இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் (DIGITAL EMPOWERMENT) பெற்ற சமுதாயமாக மாற்றும் திட்டம்

#ESSAY

அறிமுகம்

இந்தியாவை டிஜிடல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாற்றும் திட்டம் பங்கேற்கத்தக்க, உள்ளடக்கிய, பொறுப்பு நிறைந்த மற்றும் வெளிப்படையான அரசை உருவாக்கும் பின்னணியில் மிகப் பெரிய ஜனநாயகத்தை குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகரம் அளித்து அதனை ஒரு ஆழமான ஜனநாயகமாக மாற்றுவதற்கு டிஜிட்டல் இந்தியா ஒரு புதிய செயல்பாட்டுக்கு அழைப்பு விடுக்கிறது

டிஜிட்டல் இந்தியா(DIGITAL INDIA) திட்டத்தின் அவசியம்


ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு காரணம் உள்ளது. சமுதாயத்தின் அடிப்படைக் கூறுகளை அதிகாரம் கொண்டவையாக மாற்றுவதற்கான யோசனைகள் உருவாக்கம் ஒரு காரணமாகும். இந்தியா ஓர் உலகளாவிய வளரும் பொருளாதாரமாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த நாடு பங்கேற்பு ஜனநாயகத்தில் மேம்பாடு அடைய வேண்டியது முக்கியமாகும். அனைத்து குடிமக்களும் பொதுத் தகவல்களை அணுகக்கூடிய அமைப்பு, அரசுக் கொள்கைகள் குறித்த விவாதங்கள், சமூக பொருளாதார வேறுபாடுகளை மீறி நாட்டிற்கான கொள்கைகளை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும்.  பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ள இந்தியா போன்ற முற்போக்கான நாட்டில், நாட்டின் சமூக பொருளாதார குறியீட்டை அளிப்பதில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.
உலகத் தன்மைக்கு ஏற்ப சமுதாயம் மாறி வரும் நிலையில், தொழில்நுட்பத்தில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் விரைவான மாற்றம் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. இது அரசு நிர்வாகத்தில் குடிமக்கள் பங்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து குடிமக்களையும் டிஜிட்டல் முறையில் இணைத்து அதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தை முக்கிய ஊக்கியாக ஆக்குவதற்கு அரசைத் தூண்டி விட்டுள்ளது. மக்கள் டிஜிட்டலை பயன்படுத்த செய்து அவர்களுக்கு வெளிப்படையான நிர்வாக முறையில் அணுகுதலை ஏற்படுத்திக் கொடுக்க தற்போதைய அரசு விரும்புகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவை அரசு நிர்வாகத்தின் மையப்புள்ளியாகக் கொண்டு வருவதற்க்கு சாதகமாக உள்ளது. இதன் மூலம் நல்ல நிர்வாகம் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் என அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இயங்கும் முறைகள்



ஒவ்வொரு திட்டமும் அதன் முக்கிய தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுகிறது. 

டிஜிட்டல் இந்தியா திட்டமும் தகவல் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி அரசு நிர்வாகம் மற்றும் பொதுச் சேவைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையால் ஊக்குவிக்கப்படுகிறது. 

இந்தியத் திறன் மற்றும் இந்தியத் தொழில்நுட்பம் இணைந்து நாளைய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவை டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட்ட நாடாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்துவதாக உள்ளது. 

டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, அரசு இந்த திட்டத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை தெளிவாக வெளியிட்டது. 

இந்தியாவை டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் அறிவுசார்ந்த பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். 

டிஜிட்டல் இந்தியா மூன்று முக்கிய பகுதிகளில் தனது தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது.

அனைத்து குடிமக்களும் பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குதல், தேவைப்படும் நேரத்தில் நிர்வாகம், சேவைகள் மற்றும் குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளித்தல் ஆகியவையே அவை. 

அனைத்துக் குடிமக்களும் பயன்படுத்து வதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்புக்களை உருவாக்குதல் என்பது டிஜிட்டல் இந்தியாவின் பெரும் இலக்குகளை எட்டுவதற்கு உதவும் தொலை நோக்குப் பார்வையாகும்.


நல்ல சேவைகளை அளிக்க ஒரு நாட்டுக்கு நல்ல இணைப்பு வேண்டும் என்பது முதல் தேவையாகும். இந்தியாவின் மிகுந்த பின்தங்கிய கிராமங்களுக்கும் டிஜிட்டல் இணைப்பு  வசதியை அகண்ட அலைவரிசை மற்றும் உயர் வேக இணைய தள இணைப்பு மூலம் அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இது அரசு சேவைகள் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், சமுதாய பலன்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை அடைவதையும் உறுதி செய்யும்.
தேவைப்படும் போது அரசு நிர்வாகம் மற்றும் சேவைகள் என்ற இரண்டாவது தொலை நோக்குப் பார்வை நிர்வாக நடைமுறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் விரைவு ஆகியவற்றில் கண்ணோட்டம் செலுத்துகிறது. பல மாநில அரசுகள் இகவர்னன்ஸ் எனப்படும் மின்னணு நிர்வாகத்தை தசாப்தங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்ட போதிலும், அரசு திட்டங்களில் மக்கள் உள்ளடக்கம் என்பது இன்னமும் எட்டப்படவில்லை. இந்தியாவில் மின்னணு நிர்வாகம் என்பது மத்திய மாநில அரசுகள் காகிதப் பணிகளை கணினிமயமாக்கவும், கொள்கை உருவாக்கும் நடைமுறைகளை தானியங்கி நடைமுறைக்கு மாற்றத் தொடங்கிய போதே ஆரம்பித்துவிட்டது.
மூன்றாவது தொலைநோக்குப் பார்வையானது மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதில் கண்ணோட்டம் செலுத்துகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது அனைத்து மக்களுக்கும் ஒரு சம நிலையை ஏற்படுத்துகிறது. பூகோளப் பாகுபாடு, சமூகப் பொருளாதாரப் பாகுபாடு இன்றி இன்றைய தினம் இந்தியர்கள் டிஜிட்டல் திறன் கொண்டவர்களாக உள்ளனர். இணையதளம் மற்றும் மொபைல் ஃபோன்கள் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றம் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் இணைக்கப்பட்ட டிஜிட்டல் மேடைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாக மாற்றுவதே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொகுப்புகளை உருவாக்குதல்


எந்தவொரு திட்டமும் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு திடமான கட்டமைப்பு தேவைப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அதிக சிறப்பானதாக ஆக்க இந்திய அரசு டிஜிட்டல் இந்தியாவின் ஒன்பது தூண்களை விவரித்துள்ளது. ஒவ்வொரு தூணும் இந்த திட்டத்தின் நோக்கத்திற்காக ஆதரவு அளிப்பது மட்டுமின்றி, இந்தத் திட்டம் தடையின்றி வெற்றி பெற முழுமையான பங்களிப்பையும் அளிக்கிறது.


பிராட்பேண்ட் ஹைவே என்னும் டிஜிட்டல் இந்தியாவின் முதலாவது தூண் தேசிய கண்ணாடி இழை நெட்வொர்க் மூலம் 25 இலடசம் கிராமங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இது கிராமப்புற மக்கள் அரசுத் திட்டங்களை எளிதாகவும் சிறப்பாகவும் அணுக அதிகாரமளிக்கும். தேசிய கண்ணாடி இழை கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு ரூ. 1000 கோடி மூலதனத்தில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. 641 மாவட்டங்கள் மற்றும் 6600 வட்டங்களில் உள்ள 2,50,000 கிராமப் பஞ் சாயத்துக்களை இணைக்கும் வகையில் தேசிய கண்ணாடி இழை கட்டமைப்பை தேசிய பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் ஏற்படுத்தும். அனைத்துப் பஞ் சாயத்துக்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் இது உலகளாவிய அணுகுதலை அளிக்கும்.
இரண்டாவது தூணான மொபைல் இணைப்புக்கான உலகளாவிய அணுகுதல், நாட்டில் மொபைல் அணுகுதல் இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் மொபைல் அணுகுதலை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். இன்று நமது நாட்டில் சுமார் 42,000 கிராமங்களில் மொபைல் வசதி இல்லை. 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ரூ. 16,400 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை நடைமுறைப்படுத்தும் முகமையாக செயல்படுகிறது. 2018ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில முழுமையான மொபைல் இணைப்பு வசதி இருக்கும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
பொது இணைய அணுகுதல் திட்டம் மூன்றாவது தூணாகத் திகழ்கிறது. ஒரு கிராமப் பஞ் சாயத்துக்கு ஒரு பொதுச் சேவை மையம் என்ற நிலையில் 25 இலட்சம் பொதுச் சேவை மையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 2.42 இலட்சம் பொது சேவை மையங்கள் 162இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ளது. இந்தப் பொதுச் சேவை மையங்கள் அரசு மற்றும் வர்த்தக சேவைகளை அளிக்கும் பல செயல் விநியோகப் புள்ளிகளாக இருக்கும்.

தூண் மின்னணு நிர்வாகம்



தொழில்நுட்பம் மூலம் அரசை சீரமைத்தல் ஆக செயல்படும்.

இது பல்வேறு அரசுத் துறைகளின் சேவை வினியோகம் சிறப்பாக இருக்கும் வகையில் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்க அரசு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவும். 


டிஜிட்டல் இந்தியாவின் ஐந்தாவது தூணாக திகழ்வது இகிராந்தி எனப்படும் சேவைகளை மின்னணு முறையில் வழங்கும் திட்டமாகும்.
இந்நிர்வாகம் மற்றும் எம்நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்ல நிர்வாகத்தை அளிக்கும் இ கிராந்தி என்பது நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும வகையில் இநிர்வாகத்தில் மாற்றத்தை செய்யும் தொலை நோக்கு பார்வையைக் கொண்டதாகும். ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் 44 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

இன்றைய தினம் 3325 சேவைகளை அளித்து இகிராந்தி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 


"அனைவருக்கும் தகவல் என்பது ஆறாவது தூணாகும். இது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை அளிக்கிறது. திறந்த தகவல் மேடையின் மூலம் அமைச்சகங்கள்/துறைகள் பொதுப் பயன்பாட்டுக்காக தகவல்களை வெளியிடுகிறது. தகவல்கள் இணையத்தில் வெளியிடப்படுவது ஆவணங்களை எளிதாகவும் வெளிப்படையாகவும் அணுக உதவுகிறது. 


டிஜிட்டல் இந்தியாவின் ஏழாவது தூண் மற்றும் முக்கியமான தூண் மின்னணு உற்பத்தியாகும். மின்னணு பொருட்களுக்கான தேவை ஆண்டுக்கு 22 சதவிகிதம் என்ற அளவில் வேகமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்றும் 2020இல் இது 400 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்றும் அரசின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு நாட்டில் மின்னணுத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு முய்ற்சிகளை மேற்கொண்டுள்ளது. 


கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 128 லட்சம் கோடி முதலீட்டுடன் 250 முதலீட்டு திட்டங்கள் மின்னணு உற்பத்திக் காகப் பெறப்பட்டுள்ளன. எட்டாவது தூணான வேலைகளுக்கு தகவல் தொழில்நுட்பம் என்ற தூண் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறைகளில் வேலை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிப்பதில் கண்ணோட்டம் செலுத்துகிறது. 


அடுத்த 5 ஆண்டுகளில் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த 10 மில்லியன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளிக்க ஏற்ற வர்த்தகங்களை மேற்கொள்ளும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளின் ஒரு பகுதியாக 3 இலட்சம் பேருக்கு வினியோக முகவர்களாக பயிற்சி அளிக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 


இந்திய பி.பீ.ஓ மேம்பாட்டுத் திட்டம் மூலம் நாடு முழுவதும் 48,300 இடங்களை நாடு முழுவதும் பி.பீ.ஒ செயல்பாடுகளில் உருவாக்க தொழில்முனைவோரை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் 50,000 பணியிடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 493 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் மனித ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்புகளை சிறுநகரங்களில் உருவாக்கி அதன் மூலம் அடுத்த கட்ட தகவல் தொழில்நுட்பம் /தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைக்கப்படும். இதேபோல் வடகிழக்கு பி.பீ.ஓ. மேம்பாட்டுத் திட்டம் வட கிழக்கு பிராந்தியத்தில் பி.பி. ஒ/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறைக்கு ஊக்கம் அளித்து வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 


5000 இடங்கள் என்ற இலக்கு கொண்ட இந்த திட்டம் வட கிழக்கு பிராந்தியத்தில் 15000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும். இது தவிர இந்த அரசு கிராமப்புற பணி ஆற்றலுக்கு தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த சேவைகளில் பயிற்சி அளிக்கவும் இதன்மூலம் ஐந்து லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.


இறுதியாக குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்தக் கூடிய விரைவான அறுவடைத் திட்டங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒன்பதாவது தூணாகும். தகவல்களுக்கான ஐ.டி. மேடை, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வைஃபை சேவை, அரசுக்குள் பாதுகாப்பான மின்னஞ்சல், பொது வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் குறுந்தகவல் அடிப்படையிலான வானிலை தகவல்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.


நல்ல நிர்வாகத்திற்கான டிஜிட்டல் இந்தியா முயற்சிகள்


நல்ல நிர்வாகம் என்பது வெளிப்படைத் தன்மை மற்றும் குடிமக்கள் சாத்தியம் ஆகியவற்றில் இருந்து ஏற்படுகிறது. டிஜிட்டல் இந்தியா நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக ஆக்கவும், நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும், இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை ஏற்றுப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. டிஜி தன் அபியான், ஆதார் பே, பீம் செயலி, சி.எஸ்.சி. டிஜி லாக்கர், திஷா, நேரடி மானிய மாற்றம், மற்றும் இபஞ்சாயத்து ஆகியவை இத்தகைய சில முயற்சிகளாகும். கறுப்புப் பணத்திற்கு எதிராக அரசு மேற்கொண்ட ரொக்க மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக குறைந்த ரொக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட்டு, டிஜி தன் அபியான் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மக்களும் வர்த்தகர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் டிஜி தன் மேளாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு டிஜிட்டல் கட்டண முறைகளை மக்கள் பதிவிறக்கம் செய்து நிறுவி மற்றும் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது.
அதே நேரத்தில் அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக பீம் எனற செயலியை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பீம் செயலி, பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவரை 17 மில்லியன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள பீம், மூலம் இதுவரை 19.17 இலட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பீம் செயலி மூலம் 950 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் 2017 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான அடையாள முறையை இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. நிதி உள்ளடக்கம், பொதுத் துறை விநியோக சீர்திருத்தங்கள், நிதி பட்ஜெட்களை நிர்வகித்தல், சிக்கலற்ற வசதியான, மக்களை மையப்படுத்திய நிர்வாகம், ஆகியவற்றுக்காக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் 113 கோடி மக்களிடம் தற்போது ஆதார் அட்டை உள்ளது. வங்கிக் கணக்குத் தொடங்கவும், மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறவும் ஆதார் அட்டை முக்கியமாக உள்ளது. ஆதார் அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட கட்டை விரல் ரே கை யைக் கொண்டு பயனர் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஏப்ரல் 14 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆதார் பே என்பது 100 கோடிக்கும அதிகமான மக்கள் கொண்ட நாட்டுக்கு மிகுந்த உள்ளடக்கம் கொண்ட மேடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் சமுதாயத்தை உருவாக்க இந்திய அரசு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், 2.5 இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பொது சேவை மையம் என்பது ஏராளமான சேவைகளை ஒரே விநியோக மேடையில் அளிக்கும்.
இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாற்ற இந்த அரசு எந்தச் செயலையும் செய்யத் தவறாது. இந்த அரசு டிஜி லாக்கர் என்ற முன்னோடித் திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் அனைத்து பொது ஆவணங்களையும் பொது இடத்தில் பகிர்ந்து கொள்வதற்கான இடத்தை அளிக்கும் முயற்சியாகும். டிஜி லாக்கர் மூலம் காகித மின்றி அரசு ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறலாம். இன்றைய தினம் 40 இலட்சத்துக்கும் அதிகமான டிஜிட்டல் லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 20 இலட்சம் ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஆதார் உடன் இணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த அரசின் கண்ணோட்டம்


டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரைவுபடுத்த அரசு 2017-18 பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் கட்டணங்களை அதிகரிக்கவும், இணையதள இணைப்பை அதிகரிக்க கிராமப் புறங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் இணைப்புகளை அளிக்கவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி 2500 கோடி டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்ள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மார்ச் 2017ல் 10 லட்சம் பி.ஓ.எஸ். முனையங்களை அமைக்கவும், செப்டம்பர் 2017இல் 20 இலட்சம் ஆதார் அடிப்படையிலான பி.ஓ.எஸ். முனையங்களையும் அமைக்குமாறு வங்கிகளுக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 1.5 இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களில் கண்ணாடி இழை மூலம் உயர் வேக அகண்ட அலைவரிசை கிடைக்கச் செய்யப்படும் என்றும் 2018ஆம் ஆண்டுக்குள் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவைகளை அணுக வகை செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் நெட் கீழ் கண்ணாடி இழை 1.55 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாரத் நெட் திட்டத்துக்கு 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள்து.

முடிவுரை



அரசின் முயற்சிகள் மற்றும் உறுதிப்பாடுகளின் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டம் அதன் இலக்குகளை குறிப்பிடத்தக்க வெற்றியுடன் எட்டும். இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க மக்கள் முன்வந்திருப்பதால், இந்தியாவை உலகின் டிஜிட்டல் அதிகாரம் பெற்ற பெரும் சமுதாயமாக ஆவதில் எந்தச் சிரமமும் இல்லை. வரும் நாட்களில் இந்தியா டிஜிட்டல் முறையில் வளர்ந்த நாடாக மாறுவதை டிஜிட்டல் இந்தியா திட்டம் உறுதிப்படுத்தும் வகையில் பல புதிய இலக்குகளை இந்திய அரசும் இந்திய மக்களும் எட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN