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி என்ற முறை அறிமுகமாகியுள்ளது. ஆனால் பிட்காயின், மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்திலிருந்தும் வேறுபட்ட பணம். எதிர்காலத்தில் உலகம் முழுக்க பிட்காயின்கள்தான் கரன்சிகளாக பயன்படுத்தபடும் என்று கிரிப்டோ எக்கனாமிஸ்ட்டுகள் கணிக்கின்றனர்.

டாலர் என்பது அமெரிக்க பணம், பௌண்டு என்பது ஐரோப்பியப் பணம், ருப்பீ என்பது இந்திய பணம். ருப்பீயை ரீசர்வ் வங்கி கட்டுபடுத்துகிறது. ஆனால் பிட்காயினை எந்த நாடும் தங்களுடையதென்று சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், பிட்காயின் என்பது ஒரு எண். அது உருவமில்லாத டிஜிட்டல் பணம். அதை தங்கத்தை போலவோ, கரன்சியை போலவோ தொட்டுணரமுடியாது. நாடுகளுக்கு தேவைபடும்பொழுது கரன்சிகளை அச்சிடுக்கின்றனர், அதற்கு எல்லையே இல்லை. இந்திய அரசு முன்பெல்லாம் தங்கத்தின் கையிருப்பை கணிக்கில்கொண்டுக் கரன்சியை அச்சிட்டது. தற்பொழுது, அந்த முறையை பின்பற்றுவதில்லை. ஆனால் பிட்காயின்களுக்கு ஒரு லிமிட் இருக்கிறது. அதனுடைய மொத்த எண்ணிக்கையே 21 மில்லியன்தான், இதை அதிகரிக்கவே முடியாது. ஆனால் உலகத்தின் மக்கள் தொகை இதைவிட பல ஆயிரம் மடங்கு அதிகம், அவ்வளவு பேருக்கும் பிட்காயின் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று நமக்கு ஒரு கேள்விவரும், அதற்கு எளிமையான ஒரு பதில் இருக்கிறது. 

பிட்காயின் என்பது ஒரு எண். அந்த எண்னை எத்தனை முறை வேண்டுமானலும் வகுத்து சிறிதாக்கலாம். 1 ரூபாவை 100 பைசவாக வகுக்கின்ற மாதிரி ஒரு பிட்காயினை ஏற்கனவே எட்டு டிஜிட்டு வரை வகுத்திருக்கிறார்கள், அதற்கு சடோஷி என்று பெயர். தேவை அதிகரித்தால் ஒரு பிட்காயினை பதினாறு டிஜிட்டுக்கு வகுத்து பங்கிட்டு கொள்ளலாம். மக்கள் தங்கம் வாங்க குவிந்தால் தங்கத்தின் தேவை அதிமாகி அதனுடைய விலையும் உயரும். அதுபோல பிட்காயினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதன் தேவை கூடி, அதனுடைய மதிப்பும் கூடிவிடும். 2009-ஆம் ஆண்டு சடோஷி நாகமோட்டோ என்கிற ஜப்பானியர் பிட்காயினை அறிமுகப்படுத்தினார்.

க்ரிப்டோகிராபி எனப்படும், பல ரகசிய டிஜிட்டல் பாதுகாப்பு அடுக்குகள் உள்ள, அவர் உருவாக்கிய பிட்காயினை அவரே முயன்றாலும் தன்னுடையதாக்கிக் கொள்ள முடியாது. பிட்காயின்கள் எந்தவொரு வங்கிகளிலும் கிடையாது. ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும் இன்டர்நெட் வழியே எழை, பணக்கார்கள் வித்தியாசமில்லாமல் யார்வேண்டுமானலும் தனக்கென்று ஒரு கணக்கு தொடங்கிக் கொள்ளலாம், அதை வேலட் என்று அழைக்கிறார்கள். நம்முடைய பிட்காயினை யாருக்கு கொடுக்கிறோம், யாரிடமிருந்து வாங்குகிறோம் என்பது ரகசியம். நமக்கிடையில் மூன்றாவதாக எந்த வங்கியோ, நாடோ குறுக்கிட முடியாது. கமிஷனும் கிடையாது.

மேலும், இதற்கென்று நிறைய இணையதளங்கள் இருக்கிறது. இந்திய ரூபாயை கொடுத்து பிட்காயினை பெற்றுக்கொள்ளலாம். இதில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருக்கின்றது என்று கூறப்படுகிறது. இருப்பினும், மைக்ரோசாஃப்ட், டெல், பே பால், எக்ஸ்ப்பீடியா போன்ற பல நிறுவனங்களின் அமெரிக்க கிளைகள் ஏற்கனவே பிட்காயினை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். உலகம் முழுக்க 300-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்-களில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன இந்த பிட்காயின்கள். எதிர்காலத்தில் இதன் அளவு இன்னும் அதிமாகும் என்று கூறப்படுகிறது.

பிட்காயின் வளர்ச்சியை யாரலும் தடுக்க முடியாது, என்று பில்கேட்ஸ் போன்றவர்கள் அவதானிக்கிறார்கள். இந்தியாவிலும் பணமில்லா பரிவர்த்தனை முறை பிரபலாமாகி கொண்டிருக்கிறது. மேலும், இதன் உச்சமாக கரன்சிகள் மறைந்து வங்கிகளும் காணாமல்போய் உலகத்தின் ஒரே பணம், பிட்காயின் என்று மாறினாலும் மாறலாம்.

தமிழ் விக்கிபீடியா 


பிட்காயின் (Bitcoin), மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. சரியிணை வலைப்பின்னல் முறையில் இது இயங்குகிறது.[1]
பிட்காயின் கண்டுபிடித்தவர் சடோஷி நாகமோட்டோ என்பவர் ஆவார். இவர் “ஒருவருக்கொருவர் நேரடியாக கொடுத்து வாங்கக் கூடிய மின்னணு பணம்” என்று இதை வர்ணிக்கிறார். (தனது பிட்காயின் கண்டுபிடிப்பு பற்றிய அவரது 2009ஆம் ஆண்டு குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.) இன்றுவரை அது மிகச் சரியான கூற்றாகவே உள்ளது.
பணத்தை ஒருவர் நேரடியாக மற்றவருக்கு அனுப்பமுடியும். பயன்படுத்துபவரைப் பொறுத்த அளவில் இதை “இணையப் பயன்பாட்டிற்கான பணம்” என்று கூறலாம். அதேநேரத்தில் மூன்றடுக்கு பதிவேட்டுப் பராமரிப்பு (Triple-entry book keeping system) கொண்ட ஒரு நாணயமும் ஆகும்.
பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி, பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.
அடையாளம் காட்டாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும். பிட்காயின்களை தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.

பிளாக்செயின் (BlockChain)

அனைத்து பிட்காயின் பரிமாற்றங்களும் “பிளாக்செயின் (BlockChain)” என்ற நிரந்தர பதிவேட்டில் பதியப்படும். இப்பதிவேட்டை “மைனர்கள்” (கவனிக்கவும் miners.. அதாவது சுரங்கம் தோண்டுபவர்கள்.) மற்றும் “நோடுகள்” (Nodes) ஆகியோர் மட்டும் பதிவுகள் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. (பிட்காயின் மைனிங் என்பது சுரங்கம் தோண்டுதல் போன்றது, ஆனால் டிஜிட்டல் முறையில். சில பார்முலாக்கள் மற்றும் கணக்கீடுகள் கொண்டது. இந்த கணக்கீடுகளை செய்ய பல இடங்களில் உள்ள கணினிகள்தான் “நோடுகள்”. பார்முலாவின் உரிமையாளர்களாகிய தோண்டுபவர்களுக்கு மற்றும் அந்த நோடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே கூலியாக பிட்காயின் புதிதாக கிடைக்கும். தற்போது 10 நிமிடத்திற்கு 12.5 பிட்காயின் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. இதை அவர்கள் நோடுகளின் உரிமையாளர்களுக்கு விகிதப்படி பிரித்து அளிப்பார்கள். மற்ற பயனாளிகள் அதை பெற்று, அதன்பின் பயன்படுத்த உரிமை உள்ளது. மற்றபடி கரன்சி அச்சடிப்பதுபோல் புதிதாகவோ அல்லது போலியாகவோ பிட்காயின் உருவாக்க முடியாது.)

கரன்சியின் டிஜிட்டல் வடிவம்

1995 சமயத்தில் இணையத்தின் பயன்பாடு குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை. ஆனால், அதன்பின் அதன் நுகர்வு மற்றும் வீச்சு பெரிய அளவில் உள்ளது. அதேபோல் இப்போது பிட்காயின் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. ஆனாலும் அதன் பயன் தெரிந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். (சில ஆண்டுகளுக்கு முன் 1 டாலருக்கும் கீழே இருந்த பிட்காயின் இன்று 2700 டாலருக்கு நிகராக உள்ளது.)
பொருளாதர நிபுணர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களைப் பொறுத்தவரையில் இன்னும் பிடிபடாத விஷயமாக இருக்கும் இந்த பிட்காயினின் பயன் வரும்காலத்தில் எவ்வாறு இருக்கும்? இது வெறும் கரன்சியின் டிஜிட்டல் வடிவம் மட்டும்தானா அல்லது பெரிய புத்திசாலித்தனமான வர்த்தகத்திற்கான அடித்தளமா? இது பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசுகளுக்கே சவால் விடும் அளவுக்கு வளருமா அல்லது கவனிக்கப்படாமல் போய்விடுமா? இந்தக் கேள்விகளுக்கு பதில் உங்களுக்கு தெரியுமானால் அல்லது உங்களால் ஊகிக்க முடிந்தால் ஒரு பெரிய வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது.

ப்ளாக்செயின்

ப்ளாக்செயின் என்பது அடிப்படையில் ஒரு பதிவேடாகும். பிட்காயின் உலகின் முதுகெலும்பு போன்றது. பிட்காயின் உருவாக்கம், பரிமாற்றம் ஆகிய அனைத்து பிட்காயின் நடவடிக்கைகளும் இந்தப் பதிவேட்டில் ஏற்றப்படுகின்றன. பிட்காயின் மைனர்கள், நோடுகள், பயனாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிஸ்டமாகும். ஒவ்வொரு பரிமாற்றத்தையும் மைனர்கள் (miners) சரிபார்த்து, நேரவரிசைப்படி இப்பதிவேட்டில் பதிவு செய்வார்கள்.
இது வேலை செய்யும் விதம்: மைனர்கள் தங்களிடமுள்ள சிறப்புக் கணினி மற்றும் இதர பயனர்களின் கணினி மூலம் ஒரு புதிருக்கான தீர்வைக் கண்டுபிடிப்பார்கள். அவ்வாறு ஒரு புதிர் தீர்க்கப்பட்டதும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பிட்காயின் கிடைக்கும். அத்துடன் ப்ளாக்செயின் எனப்படும் பரிமாற்றச் சங்கிலியில் ஒரு வளையம் சேர்க்கப்படும். ஒரு வளையம் சேர்க்கப்பட்ட தும் சங்கிலி மீண்டும் சுழலத் தொடங்கும், புதிய புதிர்கள் உருவாகும், மைனர்கள் (miners) மீண்டும் அவற்றுக்கான தீர்வுகளை கண்டறியத் தொடங்குவார்கள்.

மேலும் அறிய (ஆங்கிலத்தில்


1.பிட்காயின் குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்..!

2.கிரிப்டோ கரன்சிகள் உயிருக்கு உலை வைக்கின்றன: பில் கேட்ஸ்


No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN