திவால் சட்டம்... வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா?

GENERAL STUDIES- III:


TOPIC
econony

Expected Question for UPSC  exam (Tamil): 



Analyze the Insolvency and Bankruptcy code will lead to reduction of NPA problem?

வங்கி திவால் சட்டம் வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா? ஆய்க




Examine

ஆய்வு செய்



இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்.


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


contact mail ID  tnpscprime@gmail.com




டந்த 2016-ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் நொடிப்பு மற்றும் திவால் நடைமுறை சட்டம், இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரையே அரித்துக் கொண்டிருக்கும் வாராக் கடன் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி
முதற்கொண்டு சாமான்ய மக்கள் வரை பலரும் எதிர்பார்த்தனர். 


Image result for insolvency and bankruptcy code 2016

ஆனால், திவால் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய இரண்டு ஆண்டுகளில், வாராக் கடன் அதிகரித்துக்கொண்டே வருவது திவால் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது. குறிப்பாக, 2017-18-ல் மட்டுமே சுமார் 2,30,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ள மொத்த வாராக் கடன் தொகை, மார்ச் 2018 இறுதியில் கிட்டத்தட்ட 10,30,000 கோடி ரூபாய் என இதுவரை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் 11.20 சதவிகிதம் ஆகும்.

கடந்த டிசம்பர் 2016-ல் அனைத்து இந்திய வங்கிகளில் மொத்த வாராக் கடனாக இருந்த ரூபாய் 7.11 லட்சம் கோடியில், கீழ்க்கண்ட 12 நிறுவனங்களின் வாராக் கடன் அளவு மட்டுமே சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் இருந்தது. மொத்த வாராக் கடனில் 25 சதவிகிதம் கொண்டுள்ள இந்த 12 வாராக் கடன் நிறுவனங்களையும் பெரும் நம்பிக்கையுடன் இந்திய மத்திய வங்கி திவால் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய கணக்குகள் என வரையறுத்தது. இந்த நிறுவனங்களின் மீதான திவால் சட்ட நடைமுறைகளின் தற்போதைய நிலை பற்றி இங்கு பார்க்கலாம்.

தற்போதைய நிலை

புஷான் ஸ்டீல் :
 வங்கிகளில் 44,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளது. கடனளித்த வங்கி கூட்டமைப்பின் தலைமை வங்கியான எஸ்.பி.ஐ கடனை வசூலிக்க, தேசிய நிறுவன சட்ட தீர்வாயத்தை (NCLT) அணுகியது. 

திவால் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெற்ற ஏலத்தில், டாடா ஸ்டீல், புஷான் ஸ்டீல் நிறுவனத்தை ரூ.36,400 கோடி கொடுத்து கையகப்படுத்தியது. இந்த ஏலத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. வங்கிகளுக்கு வரவேண்டிய மொத்தக் கடனின் பெரும்பான்மையளவு தொகைக்கு இந்த ஏலம் முடிவடைந்ததால், புஷான் கடன் தீர்வு முடிவு திவால் சட்டத்தின் முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.  

லான்கோ இன்ஃப்ராடெக் : வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய கடன் பாக்கி சுமார் 44,000 கோடி ரூபாய். ஐ.டி.பி.ஐ வங்கி ஏற்கெனவே திவால் சட்டப்படி வசூல் செயல்பாட்டினைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்துகளைக் கையகப்படுத்த திரிவேணி எட்வர்ட்ஸ் மட்டுமே மனுத்தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனு வங்கிகளினால் நிராகரிக்கப் பட்டது. இந்த நிறுவனம் கலைக்கப்பட்டு, சொத்துகள் ஏலம் விடுவது பற்றி பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.  

எஸ்ஸார் ஸ்டீல் : 
சுமார் 37,000 கோடி ரூபாய் கடன்  வைத்துள்ள இந்த நிறுவனம் திவால் சட்ட நடைமுறைகளின்கீழ் கொண்டுவரப்பட்டவுடன், மத்திய வங்கியின் தீர்வாணைய அணுகுமுறையை எதிர்த்து எஸ்ஸார் குழுமம் கடுமையான சட்ட போராட்டத்தை மேற்கொண்டு இறுதியாகத் தோல்வியுற்றது. பின்னர், எஸ்ஸார் குழுமத்தைச் சார்ந்த ரவி ருயா குடும்பத்தினர் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை நேர்மையற்ற வகையில் பின்வாசல் வழியாகக் கைப்பற்ற முயற்சி செய்தனர். அதாவது, ரவி ருயா குடும்பத்தினர் முதலீடு செய்துள்ள நியூமெட்டல் எனும் நிறுவனத்தின் பெயரில் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்திற்கான ஏலத்தில் பங்கு பெற்றனர். இன்னொரு போட்டி ஸ்டீல் நிறுவனமான ஆர்செலர் ரவி ருயா குடும்பத்திற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தப் போட்டியில் ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் வேதாந்தா நிறுவனங்களும் இணைந்து கொள்ள, தேசிய நிறுவன சட்ட தீர்வாயம் கூடியவிரைவில் இறுதி தீர்வு வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  


புஷான் ஸ்டீல் & பவர் : சுமார் 37,000 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்துள்ள இந்த நிறுவனத்தின் கடனை வசூல் செய்ய பஞ்சாப் நேஷனல் வங்கி தேசிய நிறுவன சட்ட தீர்வாயத்தை அணுகியது. டாடா ஸ்டீல் (ரூ.17,000 கோடி) மற்றும் ஜே.எஸ்.டபபிள்யூ ஸ்டீல் (ரூ.11,000 கோடி) நிறுவனங்களுக்கிடையே நிலவிய ஏலப் போட்டியில் டாடா ஸ்டீல் வெற்றி பெற்றது. ஆனால், சஞ்சீவ் குப்தா என்ற பிரிட்டிஷ் இந்தியருக்குச் சொந்தமான பன்னாட்டு நிறுவனமான லிபர்ட்டி ஹவுஸும் (ரூ.18,500 கோடி) இந்தப் போட்டியில் கடைசி நாளுக்குப் பிறகு ஏலத்திற்கு விண்ணப்பிக்க, தேசிய தீர்வாணையம் மறு ஏலத்திற்கு உத்தரவிட்டது. மறு ஏலத்தில் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ரூ.18,000 கோடிக்கு ஏலத்தொகையை உயர்த்திக் கேட்க, மறு ஏலத்தை எதிர்த்து டாடா ஸ்டீல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளது.

அலோக் இண்டஸ்ட்ரீஸ் : அலோக் இண்டஸ்ட்ரீஸ், சுமார் 30,000 கோடி ரூபாய் கடன் பாக்கியாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு எதிரான திவால் நடவடிக்கைகளை அதிக அளவு கடன் கொடுத்த வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தேசிய தீர்வாணையத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த ரிலையன்ஸ் மற்றும் ஜே.எம் ஃபைனான்ஷியல் நிறுவனக் கூட்டணி ரூ.5,050 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளது. மொத்த வாராக் கடன் தொகையில் வெறும் 17 சதவிகிதத் தொகையை மட்டுமே கொடுத்து சரி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த ஏல விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் ரூ.170 கோடி கடன் வழங்கியுள்ள கோட்டக் மஹிந்திரா வங்கி, தீர்வாணையத்தில் கோரியுள்ளது. 

# தொடர்புடைய வினாக்கள் 


1.வங்கிகள் இணைப்பு அவசியமா?





ஆம்டெக் ஆட்டோ: சுமார் 12,000 கோடி ரூபாய் கடன் பாக்கியுள்ள இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த பன்னாட்டு நிறுவனமான லிபர்ட்டி ஹவுஸ் ஏலம் கேட்டது. ஏலத் தொகையான ரூ.4,400 கோடி ரூபாயைத் தேசிய தீர்வாணையம் ஏற்றுக்கொள்ள, கடன் கொடுத்த வங்கிகள் சுமார் 7,900 கோடி இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மோன்னேட் இஸ்பாட் அண்டு எனர்ஜி: சுமார் 12,000 கோடி ரூபாய் வாராக் கடன் வைத்துள்ள இந்த நிறுவனத்தை ரூ.4,400 கோடிக்கு கையகப்படுத்த வேண்டி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஐயோன் கூட்டணி அளித்த விண்ணப்பத்தை தேசிய தீர்வாணையம் ஏற்றுக்கொண்டது. இந்த நடைமுறையில் சுமார் 7,600 கோடி ரூபாய் இழப்பைக் கடன் வழங்கிய வங்கிகள் ஏற்றுக் கொள்ள நேரிடலாம். 

எலெக்ட்ரோ ஸ்டீல் : சுமார் 13,000 கோடி ரூபாய் வாராக் கடன் வைத்துள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தை ரூ.5,300 கோடிக்கு கையகப்படுத்த வேண்டி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின்மீது சுற்றுச்சூழல் சீரழிப்பு குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன என போட்டி ஏல நிறுவனமான ரினைசன்ஸ் (Renaissance) எடுத்துரைத்ததை தேசிய தீர்வாணையம் நிராகரித்துள்ளது. எனவே, இந்த நிறுவனத்தை வேதாந்தா நிறுவனம் கூடிய விரைவில் கைப்பற்றும் என்ற வாய்ப்புள்ள நிலையில் சுமார் 7,700 கோடி ரூபாய் இழப்பைக் கடன் வழங்கிய வங்கிகள் ஏற்றுக்கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. 

ஈரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங் :
 இந்த நிறுவனத்திற்கு சுமார் ரூ.10,000 கோடி வாராக் கடனாக உள்ளது. யூனியன் வங்கி இந்த நிறுவனத்திற்கு எதிராகத் தேசிய தீர்வாணையத்தை அணுகியுள்ளது. 

ஜே.பி இன்ஃப்ராடெக் : 
ஜே.பி குழுமத்தைச் சார்ந்த இந்த நிறுவனத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வாராக் கடன்  உள்ளது. கடந்த வருடமே, இந்த நிறுவனத்தைத் தீர்வு செய்ய தீர்வாணையத்தில் விண்ணப்பிக்கப் பட்டது. ஆனால், இந்த நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக் களை வாங்கிய பொதுமக்களின் உரிமை மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தீர்வாணைய நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தது. மேலும், ஜே.பி குழுமத்தைச் சார்ந்த ஜே.ஐ.எல் நிறுவனம் பின்வாசல் வழியாக ஜே.பி இஃப்ராடெக் நிறுவனத்தைக் கையகப்படுத்த முயற்சி செய்ததையும் கண்டித்த உச்ச நீதிமன்றம் ஜே.ஐ.எல் நிறுவனம் தீர்வு நடவடிக்கைகளில் பங்குபெறக் கூடாது எனவும் உத்தர விட்டது. 

ஏ.பி.ஜி ஷிப்யார்ட் : சுமார் 8,000 கோடி ரூபாய் வாராக் கடன் வைத்துள்ள இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த லிபர்ட்டி ஹவுஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. 

ஜோதி ஸ்ட்ரக்சரஸ் : 
சுமார் 8,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள இந்த நிறுவனத்தை வெறும் ரூ.1,000 கோடிக்கு கையகப்படுத்த ஷரத் சங்கி தலைமையிலான தனிநபர் குழு முயற்சி செய்துவருகிறது. தேசிய தீர்வாணையம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து வரும் வேளையில், கடன் வழங்கிய வங்கிகளில் ஒன்றான சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டி.பி.எஸ் வங்கி, ஏலத்தொகை மிகக் குறைவானது என்ற காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
.

மல்லையா மட்டுமல்ல...

ஊடகங்களால் அதிகம் விமர்சிக்கப்படும் கடனாளி விஜய் மல்லையா. அவரைவிட பல மடங்கு அதிக கடன் வாங்கியுள்ளவர்களின் பல்வேறு தகிடுதத்தங்கள்  அதிகம் விவாதிக்கப்படவில்லை. கடன் பாக்கியைவிட மிகக் குறைவாக கொடுத்துவிட்டு, நிறுவனத்தைப் பின்வாசல் வழியாகக் கையகப்படுத்த முயலும் இவர்களின் குள்ளநரி முதலாளித்துவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்கள் கொள்ளையடிக்க முயலும் பணம் வெறுமனே வங்கிகளின் பணம் மட்டுமல்ல, மக்களின் பொதுச்சொத்து. சமீபத்தில் புஷான் நிறுவனத்தின் முன்னாள் முதலாளியான நீரஜ் சிங்கால், கடன் தீர்விற்குப் பின்னர் தீவிர நிதி மோசடி புலனாய்வு நிறுவனத்தால் (SFIO) கைது செய்யப்பட்டிருப்பது குள்ளநரி முதலாளிகளுக்கு மத்திய அரசு விடுக்கும் முதல் எச்சரிக்கையாகும். 

பன்னாட்டு சந்தையில் இரும்பு விலை பெருமளவு உயர்ந்துள்ள சூழ்நிலையில், இரும்பு உற்பத்தி நிறுவனங் களுக்கு அதிக கிராக்கி உள்ளது. திவால் சட்ட நடைமுறைகளில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாக உள்ளதை அதிகாரத்தில் உள்ளவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டால்தான் வாராக் கடன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

ஹேர் கட்’ தள்ளுபடி!

ஹேர் கட் என வங்கி வழக்கில் வழங்கப்படும் வார்த்தை யானது, தொழிலில் நொடிந்துபோன ஒரு நிறுவனம் நியாயமான முறையில் கடனைத் திரும்பச் செலுத்த முன்வரும்போது, அதனை ஊக்குவிக்க வங்கிகள் வழங்கும் மிகச்சிறிய (தலைமுடி அளவிற்கான) தள்ளுபடியைக் குறிப்பதாகும். ஆனால், தற்போது, மேற்கொள்ளப்படும் திவால் சட்ட நடைமுறைகளில் சாதாரணமாகக் காணப்படும் 70-80% கடன் தள்ளுபடிகளை ஹேர் கட் என்று சொல்ல முடியாது. ஹேர் பேமென்ட் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இதுபோன்று பெரிய தள்ளுபடிகளை கோட்டக் மஹிந்திரா வங்கி போன்ற தனியார் வங்கிகளும் டி.பி.எஸ் போன்ற வெளிநாட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

திவால் சட்டத் திருத்தம் வங்கிகளுக்கு பாதகமா?

''முடி வெட்டிக்கொள்வதில் பிரச்சினை இல்லை, ஆனால் மொட்டையாகாமல் இருந்தால் சரி,’’ என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்த கருத்துதான் இப்போது தொழில் துறை வட்டாரத்தில் பரபரப்பான விவாதம். ஏதாவது ஒரு வகையில் வாராக்கடனை வசூலித்துவிட வேண்டும் என்பதை இவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.
மோடி அரசு தன்னுடைய சாதனைகள் என பல விஷயங்களைக் கூறினாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் வாராக்கடன் உள்ளிட்ட சில விஷயங்கள் தொண்டையில் சிக்கிகொண்ட முள்ளாக உறுத்திக்கொண்டே இருக்கின்றன. தற்போது வாராக்கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசர சட்டம் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனை முழுமையாக அறிவித்து அதற்குத் தேவையான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அப்போது முதல் வாராக்கடன் பூதம் வெளிவரத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.2.94 லட்சம் கோடியாக இருந்தது. அதில் இருந்து தற்போது வரை 2017-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டு வரை ரூ.8.38 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. மொத்த வாராக்கடனில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 87.6 சதவீதமாக இருக்கிறது.
உலக வங்கி வெளியிட்ட தொழில்புரிவதற்கான சாதகமான உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தைப் பிடித்தது. இதற்கு முக்கியமான காரணம் திவால் சட்டம். திவால் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஒரு திருத்தத்தை கொண்டுவந்தது. அந்த திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். தற்போதைய கார்ப்பரேட் விவாதங்களில் முக்கியமானதாக திவால் சட்ட திருத்தம் இடம் பிடித்திருக்கிறது.
அவசர சட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, திவால் நடைமுறை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்ப்போம். ஒரு நிறுவனம் கடனை செலுத்தவில்லை என்றாலோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு நிலுவை தொகையை கொடுக்கவில்லை என்றாலோ, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகலாம். இந்த வழக்கினை ஏற்றுக்கொள்ள அல்ல நிராகரிக்க என்சிஎல்டி 14 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஒரு வேளை ஏற்றுக்கொண்டுவிட்டால் 180 நாட்களுக்குள் தீர்வுக்கான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 90 நாட்கள் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம். ஒருவேளை தீர்வுக்கான திட்டம் தயாரிக்க முடியவில்லை என்றால் சொத்துகளை விற்பதற்கான நடைமுறை தொடங்கும். இதுவரை என்சிஎல்டி-யில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. தற்போதைய நடைமுறையில் ஒரு சொத்து அடமானம் வைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட சொத்தின் வாரிசுதாரர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் தொகை சம்பந்தப்பட்ட நபருக்கு/நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
ஏற்கெனவே உள்ள நடைமுறைபடி சம்பந்தப்பட்ட சொத்துகளை ஏலம் விடும் போது யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். நிறுவனத்தின் சொத்து ஏலம் விடும் போது சம்பந்தபட்ட நிறுவனத்தின் நிறுவனர்கள் கூட ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்னும் விதிமுறை இருந்தது. தற்போது ஏலத்தில் யார் கலந்து கொள்ளலாம் என்பதற்கு வரைமுறைகளை உருவாக்கி இருக்கிறது.


யார் கலந்து கொள்ளக் கூடாது?


வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஓர் ஆண்டுக்கும் மேலான நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களது சொந்த நிறுவன சொத்தின் மீதான ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. அதேபோல கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பி செலுத்தாத நிறுவனர்கள், இரு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கபட்ட நிறுவனர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள், பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது என விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் இருக்கின்றன.


ஏன் தடை விதிக்கப்பட்டது?


வங்கியில் கடன் வாங்கும் போது சொத்தினை அடமானம் வைத்துதான் கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்கும் அவர்களின் தனிப்பட்ட சொத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை. அடமானம் வைத்திருக்கும் சொத்தை ஏலம் விடுவதால் உண்மையான மதிப்பை விட குறைவாக ஏலம் கேட்பார்கள். அல்லது உண்மையான மதிப்பு மற்றவர்களுக்கு தெரியாது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனர்களே தங்களது சொத்துகளின் மீதான ஏலத்தில் கலந்து கொள்ளும் பட்சத்தில், குறைவான விலையில் தங்கள் சொத்தை மீண்டும் ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்து என்பதால் கடனையும் திருப்பி செலுத்தாமல் அவர்களின் சொத்தும் மீண்டும் அவர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

என்ன பிரச்சினை?


இந்த விதியை பார்க்கும் போது சிறப்பாக இருப்பதாக தோன்றினாலும் நடைமுறையில் வங்கிகளுக்கே இது பெரும் பாதிப்பாக இருக்கப்போகிறது என கோடக் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர்களே போட்டியிடவில்லை என்றால், ஏலம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கை குறையும். போட்டி குறைவாக இருப்பதால் ஏலம் கேட்கும் தொகையும் குறைவாக இருக்கும். இதனால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்னும் கருத்து இருக்கிறது.
தற்போது ஸ்டீலுக்கு தேவை இருப்பதால் இந்த துறை சொத்துகளை ஏலம் கேட்க நிறுவனங்கள் முன்வருவார்கள். உதாரணத்துக்கு டாடா ஸ்டீல் மற்றும் மிட்டல் ஆகிய நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும் ஸ்டீல் நிறுவனங்களின் சொத்துகளை வாங்குவது குறித்த பரிசீலனையில் உள்ளன. ஆனால் மின்சாரம் உள்ளிட்ட வாராக்கடன் அதிகம் உள்ள இதர துறைகளின் சொத்துகளை ஏலம் கேட்க ஆள் இல்லாத சூழ்நிலை கூட உருவாகும். மொத்தமாக பார்த்தால் வங்கிகளுக்கு பாதிப்பு எற்படும் என பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.


நிறுவனங்களின் நிலை என்ன?


மத்திய அரசின் அவசர சட்டத்தால் சில முக்கியமான நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிகிறது. கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பு இருந்தும் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலில் நாங்கள் இல்லை. எங்கள் தொழிலின் சூழல் சரியில்லாததால்தான் நாங்கள் கடனை செலுத்தவில்லை. அதனால் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் பங்கேற்போம் என பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிதின் ஜோஹ்ரி தெரிவித்திருக்கிறார்.
கடனை திருப்பி செலுத்தாமல் வங்கித் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிறுவனங்கள், தங்களது சொத்துகளை குறைவான தொகையில் ஏலம் எடுத்துவிடக் கூடாது எனும் எண்ணம் சரிதான். ஆனால் வங்கிகளின் நிலைமை. சொத்துகளை ஏலம் கேட்க யாரும் வரவில்லை என்றாலோ அல்லது குறைவான தொகைக்கு ஏலம் கேட்டாலோ வங்கிகளின் சுமை மேலும் அதிகரிக்கும்.
அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் அடுத்த மாதம் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டம் நிறைவேற வேண்டும். ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் வங்கிகளுக்கு, இந்த அவசர சட்டம் உதவியாக இருக்குமா என்பது போக போகத் தெரியும்!



# தொடர்புடைய வினாக்கள் 


வங்கி திவால் சட்டம் என்றால் என்ன?

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN