ஜிஎஸ்டி என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY  # அடிப்படை கற்றல் #TNPSC MAINS #UPSCTAMIL


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது.



 இதன் முக்கிய அம்சங்கள்:



* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.




மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.


Image result for GST


மதிப்புகூட்டுதல் 

ஒரு உற்பத்தியாளர் ஒரு சட்டையை உற்பத்தி செய்கிறார் என்று கருதுக் கொள்வோம். அதற்காக அவர் நூலிழையை வாங்கவேண்டும். இந்த நூலிழையைக் கொண்டு சட்டை தயாரிக்கப்படுகிறது. இவ்வகையில், அந்த நூலிழை சட்டையாக நெய்யப்பட்டபின் அதன் மதிப்பு அதிகரிக்கிறது. பின்னர், அந்த சட்டையை உற்பத்தியாளர் பண்டகசாலை முகவரிடம் விற்கிறார். அவர் ஒவ்வொரு சட்டையிலும் அடையாளமுத்திரையை ஒட்டுகிறார்.  இந்த மதிப்புகூட்டலுக்குப் பின்னர், பண்டகசாலை முகவர் அந்த சட்டையை சில்லரை விற்பனையாளரிடம் விற்கிறார். இவ்விற்பனையாளர் ஒவ்வொரு சட்டையையும் தனித்தனியாக பொதிசெய்கிறார். அவர் அந்த சட்டையை சந்தைப்படுத்தி அதன் மதிப்பை மேலும் அதிகரிக்கிறார்.

இலக்கைப்பொறுத்த வரி


அனைத்து நிலையில் நிகழும் விற்பனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்படவேண்டும். முன்னதாக, ஒரு பொருள் தயாரிக்கப்படும்போது, மத்திய அரசு உற்பத்தியின் மீது உள்நாட்டு பொருள் வரி வசூலிக்கும். பின்னர், அந்த மாநில அரசின் மதிப்புகூட்டு வரியைச் சேர்த்தபின்னர் பொருள் அடுத்த நிலைக்கு விற்கப்படும். பின்னர், விற்குமிடங்களில் மதிப்புகூட்டு வரியுடன் அந்த பொருள் விற்கப்படும்.


ஏன் சரக்கு மற்றும் சேவை வரி மிக முக்கியமானது?



ஜிஎஸ்டி பற்றி அறிந்துகொண்டோம். அது தற்போதுள்ள வரியமைப்பையும் பொருளாதாரத்தையும் எவ்வாறு உருமாற்றும் என்பதை இனி காண்போம்.
தற்போது, நேரடி மற்றும் மறைமுக வரிகள் என்னும் இருவகையான வரி விதிப்புமுறைகள் நடைமுறையில் உள்ளன. நேரடி வரி செலுத்திய பின், அந்த வரிச்சுமையை பிறருடன் பகிர இயலாது. எ.டு: நமது வருமானத்திற்கு உரிய வருமானவரியை நாமே செலுத்த வேண்டும். இந்த வரியை வேறு ஒருவர் நமக்காக செலுத்த இயலாது.
ஒருவர் தான் செலுத்திய மறைமுக வரியை பிறரைச் செலுத்தச்- செய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கடைகாரர் தான் செலுத்திய மதிப்புகூட்டு வரியை, தமது வாடிக்கையாளரிடம் இருந்து பெறலாம். எனவே, ஒரு வாடிக்கையாளர் பொருளின் விலையுடன் அதற்குண்டான மதிப்பு கூட்டுவரியையும் சேர்த்து கடைக்காரரிடம் செலுத்த வேண்டும். பின்னர், அவர் அந்த வரியை அரசிடம் செலுத்துவார். பொருளின் விலை மற்றும் வரிச்சுமையையும் ஏற்றுக்கொள்வதால், ஒரு பொருளை வாங்க வாடிக்கையாளர் அதிக முதலீடு செய்யவேண்டியுள்ளது.
ஏன்னெனில் கடைக்காரர் அப்பொருளை மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கும்போதே அதற்க்குண்டான வரியினை செலுத்தியுள்ளார். அவ் வரித்தொகையையும் மற்றும் (அரசுக்கு செலுத்தவேண்டிய) மதிப்புக்கூட்டு வரித்தொகையையும் கடைக்காரர் வாடிக்கையாளரிடம் இருந்து கூடுதல் தொகையாக வசூலிக்கிறார். இதைத்தவிர கடைக்காரருக்கு மாற்றுவழி ஏதுமில்லை.
செயல்பாட்டுக்கு வந்தபின், இந்த பிரச்சினையை ஜிஎஸ்டி சரி செய்யும். உள்ளீட்டு வரிவரவு என்னும் அமைப்பை ஜிஎஸ்டி உள்ளடக்கியுள்ளது. எனவே, விற்பனையாளர்கள் தாங்கள் செலுத்திய வரியினை திரும்பபெறலாம். எனவே, வாடிக்கையாளருக்கு உள்ள கூடுதல் வரிச்சுமை குறைகிறது

ஜிஎஸ்டி எவ்வாறு செயல்படுகிறது?



ஒரு தேசிய வரி சீர்திருத்தம் நிச்சயமாக கடுமையான வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் ஆகியவைகளைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஜிஎஸ்டி ஆட்சிக்குழு ஒரு பிழையேற்படுத்தாத செயல்பாட்டின் மூலமாக இந்த புதிய வரி முறையினை செயல்படுத்த உள்ளது. அதற்காக இந்த குழு ஜிஎஸ்டியை மூன்று வகைகளாக பிரித்துள்ளது. அதன் செயல்பாட்டினை எமது வல்லுநர்கள் உங்களுக்கு விளக்குவார்கள்.
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது, 3 வகையான சரக்கு மற்றும் சேவை வரிகள் இருக்கும்:
மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): வருவாய் மத்திய அரசால் வசூலிக்கப்படும்
மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST): மாநிலங்களின் இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்
மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST): மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்





ஆங்கிலத்தில் அறிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை காணவும் 



What is GST?


GST is an Indirect Tax which has replaced many Indirect Taxes in India. The Goods and Service Tax Act was passed in the Parliament on 29th March 2017. The Act came into effect on 1st July 2017; Goods & Services Tax Law in India is a comprehensivemulti-stagedestination-based tax that is levied on every value addition.
In simple words, Goods and Service Tax (GST) is an indirect tax levied on the supply of goods and services. This law has replaced many indirect tax laws that previously existed in India

GST is one indirect tax for the entire country.
nder the GST regime, the tax will be levied at every point of sale. In case of intra-state sales, Central GST and State GST will be charged. Inter-state sales will be chargeable to Integrated GST.
Now let us try to understand the definition of Goods and Service Tax – “GST is a comprehensive, multi-stagedestination-based tax that will be levied on every value addition.”


Multi-stage


There are multiple change-of-hands an item goes through along its supply chain: from manufacture to final sale to the consumer.
Let us consider the following case:
  • Purchase of raw materials
  • Production or manufacture
  • Warehousing of finished goods
  • Sale to wholesaler
  • Sale of the product to the retailer
  • Sale to the end consumer


Value Addition


The manufacturer who makes biscuits buys flour, sugar and other material. The value of the inputs increases when the sugar and flour are mixed and baked into biscuits.
The manufacturer then sells the biscuits to the warehousing agent who packs large quantities of biscuits and labels it. That is another addition of value after which the warehouse sells it to the retailer.
The retailer packages the biscuits in smaller quantities and invests in the marketing of the biscuits thus increasing its value.
GST will be levied on these value additions i.e. the monetary worth added at each stage to achieve the final sale to the end customer.


Destination-Based


Consider goods manufactured in Maharashtra and are sold to the final consumer in Karnataka. Since Goods & Service Tax is levied at the point of consumption, in this case, Karnataka, the entire tax revenue will go to Karnataka and not Maharashtra.

What are the components of GST?


There are 3 taxes applicable under this system: CGST, SGST & IGST.
  • CGST: Collected by the Central Government on an intra-state sale (Eg: transaction happening within Maharashtra)
  • SGST: Collected by the State Government on an intra-state sale (Eg: transaction happening within Maharashtra)
  • IGST: Collected by the Central Government for inter-state sale (Eg: Maharashtra to Tamil Nadu)

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN