#கேள்வி - பதில் சவால்



UPSC ASPIRANTS களுக்கு வணக்கம் 

UPSC முதன்மை தேர்வுக்கு பதில் எழுதுவது என்பது ஒரு சவாலான காரியம்.அப்படி நீங்கள் கருதவில்லை என்றால் போட்டியில் நீங்கள் பங்கேற்கவில்லை என்று பொருள்.ஏனென்றால் UPSC ல் ஒரு கேள்வி பதிலுக்கு 50 % மதிப்பெண் பெற்றாலே அது சிறப்பாக கருதப்படுகிறது.எனவே ஒரு தலைப்பை நீங்கள் ஒருமுறை பயிற்சி செய்திருந்தால் அதிலுள்ள அடிப்படை விஷயங்களை மட்டுமே அறிந்திருப்பீர்கள். ஆனால் UPSC ன் கேள்விகள் நீங்கள் பயிற்சி செய்த வினாக்களை ஒட்டிய கேள்விகளாகவும் இருக்கலாம் அல்லது அதிலிருந்து வேறுபட்டும் இருக்கலாம். எனவே,ஒரு தலைப்பை வெவ்வேறு கோணங்களில் நீங்கள் கேள்வி பதிலாக எழுதி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 2 MAINS தேர்விற்கு தயாராவது எப்படி ?



யார் தயார் செய்யலாம் ?

குரூப் 2 prelims தேர்வில் 140 கேள்விக்குமேல் சரியான பதில் அளித்திருந்தால் நீங்கள் mains தேர்விற்கு தயாராகலாம்.


எப்படி தொடங்குவது?


முதலில் SYLLABUS DOWNLOAD செய்யவும் (SYLLABUS DOWNLOAD செய்ய கீழே CLICK செய்யவும் )


SYLLABUS இல் தேர்வானது ஒரு தாள்,மூன்று பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

பாடம் 1: அறிவில் மற்றும் தொழில்நுட்பம்

வ.உ.சி.யும் திருக்குறலும்


voc

வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் உரை வெகு பிரசித்தம். அதை வெளியிடுவதற்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றியுமிருக்கிறார். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் இரு கண்களாகக் கருதி வ.உ.சி. போற்றியிருக்கிறார்; இரண்டையும் கற்றுத்தேர்ந்து, அதன் உரைகளின் இயல்புகளை மதிப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்.

வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவரைச் சந்திக்கவந்த நண்பர் சுவாமி வள்ளிநாயகத்திடம், “தமிழர்கள் எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” என்றிருக்கிறார். திருக்குறள் மீது வ.உ.சி. கொண்டிருந்த அளவுகடந்த பெருமதிப்புக்கு இந்த வரிகள் ஓர் உதாரணம்.

இந்தப் பெரும் பற்றின் காரணமாகத்தான் ப.ஜீவானந்தம், ‘திருக்குறள் பித்தர்’ என்று வ.உ.சி.யை அன்பு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். ‘திருக்குறள் அன்பர்’ என்று வ.உ.சி. தன்னைத் தானே அழைத்து மகிழ்ந்துகொண்ட நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது. வள்ளுவத்துக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு உயிரும் உடலுமானதாக இருந்தது.

திருக்குறள் உரைகள்

திருக்குறள் உரைகளிலேயே மணக்குடவர் உரை வ.உ.சி.யை வெகுவாகக் கவர்ந்தது. அதனால், மணக்குடவர் உரைச் சுவடியை முதன்முதலாக அச்சிட்டு மகிழ்ந்தார். அறத்துப்பாலை மட்டும் கொண்ட முதல் பகுதியை 1917-ல் வெளியிட்டார். வ.உ.சி. பதிப்புத் துறையில் ஈடுபட்டுப் பதிப்பித்த நூல்களுள் திருக்குறள் மணக்குடவர் உரை மிக முக்கியமானதாகும்.

திருக்குறளைப் புரிந்துகொள்ள பரிமேலழகர் உரை ஏற்றதாக இருக்கவில்லை என்பதை வ.உ.சி. பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். 1926-ல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த எஸ்.வையாபுரிப்பிள்ளை, அக்காலத்தில் இந்துமத பரிபாலன சபையின் கமிஷனராக இருந்த டி.கே.சிதம்பரநாத முதலியாரைச் சந்திப்பதற்காக நண்பர் பி.ஸ்ரீ.ஆச்சாரியாரை அழைத்துக்கொண்டு, சென்னை மயிலாப்பூர் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார்.

டி.கே.சி. வீட்டில் தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வ.உ.சி.யும் அங்கு இருந்திருக்கிறார். மூவரும் வெகுநேரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மூவரின் பேச்சும் திருக்குறளின் உரையைப் பற்றியதாக அமைவதற்கு வ.உ.சி. காரணமாக இருந்திருக்கிறார். பரிமேலழகர் உரை பல இடங்களில் பிழையாயுள்ளது என்றும், முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியன அல்ல என்றும் வ.உ.சி. தமக்கு இயற்கையாயுள்ள ஆவேசத்தோடு பேசியிருக்கிறார்.

உ.வே.சா.வும் வ.உ.சி.யும்

திருக்குறளையும் அதன் பழைய உரைகளையும் நன்கு கற்று, ஆராய்ந்து, தெளிந்து, புதிய உரை எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கோவை சிறையில் இருந்த காலத்திலேயே வ.உ.சி.க்கு ஏற்பட்டிருக்கிறது. 1908 மார்ச் 12-ல் வ.உ.சி. கைதுசெய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற பின்னர், ஆறு மாத காலம் கழித்து, 1908 செப்டம்பர் 14 அன்று திருக்குறளில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்ளும் வகையில், உ.வே.சாமிநாதையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

1940-ல் சென்னை மாநிலக் கல்லூரி நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய ஒரு கட்டுரையில் உ.வே.சா. அவற்றைக் குறிப்பிட்டு நினைவுகூர்ந்திருக்கிறார். உ.வே.சா.வுக்கு வ.உ.சி. கடிதம் எழுதிய காலத்தில் பிரஸிடென்ஸி கல்லூரியில் ஜே.எச்.ஸ்டோன் என்ற ஆங்கிலேயர் முதல்வராக இருந்திருக்கிறார். சிறையில் இருந்த வ.உ.சி.க்குக் கடிதம் எழுதுவது ஏற்றதாக இருக்குமா என்று ஸ்டோன் துரையை சாமிநாதையர் கேட்டிருக்கிறார்.

“அவசியம் எழுத வேண்டும். சிறைச்சாலைக்குள் ஒருவருடைய பழக்கமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவுவது அவசியம். ஆனால், கடிதத்தை நீங்கள் நேரே அனுப்ப வேண்டாம். எழுதி என்னிடம் கொடுங்கள்; நான் சிறையதிகாரி மூலம் அவருக்கு அனுப்பிவிடுகிறேன்” என்று ஸ்டோன் சொல்லியதற்கேற்ப சாமிநாதையர் செய்திருக்கிறார்.

உரைகள் ஒப்பீடு

பரிமேலழகர் - மணக்குடவர் உரைகளை ஒப்பிட்டு நோக்கி ஆராய்ந்தறிந்த பின்னர், மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார முறையில் சிறிதும், குறட்பாக்களின் முறையில் பெரிதும் வேறுபட்டிருப்பதுடன், பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டிருப்பதும், பல குறள்களுக்கு வெவ்வேறு பொருள் உரைத்திருப்பதும் வ.உ.சி.க்குப் புலப்பட்டன. குறளுள் புகுந்துள்ள வேறுபாடுகளைக் காண்பவர்கள் திருக்குறளின் பெருமையையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிந்துகொள்வதுடன், குறள்களுக்கு இருவரும் உரைத்துள்ள பொருள்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் புதிய பொருள்கள் உரைக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பியே மணக்குடவர் உரையை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் பலர் வ.உ.சி.யின் பதிப்புப் பணிக்குப் பெருமளவு பொருளுதவி புரிந்திருக்கிறார்கள். 1917-ல் வெளிவந்த திருக்குறள் மணக்குடவர் உரைப் பதிப்பின் இறுதிப் பகுதியில் அவர்களின் பெயர்களை ‘இந்திய சகோதரர்கள்’ என்று பெயரிட்டு நன்றியுணர்வு மீதூறப் பதிவுசெய்து போற்றியிருக்கிறார். அவற்றுள் ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட தென்னாப்பிரிக்க அன்பர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தனித்துவமான வ.உ.சி. உரை

திருக்குறள் முழுவதற்கும் உரையெழுத வேண்டும் என்று வ.உ.சி. திட்டமிட்டு, அறத்துப்பால் உரைப் பகுதியை முதலாவதாக 1935-ல் வெளியிட்டிருக்கிறார். திருக்குறளுக்குரிய நவீனகால உரைகளுள் வ.உ.சி.யின் உரை தனித்து நோக்கத்தக்கதாகும். இந்த உரைப் பதிப்பில் ‘காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம்’ என்று பதிவுசெய்து தம் சுதேசிய உணர்வைப் பறைசாற்றிப் பெருமைகொண்டிருக்கிறார் வ.உ.சி.

திருக்குறளின் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் (இப்படி அமைப்பது வ.உ.சி. வழக்கு) மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று அவர் விரும்பியபோதும், பக்க மிகுதியைக் கருத்தில்கொண்டு அறப்பால் பகுதியை மட்டும் முதலில் வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி வெளிவந்த அடுத்த ஆண்டு அதாவது 1936-ல் வ.உ.சி. காலமாகிவிட்டதால் ஏனைய பகுதிகள் வெளிவராமல்போயின. ‘குறளின் ஏனைய இரு பகுதிகளுக்கும் வ.உ.சி. உரை எழுதினாரா, இல்லையா?’ என்ற ஐயமும் பலருக்கு இருந்துவந்த நிலையில், பேராசிரியர் மா.ரா.அரசு எழுதிய ‘வ.உ.சிதம்பரனார்’ என்ற நூலில் (2005) பொருட்பால், இன்பப்பால் பகுதிக்குமான வ.உ.சி.யின் உரை இருப்பது குறித்து எழுதினார்.

எல்லோருக்குமான வள்ளுவர்

வ.உ.சி. திருக்குறள் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்துக்குப் பிற்காலமும் முந்தைய உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்காலமுமாகிய இடைக்காலப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை என்றும் முடிவு செய்கிறார்.

அதனால், இடைக்காலத்தில் வந்துசேர்ந்த பாயிரமென்று கருதி, அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றுக்கு இடைப்பாயிரம் எனும் பெயர் கொடுத்து, அதற்கும் உரை எழுதியமைத்துப் பதிப்பித் திருப்பது முக்கியமானதாகும். திருக்குறளை சமயம் கடந்து பொதுத்தன்மையில் முன்னிறுத்த வ.உ.சி. மேற்கொண்ட இந்த முயற்சி பெருந்தமிழ்ப் பணியாகக் கொள்ளத்தக்கது.

இன்னோரிடத்தில், “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் என்று வழங்கும் முப்பால் திருவள்ளுவரால் இயற்றப்பெற்றது. அது மக்கள் அடைதற்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறுபோல விளக்குகிற ஓர் அருமையான நூல். அதன் ஒப்புயர்வற்ற பெருமை, அதனை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய நூலென்றும், அதன் ஆசிரியரைத் தத்தம் சமயத்தவர் என்றும் கூறிவருகிறதொன்றாலேயே நன்கு விளங்கும்” என்று வ.உ.சி. குறிப்பிட்டிருக்கிறார்.

1935 மார்ச் 6-ல் நடைபெற்ற உ.வே.சா.வின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சாமிநாதையரை வாழ்த்தி வ.உ.சி. எழுதியனுப்பிய வாழ்த்துப் பாடலின் இறுதிப் பகுதியில் ‘தூத்துக் குடிவாழ் ஒட்டப் பிடாரம், சிதம்பரம் என்னும் திருக்குற ளன்பனே’ என்று எழுதியிருக்கிறார். வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு இது மிக முக்கியமான சான்று.

நெல்லை வட்டாரப் பகுதியிலிருந்துகொண்டு திருக்குறள் ஆய்வுகளைச் செய்துவந்த திருக்குறள் ஆராய்ச்சியாளர் ஜெகவீரபாண்டியனார், வ.உ.சி. இறக்க நேர்வதற்கு ஒரு வாரம் முன்னர், தூத்துக்குடி சென்று சந்தித்திருக்கிறார். திருக்குறள் குறித்து நெடுநேரம் இருவரும் பேசியிருக்கிறார்கள். வ.உ.சி. அவரிடம், “ஒரு குரல் (குறள்) போகப்போகிறது, ஒரு குரல் (குறள்) இருக்கப்போகிறது” என்று சொல்லியிருக்கிறார். இறப்பை எதிர்கொண்ட இறுதிக் காலத்திலும் ‘குறள்’ குறித்த சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார் வ.உ.சி.!

- இரா.வெங்கடேசன், இளநிலை ஆராய்ச்சி அலுவலர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.
தொடர்புக்கு: iravenkatesan@gmail.com
நவம்பர் 18: வ.உ.சி. நினைவு நாள்

நன்றி : தமிழ் ஹிந்து

ஜிஎஸ்டி

கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி, நாட்டின் மறைமுக வரி விதிப்பு முறையில் திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள்தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தோம் என்று எந்த ஓர் அரசும் மார்தட்டிக் கொள்ள முடியாது. காரணம், 1994-இல் டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், இந்தக் கட்டுரையாளர் வருவாய்த் துறை செயலராகவும் இருந்தபோது கூட்டப்பட்ட மாநில நிதியமைச்சர்களின் கூட்டத்தில் இதற்கான விதைகள் விதைக்கப்பட்டன.
இதற்கு அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் விற்பனை வரியை ஒழுங்குபடுத்தவும், தொழிற்சாலைகளை ஈர்ப்பதற்காக மாநிலங்களிடையே நிலவி வந்த வரிவிலக்குப் போரை முடிவுக்கு  கொண்டு வரவும் 1999-இல் மதிப்புக் கூட்டு வரி ("வாட்') அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மாநில நிதியமைச்சர்கள் நிலைக் குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழுவே அதிகாரமளிக்கப்பட்ட குழுவாக உருமாறியதுடன், 2004-இல் சங்கமாகவும் பதிவு செய்யப்பட்டது. நஷ்டம் ஏற்பட்டால் ஈடு செய்யப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்ததால், வாட் வரியை மாநில அரசுகள் 2005-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தின.
தொடர்ச்சியாக, சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக விதிக்கப்படும் எல்லா வரிகளையும் ஒன்றாக்கி, வாட் வரியை ஜி.எஸ்.டி.யாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்த சிந்தனை எழுந்தது. ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக 12-ஆவது நிதிக் குழு பரிந்துரை செய்தது. இதை 2008-09-க்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மத்திய அரசு அளவில் செலுத்தப்படும் வாட் வரியைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால், வாட் வரி நுகர்வோருக்கு சாதகமானதாக அமையவில்லை. அதேபோல், திருத்தப்பட்ட வாட் வரி மத்திய உற்பத்தி வரி என்றே கருதப்பட்டது. அது வரிக்கு மேல் உபரி வரியாக அமைந்தது.
அதே சமயம், தொழிற்சாலையில் இருந்து நுகர்வோரைச் சென்றடையும் வரை, பொருளுக்கு மதிப்பு கூட்டப்படும் இடத்தில்தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவே, எந்தக் கட்டத்திலும் வரியைத் தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
உதாரணத்துக்கு, தொழிற்சாலையில் ஒரு மிதிவண்டியின் விலை ரூ.2,000 என்றால், அதில் உற்பத்தி வரி ரூ.200-ம் அடங்கும். வாட் வரி அமலில் இருந்தபோது, ஒரு விநியோகஸ்தர் ரூ.200 லாபம், ரூ.200 செலவுகள் என விதித்தார் எனில், ரூ.2400-க்கு 10 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்படும்.
ஆனால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின்னர், விநியோகஸ்தரின் லாபம் மத்திய உற்பத்தி வரியாக ஜி.எஸ்.டி.யில் அடங்கிவிடுவதால் செலவினத்துக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். இதனால், நுகர்வோருக்குதான் லாபம் ஆகும். சேவை வரி விதிக்கப்படும் பொருள்களை எடுத்துக் கொண்டோமானால், ஜி.எஸ்.டி. காரணமாக சேமிப்பு இன்னும் அதிகமாகும்.
ஜி.எஸ்.டி.யில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று, மத்திய அரசுக்கானது; மற்றது, மாநில அரசுக்கானது. இரண்டுமே சம அளவிலானது ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தில் 101-ஆவது திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 246 ஏ பிரிவு சரக்கு மற்றும் சேவைகளின் மீது மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரம் அளிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 279 ஏ பிரிவு, ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் அதிகாரம் படைத்தது என்பதை இந்தப் பிரிவு தெளிவாக வரையறுத்துள்ளது.
ஜி.எஸ்.டி. விஷயத்தில் பிரதமரோ, மத்திய நிதியமைச்சரோ எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. இது நடைமுறையில் சாத்தியமற்றது. ஜி.எஸ்.டி. தொடர்பான எல்லா முடிவுகளையும் அதற்குரிய கவுன்சில்தான் எடுக்க முடியும்.
ஜி.எஸ்.டி. கவுன்சில்  கூட்டத்தில் பங்கேற்கும் மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கினர் வாக்களித்தால்தான் முடிவு செல்லுபடியாகும் என பிரிவு 279 ஏ அறுதியிட்டுக் கூறியுள்ளது. மொத்த வாக்குகளில் மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கும், மாநில அரசுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி. முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு மத்திய அரசுக்கு வாக்கு  சதவீதம் கிடையாது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பொருளாதார வளர்ச்சியும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஜி.எஸ்.டி.யின் கீழ் நாடு முழுவதும் ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஒரு பொருளுக்கு  வரி விதிப்பதால் அல்லது வரி விலக்கு அளிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து தங்களது மாநிலச் சூழ்நிலை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் தீவிரமாக சிந்தனை செய்யக்கூடும்.
வாட் வரி விதிக்கப்பட்டபோதுகூட இத்தகைய நிலை இல்லை. தங்களது பொருளாதார, அரசியல் சூழலுக்கு ஏற்ப, பொருள்களுக்கு வரி விதித்தன; வரி விலக்கு அளித்து வந்தன.
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளதால், எந்த ஒரு பொருள் மீதான வரி விகிதத்தையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக  மாற்ற முடியாது.
வரி விதிப்பது மற்றும் வசூலிப்பது தொடர்பான அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்துவிட்டன என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால், அதே சமயம் ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசுக்கான பங்கையும் (சிஜிஎஸ்டி) உள்ளடக்கிய முழு நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்கும் உரிமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஒரு பொருளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது என்றால் அதில் மாநில அரசின் பங்கு 9 சதவீதம், மத்திய அரசின் பங்கு 9 சதவீதம் ஆகும். இதற்கு முன்னர் செய்தது போல, எந்த ஒரு பொருளின் மீதும் வரியோ, உபரி வரியோ விதிக்க மத்திய அரசுக்கு இப்போது அதிகாரம் இல்லை.
இந்த அளவில், பொருள்களின் மீதான வரி விதிப்பில் தேசிய அளவில் பங்களிக்க மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்தியா ஒரே சந்தையாக ஆகியுள்ளது.
இதுவரை விதிக்கப்பட்டு வந்த உற்பத்தி வரி, கூடுதல் உற்பத்தி வரிகள், உபரி வரிகள், சேவை வரி, ஏற்றுமதியாளர்களுக்கான சலுகை, சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி ஆகிய அனைத்தும் இப்போது மத்திய அரசின் பங்கான சி.ஜி.எஸ்.டி.யில் அடங்கிவிட்டன.
அதேபோல, வாட், கொள்முதல் வரி, நுழைவு வரி, சொகுசு வரி, கேளிக்கை வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி மீதான வரி, மாநில உபரி வரிகள் ஆகியவை மாநில அரசின் பங்கான எஸ்.ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்துவிட்டன.  இது நாடு தழுவிய அளவில் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கிவிட்டது. ஒரே வரி என்பதால், கணக்கு தாக்கல் செய்யும் முழுமையான அதிகாரத்தை ஜிஎஸ்டி ஆணையரகம் பெற்றுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு சம அளவில் அதிகாரமுள்ள கணினி வலைப்பின்னலால் இதன் நடைமுறை நிர்வகிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதால், தொழில் துறைக்கு இந்தியா ஒருங்கிணைந்த ஒரே சந்தையாக ஆகிவிட்டது.
ஜி.எஸ்.டி.யை எதிர்த்து பலரும் கூக்குரலிடுவது ஏன்?
முதலாவதாக, எந்தவிதமான மாற்றமானாலும் மக்கள் முதலில் எதிர்ப்பார்கள். இரண்டாவதாக, வரி விதிப்பில் அமைச்சர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எந்தப் பங்கும் இல்லாததால் ஊழலுக்கும், தில்லுமுல்லுக்கும் ஏறக்குறைய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. மூன்றாவதாக, இதுவரை வரி ஏய்ப்பு செய்த வர்த்தகர்கள் இனி வரி செலுத்தியே ஆக வேண்டும். வரி ஏய்ப்பு செய்தால் கணினி காட்டிக் கொடுத்துவிடும். நான்காவதாக, தொடக்கத்தில் வரி குறைந்தபோதும், ஜி.எஸ்.டி.யை கூடுதல் வரியாக வர்த்தகர்கள் பொதுமக்கள் தலையில் சுமத்தினார்கள். இப்போது நிலை சீராகிவிட்டது. ஐந்தாவதாக, வரி விதிப்பிலும், நடைமுறைகளிலும் ஜிஎஸ்டி கவுன்சில் அடிக்கடி மாற்றம் செய்துவருகிறது. இது வர்த்தகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஆறாவதாக, ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்திய பிறகு, திரும்பப் பெற காத்திருக்க வேண்டியுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மொத்த மறைமுக வரி வருவாயில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வராதது வரி சீர்திருத்தத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கர்நாடக அரசு அண்மையில் உயர்த்தியதில் இருந்தே இந்த அதிகாரத்தை விட்டுத்தர மாநில அரசுகள் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரி வலையில் இருந்து இனி தப்ப முடியாது என்ற விரக்தியில்தான் பெரும்பாலானவர்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கிறார்கள்.
வரித் துறை அதிகாரிகளின் ஊழல் பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதாலும் எதிர்ப்பு எழுகிறது. எளிமையாக்கப்பட்ட வரி விதிப்பு என்பதால் சட்டப் பிரச்னைகள் குறைவதால் வழக்குரைஞர்களுக்கும் பணி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காலப்போக்கில், இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும். மிகப் பெரிய சீர்திருத்தத்தால் நாட்டுக்குப் பலன் கிடைக்கும். இந்த சீர்திருத்தம் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும்.
கட்டுரையாளர்: வருவாய்த் துறை முன்னாள் செயலர்.

இஸ்லாமிய கூட்டமைப்பு / Organisation of Islamic Cooperation

இஸ்லாமிய கூட்டமைப்பு சபை என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய சர்வதேச அமைப்பு.

உலகிலுள்ள நான்கு கண்டங்களைச் சேர்ந்த 180 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 57 நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் உறுப்பினர்கள்.

1969 ஜூன் 17-ஆம் தேதி ஈரான் நாட்டுத் தலைநகர் டெஹ்ரானில் இந்த சபை ஏற்படுத்தப்பட்டது.

மக்கள்தொகை அளவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இஸ்லாமிய கூட்டமைப்பு சபை தொடங்கப்பட்டபோது மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பாலும் நிர்ப்பந்தத்தாலும் அந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது .

18 கோடி முஸ்லிம்கள் உள்ள இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சபையில் அங்கம் வகிக்க எல்லாத் தகுதிகளும் இருந்தும், பாகிஸ்தானின் கடும் எதிர்ப்பால் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக அரைநூற்றாண்டு காலத்திற்குப் பிறகு இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றவும் அனுமதிக்கப்பட்டது

பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத இந்தியாவின் ராஜதந்திர வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

சாதாரண நிலையில் இந்த நிகழ்வு சர்வதேச அரசியல் நோக்கர்களின் கவனத்தைக் கவராமல் போய் இருக்கக் கூடும். ஆனால், இந்தக் கூட்டம் நடந்த நேரம் மிக மிக முக்கியமானது. பாகிஸ்தானிலுள்ள பாலாகோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் காஷ்மீர் பிரச்னைக் குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை சாதுர்யமாகப் பயன்படுத்தி இந்தியாவின் கலாசாரப் பன்முகத் தன்மையையும், அரசின் பின்துணையுடனான பாகிஸ்தானிய பயங்கரவாதம் குறித்தும் இஸ்லாமிய கூட்டமைப்பு சபையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றியதுதான் தனிச் சிறப்பு.

இஸ்லாமிய கூட்டமைப்பு சபையுடன் இந்தியா நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதை சில அமைப்புகள் எதிர்க்க முற்பட்டிருப்பது தவறு. இஸ்லாமிய கூட்டமைப்பு சபை என்பது ஐ.நா., அணிசேரா நாடுகள் அமைப்பு, ரஷியா, தாய்லாந்து ஆகியவை கண்காணிப்பாளர்களாகக் கலந்துகொள்ளும் உலகின் இரண்டாவது சர்வதேச அமைப்பு. அந்த அமைப்பில் புல்வாமா தாக்குதலையும், உரி தாக்குதலையும் தொடர்ந்து இந்தியா நடத்திய துல்லியத்  தாக்குதல்களை நம்மால் எடுத்துரைத்து நியாயப்படுத்த முடிந்திருப்பது, பாகிஸ்தானை அந்த அமைப்பு கண்மூடித்தனமாகப் பாதுகாத்து வந்த நிலையை மாற்றியிருக்கிறது. பாகிஸ்தானின் நட்புவட்ட நாடுகளுடன் இந்தியா தனது நட்புறவை மேம்படுத்திக் கொள்ள இஸ்லாமிய கூட்டமைப்பு சபையுடனான நமது தொடர்பு உதவுகிறது.

இதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அபுதாபி கூட்டத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் வன்மையாக எதிர்க்கவும் கண்டிக்கவும் முற்படாமல் இல்லை.

இந்திய வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் அபுதாபியில் நடந்த வெளியுறவுத் துறைஅமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி அரங்கிலிருந்து வெளியேறி தனது எதிர்ப்பை தெரிவிக்காமல் இல்லை.

அதுமட்டுமல்ல, அபுதாபியில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவை ஈடுகட்ட கடந்த செவ்வாய்க்கிழமை மொராக்கோ நாட்டில் நடந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் நாடாளுமன்றப் பிரிவின் துணைத் தலைவர் பதவியை வென்றிருக்கிறது. இந்தச் சிறிய வெற்றி இந்தியா அடைந்திருக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு ஈடாகிவிடாது.

அபுதாபி கூட்டத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் நிறுவன நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானின் கடும் கண்டனமும் எதிர்ப்பும் சவூதி அரேபியாவாலும் ஐக்கிய அரபு அமீரகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான்.

பயங்கரவாதம் என்பது அந்த நாடுகளையும் பாதித்திருப்பதால், தங்களது பாகிஸ்தான் மீதான பற்றையும் உறவையும் மீறி இந்தியாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை பொருளாதார வர்த்தகரீதியாக  ஐக்கிய அரபு அமீரகத்தையும் சவூதி அரேபியாவையும் மட்டுமல்ல,

வங்க தேசத்தையும் இந்தியாவை ஆதரித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய உலகத்தை தனக்குச் சாதகமாக இனிமேலும் பாகிஸ்தான் பயன்படுத்த முடியாது. இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி இது.

சாகர் மாலா திட்டம் - நோக்கமும் பின்னணியும்

சாகர் மாலா திட்டம் - நோக்கமும் பின்னணியும்

 

  • சாகர் மாலா திட்டம் கடந்த பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் (2003ல்) முன்மொழியப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை அமல்படுத்த சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக உருவாக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர்,அது இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.

உலக வணிக அமைப்பு

 

உலக வணிக அமைப்பு


உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT))
வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை

எவரும் சாதிக்கலாம் என்ற கலாம்!






நன்றி : தமிழ் ஹிந்து 


அகரத்தில் இருந்து உயர்ந்தெழுந்து சிகரத்தைத் தொட்ட ‘இந்திய ஏவுகணை நாயகன்’, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பெருமைகளைக் கடந்து ஓர் ஆசானாக மாணவர்களை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்களில் என்றுமே கலாம் ஈடுபட்டுவந்தார்.
மதராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி.) 1960-ல் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றவுடன் விஞ்ஞானியாகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துக் கல்வி புலத்துக்கே திரும்பினார் என்பது வியப்பளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சோமாலியாவைச் சேர்ந்த கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல பொறுப்புகளை அவர் வகித்தார்.
எவரும் சாதிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டிய கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மாணவர்களிடம் ஆற்றிய உரைகள், பொன்மொழிகளில் சிலவற்றின் தொகுப்பு:

ஆதார் என்றால் என்ன?



Image result for aadhar
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் ( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”) -ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்டமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமாகும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)




Image result for pmay

# அரசின் திட்டங்கள் (SCHEMES), # TNPSC MAINS, 



  • 2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.
  • இந்திரா ஆவாஸ் யோஜனா ..... பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.

உழவர் பாதுகாப்புத்திட்டம் என்றால் என்ன?



# அரசின் திட்டங்கள் (SCHEMES), 
#TNPSC MAINS,   


Related image




விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றுதான் உழவர் பாதுகாப்புத்திட்டம்.

பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY, #GENERAL STUDIES III, #UPSC பழைய வினாக்கள், #அடிப்படை கற்றல், #அரசின் திட்டங்கள் (SCHEMES)




The success of realizing the demographic dividend hinges upon the success of Skill India Programme, which in turn depends upon the resources allocated to human capital formation – evaluate Critically.(2018 IES)


பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம்(Skill India Programme)


திட்டத்தைப் பற்றிய விளக்கம்



மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். 

இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளையஞர்கள் பயன் பெறுவார்கள்.

தேசிய திறன்தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES), #GENERAL STUDIES III


Image result for Pradhan Mantri Jan Dhan Yojana 


இந்தியாவில் வங்கி பயன்பாடு 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 24.7 கோடி குடும்ங்களில் 14.5 குடும்பங்களே வங்கி சேவையை ஏதேனும் வகையில் பயன்படுத்துகின்றன. இந்திய வங்கியின் சமிபத்திய அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 73% விவசாயிகளுக்கு வங்கி கடன் வசதி கிடைக்கப் பெறுவதில்லை.

SpaceX Mars Mission பற்றிய அடிப்படை புரிதல்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



# SCIENCE AND TECH, #TNPSC MAINS, #VIDEOS






தமிழ்நாடு அரசின் இலவச சானிடரி நாப்கின் திட்டம் என்பது என்ன?




# அரசின் திட்டங்கள் (SCHEMES), #TNPSC MAINS



நோக்கம்


தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.

அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதயுதவி திட்டம் என்பது என்ன?



# அரசின் திட்டங்கள் (SCHEMES), #TNPSC MAINS 




ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 


JnNURM logo.jpg




ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.




 பின்னணி


இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைக்கு பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில்

அம்மா கைப்பேசி திட்டம் என்றால் என்ன?


# அரசின் திட்டங்கள் (SCHEMES)  # TNPSC MAINS 



மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கீடவும், அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக்குழுக்களை தமிழ்நாடு அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை எளிய நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005ஆம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு துவங்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள்

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் என்றால் என்ன?





# அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 




உடல் பரிசோதனைத் திட்டம்


மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்


பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின்

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN