புவியிடங்காட்டி(GPS) என்றால் என்ன?




புவியிடங்காட்டி அல்லது உலக இடநிலை உணர்வி அல்லது(தமிழ்:தடங்காட்டி) (Global Positioning System - GPS) என்பது உலகத்தில் ஓரிடத்தைத் துல்லியமாக வானில் இருந்து அறியும் ஓர் கருவியும் திட்ட அமைப்பும்
ஆகும். உலகைச் சுற்றி பல செயற்கைத் துணைக்கோள்களை நிறுவி, அதன் உதவியால், வானொலி மின்காந்த அலைகளை வானில் இருந்து வாங்கியும் செலுத்தியும், புவியில் ஓர் இடத்தில் ஓர் உணர்கருவி இருப்பதைத் துல்லியமாக அறியப் பயன்படும் கருவி அல்லது அமைப்பு ஆகும். இது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையால் முதன் முதலில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவின் வானூர்திப் படையின் 50 -வது விண்வெளிப் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. இது மட்டும் தான் உலகத்தில் முழுதும் இயங்கக்கூடிய பயனுடைய உலக இடங்காண் செயற்கைத் துணைக்கோள்கள் அமைப்பு (global navigation satellite system - GNSS) ஆகும். இதை யாராலும் எங்கேயும் எளிதில் பயன்படுத்தமுடியும். இது ஊடுருவுதல் பயன்பாட்டுக்காக பொதுமக்களிடையே பயன்படுத்தப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியிலிருந்து இவை உலகம் முழுதும் இயங்கக்கூடியவையாக மாறின. புவியிடங்காட்டி உலகம் முழுதும் ஊடுருவலுக்கு ஒரு பயனுடைய கருவியாக குறிப்பாக நில வரைபடங்களை உருவாக்குவதற்கும், நில அளவை தொடர்பானவற்றுக்கும், வழியைப் பின்தொடர்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதுடன், தெளிவான நேரக்குறிப்பிற்காக பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது நிலநடுக்கம் பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஜிபிஎஸ் எப்படி இயங்குகிறது?



Global positioning system என்பதன் சுருக்கமான பெயர்தான் GPS. இதில் 24 செயர்க்கைக்கோள்கள் பங்கு எடுத்துகொள்கின்றன இவை அமெரிக்க மிலிட்டரி அப்ளிகேசன்களுக்காக அவர்களுடைய U.S.Department of defence மூலமாக ஆகாயத்தில் விடப்பட்டன. 1980களில் இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் மற்ற மக்களுக்காகப் பயன்பட அளிக்கப்பட்டது.

ஜிபிஎஸ் செயர்க்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளில் இரண்டு முறை வலம் வருகின்றன. அவை தங்களுடைய தற்போதைய இடத்தை எல்லா வேளையிலும் சிக்னல்கள் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கும். ஜிபிஎஸ் ரிசிவர்கள் இந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளும். பிறகு சிக்னல்கள் எந்த நேரத்தில் trasmit செய்யப்பட்டன ,எந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன ஒத்துப்பார்க்கும்.

அந்த இடைவெளி நேரத்தின் மூலம் ரிசிவருக்கு செயற்கைக்கோள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தெரிந்து விடும் . ஒரு ஜிபிஎஸ் ரிசிவர் 3 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைக்கோள்கள் மூலம் சிக்னல்கள் பெறுகிறது. பிறகு Triangulation என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ரிசிவர் இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு விடும். இதை ஒரு எலெக்ட்ரானின் படமாக டிஸ்ப்ளே செய்து விடும்.

ரிசிவருக்கு குறைந்தபட்சம் 3 செயர்க்கைகொல்களிலிரிந்து சிக்னல்கள் தேவைப்படும்.இதன் மூலம் இரு பரிணாமத்தில் இடத்தை ,அதாவது latitude மற்றும் longitude  கணக்க்கிட்டுவிடும். 4 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைகொல்கள் மூலம் சிக்னல்கள் கிடைத்தால் ரிசிவர் அது எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும்.

பயனாளரின் இடத்தை தெரிந்த உடன் ரிசிவர் வேறு பல விசயங்களையும் கணக்கிட முடியும். சராசரி வேகம் எந்தத்திசையில் செல்கிறது நீங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு உள்ள தூரம் போன்றவை. ஜிபிஎஸ் ஒரு நாளில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். வெயிலோ ,மழையோ ,மேகம் இருக்கிறதோ .இல்லையோ , ஒற்றைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது சென்னையாக இருந்தாலும் சரி ,சிகாகோவாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும் இயங்கும்.

ஒரு விஷயத்தை மனதி கொள்ள வேண்டும். ரிசிவர் சிக்னல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பதால் என்பதால் வீட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தால் அது வேலை செய்யாது. தண்ணீரின் அடியிலும் சிக்னல்கள் கிடைக்காது. மற்றபடி நிலத்திலோ நீரிலோ ஆகயத்திலோ எங்கு வேண்டுமானாலும் பயன்படுதிக்கொள்ளலாம்.

இன்று ஜிபிஎஸ் ரிசிவர்கள் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள  எல்லா இடங்களுக்கும் வரைபடம் கிடைக்கின்றன. இவை இரண்டே சிடியில் வெளிவந்துள்ளது. தேவைப்பட்டும் படங்களை மட்டும் ஜிபிஎஸ் ரிசிவருக்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக நியுயார்க் செல்ல வேண்டும் என்றால் அந்த வரைபடத்தை மட்டும் ரிசிவரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பிறகு ஒரு புது நகரத்தில் வழி தெரியாமல் திண்டாடவேண்டாம். பிரயாணத்தை தொடங்கும் இடத்தையும் போய்ச்சேரவேண்டிய இடத்தையும் கொடுத்துவிட்டால் போதும். அதுவே வழியை காட்டிவிடும்."வாயில் இருக்கிறது வழி " என்பது போக இன்று "ஜிபிஎஸ் வழி காட்டும் " என்று  கூரலாம்.

மேலும் தவறான பாதையில் நாம் சென்றாலும் நீங்கள் தவறான பாதையில் செல்கிரிர்கள் என்று சொல்லும் சிஸ்டம்களும் இன்று வந்துள்ளன. இவற்றை காரில் பொருத்திக் கொள்ளலாம். வழியில் சென்று கொண்டிருக்கும்  போது எமர்சன்சியாக மருத்துவமனைக்கு  செல்ல வேண்டும் அப்பொழுது அந்த இடத்தையும் இது காட்டும்.

மிலிட்டரி தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் இன்று ஒரு சராசரி குடிமகனுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN