உலக வணிக அமைப்பு

 

உலக வணிக அமைப்பு


உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT))
வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை
ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்கு, உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமான தீர்வுகாண வழிவகுக்கிறது, இந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, அவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும். இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்கு முனனால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும், அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும். இந்த அமைப்பானது, தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்று) என்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் மிகுதியாக உள்ள நலிந்த நாடுகளின் பங்கேற்பினைச் செழுமைப்படுத்திச் சம நிலையில் வாதம்புரிந்து பங்கேற்பதற்கான பெரும் முயற்சியாகும். இருந்தாலும், "வேளாண் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணற்ற ஏழ்மையில் வாடும் குடியானவர்கள் கொண்ட நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில், அதிகமாக இறக்குமதி செய்யும் காலகட்டங்களில், ஏழைக்குடியானவர்களுக்குத் 'தனி பாதுகாப்பு கவசம்' அளிப்பது பற்றிய துல்லியமான செயல்பாட்டிற்கு ஒவ்வாமை இருப்பதனால் வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தற்போது, தோகா சுற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது."

உலக வணிக அமைப்பு மற்றும் ஜிஏடிடி 1947


இரண்டாவது உலகப் போர் நடந்த பிறகு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பலவகையான நிறுவனங்கள் - குறிப்பாக பிரெட்டன் வூட்டின் நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ஜேஏடிடி (GATT) என்ற அமைப்பை நிறுவியது. வணிகம் செய்வதற்காக, அதே அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒரு நிறுவனத்தை, சர்வதேச வணிக அமைப்பு என்ற பெயரில், பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவானது. சர்வதேச வர்த்தக அமைப்பானது, ஐக்கிய நாடுகளின் (United Nations) தனிச்சிறப்பு பெற்ற அமைப்பாக, வியாபாரத்தில் ஏற்படும் தடைகளை நீக்குவதோடல்லாமல், வியாபாரத்துடன் மறைமுகமாக தொடர்புகொண்ட இதர பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, முதலீடுகள், குறுகிய நோட்டத்துடன் தொழில் செய்வது, பயன்படு பொருள்களுக்கான ஒப்பந்தங்கள் போன்றவைகளையும் மேற்பார்வையிட வல்லதாகும். ஆனால் இந்த சர்வதேச வர்த்தக அமைப்பிறகான ஒப்பந்தத்தை அமேரிக்கா மற்றும் சில இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் அவை நிறைவேற்றப்படவில்லை.

வர்த்தகத்திற்கான ஒரு சர்வதேச அமைப்பு இல்லாது போனதால், ஜி ஏ டி டி (GATT) இன்னும் சில வருட நடைமுறையில் ஒரு சர்வதேச நிறுவனமாக 'தன்னைத் தானே' மாற்றியமைத்துக்கொள்ளும்.


ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தை சுற்றுகள்


1948 ஆண்டு தொடங்கி, 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதுவரை, சர்வதேச வாணிபத்தை முறைப்படுத்திய ஒரே ஒரு பலதரப்பட்ட சாதனமாக ஜிஏடிடி (GATT) விளங்கியது. 1950 மற்றும் 1960 ஆண்டுகளுக்கிடையில், சர்வதேச வர்த்தகத்திற்காக ஒரு விதமான நிறுவன இயக்கமுறையை செயல்படுத்த முயன்ற போதிலும், ஜிஏடிடி (GATT) தொடர்ந்து அரை நூற்றாண்டிற்கும் மேல், ஒரு தற்காலிக அடிப்படையில், ஒரு பலவகை ஒப்பந்த ஆட்சிபுரியும் பங்களவு நிறுவனமாக செயல்பட்டுவந்தது.

உருகுவே சுற்று


ஜிஏடிடி (GATT) யின் நாற்பதாவது ஆண்டுவிழாவிற்கு முன்னதாகவே, அதன் உறுப்பினர்கள் ஜிஏடிடி (GATT) யின் முறைகளால் புதிய உலகளவில் விரிந்துவரும் உலக பொருளாதாரத்துடன் தாக்குப்பிடித்து ஒத்துவர இயலவில்லை என்பதை உணர்ந்தனர். 1982 ஆம் ஆண்டில் அலுவலகப்பணித் தொகுதி கூட்ட சாற்றுரையில் அடையாளம் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக (அமைப்பிற்குரிய குறைபாடுகள், உலக வணிகத்தைப்பற்றிய சில நாடுகளின் கொள்கைகளால் ஏற்பட்ட நிரம்பி வழிந்த தாக்கங்களால் ஏற்பட்ட நிலைகுலைவு ஜிஏடிடி (GATT) யால் நிர்வாகம் செய்ய இயலாமல் போனது போன்றவை), எட்டாவது ஜிஏடிடி (GATT) சுற்று, உருகுவே சுற்று என்று அறியப்படுவது- உருகுவேயில் உள்ள புண்டா டெல் ஈஸ்டேயில் 1986 செப்டம்பரில் துவங்கியது.இதுவரை எங்கும் நடைபெறாத வணிகம் சார்ந்த மற்றும் ஒப்புமை கொண்ட மிகப்பெரிய உரிமைக்கட்டளை அதுவேயாகும்: பேச்சுவார்த்தைகள் வணிக முறைகளையும் தாண்டியது மற்றும் பல புதிய துறைகளை சீண்டியது, குறிப்பாக சேவைகள் புரிவதற்கான வணிகம் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை, மேலும் வேளாண் மற்றும் நெசவுத்தொழில் போன்ற உணர்ச்சிவசப்படக்கூடிய துறைகளில் வணிக செய்முறைகளில் சீர்திருத்தங்கள்; அனைத்து அசல் ஜிஏடிடியின் உடன்பாடு விதிகள் திரும்பவும் பரிசீலிக்கப்பெற்றது.ஏப்ரல், 1994 ஆம் ஆண்டில் நடந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம், மோரோகொவில் உள்ள மர்ரகேஷில் நடைபெற்றது, அத்துடன் உருகுவே சுற்றின் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அதிகார பூர்வமாக உலக வணிக அமைப்பின் ஆட்சியை நிறுவியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, அதனால் இது மர்ரகேஷ் ஒப்பந்தம் என அறியப்படுகிறது.
ஜிஏடிடி (GATT) இன்றும் உலக வணிக அமைப்பின் பொருட்களுக்கான வணிகத்தின் குடை ஒப்பந்தமாக இருந்துவருகிறது, உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவை நிகழ்நிலைப்பட்டுள்ளன.(ஆவணங்களான ஜிஏடிடி (GATT) 1994, நிகழ்நிலை ஜிஏடிடி (GATT) பாகங்கள், மற்றும் GATT 1947, வேறுபடுத்திய பின்னர் அசலான GATT 1947 ஒப்பந்தக்குறிப்பு, இன்னும் GATT 1994 இன் இதயமாக திகழ்கிறது).ஜிஏடிடி 1994 (GATT) ஒப்பந்தம் கூடாமல் மற்றும் மர்ரகேஷ் இறுதி கூட்டத்தில் இதர ஒப்பந்தங்களும் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுள்ளன; 60 ஒப்பந்தங்கள், இணைப்புகள், முடிவுகள், மற்றும் ஏற்றுக்கொண்டவை போன்ற நீண்ட பட்டியலில் அவை பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆறு முதன்மை பாகங்களுடன் கூடிய அமைப்பாக கட்டமைத்துள்ளது:
    • உலக வணிக அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம்

    • சரக்கு மற்றும் முதலீடு — சரக்குகளில் வணிகம் செய்வதற்கான பலவகை ஒப்பந்தங்கள், அவற்றில் ஜிஏடிடி 1994 (GATT) 1994 மற்றும் வணிகம் சார்ந்த முதலீட்டு நடவடிக்கைகள் அடங்கும்

    • சேவைகள் புரிதல் — சேவைகள் புரிவதற்கான பொது ஒப்பந்தம்

    • அறிவுத்திறனுடையார் சொத்துடமை — அறிவுத்திறனுடையார் சொத்துடமை உரிமைக்கான வணிகம் சார்ந்த பாங்குகளுக்கான ஒப்பந்தம் (ட்ரிப்ஸ்) (TRIPS)

    • தகராறுகளுக்கான தீர்வு (DSU)

  • அரசின் வணிக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல் (TPRM)



தோகா சுற்று


உலக வணிக அமைப்பு தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கான சுற்றை, தோகா மேம்பாட்டு நிகழ்ச்சிநிரல் என அறியப்படுவது, அதன் நான்காம் அலுவலகப்பணித்தொகுதி கூட்டத்தில், நவம்பர் 2001 முதல் தோகா, கத்தாரில் துவங்கியது. தோகா சுற்று மிகவும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய, உலகமயமாக்குவதற்கான எண்ணத்தை கருத்தில் கொண்டு, மேலும் உலகத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு உதவி புரியும் நோக்குடன், குறிப்பாக வேளாண் தொழில் தடைகள் மற்றும் மானியத்தொகை விவகாரங்களை அகற்றுவதற்கான ஒரு வெளிப்படை முயற்சியாகும். அதன் துவக்க நிகழ்ச்சிநிரல் வணிக குறைகளை மேலும் தளையகற்றி விடுவித்து, தற்காலத்துக்கேற்ற புதிய விதிமுறைகளை அமுல்படுத்தி, மேம்பாடு அடையும் நாடுகளுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைப்பை வலுவூட்டுவதே.
பல முறை பேச்சுவார்த்தைகள், அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடந்தாலும், பேச்சுவார்த்தைகள் மிகவும் காரசாரமாக இருந்ததோடல்லாமல் எந்த முடிவுக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பல முக்கிய விவகாரங்களில், வேளாண் மானியம் போன்றவையும் அடங்கும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

வணிக முறையின் கொள்கைகள்


உலக அரங்கில் அனைத்து நாடுகளும் பங்கேற்று வாணிபம் புரிந்திடும் நோக்குடன் வணிகத்திற்கான கொள்கைகளை வரையறுத்து உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தை கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்பு விளைவுகளை வரையறுக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை. அதாவது, வணிக கொள்கைகளுக்கான விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.1994 ஆண்டிற்கு முந்தைய ஜிஏடிடி அமைப்பு (pre-1994 ஜிஏடிடி (GATT)) மற்றும் உலக வணிக அமைப்பினை பற்றி தெரிந்துகொள்ள ஐந்து விதிமுறைகள் முக்கியமாகும்:
  1. பாகுபாடு இல்லாமை. இதில் இரண்டு பெரிய பாகங்களுண்டு: மிகவும் வேண்டிய நாடு (MFN) விதிமுறை, மற்றும் தேசிய நடத்துதல் கொள்கை
இவை இரண்டும், சரக்குகள், சேவைகள் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை உலக வணிக அமைப்பின் விதிமுறைகளில் வரையறுத்துள்ளது, ஆனால் அவற்றின் துல்லியமான நோக்கம் மற்றும் இயல்பு ஒவ்வொரு வகைக்கும் வேறுபடும். இந்த மிகவும் வேண்டிய நாடு MFN விதிமுறைகளின் படி உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரே மாதிரியான நியமங்களை இதர உலக வணிக அமைப்பின் உறுப்பினருடைய அனைத்து வணிக விவகாரங்களுக்கும் அமைக்க வேண்டும், அதாவது ஒரு உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக வணிகம் செய்யும் போது அதற்காக அளிக்க விரும்பும் மிகவும் உன்னதமான நிலவரங்களை மற்ற இதர உறுப்பினர்களுக்கும் பாகுபாடில்லாமல் அளிக்க முன்வரவேண்டும்."யாராவது ஒருவருக்கு சில சலுகைகளை அளித்தால், அச்சலுகைகளை எஞ்சி இருக்கும் அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுக்கும் அளிக்க வேண்டும்." தேசிய நடத்துகை என்றால் இறக்குமதி சரக்குகள் மற்றும் உள்நாட்டில் தயாரித்த சரக்குகள் இரண்டும் பாகுபாடில்லாமல் ஒரே முறையில் சீராக பார்க்க வேண்டும் (குறைந்தது வெளிநாட்டு சரக்குகள் சந்தையில் வந்த பிறகாவது) மேலும் இந்த விதிமுறைகள் வணிகம் செய்வதில் கட்டணம் இல்லாத தடைகளை அகற்றுவதற்காகவே ஏற்பட்டன. (எடுத்துக்காட்டு:தொழில்நுட்ப தரங்கள், பாதுகாப்பு தரங்கள் போன்றவை இறக்குமதி சரக்குகளுக்கு எதிராக பாகுபடுவது).
    1. பிரதிச்சலுகை. எம்எப்என் விதிமுறை (MFN rule) காரணமாக எழும் இலவச சலுகைகளில் நோக்கெல்லையை ஒரு அளவிற்குள் வைத்திடவும் மற்றும் வெளிநாட்டு சந்தையில் பங்குபெற ஒரு நல்ல அணுக்கம் கிடைப்பதற்குமான விருப்பத்தையும் தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஒரு நாடு பேரம்பேசி கலந்துரையாட, அதனால் கிடைக்கும் ஆதாயம் ஒரு தலைப்பட்சமான தாரளமயமாக்குதலை விட மிகையாக இருத்தல் வேண்டும்; பிரத்திச்சலுகைகள் மூலமாக இவ்வாறான ஆதாயங்கள் கிடைக்க வழி வகுக்கிறது.

    1. கட்டமைத்த மற்றும் வலிந்து செயற்படுத்துதலுக்கான கடமைகள். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் பலவகை வணிக பேச்சுவார்த்தைகளில் அறிவித்த கட்டண வாக்குறுதிகள் மற்றும் அணுக்கத்திற்கான வழிமுறைகள் ஒரு கால அட்டவணையில் எண்ணிக்கையுடன் பட்டியலிட வேண்டும். இது போன்ற கால அட்டவணைகள் "மேல் மட்ட கடமைகளை " நிலைநாட்டும்: ஒரு நாடு தனது கட்டமைப்புகளை மாற்றலாம், ஆனால் அவற்றை அந்நாட்டு வணிக கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே செய்யலாம், அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு வணிகத்தில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் திருப்தி அடையவில்லை என்றால், குற்றத்தை முறையிடும் நாடு உலக வணிக அமைப்பின் தகராறுகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை அழைத்து செயல்படுத்தலாம்.

    1. ஒளிவின்மை. உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் தங்கள் நாட்டின் வணிக விதிமுறைகளை அச்சிட்டு வெளியிடவேண்டும், வணிக ரீதியில் பாதிக்கும் நிர்வாக முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான நிறுவனங்களை தடங்கலில்லாமல் கட்டிக்காக்க வேண்டும், இதர உறுப்பினர்களுக்கு தேவைப்படும் தகவல்களை அவ்வப்போது வழங்குதல் வேண்டும், மேலும் வணிக ரீதியிலான கொள்கை மாற்றங்களை உடனுக்குடன் உலக வணிக அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறான உட்புறத்து ஒளிவுமறைவின்மையுடன் கூடிய தேவைகளுடன் காலமுறையில் தனி நாட்டை குறிக்கும் அறிக்கைகள் (வணிக கொள்கை மறுபரிசீலனைகள்) வணிக கொள்கைகளுக்கான மறுபரிசீலனை இயக்க அமைப்பு (TPRM) மூலமாக மிகைநிரப்பி இணைப்புகளை சேர்த்து உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு உலக வணிக அமைப்பு முறைகள், முன்னறிந்து கொள்ளக்கூடிய தன்மை மற்றும் நிலைத்தன்மைகளை மேம்படுத்தி, மேலும் ஒதுக்கீடு மற்றும் அது போன்ற தடைகளை விதிக்கும் நடைமுறைகளை நீக்கி, இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கின்றன.

  1. பாதுகாப்பு வால்வுகள் . சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அரசுகளால் வணிகத்தை கட்டுப்படுத்த இயலும். இத்திசையில் மூன்று வகையிலான முன்னேற்பாட்டு ஒதுக்கங்களை காணலாம்: பொருளாதாரமல்லாத கொள்கைகளை அடைவதற்கான விதிமுறைகள், நியாயப் போட்டிகளை அனுமதிக்கும் நோக்குடைய விதிமுறைகள்; மற்றும் பொருளாதார காரணங்களுக்காக குறிக்கீடுகளை அனுமதிக்கும் தனிவகைமுறைகள்.
எம்எப்என் கொள்கைகளுக்கு விதிவிலக்கானவை மேம்பாடடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கும் சலுகைகள், தடையிலா வணிகம் புரிவதற்கான இடங்கள் மற்றும் சுங்க ஒன்றியங்கள்.
சரக்கு மன்ற அமைப்பில் 11 வகை குழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியை செயல்படுத்துகின்றன. உலக வணிக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குழுக்களில் பங்கேற்கின்றனர். நெசவுத்தொழில் கண்காணிப்புக்குழு மற்ற குழுக்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தாலும், அதுவும் சரக்கு மன்றத்திற்குள் அடங்கியதே. இந்த அமைப்பிற்கு அதனுடைய தனித் தலைவர் உண்டு மேலும் அது 10 உறுப்பினர்கள் கொண்டது. நெசவுத்தொழில் சார்ந்த பல குழுக்களுடன் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளது.

அறிவுசார் சொத்துரிமை சார்ந்த வணிக முறையிலான கோட்பாடுகளுக்கான குழு


உலக வணிக அமைப்பிலுள்ள அறிவுசார் சொத்துக்களுக்கான தகவல்கள், செய்திகள் மற்றும் TRIPS குழுமத்தின் (TRIPS Council) அலுவலகக்குறிப்புகள், மற்றும் இத்துறையில் உலக வணிக அமைப்பு இதர சர்வதேச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பணிகள் 

சேவைகள் வழங்குவதற்கான குழுமம்

பொதுக்குழுவின் அமைப்பின் வழிகாட்டுதலுடன் சேவைகள் புரிவதற்கான குழுமம் செயல் படுகிறது மேலும் அக்குழு சேவைகள் அளிப்பதற்கான வணிகத்திற்கான பொது ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அதன் பொறுப்பாகும் (GATS) இந்த குழுமம் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் திறந்து வைத்ததாகும், மேலும் தேவைகளுக்கேற்றபடி துணைக்குழுமங்களையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
சேவைக் குழுவிற்கு மூன்று துணைக்குழுக்கள் உள்ளன: நிதி சேவைகள், வீட்டுக்குரிய ஒழுங்கு முறைகள், GATS விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள்

சிக்கல்களுக்கு தீர்வு காணல்

1994 ஆம் ஆண்டில், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மர்ரகேஷ் ஒப்பந்தத்தில் கையிட்ட "இறுதி சட்டம்" என்ற தலைப்பின் கீழ் வழங்கிய தகராறுகளுக்கு தீர்வு காணல் (DSU) விதிமுறைகள் மற்றும் செயல் முறைகளை பற்றி நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்தனர் மற்றும் அதை செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.தகராறுகளுக்கு தீர்வு காண்பது என்பதை உலக வணிக அமைப்பின் பல வகை வணிகமுறைகளை தாங்கிப்பிடிக்கும் நடுவிலமைந்த தூணாக கருதுகின்றனர், மற்றும் "உலக பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களுடைய தனி பங்களிப்பாக அதை போற்றுகின்றனர்." மேலும், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு சார்ந்த உறுப்பினர்களில் யாரேனும் விதிமுறைகளை மீறியதாக நினைத்தால், அவர்களே நேரிடையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வணிக அமைப்பின் பலவகை தகராறுகளை தீர்வு காணும் முறையை பின்பற்றி அனுசரிப்பதாக வாக்களித்துள்ளனர்.
உலக வணிக அமைப்பின் தகராறுகளை தீர்க்கும் வழிமுறைகளை செயல்படுத்த, அதற்கான தனி DSB குழுக்கள், மேல்முறையீட்டு ஆணைக்குழு, உலக வணிக அமைப்பு செயலகம், நடுவர்கள், பிறர் சார்பற்ற வல்லுனர்கள் மற்றும் பல தனி நிறுவனங்கள் போன்றவை தேவைப்படும்.

 

நன்றி : தமிழ் ஹிந்து

  

டபிள்யூ டி ஓ-வின் வீழ்ச்சி!


புத்தாண்டில் தனது 23-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது டபிள்யூ டி ஓ எனப்படும் உலக வர்த்தக அமைப்பு. அமெரிக்காவில் தலைமையிடம் இல்லாத ஓரிரு சர்வதேச அமைப்புகளில் இதுவும் ஒன்று என்ற சிறப்பும் இதற்கு உண்டு. சர்வதேச  அளவில் வர்த்தகங்களை மேற்கொள்வதற்கான
கொள்கைகளை வகுக்கும் டபிள்யூ டி ஓ-வின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இந்த அமைப்பு தேவையா என்ற கேள்வியோடு தனது அதிகாரத்தையும் இழந்து வருகிறது.


தங்கள் நாட்டில் தலைமையகம் இல்லை என்ற ஒரு காரணத்துக்காகவே டபிள்யூ டி ஓ அமைப்பை புறந்தள்ளும் போக்கைக் கையாண்டு வருகிறது அமெரிக்கா. வல்லரசான அமெரிக்காவின் ஒத்துழையாமை இந்த அமைப்பின் அதிகார வரம்பை ஆட்டம் காணச் செய்துள்ளது. டபிள்யூ டி ஓ-வின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சமும் வளரும் நாடுகளிடையே உருவாகி வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போரில்லா உலகம் படைப்போம் என்ற சூளுரையோடு, நாடுகளிடையே வர்த்தகத்தை மேற்கொள்ள ஒரு சர்வதேச அமைப்பு தேவைப்பட்டது. அப்போது 23 நாடுகள் இணைந்து பொதுவான வர்த்தக பரிவர்த்தனை ஒப்பந்தம் (காட்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.1948-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 1995-ம் ஆண்டில் `காட்’ பெயர் மாற்றப்பட்டு டபிள்யூ டி ஓ- வானது. 123 நாடுகள் இதன் அங்கத்தினர்களாயினர்.
`காட்’ அமலில் இருந்தபோது நாடுகளிடையிலான சரக்குகளுக்கான வரி விகிதம் 22 சதவீத அளவுக்கு இருந்தது. வரி விதிப்புதான் இந்த அமைப்பின் செயல்பாடுகளை முடக்குகிறது என்ற கோரிக்கை வலுக்கவே வரி விகிதம் படிப்படியாகக் குறைந்து தற்போது 5 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பு நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடி நாடுகளிடையிலான வர்த்தகத்தின் போக்கு, எந்தெந்த வகைகளில் பிரச்சினைகள் உருவாகின்றன,அவற்றைத் தீர்ப்பது எப்படி என்று விவாதிப்பார்கள். குறிப்பாக டபிள்யூடிஓ-வின் கொள்கைகளை வகுப்பார்கள். நாடுகளிடையிலான தாராள வர்த்தகத்தை பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் இம்மாத தொடக்கத்தில் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கூட்டங்களை விட இரண்டு வகையில் வேறுபட்டிருந்தது இந்தக் கூட்டம். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன் தனக்கான விதிகளை அதாவது பன்முக வர்த்தகத்துக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டது. மற்றொருபுறம் டபிள்யூ டி ஓ அமைப்பின் பன்முக வர்த்தகத்தால் தங்கள் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால் அமெரிக்காவின் வாதங்கள் இதில் முன்னிலை பெறாமல் போனது. இதனால் இந்தக்கூட்டத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு முற்றிலும் இல்லாத சூழல் உருவானது.
இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் எட்டப்பட்டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற டபிள்யூடிஓ கூட்டங்கள் அனைத்துமே முந்தைய கூட்டங்களைக் காட்டிலும் ஓரளவு முன்னேற்றத்தை எட்டி அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தது. மானியங்கள் அளிப்பது, உணவு பாதுகாப்பு, வேளாண் மானியம் ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் டபிள்யூடிஓ கூட்டங்கள் ஓரளவு அர்த்தமுள்ளதாக இருந்தன.
ஆனால் நாடுகள் இப்போது வெளிப்படையாகவே வர்த்தக பேரம் பேசத் தொடங்கிவிட்டன. தங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்க, அதேசமயம் அதற்கு இடையூறாக இருக்கும் டபிள்யூடிஓ விதிகளை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டன. இதுவே சர்வதேச வர்த்தகத்துக்கு விதிகளை வகுக்கும் அமைப்பாக விளங்கிய டபிள்யூடிஓ-வுக்கு பெரும் சரிவாக அமைந்துவிட்டது.
சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு மானிய உதவி அளிப்பதை தடுக்கும் சட்டத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை என்று ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டதிலிருந்தே டபிள்யூடிஓ-வின் பலவீனம் புலனாகும்.
மேலும் டபிள்யூடிஓ அமைப்பின் விதிமுறைகள் மிகவும் சிக்கலாக இருப்பதும் பிரச்சினையை பெரிதாக்கி வருகிறது. வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதிகள் 1995-ம் ஆண்டிலிருந்தே டபிள்யூ டி ஓ-வில் இருந்தாலும், இந்த தளர்வு விதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதான குற்றச்சாட்டும் எழுந்துவிட்டது.
தங்கள் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகள் டபிள்யூடிஓ விதிமுறைகளுக்கு எதிரானது என்று சிறிய நாடுகளான பார்படாஸ், ஆன்டிகுவா ஆகியன வெகுண்டெழுந்து தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இதற்கு டபிள்யூடிஓ தீர்வு காணும் முயற்சியில் இறங்கியதால் ஓரளவு டபிள்யூடிஓ மீதான நம்பிக்கை துளிர்த்தது.
இந்த சமரச தீர்வானது பரஸ்பர ஆலோசனை, உயர்நிலைக் குழுவின் ஆய்வு, மேல் முறையீட்டு ஆணையத்தின் விதிமுறைகள் என நீண்டு அதை அமல்படுத்துவது என்ற நிலையை எட்டுவதற்கு நீண்ட காலம் பிடித்தது.
வர்த்தகம் தொடர்பான முறையீடு இருந்தால் அதை மேல் முறையீட்டு அமைப்பு ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை அளிக்கும். இதை சமரச தீர்வு அமைப்பு (டிஎஸ்பி) அப்படியே ஏற்கும். இதை ஏற்றால் டபிள்யூடிஓ விதிமுறைகள் மீறப்பட்டதாக டபிள்யூடிஓ அமைப்பு அறிவிக்கும். அதேபோல தீர்வு அமைப்பு பரிந்துரைத்த விதிமுறைகளை பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட நாடுகளை டபிள்யூடிஓ வலியுறுத்தும்.
தீர்வு அமைப்பு அளித்த பரிந்துரை, அதை அமல்படுத்த டபிள்யூடிஓ வெளியிட்ட வலியுறுத்தல் இவை எதையுமே அமெரிக்கா கண்டு கொள்வதில்லை. உதாரணத்துக்கு காட் ஒப்பந்தத்துக்கு எதிரான அமெரிக்காவின் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, டபிள்யூடிஓ 20 கோடி டாலர் அபராதத்தை ஆன்டிகுவா, பார்படாஸுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அமெரிக்கா இதுவரை 20 லட்சம் டாலரை மட்டுமே அளித்துள்ளது.
டபிள்யூடிஓ விதிகளை அமெரிக்கா மதிப்பதேயில்லை என்பதாக தென்கொரியாவின் குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை. தென்கொரிய தயாரிப்புகளான சலவை இயந்திரங்கள் மீதான டபிள்யூடிஓ விதிமுறையை 15 மாதங்களாகியும் அமெரிக்கா நிறைவேற்றவில்லை.
இதேபோல மூன்றாம் தரப்பு நாடுகளிடையிலான சமரசம் தொடர்பாகவும் அமெரிக்காவின் நிலைப்பாடு டபிள்யூடிஓ விதிகளுக்கு எதிரானதாகவே உள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு எதிராக கத்தார் தொடுத்த வர்த்தக விதிமீறல் சர்ச்சை புகாரில், டபிள்யூடிஓ விதிகளை பின்பற்ற முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல டபிள்யூடிஓ சமரச தீர்ப்பாய நீதிபதிகள் நியமன விஷயத்தில் பங்கேற்க முடியாது என்று அமெரிக்கா கூறியது டபிள்யூடிஓ-வுக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகோபித்த கருத்தொற்றுமை அடிப்படையில்தான் டபிள்யூடிஓ உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் போக்கு, உறுப்பினர் நியமனத்தையே கேள்விக்குறியாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளரும் நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிக்கப்படும்போது அவை நாடுவது சமரச தீர்ப்பாயத்தைத்தான். ஆனால் பொதுவாக இந்த விதிகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்காவால், வளரும் நாடுகள் கடுமையாக பதிக்கப்படுகின்றன.
`அமெரிக்காதான் பிரதானம்’ என்ற அதிபர் ட்ரம்பின் நிலைப்பாடு முதலில் காவு வாங்கியது டிரான்ஸ் பசிபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தைதான். இப்போது டபிள்யூடிஓ-வின் விதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கி மலினப்படுத்தி வருகிறது. இந்த போக்கானது சர்வதேச வர்த்தகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் பரவலாகியுள்ளது.
டபிள்யூடிஓ-வின் வீழ்ச்சி சர்வதேச வர்த்தகத்துக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கும். எல்லை தாண்டிய வர்த்தகம் சாத்தியமாகாமல் போகும். வலைதளம் பரந்து விரிந்தாலும் வர்த்தகம் சுருங்கும் அபாயம் உருவாகியுள்ளது.


 ஆங்கிலத்தில் 

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN