பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா என்றால் என்ன?


#அடிப்படை கற்றல்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியை மனப்பாடம் செய்து கொண்ட நமக்கு, விடுதலைப் பெற்று 72 ஆண்டுகள் கடந்த பிறகும் போதுமான மருத்துவ வசதி கிடைத்ததா
என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பணக்காரனையே மிரள வைக்கும் மருத்துவக் கட்டணங்கள், அன்றாடங்காய்ச்சிகளின் சட்டைப் பைகளைக் கிழித்துச் சில்லையைத் தேடியது. அரசு மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளித்தாலும், ரத்த அணுக்களைச் சீண்டும் அளவுக்குக் காத்திருப்புகளும், தாமதங்களும் ஏற்படுகிறது. சில உயர் சிகிச்சைகளுக்கு அதிகமான கட்டணங்கள் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது வரை இருக்கிறது. உயர் சிகிச்சை பெற முடியாமல் உழன்று கொண்டிருந்த ஏழை மற்றும் வருவாய் அற்ற நடுத்தரக் குடும்பங்களுக்கு விடியல் தொடக்கூடிய தூரத்தில் நெருங்கியிருக்கிறது. பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் உங்கள் கவலையைத் தீர்க்கப் போகிறது. செப்டம்பர் 25 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தீன தயாள் உபாத்யாயப் பிறந்த நாளில் உலகிலேயே மிகப்பெரிய திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

50 கோடி பேருக்கு இலவச சிகிச்சை 

சமூகப் பொருளாதார ஜாதி வாரிய கணக்கெடுப்பின்படி ஊரகப்பகுதிகளில் 8.3 கோடி குடும்பங்களும், நகர்ப்புற பகுதிகளில் 2.33 கோடி குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதி பெற்றவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களில் 50 கோடி பேருக்கு ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பம் ஒன்றுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதற்காக இந்தத் திட்டம்


சுவாஜ் பாரத் அபியான் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்களில் சிகிச்சைக்கான செலவினத்தில் 3 லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியுமே தவிர, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பலன் பெற முடியாது. ஆனால் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிகிச்சை பெற முடியும் என்பது சிறப்பம்சமாகும்.


அறுவைச் சிகிச்சை

ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க வகைச் செய்யும் இந்தத் திட்டத்தில், இதயநோய், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட 25 வியாதிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி இலவச மருத்துவத் தொகுப்புகளையும் அளிக்கிறது.



திட்டத்தின் பயன்கள் 


அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் எவ்வித ரொக்கப் பரிமாற்றமும் இல்லாமல் சிகிச்சை பெற வசதி . மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஏற்படும் செலவினங்களை ஜன ஆரோக்கியா திட்டமே ஏற்றுக்கொள்ளும். குடும்பத்தின் அளவு மற்றும் வயது வரம்பு கிடையாது என்பதோடு ஒவ்வொரு தனி நபரும் பலன் பெற முடியும். முதல் அறுவைச் சிகிச்சைக்கு அதிக அளவிலான தொகையைச் செலவிடும் ஜன் ஆரோக்கிய யோஜனா, இரண்டாவது அறுவைச் சிகிச்சைக்கு 50 விழுக்காடும், 3 வது சிகிச்சைக்கு 25 விழுக்காடும் வழங்குகிறது.


பயனாளர்களின் தகுதி 


கிராமப்புறங்களில் ஒரு அறைமட்டும் கொண்ட குடிசை வீட்டில் வசிப்பவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள், பெண்ணைத் தலைவராகக் கொண்ட ஆண் உறுப்பினர்கள் அடங்கிய குடும்பங்கள் , நிலமற்ற தினக்கூலிகள் இந்தத் திட்டத்தில் சேர தகுதி உள்ளவர்கள். நகர்ப்புறங்களில் நாட்கூலித் தொழிலாளர்கள், வாயிற்காவலர்கள், தெருவோர கடைகாரர்கள், எலக்ட்ரீசியன், மெக்கானிக்ஸ் இந்தத் திட்டத்தில் இணையத் தகுதி பெற்றவர்கள். பிச்சை எடுத்துப் பிழைப்பவர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சரக்குந்து தொழிலாளர்களும் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் பயன் பெறலாம்


செலவு செய்வது யார்?


இந்தத் திட்ட செலவினங்களுக்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் முறையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது. அல்லது அறக்கட்டளை மற்றும் காப்பீடு திட்டங்களின் மூலமாகச் செலவினங்கள் வழங்கப்படுகிறது. 1.5 லட்சம் வரை செலவானால் காப்பீடு நிறுவனங்களிடம் இருந்தும், அதற்குக் கூடுதலாகச் செலவானால் அறக்கட்டளைகளிடம் இருந்தும் செலவுத்தொகை அளிக்கப்படுகிறது. யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.

தொடக்க விழா 


சத்தீஷ்கர் மாநிலம் பீஜப்பூரில் செப்டம்பர் 25 நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், அசாம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்த இசைவு தெரிவித்துள்ளன. ஒடிசா, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைவது குறித்து விருப்பம் தெரிவிக்கவில்லை.
வறுமை ஒழிப்பு 


ஒவ்வொரு மனிதனுக்கும் நலவாழ்வுக்கான உத்தரவாதம் இருக்க வேண்டும் என்ற இலக்கில் ஆயுஷ்மான் பாரத் என்ற பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் வறுமையை ஒழிக்க முடியும் என்று திட்டவட்டமாக நம்பும் மத்திய அரசு, வேலை வாய்ப்பை உருவாக்க இயலும் என்றும் எண்ணுகிறது. இதேபோல மருத்துவ மனைகளின் எண்ணிக்கை உருவாகும் என்பதும் இந்தத் திட்டத்தின் உள் நோக்கம் ஆகும்.


No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN