ஊட்டச்சத்து உணவுக்கு என்ன வழி?

தொ
ழில்நுட்ப முன்னேற்றம், நவீனப் பாசன முறைகள், வேளாண் விரிவாக்கத் திட்டங்கள், முற்போக்கான வேளாண் கொள்கைகள் காரணமாக உணவு மற்றும் ஊட்டச்சத்தில் பாதுகாப்பான நிலையை இந்தியா அடைந்திருக்கிறது. வேளாண் துறையும் உணவு தானிய உற்பத்தியும் வேளாண் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன. இவை நல்ல செய்திகள்.

கண்ணுக்குத் தெரியாத பட்டினி

உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கைக் குறைந்துவிட்டாலும், ஊட்டச் சத்துள்ள உணவை அனைவரும்
உண்பதில் பின்தங்கியே இருக்கிறது இந்தியா. ஐந்து வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமலும் உடல் எடை இல்லாமலும் குழந்தைகள் போதிய வளர்ச்சியின்றியும் மெலிந்தும் இருப்பதால் முறையே 132 நாடுகளின் பட்டியலில் 14-வது இடத்திலும், 130 நாடுகளின் பட்டியலில் 120-வது இடத்திலும் இருக்கிறது இந்தியா. வைட்டமின்களும் இதரச் சத்துகளும் குறைவாக உண்பதை ‘கண்ணுக்குத் தெரியாத பட்டினி’ என்றே அழைக்கின்றனர்.
பெரும்பாலான இந்தியர்கள் கோதுமை ரொட்டி அல்லது அரிசிச் சோற்றைத்தான் அதிகம் உண்கிறார்கள். பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை உட்கொள்வது மிகவும் குறைவு. இவற்றில்தான் நுண் ஊட்டச்சத்துகள் நிறைய உள்ளன. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. கடினமாக வேலைசெய்ய முடியாமல் களைப்பு ஏற்படுகிறது. இப்படியே தொடர்ந்தால் தாய்க்கு மனச் சோர்வும், ரத்தப்போக்கும் அதிகரிக்கும். இதுவே குழந்தைகள் குட்டையாகவும் மெலிந்தும் வளர்வதற்குக் காரணமாகிறது. குழந்தைகளின் அறிவாற்றலும் குறைகிறது.

பாதிக்கப்படும் மனிதவளம்

ஒரு பக்கம் ஊட்டச்சத்தால் வளர்ச்சி குன்றியும் உடல் மெலிந்தும் குழந்தைகள் பிறக்கின்றன என்றால், இன்னொரு பக்கம் அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து மிகுந்த பொருட்களையும் எண்ணெய்ப் பண்டங்களையும் உண்பதாலும் உடல் பயிற்சி, விளையாட்டில் ஈடுபடாததாலும் ஊளைச் சதையால் உடல் பெருத்துவிடுவதும் அதிகரித்துவருகிறது. 2015-16-ம் ஆண்டுக்கான தேசிய குடும்பநல ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் 15.5% பெண்கள் வழக்கமாக இருக்க வேண்டிய எடையைவிடக் குறைவாக இருக்கின்றனர். 31.3% பெண்கள் குண்டாக இருக்கின்றனர். நகர்ப்புற ஆண்களில் 15% எடைக் குறைவாகவும், 26.3% எடை அதிகமாகவும் தொப்பையுடனும் இருக்கின்றனர். வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கத்திலும் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள் காரணமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்துவருகின்றன. இவ்வாறு ஊட்டச்சத்துக் குறைவு, உடல் எடை அதிகரிப்பு, தொற்றா நோய்களுக்கு ஆளாவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்துக்கே பின்னடைவு ஏற்படும் வகையில் மனித வளத்தை அது பாதிக்கும்.
இந்த நிலை எப்படி வந்தது? பசுமைப் புரட்சியால் புதிய, குறுகிய காலப் பயிர் ரகங்கள் கோதுமை, அரிசி போன்றவற்றில் உருவாகின. இவற்றையே அதிகம் பயிரிடப்பட்டதாலும் உண்ணத் தொடங்கியதாலும் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறு தானிய சாகுபடியும் நுகர்வும் படிப்படியாகக் குறைந்து அருகிவிட்டன. புன்செய் தானியங்களில்தான் ஊட்டச்சத்தும், நார்ச் சத்தும் அதிகம். 1990-களில் நுண் ஊட்டச்சத்துகளின் மீது கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் உண்ணும் உணவில் ஜிங்க், போலிக் அமிலம், மக்னீசியம், செலினியம், வைட்டமின் டி ஆகியவை குறைவாக இருப்பது அக்கறையுடன் பார்க்கப்பட்டது.

விழிப்புணர்வு தேவை

தொடர்ச்சியான வளர்ச்சி இலக்கு-2’ என்பது பட்டினியைக் குறைக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், வேளாண் வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவிக்கவும் வகுக்கப்பட்டது. அதை முன்னுரிமை தந்து அரசு நிறைவேற்றுகிறது. உணவும் ஊட்டச்சத்தும் அனைவருக்கும் கிடைக்க பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இது வேளாண் சாகுபடி முறைகளிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். ஊட்டச்சத்துள்ள உணவையே அதிகம் உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும். பழங்குடிகள், பெண்கள், குழந்தைகள் இதன் பலனைப் பெற வேண்டும்.

- ஷியாம் கட்கா,

ஐ.நா.வின் உணவு, வேளாண் துறை அமைப்பின் இந்தியப் பிரதிநிதி

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN